#Thread

சங்க இலக்கியங்களில் கடவுளின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளது, அது ஆரியர்கள் சொன்னது அல்ல. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் கூட கடவுளைப் பற்றிய குறிப்பு உள்ளது என்று வாதிடுவார்கள் பலர்,அதற்க்கு எடுத்துக் காட்டு என்று இந்த பாடலையும் கூறுவார்கள். 

(1/n)
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"

(- தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணை இயல் - பாடல் எண் : 5)

(2/n)
இந்த பாடலுக்கான விளக்கம் பல மதப் பற்றாளர்களால்  இவ்வாறாக கூறப் படுகிறது.

மாயோன் (திருமால்) பொருந்தியிருக்கும் காடுடைய நிலம் முல்லை என்றும், சேயோன் (முருகன்) பொருந்தியிருக்கும் மேகம் சூழ்ந்த மலையுடைய நிலம் குறிஞ்சி எனவும்,

(3/n)
வேந்தன் (இந்திரன்) பொருந்தியிருக்கும் இனிய நீர்நிலைகள் உடைய நிலம் மருதம் எனவும், வருணன் பொருந்தியிருக்கும் கடல் சார்ந்த பெருமணல் சூழ்ந்த நிலம் நெய்தல் எனப்படும் இயல்பு உடையதாகும்.

உண்மையில் அந்த பாடலின் விளக்கம் என்ன என்பதை அறிய வேண்டுமெனில்,

(4/n)
அதற்கு முதலில் சங்க கால வாழ்வியலைப் பற்றிய புரிதல் வேண்டும்.

தமிழ் முன்னோர் தலைவர்கள் அதாவது, தங்கள் ஆதிகுடிகளைக் காத்தவர்களின்  நினைவாக  கல் அமைத்துப் போற்றுவது வழக்கமாக இருந்து வந்தது, அந்த கல்  நடுகல் எனப்பட்டது.

கந்து என்பதும் உண்டு அது கல் தூண் என்று பொருள்படும்.

(5/n)
கந்து அல்லது  நடுகல்லில் அந்த மக்களை காத்து வழிநடத்தியவர்களின்  பெயர் அல்லது அவர்களின் படம் எழுதி வைப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

முல்லையின் மாயோனும் (திருமால்), குறிஞ்சியின் சேயோனும் (முருகன்)இப்படித் தோன்றியவர்கள் தான்.
"அவர்கள் ஆதி குடிகளின் இனத் தலைவர்கள் ஆவர்."
(6/n)
கந்தன் என்று சொல்லபடுவது இன்று கடவுளாக வழி படும் ஸ்கந்தன் அல்ல,
அதே போல திருமால் என்று குறிப்பிடப்பட்டது விஷ்ணு அல்ல.

மாயோனும், சேயோனும் ஆதி குடி நாட்டார் தலைவர்கள், அந்த மக்கள் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களை போற்றினர். பின்னாளில் சமஸ்கிருதம் கலந்து,
(7/n)
புராணக் கதைகள் இயற்றப்பட்டு, தெய்வங்களாய் மாறிப் போனது. அப்படியானால் உண்மையில் இந்த மாயோன் மற்றும் சேயோன் யார்  என்று பார்த்தால்.

(8/n)
முல்லை காடும் காடு சார்ந்த இடமும் அந்த காட்டின் அடர் கருமை தான் மாயோன், மாயோன் என்பது கருமை நிறமுடையவன், என்று  ஈழத்து அறிஞர் கா. சிவத்தம்பி கூறுகிறார்.

மேலும் மாயோன் என்பது மா + உடையவன் மாயோன் அதாவது காட்டில் உள்ள மாக்களை(விலங்குகளை) உடையவன் என்றும் பொருள்படும்.

(9/n)
சேயோன் என்ற சொல்லின் பொருள் விளக்கம் பார்த்தால் சேயோன் என்பதைச் சேய், சேயன், சேயான், என்று பகுத்துப் பொருள் கொண்டால் செந்நிறத்தான் என்று பொருள்படும். குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும் அந்த  மலை உச்சியின் சிவப்பு தான்  சேயோன்,
 சேயோன் என்ற சொல்லிற்கான பெயர்ச்சொல் விளக்கம் (10/n)
சேயோன் = சே + உடையோன் = காளை + உடையவன்.

அதாவது, உடலுக்கும் மனதிற்கும் மிரட்சியைத்தரும் மலைகளில் வலிமையான காளைகளைப் பயன்படுத்தி வாழ்ந்தவன் நமது எருத்தன் என்கிற சேயோன்.

