#unsolvedmysteries #PCMreview "விடை தெரியாத மர்மங்கள் பகுதியில் இரண்டாவதாக நாம் இன்று பார்க்கப்போவது 7 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய மர்மம் தான்".மார்ச் 8,2014 ஆம் ஆண்டு இரவு 12.42 மணிக்கு போயிங் 777 ER 200 ரக விமானமான MH370 விமானம் மலேசியாவின் கோலாலம்பூர்
விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பீஜிங் விமான நிலையத்திற்கு புறப்படுகிறது. விமானத்தில் 227 பயணிகள்,10 கேபின் குழுவினர்,2 பைலட்டுகள் என மொத்தம் 239 நபர்கள் பயணிக்கிறார்கள்.பயணம் தூரம் 5.30 மணி நேரம்.விமானத்தை 53 வயதான ஜஹாரி அகமத் என்ற முதல் பைலட்டும் 27 வயதான ஃபரிக் ஹமீத் என்ற
இரண்டாம் பைலட்டும் ஓட்டுகிறார்கள்.சரியாக இரவு 1:08 மணிக்கு விமானம் தெற்கு சீன கடல் பகுதியில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்று விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.மலேசிய கட்டுப்பாட்டு அறை விமானியை தொடர்பு கொண்டு "நீங்கள் இன்னும் ஒரு நிமிடத்தில்
வியட்நாம் வான் எல்லையை அடைந்து விடுவீர்கள்.எனவே,இதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் இரவு வணக்கம்"என்று கூறுகிறார்கள். விமானியும் "விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது இரவு வணக்கம்"என்று கூறுகிறார்.4 நிமிடங்கள் கழித்தும் வியட்நாம் கட்டுப்பாட்டு அறையை விமானம்
தொடர்பு கொள்ளாததால் வியட்னாம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறை மலேசியா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு "உங்கள் விமானம் இன்னும் எங்கள் வான எல்லையை அடையவில்லை.உங்கள் நாட்டிற்கே திரும்பி வந்துவிட்டதா?"என்று கேட்கிறார்கள். இதைக்கேட்டு ஆடிப்போகும் மலேசிய விமான நிலைய
கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை தொடர்பு கொள்கிறார்கள்.ஆனால் எந்த தகவலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் விமான நிலையத்தை அடைய வேண்டிய விமானம் இன்னும் தரையிறங்காததால் இன்னும் 4 மணி நேரம் காத்திருக்கிறார்கள். காரணம் ஒரு விமானம் தரையிறங்க வேண்டிய
நேரத்தில் தரை இறங்க வில்லை என்றால் 4 மணி நேர காத்திருப்புக்குப் பின் தான் விமானம் காணவில்லை என்று அறிவிக்க வேண்டும். எனவே 4 மணிநேரம் கடந்தபின் விமானம் காணவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்கள். விமானம் கடைசியாக தொடர்பு கொண்ட தெற்கு சீன கடல் பகுதியில் ரேடார் மூலம்
தேடுகிறார்கள். எதுவும் தெரியாததால் நீண்ட அலைவரிசையை கடத்திச் செல்லும் மிலிட்டரி ரேடாரை பயன்படுத்துகிறார்கள். அதில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைக்கிறது. அதாவது விமானம் கடைசியாக தொடர்பு கொண்ட பகுதியில் வலது புறமாக திரும்பி யூ-டர்ன் அடித்து மலேசியா நோக்கி செல்கிறது. மலேசியாவை அடையாமல்
அந்தப் பக்கம் இருக்கும் பெனாங் தீவிற்கு மேல் இரவு 2.22 மணிக்கு பறக்கிறது. ரேடார் அலைவரிசை இதோடு நிற்பதால் இதன் பிறகு விமானம் எங்கு சென்றது என்பது தெரிவதில்லை. எனது விமானம் கடைசியாக தொடர்பு கொண்ட பே ஆஃப் பெங்கால் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிறது.
