ஆந்திராவில் வசித்த வந்த நாராயண தீர்த்தர் என்ற மகான், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது நோய் தீர பெருமாள் தலங்களுக்கு யாத்திரை வந்தபோது இப்பகுதிக்கு வந்தவர் ஓருநாள் இரவில் நடுக்காவிரி என்ற இடத்திலிருந்த ஒரு விநாயகர் கோயிலில் தங்கினார். 🙏🇮🇳2
அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய முதியவர் ஒருவர், 'நாராயணா! நாளை காலையில் நீ முதலில் காணும் உயிரைப் பின்தொடர்ந்து வா! உன் பிணி தீரும்" என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். 🙏🇮🇳3
மறுநாள் காலையில் நாராயண தீர்த்தர் எழுந்தபோது, அவர் எதிரே ஒரு வெண் பன்றி வந்தது. அதைக்கண்ட நாராயண தீர்த்தர் தான் கனவில் கண்டபடி, பன்றியை பின்தொடர்ந்து சென்றார். அது, இக்கோயிலுக்குள் சென்று மறைந்தது. 🙏🇮🇳4
வராக அவதாரம் எடுத்த பெருமாளே, தனக்கு வராகத்தின் வடிவில் வந்து அருள்புரிந்ததை அறிந்த மகான் சுவாமியை வணங்கினார். மகிழ்ச்சியில் நாராயண தீர்த்தர் சுவாமியைப் போற்றி பல கீர்த்தனை பாடினார். 🙏🇮🇳5
அப்போது, இங்கிருந்த லட்சுமி நாராயணர் அவருக்கு ருக்மிணி, பாமாவுடன் கிருஷ்ணராகக் காட்சி தந்தார். பாமா அவரிடம், 'பக்தா! உம் பரமாத்மா கோபிகையருடன் புரிந்த லீலைகளைப் பாடு!" என்றாள். மகிழ்ந்த நாராயண தீர்த்தர், இவ்வாறே பாடினார். 'கிருஷ்ண லீலா தரங்கிணி" என்ற அற்புத பாசுரம் கிடைத்தது.🙏6
சுவாமி வராகராக காட்சி தந்ததால் இந்த ஊருக்கு 'வரகூர்" என்ற பெயர் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சங்கள்:
இக்கோயில் லட்சுமி நாராயணர், வராகமூர்த்தி, கண்ணன் என மூன்று கோலங்களில் பெருமாள் இத்தலத்தில் அருள்புரிகிறார். 🙏🇮🇳7
மூலஸ்தானத்தில் லட்சுமி நாராயணர், பத்ம விமானத்தின் கீழ், இடது மடியில் மகாலட்சுமியை அமர்த்தி அமர்ந்திருக்கிறார். இவருக்கு தினமும் திருமஞ்சனம் உண்டு. 🙏🇮🇳8
ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள உற்சவர் வெங்கடேசப்பெருமாள் பிரசித்தி பெற்றதால், இவரது பெயரால் இக்கோயில் அழைக்கப்படுகிறது என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
🙏🇮🇳9
தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் பதினொரு கிலோ மீட்டர் தொலைவில் திருக்கண்டியூர் சென்று, 🙏🇮🇳10
அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவில் சென்றால் வரகூர் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில் அமைந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வாங்கி தருவதற்காக, போலீஸ் துறைக்கு உள்ளேயே மாநில விசாரணை முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.
ஊக்கத்தொகை
ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பயங்கரவாத குழுக்களால் இழைக்கப்படும் குற்றங்கள், பயங்கரவாத குழுக்களுக்கான நிதி உதவி அளிப்பது,
பொய் பிரசாரங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பயங்கர வாதம் தொடர்புடைய குற்றங்களை விரைவாக விசாரித்து, தண்டனை பெற்று தர, மாநில விசாரணை முகமை உருவாக்கப்பட்டுள்ளது.
இது உங்கள் இடம்: தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் இல்லையே ஏன்?
என்.பாடலீஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் மொழியை வைத்து அரசியல் செய்வது பெரும்பாலும் இல்லை.
திராவிட அரசியல்வாதிகள் பலர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி உட்பட பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அவர்களின் பள்ளியில், தமிழக பாடத் திட்டம் செயல்படுத்துவதில்லை.
ஹிந்தி உட்பட பல்வேறு சிறப்பு வாய்ப்புகளை வழங்கும் நவோதயா பள்ளிகளை, தமிழகத்தில் திறக்க விடாமல், திராவிட ஆட்சியாளர்கள் எதிர்ப்பது ஏன் என, தமிழக மக்கள் சிந்திப்பது இல்லை.
‘‘ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை; அகிலேஷ் வரலாறு படிக்க வேண்டும்’’- ஓவைசி கடும் எதிர்ப்பு
முகமது அலி ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அகிலேஷ் யாதவ் வரலாறு படிக்க வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது
‘‘சர்தார் பட்டேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்தார்கள். அவர்கள் பாரிஸ்டர்களானார்கள். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ் சித்தாத்தத்துக்கு தடைவிதித்தார்’’ எனக் கூறினார்.
பரிமள ரெங்கன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் ஆளுங்கட்சி எம்.பி., ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தில் வன்முறை, அடாவடி செயல்கள் தலைதுாக்க துவங்கியுள்ளன. இதை முதல்வர் ஸ்டாலின், துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த காலம். 'மிசா' வேறு அமலில் இருந்தது. ஆட்சியில் இருப்போர் நிறைய தவறுகள் செய்தனர். பூச்சி மருந்து, அரிசி பேரம் என பல பெரிய ஊழல்கள் அரங்கேறின.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த அன்பில் தர்மலிங்கம், சண்முகம், நெடுஞ்செழியன், ராஜாராம் ஆகியோர் மீது பல புகார்கள் எழுந்தன.
நகை கடன் தள்ளுபடிக்கு அரசாணை வெளியீடு; அரசு ஊழியர்களுக்கு கிடையாது!
சென்னை : கூட்டுறவு நிறுவனங்களில், 5 சவரன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை, தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதேநேரம், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெற முடியாது.
தமிழக சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., சார்பில், 'ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில், 5 சவரன் வரை பெற்ற நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அக்கட்சி ஆட்சியை பிடித்த நிலையில், நகைக்கடன் தள்ளுபடியை முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்தார். அதை செயல்படுத்துவதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.