அர்ச்சகர்:- என்ன ஜோசியரே கோவிலுக்கு முன்போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் வெகு கஷ்டமாகவல்லவா இருக்கிறது.
ஜோசியர்: - என்ன காரணம் ?
அர்ச்சகர்;- இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான்.
ஜோசியர்:- சுயமரியாதை காரணம் என்றால் சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை,
(1/n)
பூதம் இல்லை என்று சொல்லி மக்களைக் கோவிலுக்குள் போகக்கூடாது என்று பிரசாரம் செய்கின்றார்களே அதனாலா?
அர்ச்சகர் :- இல்லை - இல்லை அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்தடவை வேண்டுமானாலும் சாமியில்லை, பூதம் இல்லை என்று சொல்லட்டும்,
(2/n)
கோவிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும்.அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது.
ஜோசியர்:-மற்றென்ன காரணம் என்று சொல்லுகிறீர்கள்?
அர்ச்சகர்;-கோவில்களுக்குத் தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி,அதை நிறுத்தி விட்டார்களல்லவா அதனால்தான்
(3/n)
ஜோசியர்:- இதற்கும் பக்திக்கும் சம்மந்தமென்ன? இதனால் எல்லாம் மக்களுக்குக் கடவுள் பக்தி குறைந்து விடுமா?
அர்ச்சகர்:- கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்? கடவுள்தான் எங்கும் நிரைந்தவராயிற்றே. இதற்காக ஒரு மனிதன் கோவிலுக்கு வர வேண்டுமா?
ஜோசியர்;- மற்றெதற்காக வருகின்றார்கள்?
(4/n)
அர்ச்சகர்:- இரண்டு காரியத்திற்காகத்தானே கோவிலுக்கு வருகின்றார்கள்.
1. தன்னை பக்திவான் என்று பிறர் மதிக்க வேண்டும்.
அங்கு வரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும் , ஆண் களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும்,
(5/n)
இரண்டாவது விஷயத்திற்குத்தான் அதிகம் பேர் வாலிபர்கள் சற்று ஷோக் பேர்வளிகள் சிறிது வயதானவர்களாயிருந்தாலும், சபலமுடையவர்கள் ஆகியவர்கள் வருவது. இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய் வராவிட்டால் குடும்பப் பெண்களும் வருவதில்லை.
(6/n)
ஆக இப்படிப்பட்ட இரண்டு கூட்டம் வந்தால் தானே காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு ஆகியவைகள் கிடைக்கும். ஆகவே நமக்குக் கோவிலில் மணியடிப்பதில் என்ன பிரயோஜனம்? கோவில் சம்பளமாகிய மாதம் 1-12-0 ரூ. சம்பளமா நமக்குக் கட்டும்?
(7/n)
ஜோசியர்:- அப்படியா சங்கதி. அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு வழி கிடைக்காதோ?
அர்ச்சகர்:- என்ன வழி?
ஜோசியர்:- நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி, நன்றாய் அலங்கரித்து, தினம் காலை, மாலையில் கோவிலுக்கு வரும்படி செய்தால் என்ன?
(8/n)
அர்ச்சகர்:- அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர்களுக்கு நகை, புடவை, மினுக்கு, கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறிமுகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய சௌகரியம், வீடு,வாசல், கட்டில்,
(9/n)
படுக்கை முதலிய சௌகரியம் ஆகியவைகள் வேண்டாமா இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது?
நாம் ஏதோ தாசிகள் செல்வாக்கினால் கோவிலுக்கு வருகின்றவர்களில் ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து சரி பண்ணி அதுவும் இரகசியம் என்றும், அவசரமென்றும் பயப்படுத்தி 10,5
அப்படிக்கின்றி நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா?
ஜோசியர்:- என்னமோ கஷ்ட காலம் உங்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் கூடத்தான் வந்து விட்டது.
(11/n)
அர்ச்சகர்:- உங்களுக்கு என்ன வந்தது ?