அப்பொழுதும் எதுவும் கிடைக்காததால் சாட்டிலைட் தொடர்பை பயன்படுத்துகிறார்கள். காலை 7.15 மற்றும் 8.15 மணிக்கு சமிஞ்சை அனுப்பியது விமானத்தை சென்று சேர்கிறது.ஆனால் விமானத்திலிருந்து எந்த சமிஞ்சையும் திரும்பி வருவதில்லை.மீண்டும் 9.15 மணிக்கு சமிஞ்சை அனுப்புகிறார்கள் ஆனால் அதே விமானத்தை
சென்று சேர்வதில்லை. எனவே சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் ஆஸ்திரேலியாவின் கடல் பகுதியில் சுற்றியிருக்கும் 7 தோராயமான இடங்களை தேர்ந்தெடுத்து அங்கு தேட முடிவு செய்கிறார்கள்.சுமார் 45 சதுர அடி பகுதியை ஆஸ்திரேலிய அரசாங்கம் அலசி ஆராய்கிறது. எதுவும் கிடைக்காததால் கடலின் அடிப்பகுதியில்
வித்தியாசமான ஒலியை கண்டறிய உதவும் ஹைட்ரோபோன்ஸ் என்ற கருவியை பயன்படுத்துகிறார்கள். அதுவும் தோல்வியில் முடிய தொடர்ந்து 40 நாட்கள் சமிஞ்சையை அனுப்பும் விமானத்தில் இருக்கும் லோகேட்டர் பீக்கானை கண்டறிய முயற்சிக்கிறார்கள்.இதுவும் தோல்வியில் முடிவதால்,தேடுதலை நிறுத்தி வைக்கிறார்கள்.16
மாதங்கள் கழித்து ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு தீவில் விமானத்தின் ஒரு பாகம் கிடைக்கிறது.ரெக்கை பகுதிக்கு பின்னில் இருக்கும் பிளாப்பெரென் என்ற பகுதி தான் அது.அது காணாமல் போன விமானத்தின் சீரியல் நம்பரோடு ஒத்துவருவதால், இந்த பகுதியில் மீண்டும் தேடுகிறார்கள். அதில் 31 பாகங்கள்
கிடைக்க,அதில் 18 பாகங்கள் விமான பாகம் போல் இருக்கிறது.அதிலும் 3 பாகம் MH370 விமானத்தோடு ஒத்துவருகிறது.ஆனால் விமானம் கிடைப்பதில்லை.2017 ஆம் ஆண்டு தேடுதலை நிறுத்துகிறார்கள். பயணிகளின் உறவினர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டதால் மலேசிய அரசாங்கம் "ஓஷன் இன்பினிட்டி" என்ற ஆழ்கடல்
ஆராய்ச்சியில் புலமை வாய்ந்த அமைப்பின் உதவியை நாடுகிறார்கள்.இதற்கு பல மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று அந்த அமைப்பு கூற,மலேசிய அரசாங்கம் சம்மதிக்கிறது.1,20,000 கிலோமீட்டர் பரப்பளவை ஆராய்ந்தும் எதுவும் கிடைப்பதில்லை.பின்னர்,விமானம் காணாமல் போக என்னவெல்லாம் காரணம் இருக்கலாம் என்று
ஆராய்கிறார்கள். ஈரான் நாட்டை சேர்ந்த இருவர் அன்று போலி கடவுச்சீட்டு மூலம் பயணித்தது தெரியவருகிறது.ஆனால் இவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவருகிறது.கேபின் குழுவினரும் நல்லவர்கள் என்று தெரியவர,முதலாம் பைலட்டான ஜஹாரி அஹமத் வீட்டில் தேடுகிறார்கள்.அவர் வீட்டில் பிளைட்
சிமுலேட்டரை கண்டுபிடிக்கிறார்கள். விமானம் கிளம்ப ஒரு மணி நேரத்திற்கு முன்பு இவர் ஆதரிக்கும் அந்த நாட்டின் ஒரு பெரிய அரசியல்வாதியை கைது செய்ததை கணக்கில் கொள்கிறார்கள்.ஆனால் விமானத்தை கடத்த இது பெரிய காரணமாக இல்லாததாலும் 18,000 மணி நேர விமானத்தை இயக்கிய அனுபவம் மற்றும் நல்ல
