Cryptocurrency Bill 2021
இந்திய அரசாங்கம் கிரிப்டோகரன்சிகளை தடை செய்யுமா இல்லையா என்பது குறித்து தற்போது பெரியதாக சமூகவெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் 2021 மசோதா நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
2019 இல், இது போன்றொரு மசோதா Cryptocurrency களை மொத்தமாக தடை செய்ய (blanket ban) பரிந்துரைத்தது. அந்த மசோதா, கிரிப்டோகரன்சியை யாரும் mining செய்யவோ, உருவாக்கவோ, வைத்திருக்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று பரிந்துரை செய்தது.
2021ல், இந்த மசோதாவிற்கு ‘Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அரசாங்க வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, இந்த முறை, Blanket Ban இருக்காது. ஆனால் இதற்கொரு ஒழுங்குமுறை உருவாக்கப்படும் என்று தெரிகிறது.
இது முதலில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் விரிவான ஆலோசனைகளுக்காக வேண்டி ஒத்திவைக்கப்பட்டது. அப்போது முதல்,கிரிப்டோ உலகம் கணிசமான வளர்ச்சியைக் கண்டது. இது தொடர்பாக மைய்ய அரசு, கிரிப்டோ அசோசியேஷன்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனை செய்தது.
கடந்த சில மாதங்களாக, அரசு, கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்தவும், அவற்றை ஒரு சொத்தாக (asset) கருத வேண்டுமேயன்றி , நாணயமாக (currency of exchange) அல்ல என்று தெளிவு படுத்தியிருந்தது. இந்த முதலீடுகளின் மீதான வருமானத்திற்கு வரி விதிப்பதற்கும் அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தது.
ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. அது, நாட்டில் கிரிப்டோக்கள் நாணயமாக அனுமதிக்கப்படாது என்பது.
கால மாற்றங்களினால், அரசிற்கு 2019 மசோதா மாற்றியமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனெனில் அந்த மசோதாவில் மிகவும் சிக்கலான கிரிப்டோகரன்சி வணிகத்தைப் பற்றிய புரிதல் இல்லை.
மேலும், இன்றைய சூழ்நிலையில் ஏறக்குறைய முதலீட்டாளர்கள் அனைவரும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்கிறார்கள் மற்றும் அதைச் சுற்றி நிறைய வணிகங்கள் உள்ளன. ஆகையினால் அதைத் தடை செய்ய முடியாது என்பது அரசிற்கு தெள்ளத்தெளிவாக புரிந்தது.
எப்படி ஒழுங்குப் படுத்தப்படும்?
முதலாவதாக, அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் / exchanges மூலம் மட்டுமே கிரிப்டோ வர்த்தகம் அனுமதிக்கப்படும். இதற்காக ஒரு புதிய ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்படலாம் அல்லது கிரிப்டோகரன்சிகள் RBI வரம்பிற்குள் கொண்டு வரப்படலாம்.
இரண்டாவதாக, கிரிப்டோ எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை (Cross Border Transactions) உள்ளடக்கியிருப்பதால், வர்த்தகங்களைக் கண்காணிக்க செபி போன்ற அமைப்பிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படலாம்.
இதில் முதலீட்டாளர் பாதுகாப்பு மிக முக்கியமானது. மோசடி நிகழ்வுகளைத் தவிர்க்க checks-and-balances வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும் முதலீட்டாளர்களுக்கு எதிரான மோசடிகளை எவ்வாறு கையாள வேண்டுமென்று ஒரு சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டு, அதுவே சட்டமாக இயற்றப்பட வேண்டும்.
வரி விதிப்பு:
வரிவிதிப்பு குறித்து தொழில்துறையினர் கவலையாக உள்ளனர். அதிக வரி விதித்தால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் கிரிப்டோ பரிமாற்றங்களை இது குறைத்துவிடும் என்று அச்சப்படுகின்றனர்.
வரிவிதிப்புக்கு, கிரிப்டோகரன்சிகள் அவற்றின் செயல்பாட்டின்படி பிரிக்கப்பட வேண்டும்.
அவை: 1. கட்டண டோக்கன்கள் (payment tokens) 2. பாதுகாப்பு டோக்கன்கள் (security tokens) 3. பயன்பாட்டு டோக்கன்கள் (utility tokens)
கிரிப்டோ வருமானங்களை வருமான வரியின் கீழ் மூலதனச் சொத்துகளாகக் (Capital Assets) கருத முடியுமா என்பதில் தெளிவு தேவை.
