1.முகவுரை
2.இறந்தது யார்?
3.சிக்கிய தடயங்கள்
4.மர்மத்தை விலக்கிய மருத்துவ அறிக்கை
5.இறந்தது சுகுமார குருப்பா?
6.குற்றம் நடந்தது என்ன?
7.கோபாலகிருஷ்ண குருப்
8.ஏன் போலி இறப்பு சான்றிதழ்?
9.வளைகுடா வாழ்க்கை
10.வளைகுடா இளவரசர்
11.என்ன சதித்திட்டம்?
12.அன்றிரவு காரில் ஏறிய நபர்
13.கொல்லப்பட்டது யார்?
14.விசாரணை படலம்
15.வழக்கின் முடிவு
16.தேடும் படலம்
17.உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?
18.முடிவுரை
19.குறிப்பு
20.விவரணைகள்
1.முகவுரை
இக்கட்டுரையை சுகுமார குருப் கூட வாசிக்கக்கூடும்? என்னப்பா! தொடக்கமே விவகாரமாக இருக்கிறதே என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. பின்னர்? 37 வருடங்களாக தேடப்படும் குற்றவாளி எங்கு எப்படி உருமாறி இருக்கிறார் என்பதை யாரறிவார்? அத்தோடு உயிரோடு இருக்கிறாரா? என்பதும் உறுதியாக
தெரியவில்லை. சரி வாருங்கள்! கதைக்குள் கதை பொருள் காண்போம்.
2.இறந்தது யார்?
ஜனவரி 22, 1984 அன்று பனிமூட்டம் நீடித்த அதிகாலை 4 மணியளவில் மாவேலிக்கரை காவல் நிலைய பணியில் இருந்த தலைமைக் காவலரை பார்க்க ஓடோடி வந்தவர் "அருகிலுள்ள நெல் வயலில் KLQ 7831 என்ற எண் கொண்ட கருப்பு நிற
அம்பாசிடர் கார் விபத்துக்குள்ளாகி ஓட்டுநர் இருக்கையில் கருகிய உடலுடன் ஒருவர் தீயில் எரிந்துவிட்டதாக" கூறி திடுக்கிட்டார் உள்ளூர்வாசி.
FIR பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். அவ்விடத்தில் குழுமியிருந்த கிராமத்தினர் “ஓடும் சாலையில் இருந்து வயல்
ஓரமாக விலகி கார் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என்றும் அந்நேரத்தில் அதே சாலையில் மற்றொரு காரில் சிலர் செல்வதைக் கண்டதாகவும்” பேசிக்கொண்டனர்.
3.சிக்கிய தடயங்கள்
அப்போதைய காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) ஹரிதாஸ் குழுவினர் அதிகாலை 5:30 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்து
சுற்றுப்புறச் சூழலை உன்னிப்பாக ஆய்வு செய்த பிறகு தான் இந்த சம்பவம் சாதாரண கார் விபத்தை விட ஏதோ சதி நடந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டும் சிறிய தடயங்கள் குவியத் தொடங்கின. காரைச் சுற்றி ஒரு தீப்பெட்டி, ஒரு ஜோடி காலணி, முடியுடன் கூடிய ரப்பர் கையுறை, யாரோ தப்பி ஓடியதைக் குறிக்கும்
வகையில் சேற்றில் கால்தடங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
4.மர்மத்தை விலக்கிய மருத்துவ அறிக்கை
சம்பவ இடத்திற்கு தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் உமா தாதன் குழு வரவழைக்கப்பட்டு இறந்தவரின் உடல் களத்திலேயே பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இறந்தவரின் சுவாசக் குழாயில் கரி அல்லது சாம்பலின் தடயங்கள் இல்லாததால் காரின் டிரைவிங் சீட்டில் அமருவதற்கு முன்பே இந்நபர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் செரிமான மண்டலத்தில் மதுவும் ஈதரும் இருந்ததாகவும் தரப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை போலீசாரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.
சுகுமார குருப் வழக்கின் மருத்துவ ஆய்வு குறித்து டாக்டர் உமா தாதன் தனது "Dead Men Tell Tales" புத்தகத்தில் விவரித்துள்ளார். இப்புத்தகத்தில் சுகுமார குருப் வழக்கு, பானூர் சோமன் வழக்கு, போலக்குளம் பீதாம்பரன் வழக்கு (ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தின் கதை) போன்ற கேரளாவை உலுக்கிய
முக்கிய வழக்குகள் குறித்து பதிவு செய்துள்ளார்.