அபிப்ராயம் இருப்பதால் இவரை விட்டுவிடுகிறார்கள்.இரண்டாம் பைலட்டிற்கு இரண்டு வாரங்களில் திருமணம் நடக்க இருப்பதால் இவரும் கடத்த வாய்ப்பில்லை என்று கருதுகிறார்கள்.பின்னர் விமானத்தில் 11 மெட்ரிக் டன் லித்தியம் அயான் பேட்டரிகள் இருந்ததை அறிகிறார்கள்.ஆனால் இதனால் விமானம் வெடித்து சிதற
வாய்ப்பில்லை என்பதால்,அடுத்து மின்சார சாதனங்கள் செயலிழக்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால் அதற்கும் வாய்ப்பில்லை என்று தெரியவருகிறது.என்ன ஆகிருக்கும் என்று மலேசிய அரசாங்கம் குழம்ப,US கடற்படை விமானத்தை வீழ்தியிருக்கும்,தீவிரவாதிகள் கடத்தி கஜகஸ்தானில் வைத்திருக்கிறார்கள்,
ஏலியன்கள் கடத்தியிருக்கலாம், காலப்பயணம் செய்திருக்கலாம்,கருந்துளையில் நுழைந்திருக்கும் என்ற பல நம்பமுடியாத கருத்துக்களை மக்கள் நம்புகிறார்கள்.போயிங் 777 ரக விமானத்தை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று சிலர் கூற,அவ்வாறான தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை என்று போயிங் நிறுவனம்
சொல்கிறது.கேபினில் கோளாறு ஏற்பட்டு ஆக்சிஜன் குறைந்து கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்தாகியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.விமானத்தில் இருக்கும் இரண்டு டிரான்ஸ்பாண்டர் கருவிகள் ஒரே சமயத்தில் செயலிழந்திருக்கிறது.ஒரே சமயத்ததில் இரண்டு கருவிகளும் செயலிழக்க வாய்ப்பில்லை என்பதால்
கருவிகளை செயலிழக்க செய்தது யார் என்ற கேள்வி எழுகிறது. கேபினில் கோளாறு ஏற்பட்டு ஆட்டோபைலட் செயல்பட்டு சிறிது நேரம் கழித்து விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று யோசித்தால்,ஆட்டோபைலட் மூலம் விமானத்தை துள்ளியாமாக திருப்ப முடியாது.ஆனால் விமானம் தெற்கு சீன கடல் பகுதியில் மிக மிக
துல்லியமாக திரும்பியிருப்பதால்,இந்த சந்தேகத்திற்கு வாய்ப்பில்லாமல் போகிறது.எதுவுமே இல்லயென்றால் விமானம் என்ன ஆனது?எங்கே போனது? இதுவரை விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.ஏன்?இந்த கேள்விகளுக்கு பதில் யோசித்துகொண்டே அடுத்த விடை தெரியா மர்மம் பற்றிய திரெடிற்கு காத்திருங்கள்.வணக்கம்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மதுசூதனன் பி சா

மதுசூதனன் பி சா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Madhusoodananpc

15 Sep
#vivonetflix #PCMreview "குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய அருமையான படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - Netflix. டெலிகிராம் - பயோ/DM.இசையில் வல்லுவரான ஒரு தாத்தா மற்றும் அவருடன் இருக்கும் ஒரு குட்டி குரங்கு இருவரும் தெருவில் பாடி பணம் சம்பாதிக்கிறார்கள்.சில நிமிடங்கள் Image
கழித்து தாத்தாவுக்கு ஒரு கடிதம் வருகிறது.அதில் அவரது பழைய கால தோழி இவரை அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.இவரும் செல்லலாம் என்று நினைக்கிறார்.ஆனால் அந்த குட்டி குரங்கிற்கு இது பிடிப்பதில்லை.திடீரென தாத்தா இறந்து போக,இசை நிகழ்ச்சிக்கு சென்று பாட வேண்டிய