GSTயைப் பொறுத்தவரை, அணுகுமுறை சற்றே சிக்கலானது. இதை என்னவாக கருதவேண்டும் (Goods / Services) என்பதையும், அது எந்த வரிப் பிரிவின் கீழ் வரலாம் என்பதையும் அரசு தெள்ளத்தெளிவாக குறிப்பிட வேண்டுமென்று Industry bodies அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குழப்பம் எங்கே தொடங்குகிறது?
இந்த மசோதாவின் சுற்றறிக்கையில், "இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பை" உருவாக்க இருப்பதாகக் கூறுகிறது.
மிக முக்கியமாக, இந்த மசோதா "இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் (Private Cryptocurrencies) தடை செய்ய முயல்கிறது" என்று கூறுகிறது.
அரசால் கட்டுப்படுத்தப்படாத அல்லது உருவாக்கப்படாத எந்தவொரு கிரிப்டோகரன்சியும் தனியார் கிரிப்டோகரன்சிகள் என்றே classify ஆகிறது.
உலகில் எந்த மூலையிலும் அரசு கிரிப்டோ (Public Cryptocurrencies) என்று எதுவும் கிடையாது. Bitcoin, Ethereum மற்றும் DogeCoin போன்ற தனியார் கிரிப்டோகரன்சிகளின் அதிகாரப்பூர்வ வரையறையில் எந்தவொரு தெளிவும் இல்லை. இதுவே குழப்பத்திற்கான மூல காரணம்.
அரசு, 'தனியார் கிரிப்டோகரன்சி' என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதால் தேவையற்ற குழப்பம் உருவாகியுள்ளது. 'பொதுத் துறை' மற்றும் 'தனியார் துறை' எப்படி segregate செய்யப்படுகிறதோ, அதே போன்று இதையும் segregate செய்ய முற்படுகிறது. இதுவும் குழப்பத்திற்கு ஒரு முக்கிய காரணம்.
இது, முதலீட்டாளர்களையும், இதை உருவாக்குபவர்களையும் (Developers) ஒருசேர குழப்பத்தில் ஆழ்த்துகிறது. மேலும், Blanket Ban என்ற 2019 ஆம் ஆண்டு மசோதாவை இதனுடன் சேர்த்து படித்ததினால், முதலீட்டாளர்களிடையே பரபரப்பும், பயமும் நிலவியது. அதிக அளவில் sell-off நடந்தது நினைவிருக்கலாம்.
2021 மசோதாவில் தெரிவித்தது போக, அரசிடமிருந்து இதை தெளிவுபடுத்தி ஒரு அறிக்கை வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென்று விஷயமறிந்த முதலீட்டாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.
அரசு ஆதாரங்களை மேற்கோள் காட்டி, காலையில் இருந்து பல செய்தி அறிக்கைகள், blanket ban இருக்காது என்று பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளன. பிறகு, தடை போன்ற வார்த்தைகளை ஏன் பயன்படுத்த வேண்டும்? 2019 மசோதாவிலிருந்து விவரங்கள் நகலெடுக்கப் பட்டதோ (Copy-Paste) என்று ஐயம் எழுகிறது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? 1. அமைதியாக இருக்க வேண்டும் (Don't Panic). 2. முழு அறிக்கைக்காக காத்திருக்க வேண்டும். 3. அவசரப்பட்டு முதலீடுகளை square-off செய்ய வேண்டாம்.
அரசு வட்டாரங்களில் பகிரப்படும் தகவலின்படி, தற்போது சட்டம் மட்டுமே இயற்றப்படும், செயல்படுத்தல் தொடர்பான விவாதங்கள் அனைத்தும் அடுத்த பட்ஜெட் அமர்வில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். அதற்கு பிறகுதான் இந்த சட்டம் அமலுக்கு வரும்.
அதுவரையில் காத்திருப்போம். 🙏🙏🙏
<End>
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
IPO Open Date: Nov 30, 2021
IPO Close Date: Dec 2, 2021
Basis of Allotment Date: Dec 7, 2021
Initiation of Refunds: Dec 8, 2021
Credit of Shares to Demat Account: Dec 9, 2021
IPO Listing Date: Dec 10, 2021
DM me the below details and we will arrange the allotted IPO shares credited to the Demat account of your choice.
Name
PAN
Mobile
Email ID
DP ID & Client ID
Bank Name & Branch
IFSC Code
Account Number
Bank UPI ID
No of Lots
About #StarHealth
Largest private health insurance company in India Largest network distribution in the health insurance industry.
Diversified product suite and specialized products.
Strong risk management with a superior claims ratio.
Track record of good financial performance.
எல்லாரும் ஆயுத பூஜை கொண்டாடியிருப்பீங்க. வர்த்தகம் செய்வோர் புதிய கணக்கை தொடங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அதேபோல், நம்மை போன்ற சம்பளதாரர்கள் என்ன செய்வது? நாமும் புதிய கணக்கை தொடங்களாமே? ஆமாம். சேமிப்பு கணக்கை தான் சொல்கிறேன்.
