கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
அதை செல்வகுமாரிடம் கொடுத்து தனது பினாமிகள் பெயரில் சசிகலா ஆவணங்களாக மாற்றினார். அதை அவர் கொடநாட்டில் வைத்திருந்ததை செல்வகுமாரும் மேனேஜரும் வேலுமணியிடம் சொல்கிறார்கள். எடப்பாடி,
அதை கொடநாட்டிற்குள் எளிதாக சென்றுவரும் சஜீவன் மற்றும் கனகராஜ் மூலம் ஒரு கொள்ளை டிராமாவை கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூலம் அரங்கேற்றி கைப்பற்றினார்கள்.
முன்பு சசிகலா, செல்வகுமாரிடம் கொடுத்து மாற்றியதைப் போலவே கனகராஜ் கொடநாட்டிலிருந்து கொண்டுவந்து தந்த ஆவணங்களை செல்வ குமார் அமைச்சர்களின் பெயருக்கு மாற்றிக் கொடுத்தார். அதனால் சசிகலா மட்டுமல்ல யார்,
யாருக்கெல்லாம் செல்வ குமார் சொத்துக்களை மாற்றிக் கொடுத்தாரோ அந்த ஐந்து மாஜி அமைச்சர்களும் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள் என்கிறது மேலதிக விசாரணையை மேற்கொள்ளும் போலீஸ் மற்றும் அரசுத் தரப்பைச் சேர்ந்தவர்கள்.
செல்வகுமார் கடந்த பத்தாண்டுகளாகவே கோவை மண்டலத்தில் அசைக்க முடியாத செல்வாக்குடன் ஆட்டம் போட்டார். அவர் வைத்ததுதான் சட்டம் என அவருக்கு எதிராக ஏகப்பட்ட பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் புகார் கடிதங்களுடன் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை அணுகிவருகிறார்கள்.
பத்திரப்பதிவுத்துறை செயலாளரான ஜோதிநிர்மலா ஐ.ஏ.எஸ்., செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். செல்வகுமார் மற்றும் அவருக்கு வேண்டியவர்களும்- அ.தி.மு.க. கால அமைச்சர்களின் சொத்துக்களை இருமுறை மாற்றி பதிவு செய்ய உதவியவர்களுமான மாவட்ட பதிவாளர்கள் எட்டு பேர் என
அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி முடிவெடுத்திருக்கிறார் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.
செல்வகுமார் மீது விசாரணை நடத்துங்கள் என முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவு
வந்துள்ளதால் செல்வகுமார் மீது முதல்கட்டமாக அவர் சேர்த்துள்ள வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் குறித்து வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை தயாராகி வருகிறது. அதைத் தொடர்ந்து கொடநாடு கொலை வழக்கில் அவர் கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜனுடன் சேர்ந்து புதிய குற்ற வாளியாக்கப்படுவார்
என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
கொடநாடு வழக்கில் அனைத்து விவரங்களையும் ஆரம்பம் முதல் புலன் விசாரணை செய்துவரும் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம், கனகராஜ் எப்படி இறந்தார் என்பதை ஆய்வு செய்தது. கனகராஜை மோதி கொன்ற கார்,
சேதமான புகைப்படங்களை ஆராய்ந்த டீம், ஒரு சாதாரண மோட்டார் சைக்கிள் மோத லில் ஒரு கார் எப்படி இவ்வளவு சேதமாகும் என்பதை சந்தேகக் கண்ணோடுதான் பார்க் கிறார்கள்.
இதில் கனகராஜின் சகோதரர் தனபால் சொல்வதை போலீசார் நம்பவில்லை. கனகராஜ் இறந்தவுடன் தனபாலன் நடவடிக்கைகளில் சந்தேகத்திற்கிடமான பல
விஷயங்கள் இருந்தன. அவர் புதிதாக நிறைய சொத்துகள் வாங்கியுள்ளார். பல சமயம் புத்தி பேதலித்தது போல நடிக்கிறார். கனகராஜின் மனைவி கலைவாணிக்கும் தனபாலுக்கும் இடையே முட்டல் மோதல்கள் இருக்கிறது.