பாடல் வரிகள் அடங்கிய காகிதம் மற்றும் பழைய புகைப்படங்கள் ஆகியவை அங்கு இருப்பதை குரங்கு பார்க்கிறது.தாத்தாவின் கனவை நிறைவேற்ற குரங்கு பயணம் மேற்கொள்கிறது.அங்கு சென்றதா?பாடலை பாடியதா?என்பதே மீதிக்கதை.கிகான்ஜோ என்ற குட்டி குரங்குடன் ஒரு சிறுமியும் பயணம் செய்வாள்.இருவரின் உரையாடல்
Read 7 tweets
14 Sep
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 3".இன்று நாம் பார்க்க போவது 62 ஆண்டுகளாகியும் இன்னும் மர்மமாக நீடிக்கும் 9 பேர் மரணம் அடைந்த "டயட்லோவ் பாஸ்"நிகழ்வு பற்றி தான்.ஜனவரி 23,1959 அன்று Ural Polytechnic Institute கல்லூரியை சேர்ந்த 10 பேர் ரஷ்ய நாட்டில் Image
இருக்கும் Sverdlovsk Oblast பகுதியில் வடக்கு Ural மலை தொடர்ச்சியில் இருக்கும் kholat Syakhl என்ற மலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் மலையேறுதலில் கிரேடு 2 சான்றிதழ் பெற்றவர்கள்.கிரேடு 3 சான்றிதல் பெற 300 கிலோமீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும்.எனவே அச்சான்றிதலை Image
பெற Sverdlovsk பகுதி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி மிகவும் கடினமான 10 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையாக இருக்கும் Oterten என்ற இடத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்கள். இக்குழுவிற்கு இகோர் டயட்லோவ் (23) என்ற மாணவர் தலைமை தாங்குகிறார்.ஜனவரி 25 ஆம் தேதி ரயில் மூலம் இவ்டேல் என்ற இடத்தை ImageImageImageImage
Read 25 tweets
11 Sep
#ThuglaqDarbar #PCMreview "அரசியல் டிராமா" ஆபாச காட்சிகள் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ விஜய் சேதுபதி தனி ஒருவன் படத்தில் வருவது ஒரு அரசியல் கூட்டத்தில் பிறக்கிறார்.அந்த படத்தில் வருவது போல் இதிலும் அரசியல் கட்சி தலைவரான பார்த்திபன் ஹீரோவுக்கு சிங்காரவேலன்
என்று பெயர் சூட்டுகிறார்.இதனால் சிறுவயதில் இருந்தே அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்று முடிவு செய்கிறார்.இவரின் தங்கச்சியான மஞ்சிமா மோகன் பிறந்த உடனே தன்னுடைய அம்மா இறந்து விடுவதால் ஹீரோ விஜய் சேதுபதி மஞ்சிமா மோகனுடன் பேசுவதில்லை.பெரிய அரசியல் கட்சி தலைவரான பார்த்திபனிடம்
சேர்ந்து அப்படியே படிப்படியாக முன்னேற முடிவு செய்கிறார்.இதற்கு இவர் என்னவெல்லாம் செய்தார்,யாருடைய பகையை சம்பாதித்தார்? இவருக்குள் ஏற்படும் பிரச்சனை என்ன?இவரின் எண்ணம் நிறைவேறியதா?என்பதே மீதிக்கதை.விஜய் சேதுபதி வழக்கம் போல் நடிப்பில் அசத்திவிட்டார்.படத்தின் கதைக்களம் சத்யராஜ்
Read 10 tweets
11 Sep
#MalignantMovie #PCMreview "வித்தியாசமான மற்றும் தரமான ஹாரர் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை (திரையரங்கில் தமிழ் டப்பிங்குடன் ஓடுகிறது).கண்டிப்பாக (18+).OTT - HBO Max. டெலிகிராம் - பயோ/DM.ஹீரோயினுக்கு கனவில் பலர் கொல்லப்படுவதை போல் கனவு வருகிறது.அடுத்த நாள் காலை தான் தெரிகிறது
