தூத்துக்குடி காற்று மாசுக்கு ஸ்டெர்லைட் காரணம் அல்ல: அண்ணா பல்கலை., அறிக்கை

'துாத்துக்குடி நகரில் காற்று மாசு அளவுக்கு அதிகமாக உள்ளது. இதற்கு, அங்கே இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலை தான் காரணம்' என போராட்டக்காரர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
ஆனால், அண்ணா பல்கலையின் ஆய்வு அறிக்கை, சாலை துாசும், வாகன புகையுமே இதற்கு முக்கிய காரணங்கள் என தெரிவிக்கிறது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த விபரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்காமல், காலம் தாழ்த்தியதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், நாடெங்கிலும் உள்ள காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்காக 800 கண்காணிப்பு மையங்களையும், 250 தொடர் கண்காணிப்பு மையங்களையும் நிர்வகித்து வருகிறது.இதன் வாயிலாக, 124 நகரங்களில் காற்றின் தரம் பேணப்படவில்லை என்று கண்டுபிடித்துள்ளது.
தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை, காற்றின் தர மதிப்பீட்டு இலக்குகளை, இந்த நகரங்கள் எட்டவில்லை என்றே இதற்கு அர்த்தம்.
துாத்துக்குடியில் காற்றின் தரத்தை கண்காணிப்பதற்கு, 20 ஆண்டுகளாக ஏ.வி.எம்., ஜுவல்லரி, சிப்காட் மற்றும் ராஜா ஏஜன்சீஸ் ஆகிய மூன்று இடங்களில் கண்காணிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன.
கண்டுபிடிப்பு

கடந்த 2011 - 2018 காலகட்டத்தில், துாத்துக்குடி கண்காணிப்பு மையங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி, 'சல்பர் - டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு'களின் அளவு, இலக்குக்குள்ளேயே இருந்தன.
ஆனால், இதே காலகட்டத்தில், 10 மைக்ரோ மீட்டர் விட்டத்துக்கு குறைவாக இருக்கும் துகள்களை, 'பார்ட்டிகுலேட் மீட்டர் - பி எம் 10' என்றும் அழைப்பர் - ஆண்டு சராசரி, அளவுக்கு அதிகமாக இருப்பதாக தெரியவந்தது.
அதனால், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்றின் தர இலக்கை எட்டாத நகராக துாத்துக்குடியை வகைப்படுத்தியது.இதனால் தான், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின் படி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், துாத்துக்குடி காற்று மாசுக் காரணமான அம்சங்களை கண்டுபிடிக்கும்
ஆய்வை, 2019 மார்ச் மாதத்தில் துவங்கியது.
இந்த ஆய்வை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்காக, அண்ணா பல்கலைக்கழக பருவநிலை மாற்றம் மற்றும் தகவமைப்பு மையம் மேற்கொண்டு, 2019 ஏப்ரலில் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை தான், தற்போது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
துாத்துக்குடி காற்றில் உள்ள 'பி எம்10' துகளின் அளவு, 1 கன மீட்டரில் 40 முதல் 174 மைக்ரோ கிராம் வரை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இது, வரையறுக்கப்பட்ட அளவுகளைவிட மிக மிக அதிகம்.
அதாவது, ஆண்டு சராசரியான, 1 கன மீட்டரில் 60 மைக்ரோ கிராம் துகள் மற்றும் நாள் சராசரியான 1 கன மீட்டரில் 100 மைக்ரோ கிராம் துகள் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில், அதைவிட பன்மடங்கு அதிகமாக பி எம் 10 துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
என்ன காரணம்

இந்த ஆய்வு நடத்தப்பட்டது, 2019 மார்ச் மாதம். அதற்கு ஓராண்டுக்கு முன், 2018 மே மாதம் தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து, துாத்துக்குடியின் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் தாமிர ஆலை தான் காரணம் எனக் கூறி, அதை நிரந்தரமாக மூடிவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி, 10 மாதங்களுக்கு பின்னும், பி எம்10 துகளின் அளவு அதிகமாக இருப்பதற்கும், காற்றில் மாசு ஏற்பட என்ன காரணம் என்று அண்ணா பல்கலை பருவநிலை மாற்றம் மற்றும் தகவமைப்பு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாலை துாசில் இருக்கும் சிலிக்கா, எரிபொருள் பயன்பாடு, 'பையோ மாஸ்' எரிப்பு மற்றும் வாகனங்களின் புகை உமிழ்வு ஆகியவையே அதற்கு காரணம் எனக் கூறியுள்ளது. பையோ மாஸ்எரிபொருட்களின் பயன்பாடு இருப்பதால் தான், காற்றில் சல்பேட் மற்றும் நைட்ரேட் உள்ளது.
பையோ மாஸ் எரிப்பால் தான், காற்றில் பொட்டாசியம் கலந்திருக்கிறது.
கட்டுமானம், சிமென்ட் பயன்பாட்டால் கால்சியம் மற்றும் மாங்கனிசியத்தின் அளவும் காற்றில் அதிகம் கலந்துள்ளது.
அதாவது, துாத்துக்குடியின் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலையே காரணம் எனக் கூறி வந்தவர்களின் கருத்துகளுக்கு எதிராக, அண்ணா பல்கலை ஆய்வு அறிக்கை அமைந்துள்ளது.
மேலும், 10 ஆண்டுகளில், துாத்துக்குடியில் உள்ள கண்காணிப்பு மையங்களில் எடுக்கப்பட்ட பி எம் 10 துகள் அளவு, 2019ல் எடுக்கப்பட்டதைவிட குறைவாகவே உள்ளது என்பது, இதே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை 2019 ஏப்ரல் மாதமே, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் வழங்கப்பட்ட ஒரு பிரமாண பத்திரத்தின் ஒரு பகுதியாக, இந்த அறிக்கை 2020 அக்., 8ல் தான் வெளியிடப்பட்டது.
அதுவும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், தன் இறுதி தீர்ப்பை 2020 ஆக., 18ல் வழங்கிய பின், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் --

