காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக கன்னட திரையுலகம் நிற்கவில்லை ஆக கன்னட திரைத்துறையை சேர்ந்த புனித் ராஜ்குமார் மரணத்திற்கு தமிழர்கள் ஏன் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று சில நாம் தமிழர் தம்பிகளின் ட்விட்டை காண நேரிட்டது.
ஏன்டா! நீங்கெல்லாம் மனிதர்களா?
அவனவன் ஊருக்கு தானே அவனவன் நிப்பான்?
இப்போ தமிழ் நாடு தண்ணீருக்கு அண்டை மாநிலங்களை தான் பெருவாரியாக நம்பி இருக்கிறது அதனால் நாம் ஏதோ கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்ட நேர்மையாளர்கள் போல தண்ணீர் அணுகுமுறையில் பிற மாநிலங்களை நடக்க சொல்லி கேட்கிறோம்.
ஒரு வேளை பிற மாநிலங்கள் தமிழ் நாட்டு தண்ணீரை நம்பி இருந்தால் இங்கு தமிழ் நாட்டிலும பல்வேறு பிரிதிவிராஜ் சுகுமாறன் இருந்திருப்பார்களே?
ஆக நமக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாமா?
அதெல்லாம் இப்படி தான் பலரும் இருப்பார்கள் அதை லாபி செய்து சரி செய்ய வேண்டியது அரசு வேலை.
*தமிழ் நாட்டிலும் 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
படம் பார்ப்பதும் அரசியல் அறிவதும் நம் நாடி நரம்பில் முறுக்கேறிய விஷயம்.
இத்துறையில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு கள யதார்த்தம் இருப்பது சகஜமானது.
இன்று அந்தந்த காலகட்டத்தில் வெற்றி பெற்ற பழைய சினிமா படங்களை அரசியல் நிகழ்வுகளை சிலர் Cringe என்று சொல்வதை ஜீரணிப்பது கடினமாக உள்ளது.
நாம் பார்த்து கேட்டு அறிந்து வளர்ந்த ஒன்றை நேற்று வந்த யாரோ சொன்னான் எவனோ சொன்னான் என்று போகிற போக்கில் Cringe என்று கேலி பேசி நகர்வது நாகரீகமான செயலாகுமா?
அவரவர் ரசனை அவரவருக்கு உரியது. அட இவனுங்க ரசனை கெட்டவனுங்க என்று எதை வைத்தும் எடை போட முடியாது.
உங்கப்பா 1960 காலகட்ட பாடல்களை விரும்பி கேட்பதால் 2020 பாடல்களை கேட்க விரும்பாததால் அவர் ரசனையே செத்துவிட்டது என்று விமர்சிக்க முடியுமா? அது தகுமா?
Cringe என்று பழைய நிலையை கேலி செய்தால் அதை ரசித்த நம்மையும் சேர்த்து கேலி செய்வதாகும்.
நகைச்சுவை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமானது என்பதற்கு சார்லி சாப்ளின் முதல் வடிவேலு வரை யாரும் விதிவிலக்கல்ல. இதில் நாகேஷ் பற்றி ஒரு சில குறிப்புகளை பகிர்கிறேன். பிராமண குடும்பத்தில் பிறந்த நாகேஷ் கிறிஸ்தவ பெண் ரெஜீனாவை திருமணம் புரிந்தார்.
இத்தம்பதியினருக்கு ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு, ஆனந்த் பாபு என்று 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. இவர்களின் குடும்ப வாழ்க்கை நெடுநாள் இன்பமாக இருக்கவில்லை ஏனெனில் நாகேஷ் மைத்துனர் செல்வராஜ் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற விசாரணைக்காக ரெஜீனா மற்றும் குடும்பத்தினரை காவல்துறை கைது செய்தனர்.