5.இறந்தது சுகுமார குருப்பா?
அப்போது காரில் இறந்தவர் அருகில் உள்ள செரியநாட்டைச் சேர்ந்தவரும் வளைகுடாவில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு வந்தவருமான சுகுமார குருப் என தகவல் பரவியது. அவரது உறவினர்கள் சிலர் அழுதுகொண்டே சம்பவ இடத்திற்கு
வந்து அவரை கடைசியாகப் பார்க்க முயன்றனர். இறந்தவரின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியிருந்தாலும் உயரம் மற்றும் உடல்வாகு அடையாளத்தால் அது சுகுமார குருப் தான் என்றும் முந்தைய நாள் அந்த காரில் அருகில் உள்ள ஆலப்புழாவுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரது மைத்துனன்
பாஸ்கர பிள்ளை சாட்சியமளித்தார். விசாரணைக்குரிய சம்பிரதாயம் முடிந்த பிறகு உடல் தகனம் செய்யக்கூடாது புதைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குடும்பத்தினரிடம் சுகுமார குருப்பின் எச்சங்களை காவல்துறை ஒப்படைத்தனர்.
6.குற்றம் நடந்தது என்ன?
ஆரம்ப கட்ட விசாரணை தொடங்கிய போது காரில்
கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் ஆலப்புழாவைச் சேர்ந்தவரும் என்றும் நான்கு பேர் இணைந்து தீட்டிய இன்சூரன்ஸ் மோசடி சதிக்கு அவர் பலியாகிவிட்டார் என்றும் தெரியவந்தது. அடுத்தடுத்து நடந்தது என்ன என்பதை தெள்ள தெளிவாக அறிய விசாரணைக்களம் விரிவடைவதை காண்போம் வாருங்கள்.
7.கோபாலகிருஷ்ண குருப்
ஆலப்புழா மாவட்டத்தில் செரியநாடு கிராமத்தில் நாயர் குடும்பத்தில் நடுத்தர பின்னணியில் பிறந்த கோபாலகிருஷ்ண குருப் சிறுவயதிலிருந்தே சாகச வாழ்க்கையை வாழ விரும்பினார். PUC படிப்பை ஒரு வழியாக முடித்த பிறகு இந்திய விமானப்படையில் விமானப்படை வீரராக சேர்ந்தார்.
அங்கு தீடீரென உடல்நல பாதிப்பு எனக் கூறி நீண்ட கால விடுப்புக்கு விண்ணப்பித்துவிட்டு வீடு திரும்பினார் கோபாலகிருஷ்ண குருப்.
விடுப்பில் வந்தவர் மீண்டும் விமானப்படை வேலைக்கு திரும்ப மனமில்லாமல் கிராமத்திலுள்ள காவல்துறை சிறப்பு பிரிவின் தலைமைக் காவலருக்கு லஞ்சம் கொடுத்து
கோபாலகிருஷ்ண குருப் இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ் அறிக்கையை இந்திய விமானப்படை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
8.ஏன் போலி இறப்பு சான்றிதழ்?
மெட்ராஸ் விமானப்படை வேலையில் இருந்த போது விமானப்படை பொருள்களுக்கு கூடுதல் விலை தருவதாக வெளி நண்பர்கள் ஆசைக்காட்ட அதனால் விமானப்படை
கிடங்கில் வேலை செய்யும் கணக்காளரின் உதவியுடன் விமானப்படை கிடங்கில் உள்ள First Quality மதுபானம், செருப்பு, காலணி போன்ற பொருள்களை அடிக்கடி வெளி நண்பர்களுக்கு விற்று வந்துள்ளார் கோபாலகிருஷ்ண குருப். இதற்கிடையில், வழக்கமான சம்பிரதாயமாக கோபாலகிருஷ்ண குருப் உட்பட பலரை பம்பாய்க்கு இடம்
மாற்றினார் மெட்ராஸ் விமானப்படை உயரதிகாரி.
