News J சேனலை Polimer Samachar என பெயர் மாற்றம் செய்ய பாலிமர் குழுமத்துக்கு அனுமதி வழங்கி இருக்கிறது ஒளிபரப்பு துறை அமைச்சகம்.
News J அதிமுக சேனல் , அதுக்கும் Polimer க்கும் என்ன சம்பந்தம் என குழப்பிக் கொள்ள வேண்டாம்.
அதிமுகவில் இருந்து TTV தினகரன் பிரிந்த போது , Jaya TV சசிகலா குடும்பத்தினர் வசம் இருப்பதால் அதிமுகவுக்கு சேனல் இல்லாமல் போனது.
அப்போது , சேனல் உடனடியாக ஆரம்பிக்க நினைத்த போது அதிமுகவுக்கு உதவிக்கு வந்தது பாலிமர்.
தன்னுடைய Polimer Kannada லைசன்ஸை News J என பெயர் மாற்றம் செய்து அதிமுகவுக்கு சேனல் ஆரம்பிக்க உதவியது, பாலிமர் குழுமம். (இவனுங்கதான் நட்டநடுநிலை - நம்புங்க).
சேனல் நடத்துவது அதிமுக என்றாலும் , சேனர் லைசன்ஸ் பாலிமரினிடையது.
அதிமுக கட்சி நிர்வாகிகள் Mantaro Network என்ற பெயரில் ஆரம்பித்த நிறுவனம், டிசம்பர் 2020 இல்தான் News J2 என்ற சேனலுக்கு லைசன்ஸ் பெற்றிருக்கிறது.
இப்போது பாலிமர் ,
News J வின் பெயரை Polimer Samachar என மாற்றுவதை அடுத்து, News J2 லைசன்ஸ் News J என மாற்றப்பட்டு லைசன்ஸ்&
ஒளிபரப்பு என மொத்தமும்ம் Mantaro Network நிர்வாகத்தின் கீழ் போகும்.
அல்லது, எளிதாக வேலையை முடிக்க வேண்டும் என நினைத்தால் News J சேனல் News J2 என பெயர் மாற்றம் காணும்.
தமிழ்நாட்டு அரசின் பெண்களுக்கு 40% அரசு பணிகளில் ஒதுக்கீடுக்கு எதிராக பேசுபவர்கள் வைக்கும் வாதம் , ஏற்கனவே தமிழ்நாட்டில் 68%-76% பணியிடங்களை பெண்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்பது.
ஆதாரமாக , அவர்கள் காட்டுவது ஒரு வாட்ஸ் அப் வாந்தியை.
தமிழ்நாடு அரசு அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30% இல் இருந்து 40% சதவீதமாக உயர்த்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை தொடர்ந்து,
சங்கிகள் ,
தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசு பணிகளில் 60% பெண்கள்தான் , இந்த அறவிப்பின் மூலம் ஆண்கள் இனி அரசு பணியை நினைக்கவே முடியாது.
ஆண்கள் இனி வீட்டு வேலை செய்துக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டியதுதான் , பெண்களால் மெரிட்டில் வரமுடியுமா? என இப்படி பெண்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை WhatsApp லும் வேறு சமூக ஊடகங்களிலும் ஆரம்பித்துவிட்டார்கள்
[இணைப்பில் Times of India செய்தியில் comments சில & Twitter Post]
வேதனை என்னவென்றால் , இவற்றை தமிழ்நாட்டு மக்கள் சிலரும் தரவே இல்லாமல் நம்பி தொலைவதுதான்.
2017-2018 தகவலின் படி , அரசு நிறுவனங்கள் , அரசு பொறுப்பில் இருக்கும் நிறுவனங்கள் , உள்ளாட்சி நிறுவனங்கள் என மொத்தம் இருக்கும் 8.8 இலட்சம் பணி இடங்களில் 2.92 இலட்சம்இடங்களில் மட்டுமே பெண்கள்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் (Reliance Naval) நிறுவனம் ₹ 12,429 கோடி வங்கி கடன் வைத்திருக்கிறது.
இப்போது இந்த நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தை இப்போது வாங்க ஆர்வம் தெரிவித்து இருப்பவர்கள், ₹ 12,429 கோடிக்கு பதிலாக ₹ 2000 கோடியை மட்டுமே கட்டமுடியும் , அதுவும் இப்போது ₹ 700 கோடியும் ₹ 1300 கோடி பின்னரும் என தெரிவித்து இருக்கினார்கள்.
ஆக, ₹ 10,429 கோடி ஸ்வாகா!!!
*
இந்த நிறுவனத்தின் பழைய பெயர் , Reliance Defence and Engineering Ltd (RDEL) அது Reliance Naval and Engineering Ltd (RNEL) என மாற்றப்பட்டு,
சரியாக ரபேல் ஒபந்ததுக்கு சில நாட்கள் முன்பு Reliance Defense என்று புது நிறுவனம் தொடங்கப்பட்டது,
மாராத்தி மொழியில் சேனல் ஆரம்பிப்பது என்பது @SunTV சன் டிவியின் 11 ஆண்டு கனவு , 2010 ல் அறிவிக்கப்படாலும் பல காரணங்களால் தள்ளிப்போனது.
2019 இல் உதயா நியூஸ் , ஜெமினி நியூஸ் சேனல்களை மூடிய போது அந்த லைசன்ஸ்களை கொண்டு வங்காள மொழியிலும், மராத்தி மொழியிலும்
சேனல் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் , வங்க மொழி சேனல் இலாபத்தில் இயங்க ஆரம்பித்த பின்தான் மராத்தி மொழி சேனல் தொடங்கப்படும் என்று அறிவித்தார்கள் அப்போதே.
தாமதமாக ஆரம்பித்தாலும் , போட்டிகளை கடந்து நல்ல இடத்தை வங்காள மொழியில் இடம் பிடித்துவிட்டது @SunBanglaTV
இதோ , இப்போது சன் மராத்தி டிடி டைரக்ட் டிடிஎச் இல் இடம் பிடித்திருக்கிறது. சன் குழுமத்தில் இருந்து இலவச டிடி டைரக்ட் டிடிஎச் இல் இடம் பெறும் முதல் சேனல் சன் மராத்தி.
போட்டி அதிகம் இருக்கும் மராத்தி சேனல் சந்தையில், இது நல்ல முன்னெடுப்புதான் மக்களை எளிதாக சென்றடையும்.