விபத்தில் இறந்தவர்களுக்கு தரப்படும் எந்த அரசு தொகையும் கனகராஜ் குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை. அனாதையாகிப் போன கலைவாணியால், கனகராஜ் விபத்து வழக்கை கடந்த நான்கு வருடமாக நடத்த முடியவில்லை.
பொதுவாக சாலை விபத்து நடந்தால் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் தங்கள் சொந்தச் செலவில் வழக்கை நடத்துவார்கள். இழப்பீடு தொகை வரும்பொழுது அதில் குறிப்பிட்ட சதவிகிதம் வழக்கு நடத்திய தொகையாக எடுத்துக்கொள்வார்கள். அப்படி யாரும் கனகராஜின் மரண வழக்கை நடத்த முன்வரவில்லை.
ஏனென்றால் இறந்தது யார்? என்ன விபத்து என்பது பற்றி சேலம் மாவட்ட போக்குவரத்து போலீசார் முறையாக வழக்குப் பதியவில்லை என்கிறார்கள் சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள்.
கனகராஜ் மரணச் செய்தி அவரது குடும்பத்திற்கு எப்படி சொல்லப்பட்டது என்பதுதான் கொடநாடு வழக்கை விசாரிக்கும் போலீசாரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கனகராஜ் இறந்தவுடன் அங்கே அவரது உறவினர் ரமேஷ் என்பவர் ஆஜராகி யுள்ளார்.
அவர் ஏன் மிகச் சரியாக விபத்து நடந்த இடத்திற்கு வரவேண்டும் என்கிற சந்தேகத்திற்கு பதில் இல்லை. அவர் கனகராஜின் செல்போனை எடுத்து கனக ராஜின் மனைவிக்கு, கனகராஜ் இறந்துவிட்டதாக அறிவிக் கிறார். அதன்பிறகு அந்த செல் போன் காணாமல் போகிறது.
போலீசார், ரமேஷிற்கு நடந்த விபத்தின் பின்னணி பற்றித் தெரியும் என்கிறார்கள். கனகராஜ் விபத்துssasdf என்பது செட்டப்பே. ஒரு சாதாரண மோட்டார் சைக்கிள் மோதினால் காரில் இவ்வளவு பாதிப்பு வராது. கனகராஜ், விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு இதே பகுதியில்
எடப்பாடியை நீக்கிவிட்டு நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர், இதேபோல் விபத்து ஒன்றில் கொல்லப் பட்டார். அப்போது எடப்பாடியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்தார். அதன் பின் சசிகலா உதவியுடன்தான் மறுபடியும் மா.செ. ஆனார் எடப்பாடி,
என பழைய கனக ராஜின் பின்னணிகளையும் போலீசார் விவரிக்கின்றனர் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
மொத்தத்தில்... சசிகலா, எடப்பாடியுடன் மாஜி மந்திரிகள், கொடநாடு மேனேஜர், பத்திரப்பதிவு அதிகாரி செல்வகுமார்,
கனகராஜின் உறவினர் ரமேஷ் என ஏகப்பட்ட பேர் விசாரணைக்குள் ளாகிறார்கள். இவர்களில் யார், யார் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்பதை இப்போது சொல்ல முடியாது என்கிறது காவல்துறை.
---நக்கீரன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.
நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.
ஹிந்தி திவாஸ்’ நாளான இன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது தாய் மொழியுடன் ஹிந்தியையும் அடிப்படை வேலைகளுக்கு பயன்படுத்த உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித்.
பெரிய நாய் உள்புகும் அளவில் கதவு இருக்க சின்ன நாய் போக தனி கதவு எதற்கு ? !
இந்தி மொழியை கற்றால் இந்தியாவில் எல்லோரிடமும் பேசிப்பழகலாம். ஒரு இணைப்பு மொழியாக இந்தி இருக்குமே?
1963ல் மாநிலங்களவையில் இந்த கேள்விக்கு பதிலலித்த அண்ணாதுரை
அவர்கள் அங்கிருந்தவர்களுக்கு புரியும்படி நாய் கதை ஒன்றை சொன்னார்.
Here is a short story he told to drive home the irrationality of arguments for making Hindi the link language of India.) “A man had two dogs – a big one and a small one.