திடீரென பம்பாய்க்கு இடம் மாறிய காரணத்தால் மெட்ராஸ் கிடங்கு சம்பாத்தியம் பறிபோனது கவலையை தந்திருந்தாலும் பம்பாய் விமானப்படையில் ஆயுதக்கிடங்கு கணக்காளராக பணி நியமனம் செய்யப்பட்டவுடன் புதிய வேலையை விரும்பி ஏற்கலானார். மெட்ராஸ் கிடங்கில்
சின்ன சின்ன பொருள்களை விற்று காசு பார்த்தவர் பம்பாய் ஆயுதக்கிடங்கு வேலையை நினைத்து கோணல் எண்ணங்களை வளர்ந்து கொண்டார்.
பம்பாய் ஆயுதக்கிடங்கின் கணக்காளர் என்ற பதவியே கவசமானதாலும் 1971 இந்தியா (வங்கதேசம்) - பாகிஸ்தான் போர் நடைபெற்ற நேரத்தில் இந்தியா பல்வேறு ஆயுதங்களை
குவித்திருந்ததாலும் பம்பாய் துறைமுகத்தில் நண்பர்கள் உதவியுடன் விமானப்படை கிடங்கு கணக்கில் எழுதப்படாத ஆயுதங்களை ரகசியமான முறையில் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்தார்.
இதற்கிடையில், ஒரு கட்டத்தில் போர் முடிந்த பிறகு ஆயுதங்களின் துல்லியமான கணக்கு
விபரங்களை சில நாட்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார் பம்பாய் விமானப்படை உயரதிகாரி. இதன் பிறகு இதே வேலையில் தொடர்ந்தால் சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்ற ஐயப்பாடு காரணமாக விமானப்படை வேலையில் இருந்து விலகவும் விசாரணையில் இருந்து தப்பிக்கவும் போலி இறப்பு சான்றிதழை கொடுத்து கதையை
முடித்து கொண்டார் கோபாலகிருஷ்ண குருப்.
9.வளைகுடா வாழ்க்கை
விமானப்படை வேலையை உதறி தள்ளிய பிறகு வளைகுடாவிற்கு குடிபெயர்வதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது கோபாலகிருஷ்ண குருப் பெயரிலிருந்து விடைபெற்று சுகுமார பிள்ளை என்ற புதிய பெயரை வைத்து கொண்டார்.
கேரளாவில் உள்ள நாயர் சமூகத்தின் துணை சாதிகள் பிள்ளை மற்றும் குருப் என்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபி மரைன் ஆப்பரேட்டிங் நிறுவனத்தில் உயரதிகாரி வேலையில் சேர்ந்தது, நிலையான வருமானத்தை ஈட்டியது, நெருங்கிய நண்பர்களின் வட்டம் பெரிதானது, சுகு நம்பிக்கைக்குரிய நண்பரானது, மனைவி தனியார்
மருத்துவமனையில் செவிலியராக சேர்ந்தது என்று அபுதாபியில் சுகுமார குருப் வாழ்க்கை அமைதியாக கழிந்தது. தன் பெற்றோர் வீட்டில் வெகுகாலம் வேலை செய்தவரின் மகள் சரசம்மாவை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ண குருப்.
10.வளைகுடா இளவரசர்
நண்பர்கள் மூலம் வளைகுடா மன்னரின் இளம் வாரிசான இளவரசரை நெருங்கி அவரது முழு நம்பிக்கையை பெற்றார். மன்னர் இருக்கும் வரை இளவரசர் வசதி வாய்ப்புகளை அனுபவிக்கலாம் ஆனால் ஆட்சி, அதிகாரம், தொழில் என்று எதுவும் மன்னரின் பார்வை இல்லாமல் செய்ய இயலாது என்பது நடைமுறை.
அதனால் மன்னருக்கு தெரியாமல் கடத்தல் தொழில் செய்ய விரும்பிய இளவரசர் எண்ணத்திற்கு வண்ணம் கொடுத்தார் சுகுமார குருப். இளவரசரின் கடைக்கண் பார்வையால் கடத்தல் (எண்ணெய், ஆயுதம், தங்கம்) தொழிலில் கொடிகட்டி பறந்தாலும் இளவரசர் தனக்கு வரும் பெரும் லாபத்தில் சொற்ப அளவிலே சுகுமார குருப்புக்கு
கொடுத்து வந்தார்.
