போலி வரைபடம் தயாரித்து விற்க முயற்சித்தது தெரியவந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.மாநகராட்சியுடன் விளாங் குறிச்சி இணைவதற்கு முன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு கீழ் இருந்தது.
1990ல், 3.50 ஏக்கருக்கு ஸ்ரீராமகிருஷ்ணா லே-அவுட் உருவாக்கி, 34 மனைகளுக்கு உள்ளூர் திட்ட குழுமத்திடம் வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளது.
2018ல், பூங்கா, பக்க திறவிடத்துக்கு ஒதுக்கிய நிலங்களையும், அருகாமையில் உள்ள இடத்தையும் சேர்த்து, போலியாக வரைபடம் தயாரித்துள்ளனர். அதை அங்கீகாரமற்ற மனைப்பிரிவாக காட்டி, வரன்முறை செய்திருக்கின்றனர்.
இது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.உடனே, போலியாக வரைபடம் தயாரித்து, மாநகராட்சிக்கு சொந்தமான, ரூ.6 கோடி மதிப்பிலான, 39 சென்ட் நிலத்தை, 8 மனைகளாக பிரித்து, விற்பதற்கு நடந்த முயற்சி தொடர்பாக,
மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன், உள்ளூர் திட்ட குழுமம் வழங்கிய வரைபட அனுமதி தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தார். மாநகராட்சிக்கு சொந்தமான சொத்து என்பது தெரியவந்ததை தொடர்ந்து,
அப்பகுதியில், 'மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடம்' என, அறிவிப்பு பலகையை வைத்தார்.
போர்டு போதாது!சில நாட்களுக்கு முன், 18வது வார்டு, அலமேலு மங்கை நகரில், பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கிய, 10 சென்ட் இடத்தில், 7 கடைகள் கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டிருந்தது தெரியவந்தது.
மாநகராட்சி அதிகாரிகள் வணிக வளாகத்தின் முன், எச்சரிக்கை போர்டு மட்டும் வைத்து விட்டு வந்தனர். தொடர் நடவடிக்கை, கண்காணிப்பு இல்லாததால், அந்த போர்டை ஆக்கிரமிப்பாளர்கள் கழற்றி வீசி விட்டனர்.
மாநகராட்சிக்கு சொந்தமான இடம், இன்னமும் ஆக்கிரமிப்பாளர் வசம் இருக்கிறது. 'ரிசர்வ் சைட்' மீட்க தனிக்குழு ஏற்படுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழக மாணவ – மாணவியர்களுக்கு… ஹீரோவா..? வில்லனா..?
நீட் – மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு..
சமீபகாலமாக தமிழக மாணவர்களுக்கு, “நீட்” தேர்வு வில்லனாக சித்தரிக்கப் படுகின்றது.
மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஒவ்வொரு மாணவரும், நீட் தேர்வு எழுதி, தேர்வு பெற்று தான் செல்ல வேண்டும் என்ற நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி இந்த சட்டம் இயற்றப்பட்டது.
மருத்துவ படிப்பு படிப்பதற்கு, நீட் கட்டாயம் என்று சொன்ன நாள் முதல், தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், தமிழகத்தில் மிகவும் வில்லனாகவே சித்தரிக்கப்படுகின்றது இந்த நீட் தேர்வு.
பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம்: 12 போ் குழுவை அமைத்தது மத்திய கல்வி அமைச்சகம்
புதுடில்லி: பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட வரைவுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும் - உண்மை நிலை என்ன?? - ஒரு அலசல்
1.தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சுமார் 28000 கோடி. அதில் 60% க்கும் மேல் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.
2. நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரி மருத்துவ இடங்கள் (MBBS) -29925.
3. இந்த 29925 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்து MBBS இடங்கள் வாங்கியவர்கள் 213. சராசரியாக ஆண்டிற்கு 19 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானார்கள். இது 0.7% சதவிகிதத்திற்கும் குறைவானதாகும்.
பைடன் - மோடி முதல் சந்திப்பு இருதரப்பு உறவை மேம்படுத்தும்
வாஷிங்டன் :'அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையேயான முதல் நேரடி சந்திப்பு, இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்தும்' என, அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஐ.நா., பொது சபை கூட்டம், 'குவாட்' அமைப்பின் மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அமைதியான சூழல்
வரும் 24ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேச உள்ளார்.இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளதாவது:இரு தலைவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பங்கேற்றுள்ளனர்.
இது உங்கள் இடம்: ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா? என்னங்க அரசின் நியாயம்?
எம்.கே.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஆயுள் முழுவதும் நாத்திகம் பேசி, பிராமண சமுதாயத்தை மட்டும் இழிவாக பேசி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வ உருவங்களை மட்டும் நிந்தித்து வாழ்ந்து,
மறைந்தவர், 'நாத்திக பேரொளி'யான தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி. அதாவது அவரை பொறுத்தவரையில் ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகம். மற்ற மதங்களை ஆதரிப்பார்.
கருணாநிதி வழியில் வந்த அவரது மகன் முதல்வர் ஸ்டாலினும், அதே கொள்கையை தான் கடைப்பிடிக்கிறார். முதல்வரானதும், கோவில்களில் மட்டும் தமிழில் அர்ச்சனை செய்யும்படியும், தமிழே சரியாக உச்சரிக்க தெரியாதோரை அர்ச்சகராக நியமித்தும் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பெயர் தான் மதசார்பின்மையா?
ரூ.21,000 கோடி ஹெராயின் கடத்தல்! முக பவுடர் எனச் சொல்லி நாடகமாடிய ஆந்திர ஜோடி கைது
புதுடில்லி :'முக பவுடர்' என்ற பெயரில் 3,000 கிலோ எடையுள்ள 21 ஆயிரம் கோடி மதிப்பு ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாக ஆந்திர ஜோடி, சென்னையில் கைது செய்யப்பட்டது.
சென்னை, ஆந்திராவில் இவர்கள் பெரிய இறக்குமதி நிறுவனங்களை நடத்தி வருவது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகள் அனுப்பி வைத்துள்ள இந்த போதைப் பொருள், குஜராத் துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஆமதாபாத், டில்லி, மும்பையில் பலர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தலிபானுக்கு நம் அண்டை நாடான பாக்.,கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.