தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். அந்த வழியில் வருபவர்கள் யாரேனும், கையில் எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர்.
இதனால் புண்ணியம் சேருமென கருதினர். ஒருநாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரைப் போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டார்.
மன்னன் சிரித்தபடியே போய்விட்டான்.மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர்,"மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா? அது நரகத்தில் மலைப்போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” என
சொல்லி விட்டு சென்றார். மன்னன் நடுங்கிவிட்டான். தர்மம் செய்து, தன் பாவங்களை குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்துத் தங்கினான். இளம்பெண்களை வரவழைத்து, திருமணத்திற்குரிய நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவிடுவான்.
இதை அவ்வூரில் சிலர் வேறுமாதிரியாக கதைக் கட்டினர். “மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் வரச் சொல்கிறான். தவறுக்குக் கூலியாக நகை, பணம் தருகிறான்”என்றனர். ஒருநாள், பார்வையற்ற கணவரை அழைத்து வந்த ஒரு பெண், அரசனின் குடில் முன்பு நின்று பிச்சைக் கேட்டாள்.
அந்தக் கணவன்,"நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?” எனக் கேட்டார். "அரசன் வீட்டு முன்பு” என்றாள் அந்தப்பெண். “ஓ! தானம் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு,பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே.அவன் வீட்டு முன்பா?” என்றார் அந்த பார்வையற்றவர். அந்தப்பெண் அவரது வாயை பொத்தினாள்.
“ஐயனே! என் கற்பின் சக்தியால்,நான் முக்காலத்தையும் உணர்ந்தவள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்ணுவதற்காக தயாரானது. அவ்விஷயம் இவனுக்குத் தெரிய வரவே, இவன் கன்னியருக்கு தர்மம் செய்து,
நற்போதனைகளைச் செய்தான். ஆனால் இவனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. இவனைப் பற்றி தவறுதலாக பேசி, அதை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்.
அடுத்த பிறவியிலும் பார்வையற்றே பிறப்பீர்கள்” என்றாள்.
தவறு செய்தவர்கள் திருந்தும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அப்படி செய்தால் அவன் செய்த பாவங்களை, பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமை ஏற்படும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர், தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். "கடவுள் எங்கு இருப்பார்? அவரை உணர்வது எப்படி?"என்று அந்த மகானிடம் கேட்டார்.அதற்கு அந்த மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற,அழிவில்லாத,
பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள், உன்னுள்ளும் இருக்கிறார்” என்றார். அதற்கு பக்தர்,"அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை?”என்று வினவினார். அதற்கு அந்த மகான் மிக அழகாக,"உன் இருதயத்தில், உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார்.ஆனால் உன் எண்ணம் எப்பொழுதும் உலகத்தில் நடக்கும்
விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை” என்று பதிலளித்தார். அனால் அந்த பக்தரோ இன்னும் புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தார். அதனால் அந்த பக்தரை ஹரித்வாருக்கு செல்லும்படி அந்த மகான் கூறினார். அங்குள்ள கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீன் இருக்கின்றது.
"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை"என்றான் ஒரு அரசன்,ஞானியிடம். "உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என்று ஞானி கேட்டார். "என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது.நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை"என்றான்."அப்படியானால் ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு"என்றார் ஞானி. "எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான் மன்னன்."நீ என்ன செய்வாய்" என்றார் ஞானி."நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து,
பிழைத்துக் கொள்கிறேன்"என்றான் அரசன்."எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட,என்னிடமே வேலை செய்.உனக்குத் தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.அதையே செய்.என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்."என்றார். சரி என்றான் மன்னன்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இது செய்தால் பாவம்,இது செய்தால் புண்ணியம் என்று சொல்லி,பாவத்தில் இருந்து விடுபட இந்த பரிஹாரம்,ஹோமம்,யாகம்,பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறி மக்களை செய்யவைத்து அதற்காக தானமாகவும்,தக்ஷணையாகவும் நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர்.
