#SaveIndiaFromBJP

கையாலாகதவன் பெண்டாட்டி கண்டவனுக்கு எல்லாம் வைப்பாட்டின்னு சொல்வது போல் இந்தியாவை விற்று அளித்த காவிகள் !😄😄

அரசுக்கே படியளந்த பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்த்த மத்திய மோடி அரசு!

நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை பெரு முதலாளிகளுக்கு Image
தாரை வார்க்கும் வகையில் அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பது என பல்வேறு வகையில் தனியார் மயமாக்களை ஊக்குவித்து வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் அவ்வாறே பிரதிபலித்தது.
எல்.ஐ.சி துவங்கப்பட்டபோது மூலதனம் வெறும் ரூ.5 கோடி. கடந்த 2000ல் அரசாங்கத்தின் மூலதனம் ரூ.100 கோடியாக ஆக்கிவிட்டனர். எல்.ஐ.சி ரூ.25 ஆயிரம் கோடியை ஈவுத்தொகையாக கொடுத்துள்ளது. அதாவது லாபத்தில் பங்காக எல்.ஐ.சி.க்கு கொடுத்துள்ளது.
எல்.ஐ.சி மத்திய அரசுக்கு கொடுத்துள்ள கடன் ரூ.10 லட்சத்து 34 ஆயிரத்து 828 கோடி, மாநில அரசுகளுக்கு ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 251 கோடி கொடுத்துள்ளது. எல்.ஐ.சி. பல நிறுவனங்களில் முதலீடு செய்தது மட்டும் ரூ.29 லட்சம் கோடி. அதுமட்டுமல்லாமல் சாலை,
மின்சாரம், வீடுகட்ட, குடிநீர் உதவிக்கு கொடுத்த பணம் ரூ.50 ஆயிரம் கோடி. அவர்களிடம் உள்ள பாலிசி மதிப்பு ரூ.45 லட்சம் கோடியாக உள்ளது. இந்த எல்.ஐ.சி. நிறுவனம் பணம் காய்க்கும் மரம். மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் பணம் தேவையோ அப்போதெல்லாம் எல்.ஐ.சி. தான் பணத்தை கொடுத்துள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனத்தில் 3 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளனர். கம்பெனிகள் விதிகளின் படி யார் அதிகமாக பங்கு வாங்குகிறார்களோ அவர்கள் உரிமையாளர்களாக இருக்க முடியும். பல வெளிநாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 49 சதவீதம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால்.
உள்நாட்டு பெரிய நிறுவனம் 79 சதவீதம் பிசினஸ் வைத்திருப்பது எல்.ஐ.சி. தான். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்தாலும் எல்.ஐ.சி.யை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், தற்போது, பொதுத்துறை நிறுவன பங்குகளை 74 சதவீதம் விற்கலாம் என்று முடிவு செய்துள்ளது மத்திய மோடி அரசு.
மக்களிடம் வாங்கிய பணத்தை எல்.ஐ.சி. மக்களுக்கே செலவு செய்கிறது. இப்படி 74 சதவீத பங்குகளை விற்றால் அவர்கள் மக்களுக்கு, செலவு செய்யவிடுவார்களா என்பது தெரியவில்லை. மத்திய அரசு பெரிய முதலாளிகளிடம் பொதுத்துறை நிறுவனங்களை ஒப்படைக்க துடிக்கிறது.
நஷ்டம் ஈட்டினால் மூடி விடு, லாபம். ஈட்டினால் விற்றுவிடு என்பதுதான் பா.ஜ.வின் கொள்கையாக உள்ளது. அதிகமாக வரி கொடுப்பது பொதுத்துறை நிறுவனம் தான். கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லை. ரயில்வே நிர்வாகம் நஷ்டத்தில் இயக்கப்படுவதாக கூறி வருகின்றனர்.
பயணிகள் ரயில் இயக்குவதில் நஷ்டம் என்றால், உண்மைதான். 46 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

ஆனால், சரக்கு ரயில் இயக்குவதில் லாபம் ரூ.46 ஆயிரம் கோடி. அப்போது லாபம் என்றால் பாசஞ்சர் கட்டணத்தில் செலவு செய்கிறோம். இதில், நஷ்டம் என்று எப்படி கூற முடியும்.
ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காமல் ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைக்கின்றனர்.

