கொடநாடு! அப்ரூவராகும் இளங்கோவன்? எடப்பாடிக்கு சிக்கல்
கொடநாடு கொலை வழக்கு விசாரணை எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். டிரைவர் கனகராஜ் விபத்தில் இறந்தது,
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில்தான். ஆத்தூர் தொகுதியில் கடந்த 10 வருடங்களாக ராஜாவாக இருந்தவர் சேலம் இளங்கோவன். அவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
ஆத்தூரிலிருக்கும்ஒருவரிடம்தான் கனகராஜ் கொடுத்தார் என சயான் தனது வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறார். கனகராஜ் விபத்தில் இறந்த இடமும் ஆத்தூர்தான். ஆத்தூருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது கண்ணுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக விபத்துக்கு முன்பு கனகராஜ்,
எடப்பாடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரிடம் சொல்லியிருக்கிறார்.
உண்மையில், அந்த சமயத்தில் ஆத்தூருக்குப் பக்கத்திலுள்ள பாரில் இருந்ததாக தனது மனைவியிடம் சொல்லியிருக்கிறார் கனகராஜ். கொடநாடு கொலை தொடர்பாக மற்ற குற்றவாளிகளை கைது செய்யும்பொழுது,
கனகராஜ் எங்கே என அவர்கள் கேட்க, ஆத்தூரில் பார்த்துக் கொள்வார்கள் என சஜீவனின் தம்பி யுடனிருந்த போலீசார் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
பாரிலேயே கனகராஜூக்கு குறி வைக்கப்பட்டு, அவர் தப்பித்ததால், துரத்திச் சென்று விபத்து என்ற பெயரில் கதையை முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
கனகராஜ் மரணத்தை நேரடியாக பார்த்த சாட்சி அவரது உறவினர் ரமேஷ்தான்.
இந்த கொலைக்கு ஆத்தூர் பகுதி அ.தி.மு.க. பிரமுகர்கள் உதவியிருக்கிறார்கள். கனகராஜ் கொலைக்குப் பிறகு தனது வீட்டை பிரமாண்டமாக கட்டினார் ரமேஷ். டிராக்டர்களை வாடகைக்கு விட்டும் தொழிலை விரிவுபடுத்தினார்.
அவருக்கு அ.தி.மு.க.வில் பதவியும் வழங்கப்பட்டது. இறந்த கனகராஜின் செல்போனை எடுத்த ரமேசும், அவரது சகோதரர் பழனிவேலும், அந்த செல்போனை மறைத்து வைத் தார்கள். கனகராஜின் உறவினர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இளங்கோவனுக்கும் நெருக்கமாக இருக்கிறார்.
அவர் சமீபத்தில் எடப்பாடிக்கு பக்கத்திலிருக்கிற தனது கிராமத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு ஒன்றை கட்டினார். கனகராஜ், ஜெ.வின் டிரைவராக இருந்து சம்பா தித்த பணத்தையெல்லாம் அந்த கவுன்சிலரிடம்தான் கொடுத்து வைத்தார் என்கிறார்கள்.
கனகராஜ் மறைவுக்குப் பிறகு எடப்பாடி வகையறாக்கள் கனகராஜ் குடும்பத்திற்கு கொடுத்த பணமும், அந்த கவுன்சிலர் மூலமே சொத்துக்களாக மாற்றப்பட்டது. இப்படி, கனகராஜ் மரணத்திற்கு பின்னால் உள்ள ஆத்தூர் பகுதி மர்மங்களை ஆராய, ஐ.ஜி.சுதாகர் தலைமையில் சேலம் எஸ்.பி.அபினவ் களமிறக்கப்பட்டார்''
என்கிறார்கள் போலீசார்.
கனகராஜ் கொல்லப்பட்டபோதே உடனிருந்த அவரது உறவினர் ரமேஷ், கனகராஜ் சகோதரர்கள் தனபால், பழனிவேல் மற்றும் கனகராஜ் மீது மோதி அவர் இறந்துபோக காரணமான காரை ஓட்டிவந்த ரபீக் என ஆத்தூர் பகுதியில் இருந்த இந்த வழக்கில் தொடர்புடைய
அனைவரையும் இந்த டீம் விசாரணைக்குள்ளாக்கியது.
ரமேஷிடம் நடத்திய விசாரணையில், "கனகராஜ் சாவதற்கு முன்பு என்னுடன் அமர்ந்து குடித்தார்' என ஒத்துக்கொண்டுள்ளார். அதன் பிறகு, கனகராஜ் எப்படி கொல்லப்பட்டார் என விவரித்துள்ளார். ரமேஷிடம் விசாரித்த பிறகு,
போலீசார் அ.தி.மு.க.வின் நகரச் செயலாளர் மோகன், ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரஞ்சித் ஆகியோரை விசாரித்திருக்கிறார்கள்.
