எல்லாரும் ஆயுத பூஜை கொண்டாடியிருப்பீங்க. வர்த்தகம் செய்வோர் புதிய கணக்கை தொடங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அதேபோல், நம்மை போன்ற சம்பளதாரர்கள் என்ன செய்வது? நாமும் புதிய கணக்கை தொடங்களாமே? ஆமாம். சேமிப்பு கணக்கை தான் சொல்கிறேன்.
இது மற்றுமொரு வங்கிக் கணக்கல்ல. நமது வாழ்க்கை மேன்மை பெறுவதற்கான கணக்கு. இதே போன்று நம்மிடையே ட்விட்டரில் இருக்கும் எனது client ஒருவரின் சக்ஸஸ் ஸ்டோரி உங்களுக்கு ஒரு உத்வேகத்தை தருமென்று நினைக்கிறேன்.
அவருடைய பெயரை இங்கே குறிப்பிட விரும்பவில்லை (Client Confidentiality). எனது followers ல் அவரும் ஒருவர். அவரும் நம்மை போலவே மாத சம்பளதாரர் தான். எனது யோசனையின் பேரில், டீமேட் கணக்கொன்று துவக்கினார். முதலில் அவர் செய்த முதலீடு வெறும் ₹6,000 தான்.
கடந்த ஆறு மாதங்களில் அவர் சேர்த்த செல்வம் மட்டும் ₹96,000 (இதற்கிடையில், குடும்ப மருத்துவ செலவிற்காக ₹15,000 எடுத்தார் என்று நினைவு). எப்படி சாத்தியமாயிற்று? 1. அவரால் முடியுமென்று நம்பியது. 2. அநாவசிய செலவுகளை குறைத்தது / அறவே ஒழித்தது. 3. நல்ல இடங்களில் முதலீடு செய்தது.
4. எப்பொழுதெல்லாம் பணம் அவர் கையில் இருக்கிறதோ, அதில் ஒரு பகுதியை சேமிப்பிற்க்கென ஒதுக்கியது. 5. மேற்சொன்ன நான்கையும் தவறாது செய்தது (Disciplined).
இவை அனைத்தும் நம்மில் அனைவரும் செய்வதற்கு பெரிய மெனக்கெடல் ஒன்றும் தேவையில்லை. நம் எல்லோராலும் இது முடியும்.
சென்ற வாரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர் சொன்னது - "கண்ண மூடி தொறக்குறதுக்குள்ள 1 லட்சம் சேர்ந்துடிச்சி சார்". Those were the words any Portfolio Manager would do anything to hear from his clients, believe me.
மேற்சொன்னவைகளை செய்ததால் மட்டுமே சாத்தியம் ஆனது.
இவை மட்டுமில்லாமல், அவர் தனது கைபேசியிலிருந்து அனைத்து விதமான ஷாப்பிங் ஆப்ஸ் delete செய்ததும் ஒரு முக்கிய காரணம். செலவு செய்வதற்கான அனைத்து வழிகளும் நமது கைக்கெட்டும் வகையில் இருக்கின்றன. ஆனால் பணம் சேர்க்கும் வழியோ, சில மெனக்கெடுதலின் பிறகு தான் நம்மால் முடிகிறது.
உடனே, "எங்களையெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்காம பணம் சேர்த்து மட்டுமே வச்சிட்டு, எதையுமே அனுபவிக்காம சாக சொல்றியா"ன்னு சண்டைக்கு வராதீங்க. வாழ்க்கையை அனுபவியுங்கள். அது உங்களுடையது. யாருக்கும் அதை தடுக்க உரிமையில்லை.
நான் கேட்பதெல்லாம் ஒரு சில விஷயங்களை தான். அதுவும் எனக்காக அல்ல.
1. சேமிப்பு போக மிச்சமுள்ள பணத்தை செலவு செய்யுங்கள் (not the other way around). 2. செலவு செய்யும் முன், அது உங்களுக்கு need ஆ அல்லது want ஆ என்பதை முடிவு செய்யுங்கள். Need கு மட்டுமே செலவு செய்யுங்கள். 3. லோன் / கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு முன்னர், அதே பொருளை உங்களால் முழு
பணத்தை கொடுத்து வாங்க முடியுமா என்று யோசியுங்கள். பணத்தை சேர்த்து பின்னர் வாங்கலாமா சாத்தியத்தை சிந்தியுங்கள். 4. சேமித்த பணத்தை நல்ல வாய்ப்புகளில் (பங்குகள் / பரஸ்பர நிதி / பாண்ட் / NCD's) முதலீடு செய்யுங்கள்.
முதலீடுகளை disciplined ஆக செய்யுங்கள். அதுதான் நமக்கும் நன்மை.
தற்போது நீங்கள் சம்பாதிக்கும் பணம் உங்களை சேராமல் வங்கிகளையும், கிரெடிட் கார்டு நிறுவனங்களையும் சேருகிறது. சொல்லப்போனால், நீங்கள் அவர்களுக்காகத்தான் வேலை செய்து சம்பளம் வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்காக அல்ல.