ஒரு கட்டத்தில் அபாயகரமான வேலையை செய்தாலும் அதற்குரிய லாபம் குறைந்த அளவிலே கிடைத்து வந்ததால் இளவரசருக்கு தெரியாமல் ஒரு பெரிய கடத்தலை செய்து கோடிக்கணக்கான பணத்தை ஈட்ட திட்டமிட்டார் சுகுமார குருப். அதன்படி வெற்றிகரமாக கடத்தலை செய்து முடித்து கோடிகளில் பணத்தை
ஈட்டிய பிறகு வளைகுடாவில் தன் பெயரில் இன்சூரன்ஸ் காப்பீட்டை பதிவு செய்து கொண்டார்.
கடத்தல் தொழிலில் சுகுமார குருப்பின் துரோகத்தை அறிந்த இளவரசர் அவரை கொல்ல திட்டமிட்டார். இளவரசர் சுதாரிப்பதற்குள் நண்பர் சுகுவுடன் சுகுமார் குருப் நிறுவனத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரு
பெரிய சதித் திட்டத்துடன் இந்தியாவுக்கு அவசரமாக திரும்பிவிட்டார். அதென்ன திட்டம் என்பதை அறிவோம் வாருங்கள்.
11.என்ன சதித்திட்டம்?
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சுகுமார குருப்பும் சுகுவும் 8,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட செகண்ட் ஹேண்ட் அம்பாசிடர் காரில் வீடு
திரும்பியவுடன் சதித்திட்டம் குறித்து கலந்தாலோசித்தனர். ஒரு விபத்தில் சுகுமார குருப் இறந்துவிட்டதாக போலீசாரையும் உள்ளூர் மக்களையும் நம்பவைத்து இன்சூரன்ஸ் பணம் எட்டு லட்சம் ரூபாய்யை கூட்டாளிகள் பிரித்து கொள்வதே அந்த சதித் திட்டமாகும். இந்த சதித் திட்டத்திற்கு பண தேவையில் இருந்த
நண்பர் சுகு, மைத்துனன் பாஸ்கர பிள்ளை மற்றும் டிரைவர் பொன்னப்பன் ஆகியோரை பயன்படுத்தி கொண்டார் சுகுமார குருப்.
சுகுமார குருப் உயரம் மற்றும் உடல்வாகு கொண்ட ஒரு இறந்த உடலை பெறுவது என்று திட்டம் தீட்டி “ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த பாஸ்கர பிள்ளையின் உறவினர் மூலம் உரிமை
கோரப்படாத ஒரு சடலத்தைப் பெறுவது இல்லையேல் மயானத்தில் இருந்து உடலை எடுப்பது” என்பதே ஆரம்பகட்ட யோசனையாக இருந்துள்ளது. சில நாட்கள் முயன்றும் இறந்த உடலை தேடும் படலம் கைகொடுக்காத காரணத்தால் நம் சதித்திட்டம் சாத்தியமில்லை என்று பாஸ்கர பிள்ளை வருத்தமாக சொன்ன போது மிக சாதாரணமாக கொலைத்
திட்டத்தை பரிந்துரைத்தார் சுகுமார குருப். அப்போதிருந்து விஷயங்கள் விரைவாக நகர்ந்தன.
12.அன்றிரவு காரில் ஏறிய நபர்
ஜனவரி 21-22, 1984 இடைப்பட்ட இரவில் சுகுமார குருப், பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன், சுகு ஆகியோர் கருவாட்டாவில் உள்ள கல்பகவாடி ஹோட்டலில் இரவு உணவை முடித்துக்கொண்டு சுகுமார
குருப் புதிதாக வாங்கிய KLQ 7831 காரிலும் மற்றவர்கள் KLY 5959 காரிலும் பயணித்தனர்.
சரியான நபரை தேடி நால்வரும் இரண்டு கார்களில் ஒன்றன் பின் ஒன்றாக இரவு பயணிக்கையில் ஹரிபாட் கிராமத்தில் உள்ள ஹரி திரையரங்கம் அருகே சென்றபோது சாலையோரம் நின்றிருந்த நபர் வண்டிக்காக (Lift) கையை நீட்டிக்
கொண்டிருப்பதை கண்டு வண்டியை நிறுத்தினர். “நீங்கள் ஆலப்புழா நோக்கி செல்கிறீர்களா?" என்று அந்நபர் கேட்க “ஆமாங்க! உள்ள வாங்க" என்றார் பொன்னப்பன். பாஸ்கர பிள்ளையையும் சுகுவையும் பார்த்து வணக்கம் வைத்த பிறகு திரையரங்கில் டிக்கெட் வசூலை மதிப்பீடு செய்துவிட்டு வீடு திரும்பி
கொண்டிருப்பதாக கூறிவிட்டு காரில் ஏறினார் அந்த நபர்.
