மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: மதம் மாறியவர்களுக்கு, கலப்பு திருமணத்திற்கான சான்று வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ ஆதி திராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்று பெற்ற அவர்,
தனக்கு கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாட்சியர், மதம் மாறியவருக்கு கலப்பு திருமணச் சான்று வழங்க முடியாது எனக் கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தார்.
இதனை எதிர்த்து பால்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று (நவ.,25) விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை' எனக் குறிப்பிட்ட நீதிபதி, 'ஒரே சாதியையோ, வகுப்பையோ சேர்ந்த கணவன், மனைவிக்கு கலப்பு திருமண சான்று பெற தகுதியில்லை' எனக் குறிப்பிட்டார்.
மேலும், 'மதம் மாறியவருக்கு கலப்பு திருமணச் சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும்' எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆர். ரவி, வடக்கூர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலம் ஆகிய இரு முக்கிய காரணங்களால்,
மத்திய பா.ஜ., அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும், 'வாபஸ்' வாங்கி இருக்கிறது.
காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போராட்டம் நடத்தும் மனோபாவம் உடைய கம்யூனிஸ்ட்களால், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியதை ஜீரணிக்க முடியவில்லை.
டில்லியில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த விவசாய, 'ஏஜென்டு'களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை, அவர்களால் தாங்கி கொள்ள இயலவில்லை.'
கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்; சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி
சென்னை : 'கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள் உள்ளனர்; அவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையில் முழு திருப்தியில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
வாடகை பாக்கி
இதையடுத்து, வாடகை உயர்த்தப்பட்டதற்கான உத்தரவை வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
காளிகாம்பாள் கோவில்:
சென்னை மாநரகத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான பாரீஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த இந்தக் கோவில், 🙏🇮🇳1
பல்வேறு கால மாற்றங் களின் காரணமாக, தற்போதைய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் ஆதிக்க காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் ‘காளி’ என்றும், ‘காமாட்சி’ என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வம் பிரதான மூலவராக அருளாட்சி செய்கிறார்.🙏🇮🇳2
முன்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இத்தல மூலவர், தற்போது சாந்தமான கோலத்தில் காமாட்சி வடிவில் அருள்வதாக ஐதீகம்.
🇮🇳🙏நமுசி என்னும் அசுரன் சிவபெருமான் நோக்கி கடும் தவம் புரிந்து, எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான்.
அதன் விளைவாக தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொந்தரவு செய்து வந்தான். இம்சை தாங்காத தேவர்கள் இந்திரன் தலைமையில் சிவபெருமானை சரண் அடைந்து முறையிட்டனர். தவத்தின் பயனால் பெற்ற வரத்தினைத் தவறாக பயன்படுத்திய ஆசுரனை கொல்ல முடிவெடுத்தார் சிவபெருமான்.
"ஆயுதத்தால் தானே அசுரனுக்கு அழிவு இல்லை, கடல் நுரையை வீசினால் அவன் அழிந்து போவான்" எனக்கூறி தன் சக்தியை கடல் நுரை மீது செலுத்தினார். அதனைப் பெற்ற இந்திரன் கடல்நுரையை அசுரன் மீது வீசி அசுரனைக் கொன்றான்.
மத்திய அரசின் சூரிய மித்ரா பயிற்சி வகுப்புகள்(Solar technical Training) துவங்க உள்ளது. தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
கடைசி நாள்: 25.12.2021. Age:18 to 30
பயிற்சி காலம்:3 மாதம்
பயிற்சி நேரம்: கானல 9 மணி முதல் மானல:5மணி வரை
கல்வி தகுதி:
Diploma in
1.EEE
2.ECE
3.Mech
4.Civil
ITI:
Electrician
Fitter
Wireman
Welder
சலுகைகள்: 1. தங்குமிடம் 2. உணவு
3 . சீருடை
பயிற்சி உள்பட இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிந்ததும் 100% வேலை வாய்ப்பு.
இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சேர்க்கைக்கு வரும்போது