சனாதன வெறியர் சத்தியமூர்த்தி அய்யர்!

இந்தி எதிர்ப்புப் போர் (1937 -38 ) உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்தியை ஆதரித்து உரக்க குரல் கொடுத்தவர் தமிழ்நாட்டு பார்ப்பனர்களின் தலைவராக விளங்கிய சத்தியமூர்த்தி அய்யர்!. 1939 ம் ஆண்டு "பாஷா ஏகாதிபத்தியத்தை"
ஆதரித்து சென்னை லயோலா கல்லூரியில் இவர் ஆற்றிய உரையை குடியரசு வெளியிட்டது.

sathyamurthy "என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால், இந்தியர்களை இந்தி மட்டுமன்றி, சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக படிக்கும்படி செய்வேன்!.
சர்க்கார் உத்தியோகங்களுக்கு சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்படுத்தி விடுவேன்! காந்தியார் உயிருடன் இருக்கும்போதே, இந்தியாவில் ராமராஜ்ஜியம் ஏற்பட்டுவிட வேண்டுமென்று மிக ஆவலாய் இருக்கிறேன்.
சர்க்கார் உத்தியோகங்களுக்கு சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்படுத்தி விடுவேன்! காந்தியார் உயிருடன் இருக்கும்போதே, இந்தியாவில் ராமராஜ்ஜியம் ஏற்பட்டுவிட வேண்டுமென்று மிக ஆவலாய் இருக்கிறேன்.
ராமராஜ்ஜியம் என்பது, வர்ணாஸ்ரம முறைப்படி ஒவ்வொருவனும், அவனவன் ஜாதி தர்மப்படி நடந்து கொள்ள வேண்டியது தான். ராமர் காலத்தில் மக்கள் இந்த வர்ணாஸ்ரம முறைப்படியே,
அதாவது பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் எனப் பிரிக்கப்பட்டு அவனவனுக்கு சாஸ்திரப்படி ஏற்பட்ட கர்மங்களை அவனவன் செய்துகொண்டு திருப்தியாய் இருந்தான். அதனால் யார் மீதும் வருத்தப்பட வில்லை" என்றார்.
அருப்புக்கோட்டையில் 1937ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்கள் இராஜதுரோகிகள் என்றும், அவர்கள் மீது ஆயுள் தண்டனை அல்லது தூக்குத்தண்டனை விதிக்கவேண்டும் என்றும் கொக்கரித்தார்.
குழந்தை திருமண தடை சட்டமசோதா

பெண்கள் திருமண வயது 14 ஆக உயர்த்த வேண்டும் என்று கருதி, குழந்தை திருமண தடை சட்ட மசோதாவை இந்திய சட்டசபையில் சாரதா என்பவர் கொண்டுவந்தபோது,
சட்டசபையிலும் வெளியிலும் அதை விமர்சித்ததோடு, தனது பெண் குழந்தைகளுக்கு பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப் போவதாக சூளுரைத்தார் சத்தியமூர்த்தி!. பெண்களுக்கு பருவமடைந்த பின்னர் திருமணம் செய்துவைப்பது இந்து மத மரபுக்கு எதிரானது என்று வாதாடினார்.
தனது கருத்துக்கு ஆதரவாக "பராசர் ஸ்மிருதி"யிலிருந்து ஸ்லோகங்களை எடுத்துக்காட்டினார்.

பிராமணன் கப்பலேறக்கூடாது என்றும் தன் பாஷையை விட்டு அந்நிய பாஷையை படிக்கக்கூடாதென்றும் அந்தப் "பராசர் ஸ்மிருதி" சொல்லுகிறதே!, இவர் ஏன் சீமைக்குப் போனார்?
மிலேச்சப்படிப்பான பி.எல் ஏன் படித்தார்? கடல்கடந்து போனவனையும் அந்நிய பாஷையை படித்தவனையும் பிரஷ்டனென்று சாஸ்திரம் சொல்லுகிறது. பிரஷ்டனான இவர் வைதீகச் சபையில் தன்னை பார்ப்பனராக நினைத்து, "பராசர் ஸ்மிருதி"யை பேசுவதே குற்றமல்லவா?
என்று பார்ப்பனர்களின் வேதங்கள், சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள் அனைத்திலும் புலமை பெற்றிருந்த சுவாமி கைவல்யம், சத்தியமூர்த்தி அய்யரைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
கைவல்யம் கேட்ட அதே கேள்வியை, "ஸ்மிருதி"யின் இந்த ஸ்லோகங்களை அய்யரின் கண்ணாடி அணிந்த கண்கள் பார்க்கத் தவறிவிட்டதா? என்று நக்கலாக எழுதினார் குத்தூசி.
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்துக்கான மசோதா

