#புரட்டாசி#சனிக்கிழமை
ஓம் நமோ ஸ்ரீவேங்கடேசாய🙏🏻
மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள். இதற்கு ஒரு காரணம் உள்ளது. சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்கிறோம். இவர்
சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வர். புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சனீஸ்வரன் பிறந்தார். நவக்கிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பெருமாளே சனிக்கு அதிபதியாக இருக்கிறார். ஒருமுறை சனிபகவான்
கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயுத்தமானார். அப்போது எதிரே நாரதரைச் சந்தித்தார். தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற, அப்படியானால் சரி ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தப்பி தவறி கூட திருமலை பக்கம் சென்று
விடாதீர்கள். ஏன் உங்கள் பார்வை கூட அங்கு படாமல் இருப்பதே நல்லது என்று மறைமுகமாக வழக்கத்துக்கே உரிய தம் கலக பாணியில் தெரிவித்தார் நாரதர். என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்று சொல்லும்போது தான் கவனம் அவற்றில் போகும். சனிபகவான் மட்டும் விதிவிலக்கா என்ன? நான்
சனிபகவான். நான் பிடித்தால் யாராக இருந்தாலும் எனக்கு கட்டுப்பட வேண்டியதுதான் என்று திருமலையில் பாதம் பதித்த அடுத்த நொடியில் தூக்கியெறியப்பட்டார். மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் உனக்கு திருமலையில் இருப்பது யார் என்று தெரிந்தும் உன் திருவிளையாடலை என்னிடம் காட்டுகிறாயா என்றார்
திருவேங்கடவன். கோபாக்னி கொண்ட திரு வேங்கடவனைக் கண்டு நடுங்கினார் சனிபகவான். எல்லோரையும் துன்பப்படுத்தி மகிழும் என்னையும் வழி நடத்தும் பரம்பொருளே, என்னை மன்னித்தருளும் என்று அவர் பாதம் பிடித்து மன்னிப்பு கேட்டார். பிறகு சாந்தமான கருணாமூர்த்தி
என்னை நினைத்து வாழும் பக்தர்களுக்கு நீ
எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார் பரம்பொருள். அப்போது சனி பகவானின் விருப்பத்துக்கிணங்க அவர் பிறந்த தினமான சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டால் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டார் திருவேங்கடவன்.
அன்று
முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக ஆயிற்று. பக்தர்களின் வேண்டுதல் செல்வம், ஆயுள், ஆரோக்யம் இவற்றை முன்னிறுத்திதானே. இவை அனைத்தும் குறைவின்றி கிடைக்க ஒவ்வொரு சனிக்கிழமையும் சங்கடத்திலிருந்து காக்கும் திருவேங்கடவனை வழிபடுவோம். சனியின் உக்கிர பார்வையைத் தணித்து நம்மைக் காக்க
திருவேங்கடவன் அன்புடன் கலியுகத்தில் திருமலையில் குடி கொண்டு இருக்கிறார்.
ஓம் நமோ வேங்கடேசாய🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காஞ்சி மகாபெரியவரை தரிசிக்க வந்த ஒரு வைணவர், ஒரு கோரிக்கை வைத்தார். ‘‘சுவாமி. தினமும் ஆழ்வார்களின் ‘திவ்ய பிரபந்த’ பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஆனால் நேரமின்மையால் தவிக்கிறேன். 4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா? அதை
சொன்னால் நன்றாக இருக்குமே” என்றார். கலகலவென சிரித்த சுவாமிகள், ''பார்வதிதேவி ஒரு முறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள். 'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார்.
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே
என்ற சகஸ்ரநாம ஸ்தோத்திரம் தான் சிவன் சொன்ன பதில். நீ கேட்ட கேள்வியும் அது மாதிரி இருக்கு'' என்றார். சுவாமிகள் அடுத்து என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்திருந்தனர்.
''ஆழ்வார்களில் நிறைய பாடல்கள் பாடியவர் #திருமங்கையாழ்வார். அவர் பாடாத விஷ்ணு
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி🙏🏾இன்று #வாமனஜெயந்தி
பிரகலாதனனின் பேரன் மகாபலி 100 அசுவமேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களைச் செய்யத் தொடங்கினான். அவ்வாறு அவன் செய்து முடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகிவிடும் என்பதால்
தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர். அதற்கு மகாவிஷ்ணு, மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது. அவன் எப்போது அவன் குருவால் சபிக்கப்படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும் என்று கூறினார்.
மகாவிஷ்ணுவின் பதிலைக் கேட்ட தேவர்களின் தாயான அதிதி, காஷ்யப முனிவரிடம் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற என்ன வழி என்று கேட்டாள். அப்போது காஷ்யபர் பூஜைகளில் உயர்ந்ததான பயோ விரதத்தை உபதேசித்தார். அதிதியும் அந்த விரதத்தை சிரத்தையாக மேற்கொண்டாள். அவளின் பூஜைக்கு மகிழ்ந்த விஷ்ணு சிறு பாலகனாகத
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் புரட்டாசி மாதப் பிறப்பு இன்று. புரட்டாசியில் திருவவதாரம் செய்த வைணவ ஆச்சார்யனைப் பற்றி தெரிந்து கொள்வோம். காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்த அனந்தசூரி தோத்தாரம்பா என்ற தம்பதியர் குழந்தை பாக்கியம் வேண்டி கால்நடையாக திருப்பதி சென்றனர்.
அன்றிரவு இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார். திடுக்கிட்டு கண் விழித்த அவர் தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக்கொண்டிருந்த அக்கணம் திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு. பூஜை மணியை
காணாததால் ஆளுக்கொரு பக்கமாய் அனைவரும் பதட்டத்துடன் தேடிக் கொண்டிருக்க அப்போது அசரீரியாய் ஒரு குரல்
‘அந்த மணியை யாரும் தேட வேண்டாம்! புரட்டாசி சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக வேங்கடநாதன் என்கிற பெயரில் துப்புல் அனந்தசூரி தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார். அவர்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள். செல்வா நாத்திகன், வாய் ஜால திறமையுடைவன். சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வாவுக்கு மேடையில் கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்று பிரசங்கம் செய்வதே வேலை. எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப்
பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான். செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடுவார்கள். கடைசியில் கடவுளுமில்லை கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம் என முடித்து யாராவது கேள்வி
கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்று அழைப்பான். அப்போது ஒரு முறை நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். நண்பா என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் செல்வா.
#NEET#நீட் இதற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும் இந்தியாவில் டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள்
நிரப்ப படவில்லை.
பாலாஜி மருத்துவக்கல்லூரி - 206 காலி. (திமுக முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)
ACS மருத்துவ கல்லூரி - 146 காலி
(முன்னாள் அதிமுக அமைச்சர் AC சண்முகத்திற்கு சொந்தமானது)
மீனாக்ஷி மருத்துவ கல்லூரி - 130.
( கம்பெனி முதலாளி தெரியவில்லை தெரிந்தவர் கூறலாம்)
செட்டிநாடு மருத்துவ கல்லூரி - 127
( செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி )
SRM மருத்துவ கல்லூரி - 98
(உத்தமர் பச்சைமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி )
ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி - 76. (எம்ஜிஆர் ஆசிபெற்ற சாராய வியாபாரி உடையார் குடும்பம் )
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#ராதாஷ்டமி
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தாள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள் ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா
பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது. தா
என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல். தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை