// மறுபிறவி (Reincarnation) பற்றி உங்கள் கருத்து என்ன? //
# இது கடவுள் அல்லது பேய் குறித்த கேள்வி அல்ல.
# ஓவியத்தின் ஆன்மா கவிதை ஆவது, புத்தகத்தின் ஆன்மா திரைப்படம் ஆவது, திரைப்படத்தின் ஆன்மா மனிதர்களை மாற்றுவது என்பது போல உடலில் உள்ள ஆன்மா என்னவாகும்?
# ஏன் குழந்தைகளுக்கு இறந்த முன்னோர்களின் பெயரை வைக்க வேண்டும்?
# ஒரு கைக்கடிக்காரம் உடைந்துவிட்டால் அதன் காலம் முடிந்தது என்று பொருள். அது போல ஒரு மனிதனின் மரணம் நிகழ்ந்தால் அத்துடன் கதை முடிந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?
# இவ்வுலகில் ஆக்கிய எந்த ஒரு பொருளையும் முற்றிலும் அழிக்க முடியாது அதாவது உருமாற்றம் செய்ய இயலுமே தவிர இல்லாமல் செய்துவிட முடியாது.
# காகிதத்தை கிழித்தால் துண்டுகள் ஆகும்.
# மனிதனை எரித்தால் சாம்பல் ஆகும்.
# இலையை மாடு உண்டால் அது சாணத்தில் கலந்து கோழிக்கு தீவனம் ஆகலாம்.
# அது போல ஒரு மனிதன் இறந்து அடக்கமானால் Human Fossil ஆக அல்லது எரித்தால் சாம்பலாக உருமாறும்.
# இறந்து போன உடலில் உயிர் இருக்காது என்றால் அந்த உடலின் ஆன்மா (உயிர்) எதுவாக உருமாறும்?
# ஆன்மா என்பதே இல்லை என்றால் உடலை இயக்குவது என்ன என்ற கேள்வி எழுகிறது.
// மீண்டும் சொல்கிறேன் இது கடவுள் அல்லது பேய் குறித்த கேள்வி அல்ல. //
எனது கேள்வி சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்கட்டும் ஆனால் அறிவியல் ரீதியாக இது குறித்து ஏதேனும் தரவுகள் இருந்தால் பகிரவும்.
இந்தியாவில் Unorganised Business Sector இல் Public Transportation முக்கிய இடம் வகிக்கிறது.
Lorry, Bus தொழில் பற்றி நன்கு அறிந்துள்ளேன்.
பல விதமான தொழிலிலும் ஈடுபடும் Reliance, Tata, Birla போன்ற Giant Corporates கூட தற்போது வரை Public Transportation தொழில் செய்யல. (இந்நிலை எதிர்காலத்தில் மாறினால் அப்போது பார்ப்போம்).
காரணம் இத்தொழில் இந்திய அளவில் அவ்வளவு Unorganised ஆ இருக்கு.
பல Driver's சொல்றத கேட்குறதில்ல.
Driver's உடன் கூட்டு சேர்ந்து Depot Supervisor "Lorry, Bus Repair Services" ன்னு பொய் சொல்லி காசை ஆட்டைய போடுறது எழுதப்படாத சட்டம்.
இவனுங்க ஒவ்வொரு பிரச்சினைக்கும் முழிய டைப் டைப்பா மாத்துவாங்க.
எல்லாரும் ஒன்று தான் என்று குற்றம் சாட்ட முடியாது ஆனால் பலரும் உண்டு.
இன்றைய தேதியில் இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 ஒன்றியப் பகுதிகளும் இருக்கிறது அதில் கிட்டத்தட்ட 748 மாவட்டங்கள் இருக்கிறது அதில் இரண்டு மாவட்டங்கள் குற்றங்களின் தலைநகரம் என வர்ணிக்கப்படுவது உண்டு. அவை முறையே மும்பை மற்றும் பெங்களூரு.
அதற்கு காரணம் வட இந்தியாவின் பொருளாதார தலைநகரம் மும்பை தென் இந்தியாவின் பொருளாதார தலைநகரம் பெங்களூரு. இங்கு நடக்கும் குற்ற செயல்களை யாரும் அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ இயலாது.