உங்களுக்காக எப்பொழுது பணம் ஈட்டப் போகிறீர்கள்?
பணம் ஈட்டும் வழிகளை ஏற்கனவே சொல்லிவிட்டேன். எப்பொழுது தொடங்கப் போகிறீர்கள்? Today is better than tomorrow. Always.
நன்றே (சேமிப்பு) செய்யுங்கள்.
இன்றே செய்யுங்கள்.
இன்றும் இன்னே செய்யுங்கள்.
வாகனக் கழிவுக் கொள்கை (Automobile Scrappage Policy) - ஒரு பார்வை.
நேற்றைய தினம், பிரதமர் மோடி, தேசிய அளவிலான வாகனக் கழிவுக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இந்த கொள்கை ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஏற்படும் மாற்றங்களை இந்த இழையில் காணலாம்.
இதனால் ஏற்படப்போகும் நன்மைகள் என்று பிரதமர் சொன்னவை: 1. சுற்றுச்சூழலை பாதிக்கும் பழைய வாகனங்களை அகற்றுவது. 2. சாத்தியமான சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்குவது. 3. ₹10,000 கோடி அளவிற்கு புதிய முதலீடுகளை பெறுவது. 4. வாகன சந்தையின் பொருளாதாரத்தை அதிகரிப்பது.
வாகன உரிமையாளர்களுக்கு இதனால் என்ன மாற்றங்கள் / பாதிப்புகள். 1. சொந்த உபயோகத்திற்கான வாகனங்கள் 20 வருடத்திற்கு மேலும், வணிக உபயோகத்திற்கான வாகனங்கள் 15 வருடங்களுக்கு மேலும் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
The minimum wealth for an adult to be part of the richest 1 per cent in India is $150,902. At current rates of around Rs 74.5 to a dollar, that would be around Rs 1.12 crore.
To be in the top 5 percent, your minimum wealth should be $45,909, while you require a minimum of $22,476 to be among the richest 10 percent of Indian adults. In rupee terms, you should have just Rs 16.74 lakhs to be in the top 10 percent
To be among the richest 1% of adults in the world requires a minimum of $1,055,388, or Rs7.86 crore.
If you have assets worth at least $278,520, you would be among the richest 5 percent in the world and at $129,624 you would be among the world’s richest 10%.
This is slowly becoming like a bubble. It will break once #Byju goes public in India. This company is trying to grow in an inorganic manner. Its revenue was ₹20.16 crores in FY19. For a company that's valued in $Billions, the revenue is just a trickle.
#Byju claims that they have added 13.5 million customers but they have not provided the split of paid accounts vs free accounts. As per Fintrackr, its total expenses had grown 2.6X from Rs 537.4 crore in FY18 to Rs 1,376.5 crore in FY19.
#Byjus advertising and promotion accounted for about 1/3rd of its expenses. They have not provided any expenses/revenue details on their paid courses. Any guesses as to where their primary revenue comes from ??
It's from the sale of Tablets and course materials.
மாதாமாதம் வரும் சம்பளத்தை மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்க்கை நடத்துபவரா நீங்கள்?
தற்போதுள்ள நிலையிலிருந்து இன்னும் மேலே செல்ல ஆசைப் படுபவரா?
அதற்கான வழிகளை தேடுபவரா?
அப்படியென்றால் இந்த இழையில் சொன்னவற்றை பின்பற்றுங்கள். பணக்காரர் ஆகுங்கள்.
1. பட்ஜெட் பத்மநாபன்
உங்கள் நிதிநிலை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். At any given point of time, உங்கள் மாதாந்திர வரவு, செலவுகள் மற்றும் சேமிப்புகளின் அளவை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பட்ஜெட் செய்வதற்கான வழிவகைகள்...
2. மற்றவர்களை போல் வாழ்வது
உங்கள் சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கை முறையினை போல் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைப்பது கூடவே கூடாது. அவர்கள் இந்த பொருள் / கார் / பைக் வாங்குகிறார்கள் என்றறிந்து, நீங்களும் உங்களின் அளவுக்கு மீறி கடன் வாங்கக்கூடாது.
1. Get the price of your favorite car (Assume 10 lakhs) 2. Find out what's the EMI payable for that car for 3 years (₹31,336). 3. Start saving that amount and invest it diligently for 3 years
(for people who think #3 it's not possible, imagine that you have already got a loan and imagine that bank is debiting that EMI from your account. Would you be giving any excuses then???) 4. After three years, you would have around ₹13 lakhs (at 10% growth in Index funds).
5. Your choices after 3 years.
(a) Buy your favourite car (new) for the entire amount (₹13 lakhs).
(b) Buy a used car of the same model for half the price and invest the remaining (₹6.5 lakhs)
(c) Buy a used car (luxury), a segment above for the entire amount (₹13 lakhs)