தொழிற்சாலைகளுக்கு சமூக பார்வை உள்ளது. இதை ஏன் பா.ஜ.க வேகமாக கொண்டு வருகிறார்கள் என்றால் இட ஒதுக்கீட்டில் நம்பிக்கை கிடையாது. எனவே. பொதுத்துறை நிறுவனம் இருந்தது
என்றால் இட ஒதுக்கீட்டில்அனைத்து சமூகத்துக்கும் தரவேண்டும்.

தனியார் மயமாகும் என்றால் இட ஒதுக்கீடு கிடையாது. சமூக நீதி கோட்பாடு இல்லாமல் போய்விடும். மும்பை - அகமதாபாத், டெல்லி - லக்னோ ஆகிய இடங்களுக்கு, தனியாரால் ரயில்கள் இயக்கப்பட்டன. இப்போது அந்த ரயில்களை இயக்க முடியவில்லை.
கட்டண உயர்வை அதிகப்படுத்தியும் ஓட்ட முடியாமல் நிறுத்திவிட்டனர். டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ ரயிலை ரிலையன்ஸ் நிறுவனம் இயக்கியது.

ஆனால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி அந்த ரயிலை நிறுத்திவிட்டனர். அந்த ரயிலை ரயில்வே நிர்வாகம் நடத்தியது. இப்போது லாபத்துக்கு ஓட்டி வருகின்றனர்.
இவர்களின் உண்மையான முகம் என்ன என்பது தற்போது தெரியவருகிறது.

காவி என்பது, ஏமாற்று வேஷம். மக்களிடம் ஓட்டு வாங்க மெஜாரிட்டி மதத்தில் ஓட்டு வாங்குவதற்காக ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர். கார்ப்பரேட் என்பதுதான் அவர்களின் உண்மையான முகம்.
லாபம் தரும் எண்ணெய் நிறுவனங்களை ஏன் விற்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மோடி அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம். தோல்வியடைந்த பிரதமர் ஜி.எஸ்.டி. கொண்டு வந்ததால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதிலும் தோல்வி. தற்போது பொதுத்துறைகளை விற்பது தான்.
இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா டாட்டாவிடம் தான் நாட்டுடைமையாக்கினோம்.

அதே டாட்டாவிற்கு, விற்க போகிறோம். வரியாக முதலீடாக, சலுகையாக பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செலவு செய்தனர். இது தனியாருக்கு போனால் நமக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை.
பொருளாதாரம் தொடர்பாக தனியார் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் 39 சதவீதம் தனியார் நிறுவனங்கள் வருமானத்தை உயர்த்தியுள்ளனர்.
இது, எப்படி நடந்தது. யாருடைய ஆதரவுடன் நடந்தது. என்று தெரியவில்லை. ஆக்ஸ்பார்ம் அறிக்கையில், முகேஷ் அம்பானி சொத்து மட்டும் 78 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதித்துள்ளார். ரூ.3 ஆயிரம் மாதம் சம்பாதிக்க தொழிலாளி கஷ்டப்படுகிறார்.
ஆனால், முதலாளிகள் கோடிகளை குவிக்கின்றனர்.

பெரிய முதலாளிகளின் சொத்து வரியை நீக்கியுள்ளனர். அவர்கள் மீது சொத்து வரிபோட்டால் ரூ.1 லட்சம் கோடி வருவாய் வரும்.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு. கொரோனா வரி போட்டிருக்கலாம்.
மாறாக, பெட்ரோல் மீதும். டீசல் மீதும் வரி போட்டுள்ளனர். விவசாயத்துக்கான வரி போட்டுள்ளனர்.