உரிய விசாரணைக்கு பிறகு ரெஜீனா மற்றும் குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டனர். இம்மரண வழக்கு விசாரணை தொடர்பாக நாகேஷ் மற்றும் மனோரமா உறவில் விரிசல் ஏற்பட பிறகு 1968க்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. 1970 நவக்கிரகம் படம் மூலம் நாகேஷையும் மனோரமாவையும் நடிக்க வைக்க முயன்றார் K.B
ஒரு கத்தியில் இருக்கூர்மை இருக்க முடியாது என்ற அடிப்படையில் அங்கே பிரச்சனை கிளம்பி அந்த ஒரு கத்தி துண்டாகி விட்டால் அது இரண்டு கத்தியாக மாறக்கூடும். இப்படி வாழ்வில் சில விஷயங்கள் Just Like That என்று அரங்கேறி இருக்கும் ஏனெனில் மனிதர்களுக்கு இடையில் மனக்கசப்பு எழுவது சகஜமானது.
இங்கு சில பிரபலங்களுக்கு இடையில் நிலவிய மனக்கசப்பு குறித்து காண இருக்கிறோம். இந்த செய்தி எல்லாம் உண்மையா? கிசு கிசுவா? என்று கேட்டால் நிச்சயம் கிசு கிசு அல்ல ஆனால் உண்மையா? என்றால் நிச்சயம் அது சம்பந்தப்பட்ட தரப்புக்கு மட்டுமே தெரியும். மற்றவை யூகமாக அமையும்.
அரசியலுக்கு ரஜினி வரவில்லை என்றாலும் சினிமாவில் ரஜினி இன்னொரு எம்.ஜி.ஆர் என்று கூறுவோர் உண்டு. அது சரியான பார்வையா?
கலைஞரின் வசனங்களை பேசி வளர்ந்த பின் எம்.ஜி.ஆர் தன்னை மட்டுமே நம்பி சினிமாவில் முன்னேறியவர்.
ஆனால்
கே.பியின் இயக்கத்தில் நடித்து வளர்ந்த பின் ரஜினி தன்னை மட்டுமே நம்பி சினிமாவில் முன்னேறியவர் என கூற முடியாது.
தனக்கு 19 வருடங்களாக பின்னனி பாடிய TMS ஒரு பாடலை பாட இயலாத நிலையில் தமிழ் ரசிகர்கள் யாரென்றே அறியாத SPB யை அழைத்து ஆயிரம் நிலவே வா பாடலை பாட கேட்டு கொண்டார் எம்.ஜி.ஆர்.
பீல்ட் அவுட் ஆன நடிகை ராஜஸ்ரீயை "இன்று போய் நாளை வா" படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.
தமிழ் திரையுலகம் அறியாத சந்திரகலாவை "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.
இதெல்லாம் ஒரு செய்தியா என்றால் எனக்கு அப்படி தான்.
16 அக்டோபர் 1905 அன்று ஆங்கிலேய அரசு நடவடிக்கையால் வங்காளத்தில் இருந்து பிரிந்து கிழக்கு வங்காள பிரிவினை நடைமுறைக்கு வந்தது.
சுதேசிகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு 12 டிசம்பர் 1911 அன்று வங்காள பிரிவினையை வாபஸ் பெற்றது ஆங்கிலேய அரசு.
மீண்டும் 14 ஆகஸ்ட் 1947 அன்று (மேற்கு) பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக கிழக்கு வங்காள பிரிவினை நடைமுறைக்கு வந்தது.
14 அக்டோபர் 1955 அன்று கிழக்கு வங்காள நாடு கிழக்கு பாகிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்திரா காந்தி ஆதரவுடன் 26 மார்ச் 1971 அன்று கிழக்கு பாகிஸ்தான் நாடானது (மேற்கு) பாகிஸ்தான் நாட்டிடமிருந்து விடுதலை பெற்றது.
சுதந்திரத்திற்கு முன் 5 டிசம்பர் 1969 அன்று கிழக்கு பாகிஸ்தான் அரசியல்வாதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் கிழக்கு பாகிஸ்தானை வங்கதேசம் என்று அழைக்க தொடங்கினார்.