சுப்பராயன் தலைமையிலான சென்னை சட்ட மன்றத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்துக்கான மசோதாவை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கொண்டுவந்தபோது அது இந்து மரபுக்கும், ஆகம விதிகளுக்கும் எதிரானது என்று சொல்லி,
கடுமையாக எதிர்த்தவரும் இதே சத்தியமூர்த்தி அய்யர்தான். கடவுளுக்கு சேவகம் செய்வதற்காகவே தேவதாசி முறை கொண்டுவரப்பட்டது என்று வாதாடினார். அப்படிப்பட்டவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் என்றார். அதைக்கேட்டு வெகுன்டெழுந்த முத்துலெட்சுமி,
"அப்படியானால் எங்கள் வீட்டுப்பெண்கள் இதுவரை கடவுளுக்கு சேவகம் செய்து மோட்சம் பெற்றது போதும்!. விருப்பப்பட்டால் அய்யர் தங்கள் வீட்டுப்பெண்களை இனி அந்தப் பணி செய்ய அனுப்பி மோட்சம் பெறட்டும்" என்றார். சத்தியமூர்த்தி அய்யர் சகலத்தையும் மூடிக்கொண்டார்!.
கட்அவுட் கலாச்சாரம்!

சத்தியமூர்த்தி அய்யர் மேயராக பதவி வகித்தபோது, சென்னையில் "காங்கிரஸ் பொருட்காட்சி" நடத்தப்பட்டது. அந்தக் கண்காட்சியின் மையப்பகுதியில் சத்தியமூர்த்தி மேயர் கவுன் அணிந்து எடுத்துக்கொண்ட மிகப்பெரிய படமும், அதற்கு இருபுறத்திலும்
சிறிய அளவில் அரவிந்தர் மற்றும் காந்தி படங்களும் வைக்கப்பட்டிருந்ததை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு பதிவு செய்திருக்கிறது. இவர் மேயராக இருந்தபோதுதான் மேயர்கள் மாநாட்டைக் கூட்டி அதற்கு தன்னை தலைவராக்கிக் கொண்டதுடன்
அதுவரை "மேயர்" என்று அழைக்கப்பட்ட பதவியை "வணக்கத்துக்குரிய மேயர்" என்றாக்கி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.

பதவிப் பேராசை!

சத்தியமூர்த்தி அய்யரின் பித்தலாட்டங்களை தோலுரிக்கும் கட்டுரைகள் குடியரசு இதழ்களில் நிரம்ப காணமுடிகிறது. இந்திய சட்டசபை மெம்பர் ஆனவுடன் மந்திரி
கனவில் அவர் பிதற்றியதை கேலி செய்து "சத்தியமூர்த்தியின் திருவிளையாடல்" என்ற தலைப்பில் குடியரசில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

"தோழர் சத்தியமூர்த்தியின் நாக்குக்கு நரம்பு கிடையாது. அவர் பேச்சுக்கும் மதிப்பு கிடையாது என்று ஒரு பழமொழி உண்டு. தோழர்
சத்தியமூர்த்தி அய்யர் பொதுவாழ்வில் விளம்பரம் பெற்ற பிறகு, சுமார் ஆயிரம் தடவைக்கு குறையாமலாவது தான் பேசியவைகளுக்கும், நடந்து கொண்டவைகளுக்கும் மன்னிப்பு கேட்டிருப்பார்!.
இரண்டாயிரம் தடவைகளுக்குக் குறைவில்லாமல் தான் வெளிப்படுத்திய அபிப்ராயங்களுக்கு தத்துவார்த்தமும், சந்தர்ப்ப அர்த்தமும், மாற்று சேதிகளும் வெளியிட்டிருப்பார்!. இந்திய சட்டசபை மெம்பர் ஆனவுடன் சதாசர்வ காலம் மந்திரி பதவி பற்றிய பேச்சும் எண்ணமும் கனவுமாகவே இருந்து வருகிறார்!.
இந்த பயித்தியம் முத்திவிட்டதின் பயனாய் இச்செய்தி மாகாணமெங்கும் பரவியதோடல்லாமல், இந்திய தேசமெங்கும் பரவிவிட்டது. இதனால் காங்கிரஸில் சரியாகவோ, தவறாகவோ, யோக்கியர்கள் என்று பெயர் வாங்கியிருந்த சிலருடைய நிலைமை மிக ஆபத்தாக போய்விட்டது!.
ஏனெனில் காங்கிரஸ்காரர்கள், உத்தியோகம் பெறுவதில்லை. சர்க்காருடன் ஒத்துழைப்பதில்லை என்றெல்லாம் சொல்லி ஓட்டுவாங்கியிருக்கும்போது அந்த வாக்குறுதிக்கு மாறாக நடக்க ஆரம்பித்தால் அவர்கள் மரியாதை கெட்டுப்போவதுடன், ஜனங்கள் நம்ப மாட்டார்களே!. அடுத்த எலக்‌ஷன் வரையிலாவது
வாயை மூடிகொண்டிருக்கக்கூடாதா? என்கிற கஷ்டம் வந்துவிட்டதால் அவர்கள் சத்தியமூர்த்தியை கண்டிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே சத்தியமூர்த்தியார் ஒரு பல்டி அடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. அப்பல்டியில் ஒரு மாபெரும் புளுகு புளுகி இருப்பது
மிகவும் கவனித்துப் பெரியதொரு சிரிப்பு சிரிக்கக் கூடியதான வார்த்தையாக இருக்கிறது. அதாவது தான் மந்திரியாக ஆக நினைத்திருந்தால் 15 வருடங்களுக்கு முன்பே ஆகியிருப்பாராம்!. எப்படி ஆகியிருப்பார்? ஏன் ஆகவில்லை? என்பது ஜனங்களுக்குத் தெரிய வேண்டியது ஒரு முக்கிய காரியமல்லவா?
சத்தியமூர்த்தியார் 15 வருஷம் எப்படி மந்திரி பதவியை வெறுத்துத் தள்ளினார் என்பது பற்றி யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வது உண்மை! உண்மை! முக்காலும் உண்மை! என்பது விளங்கும். எப்படியெனில் சத்தியமூர்த்தியார் நாடகப்பிரியர் என்பது உலகம் அறிந்த விஷயம்.
அவர் கொஞ்ச காலமாக சுகுண விலாச நாடக சபையிலும் ஒரு குறிப்பிட்ட மெம்பராய் இருந்து வருகிறார். அதற்கு முன்னரும் பல நாடக கூட்டத்திலும் சம்பந்தம் வைத்திருக்கிறார்.