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

26 Nov
பகிர்வு..

மத்திய அரசின் சூரிய மித்ரா பயிற்சி வகுப்புகள்(Solar technical Training) துவங்க உள்ளது. தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
கடைசி நாள்: 25.12.2021. Age:18 to 30
பயிற்சி காலம்:3 மாதம்
பயிற்சி நேரம்: கானல 9 மணி முதல் மானல:5மணி வரை
கல்வி தகுதி:
Diploma in
1.EEE
2.ECE
3.Mech
4.Civil
ITI:
Electrician
Fitter
Wireman
Welder
சலுகைகள்:
1. தங்குமிடம்
2. உணவு
3 . சீருடை
பயிற்சி உள்பட இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிந்ததும் 100% வேலை வாய்ப்பு.
இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொ‌ள்ளு‌ங்க‌ள்.
சேர்க்கைக்கு வரும்போது
Read 5 tweets
26 Nov
#மறக்கமுடியாத_தீவிரவாதம்

இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் 13 ம் ஆண்டு நினைவு தினம் :

மும்பை: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று (நவ.26) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று,
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர்.
Read 8 tweets
26 Nov
சமூக வலைதள கருத்துகளுக்கு பொறுப்புடைமை நிர்ணயம் அவசியம்

புதுடில்லி :''சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு பொறுப்புடைமையை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.
இணையதளங்கள் நிர்வாகம் தொடர்பான முதலாவது இந்தியா இன்டர்நெட் நிர்வாக அமைப்பின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
பரிந்துரை

இதில் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:'இன்டர்நெட்' எனப்படும் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு மற்றும் அதில் பதிவிடும் கருத்துகள் பல மாறுதல்களை சந்தித்துள்ளன.
Read 10 tweets
26 Nov
இது உங்கள் இடம்: முதல்வரின் இன்னொரு முகம்!

பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தின் சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் நீலகிரியில், விதிமீறல் கட்டடங்கள் அதிகமாகிப்போனதால்,
உச்ச நீதிமன்றமே தலையிட்டு சில சட்ட விதிமுறைகளை அறிவித்தது. அதை, மாவட்ட ஆட்சியர் மூலம் நிறைவேற்றவும் ஆணையிட்டது.

நீலகிரியின், 113வது கலெக்டராக, 2017ல் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தன் பணியை சிறப்பாக மேற்கொண்டார்.
சட்டத்திற்குப் புறம்பாக ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், மரம் கடத்தல் ஆகியவற்றை தடுத்தார்; -பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தார்.-சீகூர் யானை வழித்தடத்தில் இருந்த, 39 ஓட்டல்கள் மூடல் மற்றும் மின் வேலி அமைக்கத் தடை ஆகியவற்றில் உறுதியுடன் செயல்பட்டார்.
Read 10 tweets
26 Nov
*கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் ஆலயம்*

*கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.  இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.*🙏🇮🇳1 Image
மூலவர் : தேவிகன்னியாகுமரி - பகவதி அம்மன்

உற்சவர் : தியாக சவுந்தரி, பால சவுந்தரி

தீர்த்தம் : பாபநாசதீர்த்தம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : குமரிகண்டம்

ஊர் : கன்னியாகுமரி

🙏🇮🇳2
திருவிழா

புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாள் வைகாசி விசாகம் - 10 நாள் - தேரோட்டம், தெப்போற்ஸவம் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். 🙏🇮🇳3
Read 30 tweets
25 Nov
*அசைவம்சாப்பிடலாமா? 
இறை நம்பிக்கை உள்ளவர்கள் ???
அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????

இந்த கேள்வியை 
கேட்காத மனிதர்கள் இல்லை 
இதற்கு பதில் தராத குருவும் இல்லை 
ஆயினும் கேள்வி தொடர்கிறது
*இதோ ஓஷோ அவர்களின் பதில்...*

உணவுக்கும் இறைவனுக்கும் 
எந்த சம்மந்தமும் இல்லை..

உணவுக்கும் 
கடவுள் கோபிப்பார் என்பதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை...

உணவுக்கு 
கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் 
எந்த சம்மந்தமும் இல்லை.
*உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு*

*உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு* 

*உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு* 

*உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு...*

*உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு...*
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(