காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று நின்று இருந்தது.
அதற்கு வாழைப்பழம் தருமாறு பணித்தார். ஆனால், வாங்க மறுத்துவிட்டது. அதற்கு கொஞ்சம் சாதம் கொடுக்க ஏற்பாடு செய்தார். கண் மூடி திறப்பதற்குள் வேகமாக சாப்பிட்டு விட்டு, மரத்தில் ஏறி மறைந்தது.
அதன்பிறகு, இதுவே தினமும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு "கோவிந்தா' என்று பெயரிட்டு அழைத்தார் மஹா பெரியவா.
ஒருநாள் அந்த குரங்கு நீண்டநேரமாகியும் சாப்பிட வரவில்லை. சாப்பிட மனமின்றி, மஹா பெரியவா காத்திருந்தார். அன்று, மடம் அருகில் இருந்த நாராயண அய்யர் வீட்டிற்குள் குரங்கு நுழைந்திருக்கிறது. அதைக் கவனிக்காத அய்யர், கதவைப் பூட்டி விட்டு மடத்திற்கு வந்து விட்டார்.
தான் புதிதாக வாங்கிய நிலத்தின் பத்திரத்தை, பெரியவாளிடம் கொடுத்து ஆசி பெறுவது அவரின் நோக்கம். பெரியவாளிடம் பத்திரத்தைக் கொடுப்பதற்காக பைக்குள் கையை விட்டார் நாராயண அய்யர்.
ஆனால், பத்திரத்தைக் காணவில்லை. அவர் திகைத்தார்.
""நாராயண அய்யரே! என்ன தேடறீர்.... நான் குரங்கைத் தேடறேன். நீர் பத்திரத்தைத் தேடறீரோ.... என்ற பெரியவா," "போங்கோ... போங்கோ.... ஆத்துல போய் தேடிப் பாருங்கோ.... நான் தேடுறது மட்டுமில்லாமல், நீங்க தேடுறதும் கெடைக்கும்....'' என்றார்.
விறுவிறு என வீட்டுக்கு வந்த அய்யர் கதவைத் திறக்க, சரலேன குரங்கு ஒரு பையுடன் ஓடுவதைக் கண்டார். அந்த பையைப் பார்த்ததும் தான், அதில் பத்திரத்தை வைத்தது நினைவிற்கு வந்தது. குரங்கைத் துரத்தியபடி அவரும் பின்தொடர்ந்தார்.
தெருவிலுள்ள எல்லாரும் வேடிக்கை பார்த்தனர்.
ஓடிய குரங்கு மடத்திற்குள் நுழைந்தது.
பெரியவா அதனிடம் அன்புடன், ""கோவிந்தா ..... உனக்கு பசிக்கலையா... எங்கே போயிட்ட....'' என்று கேட்க, அய்யரும் ""ஐயோ குரங்கு ... பத்திரம்.... பத்திரம்....'' என பதட்டத்துடன் ஓடி வந்தார்.
மஹா பெரியவா அவரிடம்,""பயப்படாதீங்கோ.... குரங்கும் பத்திரமா இருக்கு! அதன் கையில் பத்திரமும் பத்திரமாத் தான் இருக்கு'' என்று சொல்ல அங்கே ஒரே சிரிப்பு வெடி... அதன் பின், தன் முன் குரங்கு போட்ட பத்திரத்தை எடுத்த மஹா பெரியவா, அய்யரிடம் வழங்கி ஆசியளித்தார்.
"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"
எதிரே, ஒரு பெரிய மரம். தடினமான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின், இருபது - முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கை தொடர்ந்து மரத்தில் ஏறின.
பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போட சொன்னார்கள்.
லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து பழத்தை எடுத்து கொண்டு மேலே சென்றன. லீடர் குரங்கு மட்டும் ஒரு பழத்தை கூட தொடவில்லை!
பெரியவாள் சொன்னார்கள்:
"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன."
"காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்."
"ஒரு கட்டெறும்பு செத்துபோனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்."
"ஒரு காக்கை இறந்து போனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்."
"ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!"
கவனமாக கேட்டு கொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, "பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்" என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.
"சரி, காலையில் இரண்டு நிமிஷம், சாயங்காலம் இரண்டு நிமிஷம், எனக்காக ஒதுக்குங்கள். இருபத்திநான்கு மணி நேரத்தில், நாலு நிமிஷம் தான் கேட்கிறேன்."
"காலையில், இரண்டு நிமிஷம் "ராம, ராம" என்று சொலுங்கோ; சாயங்காலம் இரண்டு நிமிஷம் "சிவ, சிவ"ன்னு சொலுங்கோ..."