கார் ஆலப்புழாவை நோக்கிச் சென்றபோது ஈதர் தடவிய ஒரு கிளாஸ் மதுவை குடிக்கச்சொல்லி அந்நபரிடம் நீட்டினார் பாஸ்கர பிள்ளை. அந்நபர் மறுத்துவிடவே இரண்டாவது முறையாக கடுமையான தொனியில் குடிக்க வற்புறுத்தினார் பாஸ்கர பிள்ளை. அந்நபர்
மறுபடி மறுபடி மறுப்பு சொன்னதும் பொன்னப்பன் வண்டியை நிறுத்த பின் இருக்கைக்கு மாறிய பாஸ்கர பிள்ளை “அட! சும்மா குடி” என்று குரலை உயர்த்த இம்முறை பயத்தால் மதுவை குடித்த அந்நபர் சில நொடிகளில் மயங்கினார்.
13.கொல்லப்பட்டது யார்?
பாஸ்கர பிள்ளையும் சுகுவும் சேர்ந்து ஒரு துண்டைப்
பயன்படுத்தி அந்நபரின் கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் நால்வரும் சுகுமார குருப் மனைவிக்கு சொந்த இடமான ஸ்மிதா பவனுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அந்நபரின் முகத்தையும் தலையையும் வேறுபடுத்த முடியாதபடி எரித்தனர். இறந்தவருடைய உடை, மோதிரம், கைக்கடிகாரம் ஆகியவற்றைக் கழற்றிவிட்டு சுகுமார
குருப்பின் உடை, மோதிரம், கைக்கடிகாரம் ஆகியவற்றை அந்நபருக்கு அணிவித்தனர். அவரது உடலை KLY 5959 காருக்குள் வைத்து இரண்டு கார்களில் அந்தக் கும்பல் தண்ணிமுக்கத்தில் உள்ள நெல் வயலை நோக்கி பயணித்தது. அங்கு கொலை செய்யப்பட்ட உடலை எடுத்து KLQ 7831 காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர வைத்து
நெல் வயலை நோக்கி காரை தள்ளிவிட்டு அதன் மீது பெட்ரோலை ஊற்றி தீயிட்டனர்.
விவகாரம் பரபரப்பானவுடன் இந்த கார் விபத்தில் சந்தேகம் கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) ஹரிதாஸ் இறந்தவரின் அடையாளத்தை கண்டறிய ஆலப்புழா பகுதியில் பதிவான காணாமல் போன நபர்களின் வழக்கு குறித்து தீவிர விசாரணை
நடத்தினார். அந்நேரத்தில் ஆலப்புழாவில் காணாமல் போனவரின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் சுகுமார குருப் உடனான உடல் ஒற்றுமையின் அடிப்படையில் கொல்லப்பட்ட நபர் யார் என்பதை காவல்துறையால் உறுதிப்படுத்த முடிந்தது. கொல்லப்பட்ட பிறகு காரில் கொழுந்துவிட்டு எரிந்த அந்நபரின் பெயர் சாக்கோ
என்றும் சுகுமார குருப், பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன் மற்றும் சுகுவின் இன்சூரன்ஸ் மோசடி சதித்திட்டத்திற்கு ஆலப்புழாவை சேர்ந்த திரைப்பட பிரதிநிதி சாக்கோ பலியானார் என்றும் தெரியவந்தது.
14.விசாரணை படலம்
சுகுமார குருப் இறந்ததாகக் கூறப்படும் நேரத்தில் “குடும்பத்தின் மிக முக்கியமான நபர்
இறந்துவிட்டார் என்ற உண்மையான துக்க மனநிலை அவரது வீட்டில் யாருக்கும் இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் விபத்து நடந்த அன்று மதிய உணவிற்கு கோழிக் கறியைக் கூட தயாரித்து வைத்திருந்தார்கள். அக்காலத்தில் குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் நிச்சயமாக கோழிக்கறி சமைக்கப்படுவதில்லை” என்று
காவலர் ஹரிதாஸ் நினைவு கூர்ந்தார்.