இவர் கண்டது கனவு அல்ல,நிஜம் என்று.ஒரு மர்மமான உருவம் ஹீரோயினை கனவில் இருப்பதை போல் நிகழ்த்தி கொலை நடக்கும் இடத்திற்கு கனவின் வழியே அழைத்து சென்று தான் செய்யும் கொலையை ஹீரோயினை நேரில் பார்க்க வைக்கிறது.அதன் அடிப்படையில் முதல் கொலையாக ஹீரோயினின் கணவர் கொல்லப்படுகிறார்.காவல்துறை
ஹீரோயின் வீட்டிற்க்கு வந்து விசாரிக்க,ஹீரோயின் மேல் சந்தேகப்படுகிறது போலீஸ்.இப்படி தொடர்ச்சியாக கொலை நிகழ,ஹீரோயின் மீது சந்தேகம் வழுவாகிறது.இதில் இருந்து ஹீரோயின் தப்பித்தாரா?கொலை செய்யும் அந்த மர்மமான உருவம் எது?ஏன் கொலை செய்கிறது?ஏன் ஹீரோயினுக்கு இவ்வாறு நிகழ்கிறது?என்ற பல
Read 10 tweets
10 Sep
#BhootPolice #PCMreview "ஹாரர் திரில்லர்".தமிழ் சப்டைட்டில் இருக்கிறது.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - ஹாட்ஸ்டார். டெலிகிராம் - பயோ/DM.ஹீரோக்கள் சைப் அலி கான் மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் அண்ணன் தம்பிகள்.சிறுவயதில் இவர்களது அப்பா இறந்து விடுகிறார்.இவர் அப்பா பேய் ஒட்டும் தொழில் Image
செய்கிறார்.அப்பா இறந்த பின்பு மகன்கள் இருவரும் அத்தொழிலை செய்கிறார்கள்.அப்பா உண்மையாக மந்திர தந்திரங்கள் கற்று பேய் ஓட்ட,மகன்கள் இருவரும் பேய் ஒட்டுகிறோம் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.ஒரு நாள் ஹீரோயின் யாமி கவுதம் இவர்களிடம் வந்து "தன்னுடைய தேயிலை
தோட்டத்தில் ஏதோ ஒன்று இருப்பதாகவும்,27 வருடங்களுக்கு முன்பு உங்கள் அப்பா வந்து ஓட்டினார்.ஆனால் மறுபடியும் அது வந்துவிட்டது.எனவே நீங்கள் தான் அந்த பேயை ஓட்ட வேண்டும்" என்று கூறி இருவரையும் ஹீரோயினின் வீட்டிற்க்கு அழைத்து வருகிறார்.இதற்கு பின் பேயை ஒட்டினார்களா?எதற்காக பேய் அங்கு
Read 8 tweets
10 Sep
#DikkiloonaOnZee5 #PCMreview ஆபாச காட்சிகள் இல்லை (இரட்டை அர்த்த வசனங்கள் உண்டு).OTT - Zee 5. டெலிகிராம் - பயோ/DM.EB யில் லைன் மேனாக வேலை பார்க்கும் ஹீரோ சந்தானம் ஒரு நாள் ஒரு மனநல மருத்துவமனைக்கு கரெண்ட் பிரச்சனையை சரி செய்ய செல்கிறார்.சென்ற இடத்தில் ஒரு பழைய அம்பாசடர் கார் Image
டிக்கியில் இருந்து ஒருவித சத்தம் வருவதை அறிந்து அதை திறந்து பார்க்கிறார்.உள்ளே படிக்கட்டு ஒன்று செல்கிறது.உள்ளே சென்று பார்த்தால் காலபயணம் செய்ய முயற்சி செய்யும் ஒரு குழு கால இயந்திரத்தை வைத்து சில ஆராய்ச்சிகளை செய்துகொண்டு இருக்கிறது.அங்கு இருக்கும் காமெடியன் யோகி பாபு செய்யும்
ஒரு வேலையால் காலப்பயணம் செய்யும் இயந்திரம் வேலை செய்கிறது.ஆராய்ச்சி குழுவின் தலைவர் அதை சோதித்து பார்த்து வெற்றி பெறுவதால்,ஹீரோ சந்தானம் ஒரு முடிவு செய்கிறார்.தன்னுடைய திருமண வாழ்க்கை மிகவும் வெறுப்பாக இருப்பதால் காலப்பயணம் செய்து இறந்த காலத்திற்கு சென்று தனது திருமணத்தை தடுத்து
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(