இந்த விசாரணைகள் எல்லாம் சேலம் இளங்கோவனை நோக்கியே கைகாட்ட சேலம் இளங்கோவனை நேரடியாக விசாரிக்காமல் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரித்துள்ளார்கள்.
அதே லஞ்ச ஒழிப்புத்துறை மூலம், அ.தி.மு.க. நகரச்செயலாளர் மோகன் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். கொடநாட்டில் கொள்ளையடித்து எடுக்கப்பட்ட சொத்து ஆவணங்கள், இளங்கோவன் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதுதான்
லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு அளிக்கப்பட்ட ரகசிய அசைன்மெண்ட் என்கிறது காவல்துறை.
இதற்கிடையே, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு முன்பு கொடநாடு தொடர்பான சொத்துக்கள் அவர் பேருக்கு மாற்றப்பட்ட டாக்குமெண்ட்டுகளை, ஆத்தூர் அருகே ஒரு தோட்டத்தில் இளங்கோவன் புதைத்தார் என்றும், இந்த வேலைகளை
ஆத்தூர் எம்.எல்.ஏ. ஜெய்சங்கர் செய்தார் என்றும் வரும் தகவல்களையும் காவல்துறை தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த கொள்ளை வழக்கில் ஆறுகுட்டி எம்.எல்.ஏ., அனுபவ் ரவி ஆகியோர் கனக ராஜிடம் நெருக்கமாக பழகியிருக்கிறார்கள்.
அந்த விசாரணையை முடித்துவிட்டுதான் இளங்கோவ னிடம் வரமுடியும். ஆறுகுட்டியும், அனுபவ் ரவியும் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமான வர்கள். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனும் எங்கள் சந்தேக லிஸ்ட்டில் இருக்கிறார். அதனால் இளங்கோவனிடம்தான் கொடநாட்டில்
கொள்ளையடித்த டாக்குமெண்ட்டு களை கனகராஜ் கொடுத்தார் என்கிற ஒரு தகவலை நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் போலீசார்.
கொடநாடு கொள்ளை வழக்கில் யாரை விசாரிக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என சிறப்பு புலனாய் வுக் குழுவுக்கு சென்னையிலிருந்து
கட்டளை போகிறது. கொடநாடு மேனேஜர் நடராஜனை இப்போ தைக்கு கைது செய்ய வேண்டாம் என்ற உத்தரவு சென்னையிலிருந்து வந்தது. அத்துடன் இளங்கோவன் இந்த வழக்கில், தான் சிக்காமல் இருக்க செஞ்சி சிவா என்கிற நபர் மூலம் தி.மு.க.வின் தலைமைக்கு தூது அனுப்பியதாகவும்,
அதை தி.மு.க. மேல்மட்டம் நிராகரித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள் இளங்கோவனுக்கு நெருக்கமானவர்கள்.
இதற்கிடையே, விழுப்புரம் கூட்டுறவு வங்கி தலைவர் முரளி ரெட்டியார், லோட்டஸ் குரூப் ஓட்டல்கள், மல்லிகா பர்னிச்சர்ஸ் என இளங் கோவனுக்கு தொடர்பான அனைவரையும்,
லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு படை போலீசார் என ஒரு பெரிய போலீஸ் டீமே வளைத் துள்ளது. அழுத்தம் அதிகமானால் இளங்கோவன் அப்ரூவராகி விடுவார் என்கிறார்கள் இளங்கோவ னுக்கு நெருக்கமானவர்கள்.
மொத்தத்தில் எடப் பாடியின் நிழலை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து எடப்பாடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறது போலீஸ் டீம்.
_--நக்கீரன்
இதுவரை ட்ரெய்லர்தான்!
விபத்தில் இறந்ததாக சொல்லப்படும் கனகராஜின் மரணம் பற்றி சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ்,
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார். ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அக். 22ம் தேதி முதல் விசாரணை நடந்து வருகிறது.
ஆத்தூர் அருகே வடக்குக்காடு சக்தி நகரைச் சேர்ந்த ரமேஷ், கனகராஜின் சின்னம்மா மகன்.
விபத்து நடந்ததாக சொல்லப்படும் நாளில் மாலை 4 மணியளவில், ரமேஷின் வீட்டிற்கு காரில் சென்றுள் ளார் கனகராஜ். ரமேஷின் தங்கைக்கு குழந்தை பிறந்து இருந்ததால் அவர்களைப் பார்க்க வந்தாராம். அதன்பிறகு தனது காரை அவருடைய வீட்டில் நிறுத்திவிட்டு,
ரமேஷ் பயன்படுத்தி வந்த ஸ்ப்ளெண்டர் பைக்கை எடுத்துக்கொண்டு மாலை 5 மணியளவில் அங்கிருந்து எங்கோ கிளம்பி இருக்கிறார். அன்று இரவு 8.30 மணியளவில்தான் கனகராஜ் மர்மமான முறையில் சாலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ரமேஷ் பைக்கை கனகராஜ் ஏன் எடுத்துச் சென்றார்
என்பது தொடங்கி பல கோணங்களி லும் விசாரணை நடக்கிறது.
