வேளான் சட்டம் வாபஸ் என்பது மோடியின் தோல்வியா ? காத்திருக்கும் மோடி-அமித்ஷாவின் அடுத்த அதிரடி….
ஃபேஸ்புக்கில் இருப்பவர்களில் 5% கூட இதன் அர்த்தமும் தெரியாது அதன் இடைத்தரகர்கள் வலியும் தெரியாது என்பது எதார்த்தம். முதலில் அவர்கள் விவசாயிகளாகவே இருக்க மாட்டார்கள், அல்லது அவர்களுக்கு அந்த அனுபவம் இருந்திருக்காது.
அதனால் மோடிக்கு ஒரு பின்னடைவு என்று தான் சார்ந்த கட்சி எனும் கண்ணாடி மாட்டிக்கொண்டு வெற்றியாக பார்ப்பவர்கள் ஒருபுறம். அதை அவர்கள் பெரும் வெற்றியாக கொண்டாடி, அதை வைத்துக்கொண்டு மோடி மீது இருந்த தீராத வெறுப்பை காட்டி பெரும் தோல்வி என்று ஒரு புறம் வர்ணிக்க,
இது என் கௌரவ குறைச்சல், அவரைவிட அதை ஆதரித்த எனது நிலைக்கு ஏற்பட்ட மானபங்கம் என்ற நிலையில் மோடியின் மீது கோபம் கொண்டாலும் அதை வேறு வழியில் சமாளிக்க மறுபுறம் அவரின் ஆதரவாளர்கள் முயல்வதும் மனிதனின் இயல்பு.ஏனெனில் நாம் எல்லாம் சாதாரண வறட்டு கௌரவத்திற்கு நம்மை அறியாமல் அடிமையானவர்களே!
அதனால்தான் நம்மை காலம் காலமாக எமோஷனலாக பிரித்து, நம்மை எளிதாக அரசியல்வாதிகள் இன்றும் ஆள்கிறார்கள். இதை எப்படி பார்ப்பது? இதன் அர்த்தம் என்ன? ஒரு விவசாயியின் மகனாக என் அனுபவத்தில் நடந்ததை எழுதுகிறேன் !
இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் இது ஏற்கனவே இடைத்தரகர்கள்,
சற்றேறக்குறைய இது போன்ற சட்டம் நடைமுறையில் கொண்டு வந்து விட்டார்கள். அதை செய்த முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதுவும் என் நினைவு சரியாக இருப்பின் இதை கொண்டுவந்தது திமுகதான். அப்படி இருக்க அதையே இன்று மோடி செய்ததால் எதிர்க்கிறார்கள் என்று சிரிப்பதா? அழுவதா? என்றால்
இது என்ன பெரிய விஷயம் நாங்கள் முந்தைய ஆட்சியில் கையெழுத்து போட்டதையே இந்த ஆட்சியில் எதிர் கட்சியாக எதிர்த்து போராடும் அவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல! இதை எல்லாம் கட்சியின் ஆதரவாளர்கள் ஒரு போதும் பார்க்க போவதில்லை, அடிமைத்தனம் கண்களை மறைப்பதால்.
எங்கள் பள்ளி பருவத்தில், பருத்தி, புகையிலை போன்ற குறிப்பாக பணப்பயிரை விற்க வேண்டுமெனில் லைசென்ஸ் பெற்ற ஒரு சில இடைத்தரகர்களே பக்கத்தில் இருக்கும் தாராபுரத்தில் இருப்பார்கள். கம்பு, சோளம், நெல் போன்றவற்றிக்கும் பிரச்சினை உண்டு என்றாலும், அது எல்லாம் விவசாயிகளுக்குள்,
பண்ட மாற்று முறையில் கொடுத்து வாங்கி கொள்வதால் அதற்கு பெரும் பிரச்சினை எங்கள் ஊரில் இருந்தது இல்லை. இந்த இடைத்தரகர்களுக்கு எங்களுக்கும் தலை முறை தலைமுறையாக ஒரு வகையான புரிதல் (கடன்தான்) இருக்கும். அதனால் வேறு வழி இல்லாமல் அடிமாட்டு விலைக்கு அவர்களிடம் மட்டுமே கொடுக்க முடியும்.