ஆகவே நாடகத்தில் மந்திரி வேஷம் போடும் சந்தர்ப்பம் இவருக்கு பல தடவை கிடைத்திருக்கலாம்.
அதிலும் இவர் அரசியலில் இறங்கி விளம்பரம் பெற்ற பிறகு இவரது மந்திரி நடிப்புக்கு அதிக கிராக்கி கூட ஏற்பட்டிருக்கலாம். அதைச் சத்தியமூர்த்தியார் தமது கவுரவத்துக்கு குறைவானது என்று கருதி மறுத்தும் இருக்கலாம்.
அல்லது தனக்குள்ள தகுதியை, திருப்தியைக் கருதி வேறு வேஷம் போட ஆசைப்பட்டு அடைந்துமிருக்கலாம்.

இந்த விஷயமெல்லாம் மூர்த்தியாருடைய நாடகத் தோழர்களைக் கேட்டால் இன்னும் நன்றாய் தெரிந்து கொள்ளக்கூடும்.
ஆகவே அய்யர்வாள் மந்திரி பதவியை வேண்டாம் என்று சொன்னதானது நாடகத்தில் வேஷம் போடும் மந்திரி பதவியே ஒழிய சென்னை அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பாய் இருக்கும் மந்திரி பதவி அல்ல .

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

27 Sep
சென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா?

பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளில் ம.பொ.சி. மட்டும்தான் சென்னை நகரை மீட்டுக் கொடுத்தார் என்று நம்புகின்றனர். இது உண்மையல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். Image
இந்தியாவில் மொழிவழி மாநிலம் பிரிப்பதற்காக இந்திய அரசினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டது நீதிபதி தார் தலைமையிலான குழு ஆகும். குடிஅரசு தலைவரால் 1948இல் இக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர் நீதிபதி எஸ்.கே. தார் தலைவராகவும் டாக்டர் பன்னாலால், திரு ஜகத்நாரியன் லால், பி.சி. பானர்ஜி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் குழுவினருக்கு அறிவுரை வழங்குவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது.
Read 225 tweets
27 Sep
காங்கிரசில் மீண்டும் சேர துடித்த ம.பொ.சி.

காங்கிரஸ் கட்சித் தேர்தலில் போட்டியிட எனக்குத் தகுதியில்லை என்ற தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கையானது என் மனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. நேருஜி அப்போது அனைத்திந்திய காங்கிரசின் தலைவராக இருந்தார்.
என்னைப்பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருந்த நேரம் அது. அதனால், தேர்தல் அதிகாரியின் முடிவை நேருஜிக்கு அறிவித்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று அவருக்கு ‘மேல் மனு’ப் போட்டேன். 21 மணி நேரத்திற்குள் அவரிடமிருந்து கீழ்க்கண்ட தந்தி கிடைத்தது. Image
புதுடெல்லி, 16.11.1952 தாங்கள் காங்கிரஸ் தலைவருக்குச் செய்து கொண்ட அப்பீல் மனு கிடைத்தது.

