பரிமள ரெங்கன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் ஆளுங்கட்சி எம்.பி., ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தில் வன்முறை, அடாவடி செயல்கள் தலைதுாக்க துவங்கியுள்ளன. இதை முதல்வர் ஸ்டாலின், துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த காலம். 'மிசா' வேறு அமலில் இருந்தது. ஆட்சியில் இருப்போர் நிறைய தவறுகள் செய்தனர். பூச்சி மருந்து, அரிசி பேரம் என பல பெரிய ஊழல்கள் அரங்கேறின.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த அன்பில் தர்மலிங்கம், சண்முகம், நெடுஞ்செழியன், ராஜாராம் ஆகியோர் மீது பல புகார்கள் எழுந்தன.
'நெடுஞ்செழியன், 'நெக்லஸ்' வாங்கினார்; ராஜாராம், மிசா கைதிகளை விடுவிக்க பணம் வாங்கினார்' என, எம்.ஜி.ஆரே குற்றம் சாட்டினார். இதில் பல ஊழல்களுக்கும், கருணாநிதிக்கும் நேரடியாக சம்பந்தம் கிடையாது.
ஆனால், கருணாநிதி ஒரு பேட்டியில், 'தேனை எடுப்பவன் புறங்கையை நக்குவான்' என அதை ஆதரித்து பேசினார்.
எல்லா தவறுகளையும், தன் தலையில் சுமந்து கொண்டார். பத்திரிகைகளும், அவர் மீது குற்றம் சாட்டின.
சர்க்காரியா கமிஷன் கொடுத்த, 'விஞ்ஞான ரீதியில் ஊழல் நடந்துள்ளது' என்ற அறிக்கை, கருணாநிதி பெயரோடு கலந்து, வரலாற்றில் நிலைத்து விட்டது.
இதில் ஆச்சரியம் என்னவெனில், எம்.ஜி.ஆர்., யார் யாரை எல்லாம் ஊழல்வாதி என்று சொன்னாரோ, அவ்வளவு பேரையும் தன் கட்சியில் சேர்த்து, அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் கருணாநிதி.
எம்.ஜி.ஆர்., மீதிருந்த புகழ் வெளிச்சத்தில், அவை யார் கண்ணுக்கும் தெரியவில்லை. அன்று போல இன்று கிடையாது. யாருடைய குற்றத்தையும் மறைக்க முடியாது. மேலும், மாநிலத்தில் நடக்கும் ஊழல் சமாச்சாரங்களை, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அதைத் தவிர, அப்போது இவ்வளவு, 'மீடியா'க்கள் கிடையாது. சமூக வலைதளங்கள் கிடையாது. இப்போது எது நடந்தாலும், உடனே வெளி உலகிற்கு தெரிந்து விடும்.
குற்றவாளிகளை ஆதரித்தாலோ, ஊழல் செய்தாலோ உடனே மக்கள் பார்வைக்கு சென்று விடுகிறது. தற்போது முதல்வர் ஸ்டாலின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது.
அதை விரயமாக்கக் கூடாது. நேர்மையான, வலிமையான தலைவராக உருவெடுக்கும் வாய்ப்பை, அவர் தவறவிடக் கூடாது. குற்றச்செயலில் ஈடுபடும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சியினர் மீது துவக்கத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வாங்கி தருவதற்காக, போலீஸ் துறைக்கு உள்ளேயே மாநில விசாரணை முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.
ஊக்கத்தொகை
ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பயங்கரவாத குழுக்களால் இழைக்கப்படும் குற்றங்கள், பயங்கரவாத குழுக்களுக்கான நிதி உதவி அளிப்பது,
பொய் பிரசாரங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பயங்கர வாதம் தொடர்புடைய குற்றங்களை விரைவாக விசாரித்து, தண்டனை பெற்று தர, மாநில விசாரணை முகமை உருவாக்கப்பட்டுள்ளது.
இது உங்கள் இடம்: தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் இல்லையே ஏன்?
என்.பாடலீஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் மொழியை வைத்து அரசியல் செய்வது பெரும்பாலும் இல்லை.
திராவிட அரசியல்வாதிகள் பலர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி உட்பட பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அவர்களின் பள்ளியில், தமிழக பாடத் திட்டம் செயல்படுத்துவதில்லை.
ஹிந்தி உட்பட பல்வேறு சிறப்பு வாய்ப்புகளை வழங்கும் நவோதயா பள்ளிகளை, தமிழகத்தில் திறக்க விடாமல், திராவிட ஆட்சியாளர்கள் எதிர்ப்பது ஏன் என, தமிழக மக்கள் சிந்திப்பது இல்லை.
ஆந்திராவில் வசித்த வந்த நாராயண தீர்த்தர் என்ற மகான், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது நோய் தீர பெருமாள் தலங்களுக்கு யாத்திரை வந்தபோது இப்பகுதிக்கு வந்தவர் ஓருநாள் இரவில் நடுக்காவிரி என்ற இடத்திலிருந்த ஒரு விநாயகர் கோயிலில் தங்கினார். 🙏🇮🇳2
அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய முதியவர் ஒருவர், 'நாராயணா! நாளை காலையில் நீ முதலில் காணும் உயிரைப் பின்தொடர்ந்து வா! உன் பிணி தீரும்" என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். 🙏🇮🇳3
‘‘ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை; அகிலேஷ் வரலாறு படிக்க வேண்டும்’’- ஓவைசி கடும் எதிர்ப்பு
முகமது அலி ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அகிலேஷ் யாதவ் வரலாறு படிக்க வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது
‘‘சர்தார் பட்டேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்தார்கள். அவர்கள் பாரிஸ்டர்களானார்கள். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ் சித்தாத்தத்துக்கு தடைவிதித்தார்’’ எனக் கூறினார்.
நகை கடன் தள்ளுபடிக்கு அரசாணை வெளியீடு; அரசு ஊழியர்களுக்கு கிடையாது!
சென்னை : கூட்டுறவு நிறுவனங்களில், 5 சவரன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை, தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதேநேரம், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெற முடியாது.
தமிழக சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., சார்பில், 'ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில், 5 சவரன் வரை பெற்ற நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அக்கட்சி ஆட்சியை பிடித்த நிலையில், நகைக்கடன் தள்ளுபடியை முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்தார். அதை செயல்படுத்துவதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.