இதைக்கண்டு சற்றும் சகியாத 'சந்து ராமதாசர்' என்னும் ராமபக்தர் ஒரு யோசனை செய்தார்.ஒருநாள் ஒரு உண்டிகோலை எடுத்துக் கொண்டு,அந்த ஆசாமிகள் இருக்கும் தெரு வழியாக நடந்துச்சென்றார்.அங்கு அவர் கண்ணில் பட்ட கிளிகளை எல்லாம் உண்டிகோலால் குறிபார்த்து அடித்து,
ஒவ்வொன்றாக சாகடித்து தன் தோளில் இருந்த பையில் போட்டுக்கொண்டே சென்றார்.இதைப்பார்த்த அந்த ஆசாமிகள் குய்யோ,முறையோ என்று கத்திக்கொண்டு வந்தனர்."நீங்கள் என்ன காரியம் செய்துவிட்டீர்கள்.இது எவ்வளவு பெரிய பாவம்"என்று கூறினர்.அதற்கு சற்றும் அசராத சந்து ராமதாசர்,
ஒரு ஊரில் அநாதை ஏழைப்பெண் இருந்தாள். அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலைக்கறந்து,அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள்.அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள்தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.ஒருநாள் வழக்கம் போல,சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார்.ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை.
அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை
புரிந்துகொண்ட அவர்,அந்த பெண்ணிடம், “ஏன்மா!ஒழுங்கான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா.உன்னால எனக்கு எல்லாமே தாமதமாகுது”என்று கடிந்து கொண்டார்.“மன்னிக்கணும் சாமி. நான் வீட்டைவிட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன்.ஆனால் இங்கே வர்றதுக்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”
ஒரு மன்னன், தெரியாத்தனமாக ஒரு பிராமணனைக் கொன்றதால், அவரை ‘பிரம்மஹத்தி’ பாவம் பிடித்துக் கொண்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று பரிஹாரம் கேட்க முடிவு செய்தார். அங்கே சென்றபோது ரிஷி இல்லை. அவருடைய மகனே இருந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தை மன்னன் கூறினார்.
அவர் “நானே பரிஹாரம் சொல்கிறேன். பக்தியுடன் மூன்று முறை 'ராம, ராம, ராம' என்று சொல்லுங்கள். அந்தப் பாவம் போய்விடும்” என்றார். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில் ரிஷியும் வந்துவிட்டார். என்ன விஷயம் என்பதை அறிந்தார்.
அவருக்கு மகன் மீது கடும் கோபம் வந்தது.
“அட மூடனே! ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களும் ராமனின் நாமத்தை ஒரு முறை சொன்னாலேயே போய்விடுமே. உனக்கு எப்படி நம்பிக்கை குறைந்து மூன்று முறை சொல்லச் சொன்னாய்? இந்த நம்பிக்கைக் குறைவினால் அடுத்த ஜன்மத்தில் நீ வேடனாகப் பிறப்பாயாக” என்று சபித்தார்.
புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்திற்கு குடியேறினார்கள். அடுத்த நாள் காலையில் இருவரும் கூடத்தில் அமர்ந்து காபி குடிக்கும்பொழுது, பக்கத்துக்கு வீட்டு பெண், துணிகளை துவைத்து காயபோட்டுக் கொண்டிருப்பது ஜன்னல் வழியாகத் தெரிந்தது.
அதை பார்த்த மனைவி கணவனிடம்,"அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணிகளில் அழுக்கு, கருப்புப் புள்ளிகளாய் அப்படியே இருக்கு"என்றாள். ஜன்னல் வழியே பார்த்த கணவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும், அதை ஜன்னல் வழியாகப் பார்த்த மனைவி, துவைக்கத் தெரியலன்னு சொல்றதும்,கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்தது. திடீரென்று ஒருநாள் மனைவி ரொம்ப ஆச்சரியமாகச் சொன்னாள்,"இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டுப்