ஜோசியர்:- இப்போது எந்தத் ‘****’ மகன் நம்மிடம் ஜோசியம் பார்க்க வருகிறான்? பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்க்கின்ற வேலையே மிகவும் குறைந்து போய்விட்டது.
அர்ச்சகர் : - ஏன்?
(12/n)
ஜோசியர்:- ஏன் என்ன அததுகளே பெண்ணும் - மாப்பிள்ளையுமே பொருத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன.
அர்ச்சகர்:- இருந்தாலும் கிரகதோஷம் பார்க்கவாவது வருவார்களே?
ஜோசியர்; - அதாவது வந்தாலும் பரவாயில்லை. அதற்குதான் எங்கு வருகின்றார்கள்.
(13/n)
‘திருட்டுத் **** பிள்ளைகள்’ காயலா வந்தால் - தலைவலி வந்தால் உடனே டாக்டர்கள் இடம் போய் விடுகின்றார்கள். நம்மிடம் வருவதேயில்லை. நம்மைக் கண்டால் சிரிக்கின்றார்கள். என்னடா என்று கேட்டால் சுயமரியாதையடா என்கின்றார்கள்.
(14/n)
அர்ச்சகர்:- சரி, இவ்வளவு ஆனதற்கப்புரம் எனக்கு ஒன்று தோன்றுகிறது.
ஜோசியர்:- என்ன?
அர்ச்சகர்:- நாமும் சுயமரியாதை பிரசாரம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி மெள்ளமெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது எப்படி என்றால் இப்பொழுது எத்தனையோ தமிழ் பண்டிதர்கள் அப்படித்தான் அதாவது
(15/n)
“நானும் சுயமரியாதைக்காரன்” என்று சொல்லிக் கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கின்றார்களே அதுபோல.
ஜோசியர்:- அது நல்லவழிதான். நம்முடைய பெரியவாள் பௌத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால்,
(16/n)
இந்த சு-ம. பயல்கள் (சுயமரியாதைக்காரர்கள்) இது தெரிந்துதான் பு-ம. பயல்களை (புராண மரியாதைக்காரர்களை) அதாவது பிராமணர்களைச் சேர்ப்பதில்லை என்று தீர்மானித்து விட்டார்களே.
(17/n)
அர்ச்சகர்:- அதுவும் அப்படியா. அப்படியானால் இந்தப்படி ஏழைகளை வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் இந்த சு-ம. காரன்கள் நாசமாய் நிர்மூலமாய்ப் போகட்டும். நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவோம்.
('சித்திரபுத்திரன்', குடி அரசு - உரையாடல் - 10.05.1931)
End ♥️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2024-ஆம் ஆண்டிற்கான சென்னை புத்தக கண்காட்சி இன்று (03-01-2024) முதல் 21-01-2024 அவரை நடைபெறுகிறது, பலருக்கும் என்ன புத்தகம் வாங்க வேண்டும் என திட்டமிடல் இருக்கும், சிலருக்கு எதைவாங்குவது என குழப்பம் இருக்கும், அப்படி குழப்பத்தில் உள்ளவர்கள் வாங்க
👇🏽
வசதியாக பல தலைப்புகளின் கீழ் உள்ள புத்தகங்களை இங்கே தொகுத்து பதிவிடுகிறேன், விருப்பம் உள்ள தோழர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாங்கி படித்துப் பாருங்கள் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
புத்தகங்களின் பட்டியல் கீழ்வருமாறு.