அதுவும் விளைவிக்கும்போது அல்லது தேவைப்படும்போது எங்களுக்கு அரசு கொடுக்கும் விவசாய பயிர் கடன் எல்லாம் குறித்த காலத்தில் கிடைக்காது. அதனால் அந்த இடைத்தரகர்களிடம்தான் வட்டிக்கு கடன் வாங்குவோம். அதற்கு ₹100 க்கு ₹4 லிருந்து ₹2 வரை வட்டி காலத்திற்கு ஏற்ப கொடுக்க வேண்டும்.
அப்படி நாம் கடன் வாங்கி விட்டால் நாம் வேறு மண்டியில் அந்த பொருளை விற்க அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அது அவர்களுக்குள் உள்ள புரிதல்.பெரும்பாலும் அந்த மண்டிகள ஒரு உறவை சேர்ந்தவர்களானதாகவே இருக்கும் உதாரணமாக பருத்தி விற்க வேண்டுமெனில் அவர்களிடம் போய் முதலில் சொல்லி விட வேண்டும்.
அவர்களிடம் இருந்து பஞ்சு போட சாக்கு பைகளை முதலில் வாங்கவேண்டும். ஆனால் அதைக்கூட கேட்கும் நேரத்தில் கொடுக்க மாட்டார்கள். அதனால் களத்தில் கிடக்கும் பருத்தி காய்ந்து எடை ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே போகும். எடை குறையத்தான் சாக்கை வைத்துக்கொண்டே இல்லை என்று சொல்கிறான் என்று,
அவர்கள் சூட்சுமம் பற்றி என் தாத்தா சொல்வார்.அப்படி மண்டிக்கு நடையாய நடந்து சென்று கெஞ்சாத குறையாக கேட்க வேண்டும், ஏனெனில் அப்போது போன் எல்லாம் இல்லை. சில நேரங்களில் அதற்கு சிறு விவசாயிகளுக்கு ரெகமெண்டெஷன் வேறு தேவைப்படுவதுண்டு.
இது எல்லாம் முடிந்து சாக்கு கிடைத்து வண்டியில் பஞ்சை ஏற்றிக்கொண்டு சென்று அவர்கள் குடோனில் சேர்க்க வேண்டும். அப்போது எடை பார்க்க ராத்தல் மெஷின் என்று சொல்வார்கள், அதில் நாம் ஏற்கனவே களத்தில் போட்டு பார்த்த எடையை விட குறைவாக வரும்.சண்டை போட்டுத்தான் வித்தியாசத்தை குறைக்க வேண்டும்.
பல சிறு விவசாயிகளிடம் அந்த ராத்தல் கூட இல்லை என்றால் அவர்கள் ஏமாற்றி சொல்லுவதே முடிவான எடையாகிவிடும்.இது எல்லாம் முடிந்து கடைசியில் கணக்கு பார்த்தால் அவர் கொடுத்த கடனுக்கு வட்டி குட்டி போட்டு வாங்கிய கடன் கட்ட கூட முடியாமல் போகும்.பிறகு என்ன,அதை வைத்துத்தான்,
பெரிய பிளான் போட்டிருப்போம், எனவே வேறு வழியில்லாமல் மீண்டும் கெஞ்சி கடன் வாங்க வேண்டும். ஏனெனில் நமக்கு வேறு வழியே இல்லை, அவர்களைத்தவிர வேறு யாரிடமும் விற்க முடியாது. இப்படியே கடன் கொடுத்து வட்டி என்ற கணக்கில் அட்டையாக விவசாயியின் ரத்தத்தை அந்த காலத்திலேயே உறிஞ்சினார்கள் என்றால்,
அரசியல் வியாதிகளால் இந்த மண்டிக்காரர்களுடன் கூட்டணி வைத்து ஆளப்படும் இன்று எப்படி இருக்கும்?இப்படி அந்த இடைத்தரகர்கள் செய்த அட்டூழியங்கள் மிக மோசமானவை. அவற்றை தமிழக அரசு நீக்கி, அரசு சார்ந்த விற்பனை சாவடிகளை கொண்டுவந்தபின் அட்டூழியங்கள் பெருமளவில் குறைந்து போய் விட்டது.