காங்கிரஸ்மேலிடம் தமிழரசுக் கழக அங்கத்தினர்கள் பற்றி விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் வரையிலும் அந்தக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் காங்கிரஸ் தேர்தலில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.
Read 25 tweets
27 Sep
இந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. Image
எந்தவிதமான மரியாதைக்குரிய பண்பும் இல்லாத தலைவராகத்தான் ம.பொ.சி. வாழ்ந்திருக் கிறார். காங்கிரசுக்கு உள்ளேயே இருந்துகொண்டு 1946ஆம் ஆண்டு தமிழரசுக் கழகத்தை ம.பொ.சி. உருவாக்கினார்.
1938ஆம் ஆண்டிலேயே பெரியார் தனித் தமிழ்நாடு கேட்டார். ஆனால் அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து அமைப்பு தொடங்கிய ம.பொ.சி.தான் முதன்முதலில் தமிழ்நாடு கேட்டார் என்று தமிழ்தேசியவாதிகள் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். அப்போது முதலில் சுதந்திரத் தமிழரசு அமைப்பதே என் லட்சியம் என்றார்.
Read 44 tweets
27 Sep
ஆதித்தனார் - ம.பொ.சி.யின் தடுமாற்றங்கள்!

"நாம் தமிழர்". சி.பா. ஆதித்தன், கட்சியைக் கலைச்சிட்டு..

*அறிஞர் அண்ணாவிடம் சபாநாயகர் பதவி

*கலைஞரிடம், அமைச்சர் பதவி

1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்று விட்டவுடன் 1927 இல் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் Image
நீதிக்கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து தான் இந்த நெல்லூர் பார்ப்பனரல் லாதார் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைவர் சித்தூர் முனிசாமி நாயுடுவும், Image
ஏ.பி.பாத்ரோவும் நீதிக் கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தை மாற்றுவதற்காவே, கட்சியில் பார்ப் பனர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டாம்; தேர்தல் களிலும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டாம்;
Read 29 tweets
26 Sep
ம.பொ.சி பர்னிச்சர் - ஊரும் உணர்வும்

“நீதிமன்றம் என்னைத் தண்டித்தாலும் வரலாறு என்னை விடுவிக்கும்” என்று பிடல் காஸ்ட்ரோ சொன்னதற்கு நேர் எதிராக வெகுமக்களால் விடுவிக்கப்பட்டு வரலாற்றால் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருப்பவர் பெரு மதிப்புக்குரிய ம.பொ.சி அவர்கள். Image
இன்றைக்குத் தமிழ்த் தேசியத்தின் பெயரில் ஆதாயம் தேடும் அற்பர்களுக்கு வெப்பன் சப்ளையர் யாரென்றால் அது ம‌.பொ‌.சி தான்.

வெற்று பிம்பத்தோடு, ஏராளமான கற்பிதங்களைக் கொண்ட ம.பொ‌.சி என்கிற பர்னிச்சரை கட்டுடைக்கிறது வாலாசா வல்லவன் எழுதியுள்ள ‘பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா?’
என்ற புத்தகம்.

திருத்தணியைச் சேர்ந்த வழக்குரைஞர் பா.குப்பன் அவர்கள் எழுதிய 'தமிழினத்தின் இனப்பகை ஈ.வெ.ரா’ என்ற புத்தகத்திற்கு மறுப்பாக எழுதப்பட்ட இப்புத்தகம், வழக்குரைஞர் குப்பனின் கருத்து, குப்பைக்கு சமானம் என்பதை ஆதாரத்துடன் விவரிக்கிறது.
Read 22 tweets
26 Sep
ம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே!

ம.பொ.சிதான் உண்மையான சுதந்திர தமிழ்நாடு கோரினார் என்பதை ம.பொ.சியின் ‘பிரிவினை வரலாறு’ நூலிலிருந்தும் தமிழன் குரல் நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளார் வழக்குரைஞர் பா.குப்பன். ஆம் உண்மை தான், Image
ம.பொ.சி அப்படி எழுதிய காலத்தில் பெரியார் ம.பொ.சியை முழு மனதுடன் ஆதரித்தார் என்பதை வழக்குரைஞர் பா.குப்பன் மறைத்து விட்டார். இதோ பெரியார் ஆதரித்ததை ம.பொ.சியே எழுதியுள்ளார்.
“பெரியாரைச் சந்தித்தேன்! 1947 ஜனவரி 26 இல் விருது நகரில் நகர மன்றத்தின் சார்பில் நடைபெறவிருந்த விழாவிற்கு அம்மன்றத் தலைவர் திரு.வி.வி.இராமசாமி அவர்களால் அழைக்கப்பட்டேன். அதற்காகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் நான் சென்று கொண்டிருந்தபோது,
Read 115 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(