உரத்துக்கு மானியம் ரூ.60 ஆயிரம் கோடி குறைத்து விட்டு மீண்டும் வரி போடுகிறார்கள். இது, எந்த. விதத்தில் நியாயம். இந்த அரசாங்கம் யாருடைய அரசாங்கம் என்று தெரியவில்லை.
இந்தியாவை கார்ப்பரேட் கொள்ளை நாடாக பா.ஜ. அரசு மாற்றி விட்டது. ஒரு பக்கம் மானியத்துக்கான ஒதுக்கீட்டை குறைத்து வருகின்றனர். பெட்ரோல். டீசல் மூலம் ரூ.2.45 லட்சம் கோடி வருவாய் சம்பாதித்துள்ளனர். இது போக பங்குகளை விற்றுவருவாய் திரட்டுகின்றனர்.”

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

11 Oct
விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை உங்களுக்கு பிணை மறுத்துச் சட்டப்படியே உங்களைச் சிறையிலேயே வைத்திருக்க முடியும். அப்படி என்ன சட்டம் அது? அது தான் ’ஊபா’ (UAPA) என அழைக்கப்படும் ‘சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ (Unlawful Activities Prevention Act). Image
இந்த ‘ஆள்தூக்கி’ கருப்புச் சட்டம் இயற்றப்பட்டு இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன.

கடந்த ஐம்பதாண்டுகளில் ‘ஊபா’ சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தங்கள், அரசியல் சாசன சட்டத்தின் 19-வது பிரிவு குடிமக்களுக்கு அளித்திருக்கும் பேச்சுரிமை, Image
சுதந்திரத்தை அனுபவிப்பதற்கானஉரிமை மற்றும் வாழ்வுரிமை, சங்கமாக சேர்வதற்கான உரிமை ஆகிய அனைத்தையும், படிப்படியாக வெட்டிச் சுருக்கியுள்ளது. Image
Read 31 tweets
11 Oct
பொடாவில் வைகோ கைது செய்யப்பட்டது தவறு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு-அதில் அத்வானியின் தில்லு முல்லு .

பொடா சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவர்வாக்குமூலம் தந்தால் அதை முதலில்
போலீஸ் அதிகாரி பதிவு செய்ய வேண்டும் அதன் பின்னர் தான் மாஜிஸ்திரேட்டிடம் அந்தவாக்குமூலம் பதிவு செய்யப்படும்.

மாஜிஸ்திரேட்டே ஏன் நேரடியாக வாக்குமூலத்தை பதிவு செய்யக் கூடாது?எதற்காக போலீஸ் அதிகாரி முதலில் வாக்குமூலம் பெறவேண்டும் என்று விளக்கம் தருமாறு உச்ச நீதிமன்றம் கோரியிருந்தது
அதே போல பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்துக்கு முன் ஜாமீன் கோர முடியுமா? முடியாதா? என்பது குறித்தும்விளக்கம் கேட்டிருந்தனர்.
Read 16 tweets
11 Oct
விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்’

வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, இளவரசன், அழகு சுந்தரம், சிவந்தியப்பன், பூமிநாதன், கணேசன், பி.எஸ்.மணியம், நாகராஜன் ஆகிய 9 பேர் மீது ‘பொடா’ Image
சட்டத்தின் கீழ், தமிழ்நாடு க்யூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இப்போது மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் & ஈரோடு கணேசமூர்த்தி பாராளுமன்ற உறுப்பினர்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1976 ஆம் ஆண்டு.. மிசா எனப்படும் நெருக்கடி நிலை பிரகடனத்தில் கூட 13 மாதம் தான் சிறையில் இருந்தார். ஆனால் 2002 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி , பொடா சட்டத்தில் கைதாகி 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.