மேலும் அன்று பாஸ்கர பிள்ளையின் நெற்றியிலும் கையிலும் ஏற்பட்ட தீக்காயங்கள் குறித்து போலீசார் விசாரித்த போது "முதலில் குளிர்ச்சியைத் தடுக்க தீ மூட்டும்போது தீக்காயம் அடைந்ததாக கூறிவிட்டு பின்னர் சில நிமிடங்களில் பாத்திரத்தில் வெந்நீரை எடுத்துச்
செல்லும்போது தீக்காயம் அடைந்ததாக" கூறினார் பாஸ்கர பிள்ளை. இப்படி விசாரணையில் சாட்சியங்கள் முரண்படத் தொடங்கிய போது பாஸ்கர பிள்ளையின் சந்தேகத்திற்கிடமான தீக்காயங்கள் அவர் காரைத் தீ வைத்த போது தற்செயலாக ஏற்பட்டு இருக்கக்கூடும் என்ற காவல்துறையின் சந்தேகத்திற்கு வலு சேர்த்தது.
சாவக்காட்டில் கடலோர பகுதியில் உள்ள தன் வீட்டிலிருந்து கிளம்பி கொச்சிக்கு பஸ் பிடித்து அங்கிருந்து வளைகுடாவுக்குத் தப்பிக்கத் திட்டமிட்ட சுகுவை உரிய நேரத்தில் கைது செய்தார் அப்போதைய மாவேலிக்கரை ஆய்வாளர் தேவாசியா. சுகுவை கைது செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட மர்ம மனிதன் குறித்து
விசாரித்தனர். விசாரணையில் சுகுவின் சாட்சியம் வழக்கின் அடித்தளமாக மாறியது.
கொலை செய்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டி பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன், சுகு ஆகியோரை நம்ப வைக்கவும் உண்மை காரணமான வளைகுடாவில் வாழும் இளவரசர் தான் இறந்துவிட்டதாக நம்ப வைக்கவும் இக்கொலை திட்டத்த
தீட்டியதாகவும் மேலும் சுகுமார குருப் உடல் என்று கருதி அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த நேரத்தில் அருகிலுள்ள ஆலப்புழா லாட்ஜில் சுகுமார் குருப் பதுங்கி இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
15.வழக்கின் முடிவு
சுகுமார குருப்பைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கொலை, சதி, சாட்சியத்தை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முதலாவது மற்றும் இரண்டாவது குற்றவாளியாக பாஸ்கர பிள்ளை மற்றும் பொன்னப்பன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளிகளில்
ஒருவராக குற்றம் சாட்டப்பட்ட சுகு பின்னர் அரசு தரப்பில் சாட்சி சொல்லும் குற்றவாளியாக மாற்றப்பட்டார். செஷன்ஸ் நீதிமன்றத்தால் பாஸ்கர பிள்ளை மற்றும் பொன்னப்பன் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் மூன்றாவது மற்றும் நான்காவது குற்றவாளிகளாக
நிறுத்தப்பட்ட சுகுமார குருப் மற்றும் பாஸ்கர பிள்ளையின் மனைவிகள் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சுகுமார குருப் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மாவேலிக்கரை நீதித்துறை நடுவர் 2017 அன்று ஜனவரி 22,
1984 இல் தலைமறைவான சுகுமார குருப்பைக் கைது செய்யுமாறு சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவு பிறப்பித்தார்.
16.தேடும் படலம்
குற்றவாளிகளுக்கு எதிராக வெவ்வேறு காலகட்டத்தில் இந்திய அளவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் நால்வருக்கு முக்கிய இடமுண்டு. அவர்கள் ஒத்தக்கண் சிவராசன், வீரப்பன்,
தாவூத் இப்ராஹிம் மற்றும் சுகுமார குருப். இதில் ஒத்தக்கண் சிவராசன், வீரப்பன் இறந்துவிட்டார்கள். பிரிவினைவாத குழுக்களின் பாதுகாப்பில் தாவூத் இப்ராஹிம் வாழ்வதாக கணிக்கப்படுகிறது.
ஆனால் முகம் எப்படி இருக்கும்? எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்?