ஊருக்குள் ஒருத்தர் தலப்பா கட்டுனா உடனே எல்லாரும் தலப்பா கட்டனும்னு நினைச்சா அந்த ஊரு விளங்க வாய்ப்பில்ல.
ஒரே ஒரு சூரியன் மாதிரி ஒரே ஒரு ராஜா தான்.
அனைத்து தரப்பையும் சமமாக பாவித்து சமூக நீதியை கொண்டு சேர்க்க முயலும் தி.மு.கவுக்கு கூட சில தேர்தலில் மக்கள் ஆட்சியை ஒப்படைக்கல்ல.
சூழல் அப்படியிருக்க ஜெய் பீம் பட சர்ச்சைக்கு பின் சீமான் போன்று ஆட்டம் காட்டும் சில்வண்டு போல மீ்ண்டு(ம்) "ஆண்ட பரம்பரை" என்று மார்தட்டி பேச கிளம்பியுள்ள பா.ம.க என்ன அடிப்படையில் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது?
இது தான் மாற்றம் முன்னேற்றம் அன்புமணியா?
ராமதாஸின் ஆண்ட பரம்பரை பேச்சை அவரது குடும்பத்தினர் பேரன் பேர்த்திகள் ஏற்கிறார்களா?
நீங்கள் ஆண்ட பரம்பரை என்று பேசி ஆட்சிக்கு வர எண்ணினால், நீங்கள் உங்களுக்கு கீழ் அடிபணிந்து நடக்க ஒரு அடிமை பரம்பரையை உயிரூட்டி வளர்த்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று தானே பொருள் வரும்!
# மீண்டும் மீண்டும் சிரிப்பு (வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஜோக்ஸ்)
# டாப் 10 மூவீஸ் (சுருக்கமாக கதையை சொல்லிட்டு மொத்தத்தில் என்று முடிப்பது)
# சப்த ஸ்வரங்கள் (இனிமையான குரல் தேடல்கள்)
# அரட்டை அரங்கம் (இளம் பேச்சாளர்கள்)
# மதியம் கறி சாப்பாடு முடிச்சிட்டு திரும்ப சாயங்காலம் "இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக" திரைப்படத்தை கண்டுகளித்தல்.
# அப்புறம் அடுத்த ஞாயிறுக்கு காத்திருப்பது. 😅
இவை தவிர்த்தும் நிறைய பிரபல ஷோக்கள் உண்டு.
எடுத்துக்காட்டாக காமெடி டைம், இளமை புதுமை, திரை விமர்சனம், லிம்கா நம்ம நேரம், பெப்சி உங்கள் சாய்ஸ், நீங்கள் கேட்ட பாடல், பாட்டுக்கு பாட்டு, சுரேஷ் சக்கரவர்த்தியின் கேம் ஷோ (பெயர் தெரியல 🤔).
1.முகவுரை
2.இறந்தது யார்?
3.சிக்கிய தடயங்கள்
4.மர்மத்தை விலக்கிய மருத்துவ அறிக்கை
5.இறந்தது சுகுமார குருப்பா?
6.குற்றம் நடந்தது என்ன?
7.கோபாலகிருஷ்ண குருப்
8.ஏன் போலி இறப்பு சான்றிதழ்?
9.வளைகுடா வாழ்க்கை
10.வளைகுடா இளவரசர்
11.என்ன சதித்திட்டம்?
12.அன்றிரவு காரில் ஏறிய நபர்
13.கொல்லப்பட்டது யார்?
14.விசாரணை படலம்
15.வழக்கின் முடிவு
16.தேடும் படலம்
17.உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?
18.முடிவுரை
19.குறிப்பு
20.விவரணைகள்
1.முகவுரை
இக்கட்டுரையை சுகுமார குருப் கூட வாசிக்கக்கூடும்? என்னப்பா! தொடக்கமே விவகாரமாக இருக்கிறதே என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. பின்னர்? 37 வருடங்களாக தேடப்படும் குற்றவாளி எங்கு எப்படி உருமாறி இருக்கிறார் என்பதை யாரறிவார்? அத்தோடு உயிரோடு இருக்கிறாரா? என்பதும் உறுதியாக