பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தின் சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் நீலகிரியில், விதிமீறல் கட்டடங்கள் அதிகமாகிப்போனதால்,
உச்ச நீதிமன்றமே தலையிட்டு சில சட்ட விதிமுறைகளை அறிவித்தது. அதை, மாவட்ட ஆட்சியர் மூலம் நிறைவேற்றவும் ஆணையிட்டது.
நீலகிரியின், 113வது கலெக்டராக, 2017ல் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தன் பணியை சிறப்பாக மேற்கொண்டார்.
சட்டத்திற்குப் புறம்பாக ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், மரம் கடத்தல் ஆகியவற்றை தடுத்தார்; -பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தார்.-சீகூர் யானை வழித்தடத்தில் இருந்த, 39 ஓட்டல்கள் மூடல் மற்றும் மின் வேலி அமைக்கத் தடை ஆகியவற்றில் உறுதியுடன் செயல்பட்டார்.
அவரின் அதிரடி நடவடிக்கைகள் நன்மை பயப்பதாகவே அமைந்ததால், மக்களிடம் ஆதரவு பெருகத் துவங்கியது.
அரசியல்வாதி மற்றும் சினிமாதுறையினர், அவர்களின் உறவினர் மற்றும், 'பினாமி'கள் தான் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து, சீகூர் மற்றும் மசினகுடி பகுதிகளில், 7,000 ஏக்கரில், 821 கட்டடங்களை அனுமதியின்றி கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
சிலர், தங்கள் கட்டடங்கள் யானை வழித்தடத்தில் இல்லை என கூறுமாறு, கலெக்டருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்; அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை என்பதால், மிரட்டலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல்கள் பரவுகின்றன.
இந்நிலையில் தமிழக அரசு, 'நிர்வாக ரீதியில் அவசர மாற்றம் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றமும், நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
யானை வழித்தடத்தில், விதிமீறி கட்டியுள்ள கட்டடங்களை அகற்றுவதில் இன்னசென்ட் திவ்யா தீவிரமாக செயல்பட்ட நிலையில், அவரை இடமாற்றம் செய்ய, தி.மு.க., அரசு அவசரம் காட்டுவது ஏன்?
நல்ல அதிகாரிகளை, தேடித் தேடி பணியமர்த்தும் முதல்வர் ஸ்டாலின், நீலகிரி விஷயத்தில் தன் இன்னொரு முகத்தை காட்டுகிறாரா? உண்மையிலேயே நல்லாட்சி தர, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார் என்றால், நீலகிரி கலெக்டர் விஷயத்தில் நேர்மையான, நல்ல முடிவு எடுப்பார் என, நம்புகிறோம்.
மாறாக, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவான முடிவு எடுக்க துணை போனார் என்றால், அதற்கான எதிர்வினையை, அவர் மட்டுமின்றி தமிழகமும் அனுபவிக்கும்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆர். ரவி, வடக்கூர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலம் ஆகிய இரு முக்கிய காரணங்களால்,
மத்திய பா.ஜ., அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும், 'வாபஸ்' வாங்கி இருக்கிறது.
காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போராட்டம் நடத்தும் மனோபாவம் உடைய கம்யூனிஸ்ட்களால், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியதை ஜீரணிக்க முடியவில்லை.
டில்லியில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த விவசாய, 'ஏஜென்டு'களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை, அவர்களால் தாங்கி கொள்ள இயலவில்லை.'
கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்; சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி
சென்னை : 'கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள் உள்ளனர்; அவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையில் முழு திருப்தியில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
வாடகை பாக்கி
இதையடுத்து, வாடகை உயர்த்தப்பட்டதற்கான உத்தரவை வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
காளிகாம்பாள் கோவில்:
சென்னை மாநரகத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான பாரீஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த இந்தக் கோவில், 🙏🇮🇳1
பல்வேறு கால மாற்றங் களின் காரணமாக, தற்போதைய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் ஆதிக்க காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் ‘காளி’ என்றும், ‘காமாட்சி’ என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வம் பிரதான மூலவராக அருளாட்சி செய்கிறார்.🙏🇮🇳2
முன்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இத்தல மூலவர், தற்போது சாந்தமான கோலத்தில் காமாட்சி வடிவில் அருள்வதாக ஐதீகம்.
🇮🇳🙏நமுசி என்னும் அசுரன் சிவபெருமான் நோக்கி கடும் தவம் புரிந்து, எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான்.
அதன் விளைவாக தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொந்தரவு செய்து வந்தான். இம்சை தாங்காத தேவர்கள் இந்திரன் தலைமையில் சிவபெருமானை சரண் அடைந்து முறையிட்டனர். தவத்தின் பயனால் பெற்ற வரத்தினைத் தவறாக பயன்படுத்திய ஆசுரனை கொல்ல முடிவெடுத்தார் சிவபெருமான்.
"ஆயுதத்தால் தானே அசுரனுக்கு அழிவு இல்லை, கடல் நுரையை வீசினால் அவன் அழிந்து போவான்" எனக்கூறி தன் சக்தியை கடல் நுரை மீது செலுத்தினார். அதனைப் பெற்ற இந்திரன் கடல்நுரையை அசுரன் மீது வீசி அசுரனைக் கொன்றான்.
மத்திய அரசின் சூரிய மித்ரா பயிற்சி வகுப்புகள்(Solar technical Training) துவங்க உள்ளது. தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
கடைசி நாள்: 25.12.2021. Age:18 to 30
பயிற்சி காலம்:3 மாதம்
பயிற்சி நேரம்: கானல 9 மணி முதல் மானல:5மணி வரை
கல்வி தகுதி:
Diploma in
1.EEE
2.ECE
3.Mech
4.Civil
ITI:
Electrician
Fitter
Wireman
Welder
சலுகைகள்: 1. தங்குமிடம் 2. உணவு
3 . சீருடை
பயிற்சி உள்பட இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிந்ததும் 100% வேலை வாய்ப்பு.
இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சேர்க்கைக்கு வரும்போது