பொடாவில் ஏன் கைதானார் .?
Read 21 tweets
11 Oct
சீமான் பகிரங்க வாக்குமூலம் -அரசுகள் வேடிக்கை பார்க்கிறது ஏன் ?

விடுதலைப் புலிகளை ஆதரித்து வைகோ பேசியது பொடா சட்டத்தின் கீழ் குற்றமாகாது .

ஆனால் 19 மாதம் சிறை அலைகழிப்பு செய்தார். ஜெ எடுத்த நடவடிக்கையால் .

ஆனால் சீமான் மற்றும் சீமானின் தம்பிஸ் எல்லோரும் சொல்வது நாங்க தான் Image
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்தோம் என
என எல்லா மேடைகளிலும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கின்றனர் ,ஏகப்பட்ட வீடியோ ஆதரங்கள் இருந்தும் சீமான் மற்றும் நாதஸ் கட்சி மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?

அனைத்து கைப்பிள்ளை போல் பாதுகாப்பது யார் ?
'ஒளிய தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதை போல் இருக்கிறான் பாஜக மற்றும் சங்க்பரிவார வானரங்கள் துணையோடு .

ஆனால் காங்கிரஸ் மௌனம் காக்கிறது .

ஒண்ணுமே புரியவில்லை .
Read 11 tweets
11 Oct
அடச் ச்சே !😄😄😄

இந்த பதிவில் லேப் டெஸ்ட் பார்க்கலாம் .

ஒரு திரைப்படத்தின் வடு .

**காபி & பேஸ்ட் **

இது என்ன புதுக்கதையா இருக்கு ?

சி.பா -மணி ராஜலு -பெங்களூர் சாமுவேல் குணசீலன் -சீமான் -சாட்டை முதல் வண்டாரி வரை

@pdhana @krishnaskyblue @Samaniyantweet @karuvayan_twits
@Its_Pillai @Sivaji_KS @kparanjothi1976 @ARUN27272727 @gopisankar3966 @Dharmen96993202 @Waltertwitz

பாலைப்படம் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டதா?
செம்மை மரபுக்கூடலும் ஒற்றைக்கண் என்பதையாவது அந்த கனேஷ் நாடார் என்கிற விருத்திரன் தம்பியிடம் கேளுங்கள்.
2000 ஆண்டுகளுக்கு முன் கி.மு 300 என திட்டமிட்டு தமிழர் நிலத்தை பாலையாக காட்டப்பட்ட காரணம் என்ன ?
பாலை எனக்கூறுவது இவர் கூறுவது போல் அல்லது நீங்கள் கூறுவதுபோல் வறண்ட பாலைவனமான ஆப்பிரிக்க சகரா பாலைவனம் கிடையாது .
Read 47 tweets
11 Oct
நீ தாண்ட்டா அயோக்கிய நாயின்னு அண்ணனை திட்டிருப்ப்பதால் -சாட்டை துரைமுருகன் வாக்குமூலம் 🔥🔥

வண்டாரி தமிழ்மணியிடன் அறிமுகம் ஆன துரை முருகன் தனது திருமணத்திற்காக 2012 – 2013-ம் ஆண்டு வாக்கில் எண்பதாயிரம் ரூபாய்க்கு நகைகள் வாங்கியுள்ளார்.
இந்த தொகையை திருமணத்திற்கு வரும் மொய் பணத்தில் இருந்து திரும்பக் கொடுத்து விடுவதாக உறுதி அளித்துள்ளார். எனினும், திருமணத்திற்கு பின் சொன்னபடி பணம் தரவில்லை.
தமிழ்மணி, சாட்டை துரைமுருகன் தனக்குத் தர வேண்டிய கடனில் பல வருடங்களாக நிலுவையில் இருக்கும் 33,000 ரூபாயைத் திரும்பக் கேட்டுள்ளார். வாங்கிய கடனை இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என இழுத்தடித்து வந்துள்ளார் துரை முருகன். இத்தனைக்கும் சமீபத்தில் தான் துரைமுருகன்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(