இன்று கூட இது போன்ற இடைத்தரகர்கள் இங்கு உண்டு, ஆனால் கூட்டுறவு மண்டிகள் இருப்பதால் அவர்கள் கட்டுப்பாடு வெகுவாக குறைந்துள்ளது.இந்த இடைத்தரகர்கள் மூலம் மட்டும் விற்கும் அடிமைத்தனம் இன்றும் பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிரா போன்று வெகு சில மாநிலங்களில் மட்டுமே உள்ளது.
இவர்கள் மூலம் கோடிக்கணக்கான கமிஷன் அரசியல் வாதிகளுக்கு போவதால் இதை அவர்களும் சேர்ந்து கடுமையாக எதிர்க்கிறார்கள். அப்படி இருக்க விவசாயி இதற்கு எதிராக ஏன் போராடவில்லை?விவசாயிகள்தான் ஏற்கனவே கடன் வாங்கி அவர்களிட அடிமையாக உள்ளார்களே, அதை மீறி அரசுக்கு ஆதரவாக போராட போனால்,
அவர்களிடம் உள்ள குண்டர்கள் மூலம் கடனை உடனே கொடுக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். அப்போது ஒரு விவசாயிக்கு உதவ இன்னொரு விவசாயி வர முடியாது.அப்படியே வரும் விவசாயிகள் இப்படி மாசக்கணக்கில் எல்லாம் போராட முடியாது. ஏனெனில் கால்நடைகளை பார்க்க வேண்டும், பயிருக்கு நீர் பாய்ச்ச,
பால்கறக்க என்று நேரம் தவறாமல் செய்தே ஆகவேண்டியது அவன் விதி.அது மட்டுமல்ல விவசாயிகளிடம் ஒற்றுமை என்பதெல்லால் ஒரு காசுக்கு கூட கிடையாது.அரசாங்கமும் கமிஷன் கொடுக்கும் மண்டிகள் கைவசம் இருப்பதால்,அவர் மீறி போலீஸில் புகார் கொடுத்தால்,நம் மீதே நாலு வழக்கில போட்டு உள்ளே வைத்துவிடுவார்கள்
அவ்வளவு செல்வாக்கு அவர்களுக்கு. இது எல்லாம் விவசாயிக்கே புரியாத புதிராக இருக்கும்போது விவசாய தினத்தன்று ஃபேஸ்புக்கில் அல்லது வாட்சப்பில் வாழ்த்தும் நமக்கா புரியப்போகிறது ?இந்த அவலங்கள் எல்லாம் தன் மகனோ, மகளோ படக்கூடாது என்பதற்குத்தான் ஆடு மாடுகளை, தோட்டத்தை விற்று எங்களை எல்லாம்
படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினார்கள் எங்கள் பெற்றோர்கள். அந்த கஷ்டம் இப்போது என் குழந்தைகளுக்கே தெரியாதபோது விவசாயத்திற்கு தொடர்பே இல்லாதவர்களுக்கா புரியப்போகிறது?!எனவே இது மோடியின் தோல்வி என்பதை அரசியல் கட்சிகள் கூறலாம்,
ஆனால் மேற்சொன்ன மாநில விவசாயிகளின் மிக மோசமான தோல்வி என்பதை விட விதி என்பதே சாலப்பொருந்தும். இதில் மோடி அரசியல் செய்ய வில்லையா? ஆம் இன்று பஞ்சாபில் கூட்டணிக்காக அம்ரீந்தர் சிங்கின் அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்று அரசியல் இருப்பதை மறைக்க முடியாது.
ஆனால் இது மோடியால் மாற்ற முடியாதது அல்ல, சமயம் சாதகமாக இல்லாததால் தள்ளிப்போகிறது என்பதே என் நம்பிக்கை!விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே வழி சரியானவர்களை தேர்தலில் தேர்ந்தெடுப்பதே! அது முடியாமல் போனால் விடியாத விடியலை நோக்கி காத்திருக்கும் விவசாயிகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
குறிப்பு: அனுபவம் கொண்ட விவசாயிகள் உங்கள் அனுபவங்களை பகிருங்கள். அது மற்றவர்களுக்கு புரிய வைக்க உதவும்!