ஆத்தூரில் நடந்த சம்பவம் என்பதால், இளங் கோவன் வீட்டில் அக். 22ம் தேதி விஜிலன்ஸ் போலீஸ் சோதனை நடத்திய நிலையில், நள்ளிரவுக்குப் பிறகு ஆத்தூர் போலீசார்,
இளங்கோவன் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலரை மேட்டுப்பட்டி அருகே ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு, மறுநாள் காலையில் அனுப்பி வைத்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய காரின் உரிமை யாளர், ஓட்டி வந்தவர் உள்பட எல்லாரிடமும் விசாரணை நடந்துள்ளது.
கனகராஜ் மரணத்தில் உள்ள சந்தேகம் பற்றி புகார் அளித்த அவரது அண்ணன் தனபாலிடமும், அவருடைய மற்றொரு தம்பி பழனிவேலிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கனகராஜின் மர்ம மரண வழக்கை முதன்முதலில் விசாரித்த ஆய்வாளர் பாஸ்கர்பாபு,
சடலத்தை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், விபத்து நடந்த இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
“இதுவரை பார்த்தது ட்ரெய்லர் தான். இனிமேல்தான் மெயின் பிக்சர் என்கிறார்கள் போலீசார்.
நக்கீரன்.
-
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
“நான் ஒரு வேளை இறக்க நேரிட்டால், என் உடலைத் தயவு செய்து காங்கிரஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனக்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படையுங்கள்”
பேரறிஞர் அண்ணா அவர்கள் விருதுநகர் சென்று அவரைச் சந்தித்தபோது, "அண்ணா! நீங்களாவது என்னுடைய 'தமிழ்நாடு' பெயர் மாற்றுக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு தீர்மானம்! பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஜூலை 18, 1967 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் "
தமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்
தெற்கு எல்லைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்திய நேசமணி தன் கையால் பெரியாருக்கு மட்டும்தான் மாலையிட்டார், வேறுயாருக்கு அவர் மாலையிட்டதே இல்லை
“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
அம்பேத்கரின் 15ஆவது தொகுதியில், 95ஆவது பக்கத்தில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன்.
”தமிழ்மொழி முதலில் தமிதா என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமிழாகி, திராவிட என்று உரு திரிந்தது. தமிழ் அல்லது திராவிடம் என்பதுதான் ஆரியர்கள் வருவதற்கு முன்னால் இந்தியா முழுவதும் பேசப்படுகிற மொழியாக இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டு வந்தது தமிழ் ஆகும்.
இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள். அன்று 50 ஆண்டிற்கு முன் திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று சொன்னால் அது நிஜம்.
காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது ராஜ வம்சத்து வேட்பாளரை.
ராஜா சேதுபதி.
அவர் அந்த சமஸ்தானத்து அரசர்.
அரசர் நிற்கிறார் என்பதால் அவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன் வரவில்லை.
காரணம் தோல்வி பயம். அந்த தேர்தலை திமுகவினர் எப்படி எதிர்கொண்டார்கள் ?
அண்ணா அன்றைய மாவட்ட செயலாளர் தென்னரசுவிடம் ராமநாதபுரம் நிலவரம் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
தென்னரசு அண்ணாவிடம் ராஜா காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நிற்பதாகவும் திமுகவினர் ஒருவர் கூட தேர்தலில் நிற்க முன்வரவில்லை என்ற செய்தியை சொல்ல,
தேசிய அரசுகள் என்பது, மிக நவீன கருத்தாக்கமாகும். அதற்கு முன்பு மன்னராட்சி தான் நடைமுறையில் இருந்தது. 400 ஆண்டுகளுக்கு முன்பு அய்ரோப்பாவில் தான் முதன் முறையாக மன்னராட்சியைப் பின்னுக்குத் தள்ளி தேசிய அரசுகள் முதன்மைப் பெற்றன.
மன்னராட்சி என்பது ஒரு சர்வாதிகார ஆட்சிமுறை. அது, நிலப்பிரபுக்களை அடிப்படையாகவும், விவசாயத்தை முதன்மையாகவும் கொண்டிருந்தது. மரபான கைவினைத் தொழில்கள் மற்றும் அறிவியல் வளர்ச்சியின் விளைவாகத் தொடங்கப்பட்ட தொழில்கள் என இவை எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு,
பெரும்தொழிற்சாலைகளாக நிலைப்பெற்றன. தேசிய அரசுகள் பெரும்பாலும் ஜனநாயகக் கட்டமைப்புகளாகத் திகழ்கின்றன. அவை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.