நாம் இந்த தளத்தில் பல நாட்கள் வெறும் பொழுது போக்கிற்காக பதிவுகளை இட்டு கடந்து செல்கிறோம், ஆனால் இன்று இது பேச வேண்டிய விஷயம் என தோன்றுகிறது. இது விளையாட்டல்ல நமக்கு பெறும் வினையாற்றும் ஒரு செய்தி.
(1/n)
டெல்லியில் விவசாயிகள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர், அதற்கு காரணம் புதிய வேளாண் சட்டம், என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட வேண்டிய தேவை என்ன என்பது பலருக்கும் புரியாமல் இது தேவையில்லாத போராட்டம் என்று கூறுகின்றனர்.
(2/n)
இந்த வேளாண் சட்டத்தில் இருக்கும் எனக்கு தெரிந்த பிரச்சனைகளை கூறுகிறேன், நீங்கள் சொல்லுங்கள் இதை எதிர்க்க வேண்டுமா? இல்லையா என்று....
அடிப்படை ஆதார விலை இல்லாதது முதல் காரணம், இது விவசாயிகளின் உழைப்பிற்கு கூலி கிடைக்குமா? அவர்கள் விளைவித்த பொருளுக்கேற்ற விலை கிடைக்குமா என்ற ஒரு கேள்விக்குறியை முன்னிருத்துகிறது......
(4/n)
இரண்டாவது காரணி, விவசாய பொருட்கள் கொள்முதல் செய்ய பெரு முதலாளிகளும், கார்ப்பரேட்டுகளும் வரும் போது, அரசு கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு முழு தனியார்மயம் ஆக்கப்படும் என்ற அச்சம்.
(5/n)
அப்படி முழு தனியார்மயம் ஆக்கப்பட்டால் விவசாய பொருட்கள் பதுக்கப்பட்டு, செயற்கையான விலை உயர்வை ஏற்படுத்த முடியும், அந்த நிலை ஏற்பட்டால், அதன் விளைவு, சாதாரண மக்கள் உணவுப் பொருள் கிடைக்காமல் அவதிப்பட நேரிடும்,
(6/n)
அப்படியே உணவுப் பொருள் கிடைத்தாலும் அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்படும், இப்படி விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த புதிய வேளாண் சட்டம் எதற்காக??
கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரு முதலாளிகள் மேலும் பணம் சம்பாதிக்க தானே!!!
(7/n)
இதில் மக்களுக்கு என்ன நன்மை உள்ளது?
சில வாரங்களுக்கு முன் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டம் நாம் அறிந்ததே. அதில் உயிரிழந்த விவசாயிகள், மற்றும் இந்த போராட்டம் துவங்கியதிலிருந்து உயிர் நீத்த விவசாயிகளுக்கும் நாம் என்ன செய்ய போகிறோம்?
2024-ஆம் ஆண்டிற்கான சென்னை புத்தக கண்காட்சி இன்று (03-01-2024) முதல் 21-01-2024 அவரை நடைபெறுகிறது, பலருக்கும் என்ன புத்தகம் வாங்க வேண்டும் என திட்டமிடல் இருக்கும், சிலருக்கு எதைவாங்குவது என குழப்பம் இருக்கும், அப்படி குழப்பத்தில் உள்ளவர்கள் வாங்க
👇🏽
வசதியாக பல தலைப்புகளின் கீழ் உள்ள புத்தகங்களை இங்கே தொகுத்து பதிவிடுகிறேன், விருப்பம் உள்ள தோழர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாங்கி படித்துப் பாருங்கள் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
புத்தகங்களின் பட்டியல் கீழ்வருமாறு.