இது மற்றுமொரு வங்கிக் கணக்கல்ல. நமது வாழ்க்கை மேன்மை பெறுவதற்கான கணக்கு. இதே போன்று நம்மிடையே ட்விட்டரில் இருக்கும் எனது client ஒருவரின் சக்ஸஸ் ஸ்டோரி உங்களுக்கு ஒரு உத்வேகத்தை தருமென்று நினைக்கிறேன்.
அவருடைய பெயரை இங்கே குறிப்பிட விரும்பவில்லை (Client Confidentiality). எனது followers ல் அவரும் ஒருவர். அவரும் நம்மை போலவே மாத சம்பளதாரர் தான். எனது யோசனையின் பேரில், டீமேட் கணக்கொன்று துவக்கினார். முதலில் அவர் செய்த முதலீடு வெறும் ₹6,000 தான்.
வாகனக் கழிவுக் கொள்கை (Automobile Scrappage Policy) - ஒரு பார்வை.
நேற்றைய தினம், பிரதமர் மோடி, தேசிய அளவிலான வாகனக் கழிவுக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இந்த கொள்கை ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஏற்படும் மாற்றங்களை இந்த இழையில் காணலாம்.
இதனால் ஏற்படப்போகும் நன்மைகள் என்று பிரதமர் சொன்னவை: 1. சுற்றுச்சூழலை பாதிக்கும் பழைய வாகனங்களை அகற்றுவது. 2. சாத்தியமான சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்குவது. 3. ₹10,000 கோடி அளவிற்கு புதிய முதலீடுகளை பெறுவது. 4. வாகன சந்தையின் பொருளாதாரத்தை அதிகரிப்பது.
வாகன உரிமையாளர்களுக்கு இதனால் என்ன மாற்றங்கள் / பாதிப்புகள். 1. சொந்த உபயோகத்திற்கான வாகனங்கள் 20 வருடத்திற்கு மேலும், வணிக உபயோகத்திற்கான வாகனங்கள் 15 வருடங்களுக்கு மேலும் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
The minimum wealth for an adult to be part of the richest 1 per cent in India is $150,902. At current rates of around Rs 74.5 to a dollar, that would be around Rs 1.12 crore.
To be in the top 5 percent, your minimum wealth should be $45,909, while you require a minimum of $22,476 to be among the richest 10 percent of Indian adults. In rupee terms, you should have just Rs 16.74 lakhs to be in the top 10 percent
To be among the richest 1% of adults in the world requires a minimum of $1,055,388, or Rs7.86 crore.
If you have assets worth at least $278,520, you would be among the richest 5 percent in the world and at $129,624 you would be among the world’s richest 10%.
This is slowly becoming like a bubble. It will break once #Byju goes public in India. This company is trying to grow in an inorganic manner. Its revenue was ₹20.16 crores in FY19. For a company that's valued in $Billions, the revenue is just a trickle.
#Byju claims that they have added 13.5 million customers but they have not provided the split of paid accounts vs free accounts. As per Fintrackr, its total expenses had grown 2.6X from Rs 537.4 crore in FY18 to Rs 1,376.5 crore in FY19.
#Byjus advertising and promotion accounted for about 1/3rd of its expenses. They have not provided any expenses/revenue details on their paid courses. Any guesses as to where their primary revenue comes from ??
It's from the sale of Tablets and course materials.
மாதாமாதம் வரும் சம்பளத்தை மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்க்கை நடத்துபவரா நீங்கள்?
தற்போதுள்ள நிலையிலிருந்து இன்னும் மேலே செல்ல ஆசைப் படுபவரா?
அதற்கான வழிகளை தேடுபவரா?
அப்படியென்றால் இந்த இழையில் சொன்னவற்றை பின்பற்றுங்கள். பணக்காரர் ஆகுங்கள்.
1. பட்ஜெட் பத்மநாபன்
உங்கள் நிதிநிலை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். At any given point of time, உங்கள் மாதாந்திர வரவு, செலவுகள் மற்றும் சேமிப்புகளின் அளவை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பட்ஜெட் செய்வதற்கான வழிவகைகள்...
2. மற்றவர்களை போல் வாழ்வது
உங்கள் சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கை முறையினை போல் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைப்பது கூடவே கூடாது. அவர்கள் இந்த பொருள் / கார் / பைக் வாங்குகிறார்கள் என்றறிந்து, நீங்களும் உங்களின் அளவுக்கு மீறி கடன் வாங்கக்கூடாது.