முதலில் இருக்கிறாரா? என்பதை அறிய முடியாமல் 37 வருடங்களாக உரிய தகவல்கள் இல்லாமல் இருக்கும் ஒரு குற்றவாளி சுகுமார குருப் தான்.
அந்த காலகட்டத்தில் சுகுமார குருப் தாடி வைத்த புகைப்படம் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டதால் அவரைக் கண்டதாக கூறி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பல்வேறு
அழைப்புகளும் கடிதங்களும் வந்தன. அதில் நம்பகமான தகவல்களை சேகரித்து கேரள காவல்துறை சுகுமார குருப்பை தேடி கேரள மாநிலத்தைத் தாண்டி மத்திய பிரதேசம் (குவாலியர், போபால் மற்றும் இட்டார்சி), மகாராஷ்டிரா (பம்பாய்), ஜார்கண்ட் (ராஞ்சி), அந்தமான் & நிக்கோபார் தீவு, அமெரிக்கா (லாஸ் வேகாஸ்),
பூட்டான், வளைகுடா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுள்ளனர். கேரள காவல்துறையில் அதிகமான பயணப்படி (Travel Allowance) வழங்கப்பட்ட வழக்கு சுகுமார குருப் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை சொந்த ஊரில் கட்டி முடிக்கப்படாத வீட்டில் பிடிபட்ட சுகுமார குருப்பை காவல்துறை அடையாளம்
காண காலதாமதம் ஆனதால் தப்பித்தார் பின்னர் நடந்த விசாரணையில் அவர் சுகுமார குருப் தான் என்று தெரியவந்தது. ஒரு முறை லாட்ஜில் சுகுமார குருப் பிடிபட வேண்டியது ஆனால் காவல்துறையின் நேர தாமதத்தால் தப்பித்தார்.
17.உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?
மன்னராட்சி ராணுவங்களுக்கும் பிரிவினைவாத குழுக்களுக்கும் கருப்பு சந்தையில் ஆயுதங்கள் விற்பன்னராக அலெக்சாண்டர் என்ற மாற்று பெயரில் சுகுமார குருப் கோலோச்சுவதாக யூகிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்கள் கொடுக்கல்
வாங்கல் வேலையை செய்தது K.P என்ற செல்வராசா பத்மநாதன் ஆவார். அது போல உலகம் முழுவதும் பலதரப்பட்ட நாடுகளுக்கு இடையே ஆயுதங்கள் கொடுக்கல் வாங்கல் வேலையை செய்பவர் சுகுமார குருப் என்ற அலெக்சாண்டர்.
இதற்கிடையில், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சுகுமார குருப்புக்கு சிகிச்சை அளித்ததாகவும்
கடுமையான நோயால் அவதிப்பட்டதால் சுகுமார குருப் நீண்ட காலம் வாழ வாய்ப்பில்லை என்றும் காவல்துறை அதிகாரிகளிடம் மலையாளி செவிலியர் சாட்சி கூறினார். இன்று உயிருடன் இருந்தால் சுகுமார குருப்புக்கு 75 வயது இருக்கும்.
காவல்துறை பாணியின் உரிய விசாரணைக்கு பிறகு சுகுமார குருப் தலைமையில்
பாஸ்கர பிள்ளை, பொன்னப்பன், சுகு அரங்கேற்றிய சதித்திட்டம் ஊடக வெளிச்சம் பெற்றது. சுகுமார குருப் வழக்கு குறித்து அக்காலத்தில் முதலில் கிராம மக்கள் பேச பிறகு ஆலப்புழா மாவட்ட மக்கள் பேச பிறகு கேரள மாநில மக்கள் பேச பிறகு இந்திய நாட்டு மக்கள் பேச பிறகு இன்டர்போல் மூலம் உலகமே பேசியது.
18.முடிவுரை
கோபாலகிருஷ்ண குருப், சுகுமார குருப், அலெக்சாண்டர் என 3 பெயரை கொண்ட ஒரே மனிதர். இந்தியாவில் விமானப்படை ஆயுத கடத்தல் சர்ச்சையிலிருந்து தப்பிக்க கோபாலகிருஷ்ண குருப் சுகுமார குருப் ஆக வளைகுடாவில் இளவரசரின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சுகுமார குருப் அலெக்சாண்டர் ஆனார்.