👇🏽
நாவல் ;
📙 புத்தகம் :- பர்தா
ஆசிரியர் :- மாஜிதா
பதிப்பகம் :- எதிர் வெளியீடு
📙 புத்தகம் :- இப்போது உயிரோடிருக்கிறேன்
ஆசிரியர் :- இமையம்
பதிப்பகம் :- க்ரியா வெளியீடு
📙 புத்தகம் :- உண்மைகள் பொய்கள் கற்பனைகள்
ஆசிரியர் :- அரிசங்கர்
பதிப்பகம் :- டிஸ்கவரி புக் பேலஸ்
பார்ப்பனியம் தன்னை தக்க வைத்துக்கொள்ள என்னென்ன செய்யும் என்பதை இன்றைய அரசியல் சூழல் நமக்கு புரிய வைக்கிறது. இந்த பார்ப்பனியத்தின் ஆணி வேர் முதல் அதன் கிளைகள் வரை அலசி ஆராய்கிறது தொ. பரமசிவன் அவர்களின் "இது தான் பார்ப்பனியம்"புத்தகம்.
(1)
வரலாற்றுப் பூர்வமாக பார்ப்பனியம் எப்படி நம் சமூகத்தில் ஊடுருவியது, அரசர்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை பார்ப்பனியத்தையும் பார்ப்பனர்களையும் எப்படி வளர்த்துவிட்டார்கள் என்பதை தரவுகளுடன் விளக்குகிறார்.
(2)
பார்ப்பனர்கள் யார், அவர்களுக்கிடையிலுள்ள உட்பிரிவுகள் என்ன அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை விளக்குகிறார், அதோடு எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஒட்டுமொத்த சமூகத்தையே எப்படி தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தார்கள் என்பதையும்,
(3)
#BookTwitter#Bookmark#readingcommunity
நாவல்கள் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டு ஆனால் நாவல்கள் அளவில் பெரியவை எனவே சிறிய நாவல்கள் நோக்கிய தேடுதலில் இருக்கிறேன் என்பவர்களுக்காக,
தமிழில் நீங்கள் தவறவிடக்கூடாத 100 பக்கங்களுக்கும் குறைவான, 5 குறுநாவல்களை இங்கே தொகுக்கிறேன்.
(1)
#BookTwitter #Thread #ReadingCommunity
தமிழில் உங்கள் வாசிப்பை துவங்க வசதியான 100 (+/-) பக்கங்கள் கொண்ட மிக எளிமையான அவசியம் படிக்க வேண்டிய சில தமிழ் புத்தகங்களை கீழே தொகுக்கிறேன். எளிதில் ஒரு புத்தகத்தை படித்து முடித்த திருப்தியுடன் உங்கள் வாசிப்பு பயணம் துவங்கட்டும்.
(1)
புத்தகம் : பெத்தவன் (நெடுங்கதை)
எழுத்தாளர் : இமையம்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 40
(2)
புத்தகம் : நூறு நாற்காலிகள்
- ஒரு கலெக்டரின் உண்மைக் கதை (சிறுகதை)
வானில் மிதக்கும் மேகங்களில் நமக்கு பிடித்த உருவங்களை பொருத்திப் பார்த்து விளையாடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம்மைப் போல மேகங்களில் மிதந்து வரும் உருவங்களுடன் விளையாடி சிரித்து மகிழும் மென் வண்ணத்துப்பூச்சி இவள்.
(1)
முதுகில் சதை திரண்டு பாரத்தைக் கொடுத்தாலும், நீண்ட நெடிய வாழ்க்கை பயணக் கனவுகளை சுமந்த அவள், அதனுடன் சேர்த்தே ஒவ்வொரு அடியிலும் அந்த பயணத்தில் வர இருந்த வலிகளை தாங்கும் வலிமையையும் சுமந்தாள்.
தன் கனவுகளை மட்டுமல்ல தன்னை சுற்றி இருந்தவர்களையும் சேர்த்தே சுமந்தாள்.
(2)
கணேசன், அலங்காரவேலன், அப்புனு, ஜோதி, தவமணி, தனக்கே தனக்கான ரேவதி என அனைவரையும் சுற்றி இருந்த அவள் கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து நொருங்கிய பின்னும், உற்ற தோழியாக உடன் இருந்த உடன்பிறவா சகோதரி மல்லிகா அக்கா, அவர் மகன் சிவக்குமார் என வாழ்வில் ஏதோ ஒரு பிணைப்புடன் ஓடினாள்.
(3)