நமது மாணவர்களிடம் இந்த வரலாற்றுக் கேள்விகளை கேளுங்கள்.
1. இயேசு கிறிஸ்து எந்த நூற்றாண்டு பிறந்தார்? 2. புத்தர் எந்த நூற்றாண்டு பிறந்தார்?
3.நபிகள் நாயகம் எந்த நூற்றாண்டு பிறந்தார்?
ஓரளவு வரலாற்று ஆர்வம் உள்ள எல்லா மாணவர்களும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள்.
இந்தக் கேள்வியை கேட்டுப்பாருங்கள்.
இந்து மதம் அதாவது வேத மதம் தமிழகத்தில் எப்போது பரப்பப்பட்டது?
இதற்கான விடை வரலாற்றுப் பாடங்களில் தெளிவாக இல்லை.
கீழடி அதற்கான விடையை ஓரளவிற்கு தருகிறது.
தமிழகத்திற்கு அனைத்து மதங்களும் வெளியிலிருந்து வந்தவைதான்.
இன்னும் சொல்லப் போனால் வேத மதம் இங்கு வருவதற்கு முன்பே சமணர்கள் தமிழகத்திற்கு வந்து விட்டார்கள்.
தமிழர்களில் பெரும்பாலோர் சமண மதத்தை பின்பற்றினார்கள்.
பிறகு மிகப் பெரும்பாலோர் புத்த மதத்தையும் பின்பற்றியருக்கிறோம்.
இந்துமதம் ஆதியிலிருந்தே இங்கிருந்த மதம், மற்ற மதங்கள் தான் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டது என்று பலரும் நினைக்கிறார்கள்.
நம் முன்னோர்கள் முதலில் ஆசிவக மதம், சமண மதம் அல்லது புத்த மதத்தையும் பிறகு அதாவது ஆதி சங்கரர் காலத்திற்கு பிறகு வேத மதத்தையும் அதற்கு பிறகு
கிறிஸ்துவம் அல்லது இஸ்லாம் மத்த்தையும் பின்பற்றியிருக்க வாய்ப்புண்டு என்கிற புரிதல் இங்கு பலருக்கும் இல்லை.
அதாவது நமது முன்னோர்கள் எத்தனையோ மதம் மாறியிருக்கிறார்கள் அதில் ஒன்று இந்த வேத மதம் என்கிற வரலாற்றுப் பார்வை அனைவருக்கும் வேண்டும்.
எதிர்காலத்தில் வைகைக்கரைச் சமவெளி நாகரிகம் முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்யப்படும்போது வேத மதம் தமிழகத்தில் பரப்பப்பட்ட வருடம் ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்டுவிடும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழ்நாட்டில் அரசியல் பேசுகிறவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கயமான வரலாற்று ஆவணம் வேள்விக்குடி செப்பேடுகள். இதுவரை நமக்கு கிடைத்த செப்பு பட்டயங்களில் மிகப்பழமையானது. நமக்கு நிறைய பழங்கால கல்வெட்டுகள் இருந்தாலும் செப்பு பட்டயமாக கிடைத்தது முக முக்கியமான ஆவணம்.
அந்த செப்பேட்டின்படி சங்க காலத்தில் வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த பார்ப்பனர்களுக்கு பாண்டிய மன்னர்கள் வரியில்லா நிலங்களை வாரி வழங்கியிருந்ததாகவும், இடையில் வந்த களப்பிரர் ஆட்சியில் பார்பனர்களுக்கு பாண்டிய மன்னர்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடங்கள் பிடுங்கப்பட்ட
தாகவும் ஆகவே உங்களின் முன்னோர்கள் எங்களுக்கு கொடுத்த நிலங்களை திரும்ப எங்களுக்கே கொடுங்கள் என்று கேட்டு அதன்படி நிலங்கள் மீண்டும் தானம் வழங்கப்பட்டதாகவும் இந்த வேள்விக்குடி செப்பேடுகள் வழி தெரியவருகிறது. இதில் முக்கியமாக தெரிய வேண்டியது,பார்ப்பனர்களிடம் களப்பிரர்கள் ஏமாறவில்லை
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை, ஏதோ பிரச்சனைகளாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சொந்த கிராமத்தை விட்டு வெளியேறிய பெரும்பாலான குடும்பங்கள் நன்கு வளர்ச்சியடைந்தே இருக்கின்றன.
கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம் என்று எப்படிப் பார்த்தாலும் நன்கு வளர்ந்திருக்கிறார்கள்.
கிராமத்திலேயே இருக்கும் வரை ஊரில் உள்ள திண்ணையில், மேடையில் உட்கார்ந்து கொண்டு அடுத்தவன் பொழப்பை எப்படிக் கெடுக்கலாம், எப்படி புறம்பேசலாம் என்பதிலேயே பெரும்பாலான நேரம் கழிந்துவிடுகிறது. பிறகு இல்லலாத வெட்டி சாதிப்பெருமையே போதும் என்கிற மனநிலைதான் இருக்கும்.
முக்கியமாக தன்மையாக பேசும் பணிந்து பேசும் குணம் இல்லாமல் ஒருவித தலைக்கனத்துடனேயே இருப்போம்.
கேரளாவில் இருந்து இங்கு வந்து டீக்கடை,பழக்கடை ஒருவன் வைத்தால் அங்கு வியாபாரம் நடக்கும், அதற்கு காரணம் அவன் வெட்டி பந்தா இல்லாமல் நாம் திட்டினாலும் வாங்கிக்கொள்வான்.