"அப்படியே செய்கிறோம்" என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்து கொண்டார்கள்.
அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், "பத்து பன்னிரண்டு பேர்களாவது, சொன்ன சொல்லை காப்பாத்துவா" என்றார்கள்.
அந்த, யாரோ பத்து பன்னிரண்டு புண்ணியாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான், ஆழமான கருத்துடன்,
குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; "ஆச்சார்யர்கள்".
ஹர ஹர சங்கர 🇮🇳🙏
ஜெய ஜெய சங்கர 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழக மாணவ – மாணவியர்களுக்கு… ஹீரோவா..? வில்லனா..?
நீட் – மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு..
சமீபகாலமாக தமிழக மாணவர்களுக்கு, “நீட்” தேர்வு வில்லனாக சித்தரிக்கப் படுகின்றது.
மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஒவ்வொரு மாணவரும், நீட் தேர்வு எழுதி, தேர்வு பெற்று தான் செல்ல வேண்டும் என்ற நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி இந்த சட்டம் இயற்றப்பட்டது.
மருத்துவ படிப்பு படிப்பதற்கு, நீட் கட்டாயம் என்று சொன்ன நாள் முதல், தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், தமிழகத்தில் மிகவும் வில்லனாகவே சித்தரிக்கப்படுகின்றது இந்த நீட் தேர்வு.
பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம்: 12 போ் குழுவை அமைத்தது மத்திய கல்வி அமைச்சகம்
புதுடில்லி: பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட வரைவுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும் - உண்மை நிலை என்ன?? - ஒரு அலசல்
1.தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சுமார் 28000 கோடி. அதில் 60% க்கும் மேல் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.
2. நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரி மருத்துவ இடங்கள் (MBBS) -29925.
3. இந்த 29925 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்து MBBS இடங்கள் வாங்கியவர்கள் 213. சராசரியாக ஆண்டிற்கு 19 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானார்கள். இது 0.7% சதவிகிதத்திற்கும் குறைவானதாகும்.
பைடன் - மோடி முதல் சந்திப்பு இருதரப்பு உறவை மேம்படுத்தும்
வாஷிங்டன் :'அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையேயான முதல் நேரடி சந்திப்பு, இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்தும்' என, அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஐ.நா., பொது சபை கூட்டம், 'குவாட்' அமைப்பின் மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அமைதியான சூழல்
வரும் 24ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேச உள்ளார்.இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளதாவது:இரு தலைவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பங்கேற்றுள்ளனர்.
இது உங்கள் இடம்: ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா? என்னங்க அரசின் நியாயம்?
எம்.கே.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஆயுள் முழுவதும் நாத்திகம் பேசி, பிராமண சமுதாயத்தை மட்டும் இழிவாக பேசி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வ உருவங்களை மட்டும் நிந்தித்து வாழ்ந்து,
மறைந்தவர், 'நாத்திக பேரொளி'யான தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி. அதாவது அவரை பொறுத்தவரையில் ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகம். மற்ற மதங்களை ஆதரிப்பார்.
கருணாநிதி வழியில் வந்த அவரது மகன் முதல்வர் ஸ்டாலினும், அதே கொள்கையை தான் கடைப்பிடிக்கிறார். முதல்வரானதும், கோவில்களில் மட்டும் தமிழில் அர்ச்சனை செய்யும்படியும், தமிழே சரியாக உச்சரிக்க தெரியாதோரை அர்ச்சகராக நியமித்தும் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பெயர் தான் மதசார்பின்மையா?
ரூ.21,000 கோடி ஹெராயின் கடத்தல்! முக பவுடர் எனச் சொல்லி நாடகமாடிய ஆந்திர ஜோடி கைது
புதுடில்லி :'முக பவுடர்' என்ற பெயரில் 3,000 கிலோ எடையுள்ள 21 ஆயிரம் கோடி மதிப்பு ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாக ஆந்திர ஜோடி, சென்னையில் கைது செய்யப்பட்டது.
சென்னை, ஆந்திராவில் இவர்கள் பெரிய இறக்குமதி நிறுவனங்களை நடத்தி வருவது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகள் அனுப்பி வைத்துள்ள இந்த போதைப் பொருள், குஜராத் துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஆமதாபாத், டில்லி, மும்பையில் பலர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தலிபானுக்கு நம் அண்டை நாடான பாக்.,கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.