👇🏽
நாவல் ;
📙 புத்தகம் :- பர்தா
ஆசிரியர் :- மாஜிதா
பதிப்பகம் :- எதிர் வெளியீடு
📙 புத்தகம் :- இப்போது உயிரோடிருக்கிறேன்
ஆசிரியர் :- இமையம்
பதிப்பகம் :- க்ரியா வெளியீடு
📙 புத்தகம் :- உண்மைகள் பொய்கள் கற்பனைகள்
ஆசிரியர் :- அரிசங்கர்
பதிப்பகம் :- டிஸ்கவரி புக் பேலஸ்
பார்ப்பனியம் தன்னை தக்க வைத்துக்கொள்ள என்னென்ன செய்யும் என்பதை இன்றைய அரசியல் சூழல் நமக்கு புரிய வைக்கிறது. இந்த பார்ப்பனியத்தின் ஆணி வேர் முதல் அதன் கிளைகள் வரை அலசி ஆராய்கிறது தொ. பரமசிவன் அவர்களின் "இது தான் பார்ப்பனியம்"புத்தகம்.
(1)
வரலாற்றுப் பூர்வமாக பார்ப்பனியம் எப்படி நம் சமூகத்தில் ஊடுருவியது, அரசர்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை பார்ப்பனியத்தையும் பார்ப்பனர்களையும் எப்படி வளர்த்துவிட்டார்கள் என்பதை தரவுகளுடன் விளக்குகிறார்.
(2)
பார்ப்பனர்கள் யார், அவர்களுக்கிடையிலுள்ள உட்பிரிவுகள் என்ன அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை விளக்குகிறார், அதோடு எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஒட்டுமொத்த சமூகத்தையே எப்படி தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தார்கள் என்பதையும்,
(3)
#BookTwitter#Bookmark#readingcommunity
நாவல்கள் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டு ஆனால் நாவல்கள் அளவில் பெரியவை எனவே சிறிய நாவல்கள் நோக்கிய தேடுதலில் இருக்கிறேன் என்பவர்களுக்காக,
தமிழில் நீங்கள் தவறவிடக்கூடாத 100 பக்கங்களுக்கும் குறைவான, 5 குறுநாவல்களை இங்கே தொகுக்கிறேன்.
(1)
#BookTwitter #Thread #ReadingCommunity
தமிழில் உங்கள் வாசிப்பை துவங்க வசதியான 100 (+/-) பக்கங்கள் கொண்ட மிக எளிமையான அவசியம் படிக்க வேண்டிய சில தமிழ் புத்தகங்களை கீழே தொகுக்கிறேன். எளிதில் ஒரு புத்தகத்தை படித்து முடித்த திருப்தியுடன் உங்கள் வாசிப்பு பயணம் துவங்கட்டும்.
(1)
புத்தகம் : பெத்தவன் (நெடுங்கதை)
எழுத்தாளர் : இமையம்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 40
(2)
புத்தகம் : நூறு நாற்காலிகள்
- ஒரு கலெக்டரின் உண்மைக் கதை (சிறுகதை)
வானில் மிதக்கும் மேகங்களில் நமக்கு பிடித்த உருவங்களை பொருத்திப் பார்த்து விளையாடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம்மைப் போல மேகங்களில் மிதந்து வரும் உருவங்களுடன் விளையாடி சிரித்து மகிழும் மென் வண்ணத்துப்பூச்சி இவள்.
(1)
முதுகில் சதை திரண்டு பாரத்தைக் கொடுத்தாலும், நீண்ட நெடிய வாழ்க்கை பயணக் கனவுகளை சுமந்த அவள், அதனுடன் சேர்த்தே ஒவ்வொரு அடியிலும் அந்த பயணத்தில் வர இருந்த வலிகளை தாங்கும் வலிமையையும் சுமந்தாள்.
தன் கனவுகளை மட்டுமல்ல தன்னை சுற்றி இருந்தவர்களையும் சேர்த்தே சுமந்தாள்.
(2)
கணேசன், அலங்காரவேலன், அப்புனு, ஜோதி, தவமணி, தனக்கே தனக்கான ரேவதி என அனைவரையும் சுற்றி இருந்த அவள் கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து நொருங்கிய பின்னும், உற்ற தோழியாக உடன் இருந்த உடன்பிறவா சகோதரி மல்லிகா அக்கா, அவர் மகன் சிவக்குமார் என வாழ்வில் ஏதோ ஒரு பிணைப்புடன் ஓடினாள்.
(3)