(11/n)
மால் என்பது கண்ணுக்குப், பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை,  என்று ஆதித் தமிழர்கள் வழுத்தினர் இது திரு.வி.க அவர்களின் ஆய்வுரையின் அடிப்படையில்.

திருமால் என்பது திரு + மால் திருமால் அதாவது  அறிவு + கருப்பு = சிறந்த மூளையுடையவன் இது பொயர்ச்சொல்லின் படி
(12/n)
வேந்தன் என்பது  வேய்ந்த  + (அ)வன் அதாவது  வேந்தன் என்ற பொருளிலேயே அரசர்களுக்கு இப்பெயரை சூட்டியிருந்தார்கள்.

அரசனென்பவன் முற்காலத்தில் விலங்குகளின் தோலை ஆடையாக வேய்ந்தவன் மற்றும் பறவைகளின் இறகுகளை தலையில் வேய்ந்தவன் என்ற பொருளில் இப்பெயர் வருகிறது.

(13/n)
அதுமட்டுமல்லாமல் வேந்தன் என்பது ஒரு பதவி, இதில் குறிப்பிட்ட ஒரு நபர் என்று பொருள்ப்படாது, இந்தப் பதவிக்கு ஒருவருக்கு பின் மற்றொருவர் என்று ஆட்கள் மாறிக்கொண்டே இருப்பதால் வேந்தன் என்பதை ஒரு குறிப்பிட்ட நபராகக் கொள்ள வேண்டாம் . இதை திரித்து இந்திரன் தான் வேந்தன் என்கின்றனர்.
(14/n)
இப்போது வருணன் என்ற பெயர்ச் சொல்லை ஆராய்வோம்:
வருணன் = வருந்தி + உணன் = எல்கு + உணன் = மறுக்கின்ற உணவை உடையவன்

அதாவது மணல் சூழ் நெய்தல் நிலத்தில் உண்பதற்குத் தகுதியில்லா மணலை உடையவன் வருணன் ஆவான். அல்லது உணவுப்பொருள் வளராத ஆனால் கடல்நீரின் மீன்களை உணவகாக உண்பவர் ஆவான்.

(15/n)
உணன் என்ற சொல்லை திருமூலர் திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் இயமம் என்றத் தலைப்பில் கையாண்டுள்ளதையும் பார்க்கவியலுகிறது.

கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே.

(16/n)
எள்கு உணன் - மறுக்கின்ற உணவை உடையான். திருவள்ளுவரும் குறைய உண்டலை, ``மறுத்துண்டல்`` (குறள், 945) என்பர். எள் குதல் - மறுத்தல். ``உணன்`` என்பது, ``உண்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் அடியாகப் பிறந்த பெயர்.

இதே வருணனை இப்படியும் பொருள் சேர்கவியலும்

(17/n)
வருணன் = வரும் + அணன் = மேல்நோக்கி வருகின்ற சிறப்பானவன் என்று பொருள்படுகிறது.

அணன் என்பது தமிழில் உள்ள பல குறிப்புகளிலும் மேல்நோக்கிய செயலையே குறிக்கும்போது வரும் அணனை அதாவது வருணனை மழைக்கடவுள் என ஏன் குறிப்பிட வேண்டும்? மழை மேலிருந்து கீழ் நோக்கியல்லவா வரும்?

(18/n)
அண் = மேல். அண் +அன் = அணன். அணன் என்பது சிறப்பு பொருந்தியவன். 'ஞானப் பெருமானைச் சீர் அணனை ஏத்தும் திறம்" (இயற். நான்முகன். திருவந்; 67)

"அணவருதல்" இதற்கான எடுத்து காட்டுகளைப் பார்ப்போம்.

(19/n)
1. இரையைப் பெரும் ஆர்வத்தோடு தலையை மேலே தூக்குதல் என்று பொருள்படுகிறது.