கட்டுரை :-முரு.தெய்வசிகாமணி

ஒரேதேசம் செய்திகள்
@oredesam

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saran Modi🇮🇳🚩

Saran Modi🇮🇳🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SaranModi7

20 Nov
மோடி பணிந்துவிட்டார், முன் வைத்த காலை பின் வாங்கி விட்டார், இது அவருக்கு சறுக்கல் தான் இப்படி பல தரப்பட்ட விமர்சனங்கள்!
@narendramodi @BJP4India
இதே போல அவர் சி.ஏ.ஏ., ஆர்டிகள் 370, நீட் சட்டம் என அனைத்தையும் வாபஸ் வாங்க வேண்டும் என்று அவரவர் விருப்பம் போல கோரிக்கைகள்!

ஒரு பத்திரிகை அம்மணி, டிமானிடைசேஷனையும் வாபஸ் வாங்குங்கள், என்னிடம் நான்கு நோட்டுகள் உள்ளன என்று நையாண்டி செய்திருக்கிறார்!
வயிற்றில் பல் முளைத்த ஆணின காந்தாரி சூனாசானாவோ, இதேபோல சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்பதையும் ஒப்பு கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்!

இடையே, தேர்தலுக்காக வாபஸ் வாங்கி விட்டார் என்று சில பிரகஸ்பதிகளின் குழந்தைத்தனமான விமர்சனங்கள் வேறு!
Read 15 tweets
20 Nov
பறக்கும் விமானத்தில் பயணிக்கு டாக்டராக மாறி சிகிச்சை அளித்த மத்திய அமைச்சர் ! யார் தெரியுமா ?
@DrBhagwatKarad @BJP4India
டில்லியில் இருந்து மும்பைக்கு கிளம்பிய விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத், சிகிச்சை அளித்து உதவினார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவர் டாக்டர் பகவத் காரத். டாக்டரான இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்பதற்கு முன்னர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மேயராகவும் பதவி வகித்துள்ளார். டாக்டர் துறையில் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளார்.
Read 9 tweets
19 Nov
எதிர்கட்சியாக 20,000 ரூபாய் ! ஆளுங்கட்சியாக வந்த 8,000 ரூபாய் தானா! விடியல் ஆட்சியை சம்பவம் செய்த அண்ணாமலை.
@annamalai_k @BJP4TamilNadu
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,

மழையும் தண்ணீரும் வடியல… மக்களுக்கு இன்னும் விடியல…பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்.
மழையிலும்,வெள்ளத்திலும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரிலும் சென்னை,கடலூர்,கன்னியாகுமரி என்று பல பகுதிகளிலும் நான் நேரில் சென்று மக்கள் படும் துன்பத்தைப் பார்த்து வந்தேன்.பலப்பல ஆண்டுகளும் ஆட்சிகளும் மாறி மாறி வந்த போதும்,மழை வெள்ளம் என்பது மட்டும் மாறாமல் இருக்கிறது.
Read 18 tweets
19 Nov
சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக ”ஜெய்பீம் சூர்யா” மீது அமலாக்க பிரிவு அதிரடி நடவடிக்கை பாய்கிறதா ??!
@Suriya_offl
1, ஒரு என்.ஜி.ஓ தான் பெறும் நன்கொடையை அந்த என்.ஜி.ஓ எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ (கல்வி, மருத்துவ உதவி…) , அந்த நோக்கங்களுக்காக மட்டுமே உபயோகிக்க முடியும் என்று சட்டம் இருக்க, அதை இன்னொரு என்.ஜி.ஓ-வுக்கு தன்னிஷ்டப்படி நன்கொடையாக வழங்க முடியாது.
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில், காங்கிரஸ் (என்கிற என்.ஜி.ஓ), யங் இண்டியா என்ற (சோனியா, ராகுல், பிரியங்கா தலைமையிலான) NGOக்கு பணம் கொடுத்து,அதன் மூலம் நேஷனல் ஹெரால்டை ஆட்டையை போட முயற்சித்த விவகாரத்தில் இது முக்கியமான வாதம் ஒரு NGO இன்னொரு NGOக்கு பணம் நன்கொடை கொடுக்க இயலாது என்பது.
Read 20 tweets
18 Nov
தி.மு.க பிரமுகர்கள் வரி ஏய்ப்பு! வருமான வரி துறை அதிரடி ரெய்டு! சிக்கியது பல கோடி!
தி.மு.க ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆனா நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறது. மின்துறை, போக்குவரத்து துறை,நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு, என ஊழல் புகார்களில் சிக்கி வருகிறது.
இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக வைத்து, மகாலட்சுமி கட்டுமான நிறுவனம், வசந்தம் புரமோட்டர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் இந்த நிறுவனங்கலும் திமுக பிரமுகர்கள் நிர்வகித்து வரும் நிறுவனங்கள் ஆகும். இந்த இரு நிறுவங்கினாலும் கடந்த 6 மாதமாக,
Read 10 tweets
18 Nov
என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்
@annamalai_k
தற்போது தமிழகத்தில் பா.ஜ.க தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க அரசினை எதிர்த்தும் விமர்சித்தும் தினம் தோறும் அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும் திமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட தவறுவதில்லை.
அதிமுக அமைதி காக்கிறது இதுதான் நேரம் என அடித்து ஆடுகிறார் அண்ணாமலை . முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் பா.ஜ.க எடுத்த நிலை திமுகவை நிலைகுலைய வைத்தது.மேலும் 19 ஆம் தேதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்க கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்!
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(