எடுத்துக்காட்டு"நாரை - - - அயிரை ஆர் இரைக்கு அணவந்தாங்கு(குறுந்:128) , "அருகெழுசிறகொடும் அணவரும் அணிமயில்"(பெருங்கதை:100)

2. மேலெடுக்கப்படுதல் "நீர்வழிக்கு அணவரும் நெடுங்கைய வாகி"(பெருங்கதை: 1:54:42)
(20/n)
அண் + அவு > அணவு > அணவு +தல் > அணவுதல் = மேல்நோக்கிச் செல்லுதல். "அந்தர அகடுதொட்டு அணவுநீள் புகழ்" (சீவக : 1239)

அண் = மேல். அண் +அன் = அணன். அணன் = சிறப்பு பொருந்தியவன். 'ஞானப் பெருமானைச் சீர் அணனை ஏத்தும் திறம்" (இயற். நான்முகன். திருவந்; 67)

(21/n)
மேலும் வருணன் என்பதை
வருள்+ நன் = வருணன் என்றும் பிரிக்கலாம்,

கடற்கரையோரம் வீசும் காற்று/ வருளும் காற்று கொண்ட இடம் என்பதாக இது பொருள்படும். இவற்றிலிருந்து இதற்கும் வருணன் என்ற பார்ப்பனிய கடவுளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது விளங்கும்.

(22/n)
இப்படி நிலத்திணைகளை ஒத்த தமிழர்களை தொல்காப்பியர் பாடி வைத்ததை,  தமது மத விளம்பரப்பலகைகளாக மாற்றிக்கொண்ட இந்த மதவாதிகள் தமிழுக்கு செய்ததென்ன நல்வினையா???  இப்படிப்பட்ட பொய் பரப்புரைகளை இன்னும் நம்ப வேண்டுமா???

(23/n)
ஆய்வுகள் செய்து பார்த்தால் தொல்காப்பிய பாடலுக்கு, திரித்து விளக்கம் கூறப்பட்டுள்ளது புரியும்.

உண்மை வரலாரையும், இலக்கணங்களை பிழை இல்லாமல் நாம் படிக்க வேண்டும் இல்லையேல் திரிபுகள் மூலம் நம்மை, நம் வரலாறை அழித்தொழிப்பர்.

♥️End of the thread ♥️

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr. Nagajothi 👩🏼‍⚕️

Dr. Nagajothi 👩🏼‍⚕️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @DrNagajothi11

19 Oct
ஜாதகம் என்றால் என்ன? நம்பலாமா? கூடாதா? #Thread

ஜாதகம் என்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தை வைத்து,  காலையில் சூரியன் எந்த நேரத்தில் உதித்தது ( உதிக்கும் நேரத்தை ஓரை என்பனர்) என்பதை  அட்ச ரேகையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது,

(1/n)
இந்த கணிப்பு  தமிழ்நாட்டில் ஒரு நேரமும், கேரளாவில் ஒரு நேரமும் ஆந்திராவில் ஒரு நேரமும் இப்படியாக இடத்திற்கு இடம் மாறுபடும். இப்படி இந்த நேரத்தை வைத்து கணிப்பது தான் ஜாதகம். மொத்தம் 27 நட்சத்திரம்.

(2/n)
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதம் அவை அஸ்வினி, பரணி, கார்த்திகை மற்றும் ரோகினி எனப்படும். 27×4=108 நட்சத்திர பாதங்கள் . ஒவ்வொரு வீட்டிற்க்கும் 9 பாதங்கள் என , 108 நட்சத்திரக் கால்கள் -

(3/n)
Read 9 tweets
17 Oct
அக்டோபர்"மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்", மார்பக புற்றுநோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.அதே போல மார்பக புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளையும் தெரிந்து கொள்வது அவசியம், அது தேவையில்லாத பயத்தை போக்க உதவும் #Thread
(1/n) Image
கட்டுக்கதை no.1 :- உங்கள் மார்பில் ஒரு கட்டி இருப்பதை கண்டுபிடித்தால், அது உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் குறிக்கிறது !?

உண்மை :- மார்பகக் கட்டிகளில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே புற்றுநோயாக மாறும்.

(2/n) Image
ஆனால் உங்கள் மார்பகத்தில் தொடர்ந்து புதியதாக மார்பக திசுக்களில் ஏதேனும் மாற்றங்களைக் கண்டால், அதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. மார்பக பரிசோதனைக்காக மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

(3/n) Image
Read 18 tweets
14 Oct
ஆயுத பூஜை:-

சரஸ்வதி பூஜை என்பது ஒரு அர்த்தமற்ற பூஜை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூஜை செய்தால் கல்வி வரும், வித்தைவரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல்,

(1/n)
சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே , அவர்கள் படித்துப்பெரிய படிப்பாளியாகிக் கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத ``மக்குகள்" என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

(2/n)
முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும்.

(3/n)
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(