சர்ச்சைக்குரிய சுகுமார குருப் வழக்கில் கேரளா காவல்துறையின் விசாரணை பாராட்டத்தக்கது. சாதாரண கார் விபத்தை தீர விசாரித்து சதி வலைப்பின்னலை அவிழ்த்து உண்மையை நிலைநாட்டிய காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) ஹரிதாஸ் என்றென்றும் போற்றத்தக்கவர்.
19. குறிப்பு
*ஜெர்மன் இன்சூரன்ஸ் மோசடி வழக்கை முன்மாதிரியாக வைத்து சுகுமார குருப் இந்த சதித்திட்டத்தை தீட்டி உள்ளார்.
*விமானப்படையில் ஆயுத கடத்தல் செய்ய சுகுமார் குருப்புக்கு உதவிய ஒரு வெளிநாட்டு நண்பரே வளைகுடாவில் இளவரசரையும் நெருங்க உதவி செய்துள்ளார்.
*சுகுமார குருப் வழக்கு ஆய்வுக்குரியது என்றாலும் பொதுவெளியில் கிடைக்கப்பெறும் தகவல்களை வைத்து இக்கட்டுரையை எழுதி இருந்தாலும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்பதை பதிவு செய்கிறேன்.
*சாக்கோ குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
20. விவரணைகள்
# Malayalam Movies - NH47 (1984), Pinneyum (2016), Kurup (2021)
படம் பார்ப்பதும் அரசியல் அறிவதும் நம் நாடி நரம்பில் முறுக்கேறிய விஷயம்.
இத்துறையில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு கள யதார்த்தம் இருப்பது சகஜமானது.
இன்று அந்தந்த காலகட்டத்தில் வெற்றி பெற்ற பழைய சினிமா படங்களை அரசியல் நிகழ்வுகளை சிலர் Cringe என்று சொல்வதை ஜீரணிப்பது கடினமாக உள்ளது.
நாம் பார்த்து கேட்டு அறிந்து வளர்ந்த ஒன்றை நேற்று வந்த யாரோ சொன்னான் எவனோ சொன்னான் என்று போகிற போக்கில் Cringe என்று கேலி பேசி நகர்வது நாகரீகமான செயலாகுமா?
அவரவர் ரசனை அவரவருக்கு உரியது. அட இவனுங்க ரசனை கெட்டவனுங்க என்று எதை வைத்தும் எடை போட முடியாது.
உங்கப்பா 1960 காலகட்ட பாடல்களை விரும்பி கேட்பதால் 2020 பாடல்களை கேட்க விரும்பாததால் அவர் ரசனையே செத்துவிட்டது என்று விமர்சிக்க முடியுமா? அது தகுமா?
Cringe என்று பழைய நிலையை கேலி செய்தால் அதை ரசித்த நம்மையும் சேர்த்து கேலி செய்வதாகும்.
நகைச்சுவை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமானது என்பதற்கு சார்லி சாப்ளின் முதல் வடிவேலு வரை யாரும் விதிவிலக்கல்ல. இதில் நாகேஷ் பற்றி ஒரு சில குறிப்புகளை பகிர்கிறேன். பிராமண குடும்பத்தில் பிறந்த நாகேஷ் கிறிஸ்தவ பெண் ரெஜீனாவை திருமணம் புரிந்தார்.
இத்தம்பதியினருக்கு ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு, ஆனந்த் பாபு என்று 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. இவர்களின் குடும்ப வாழ்க்கை நெடுநாள் இன்பமாக இருக்கவில்லை ஏனெனில் நாகேஷ் மைத்துனர் செல்வராஜ் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற விசாரணைக்காக ரெஜீனா மற்றும் குடும்பத்தினரை காவல்துறை கைது செய்தனர்.
உரிய விசாரணைக்கு பிறகு ரெஜீனா மற்றும் குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டனர். இம்மரண வழக்கு விசாரணை தொடர்பாக நாகேஷ் மற்றும் மனோரமா உறவில் விரிசல் ஏற்பட பிறகு 1968க்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. 1970 நவக்கிரகம் படம் மூலம் நாகேஷையும் மனோரமாவையும் நடிக்க வைக்க முயன்றார் K.B
காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக கன்னட திரையுலகம் நிற்கவில்லை ஆக கன்னட திரைத்துறையை சேர்ந்த புனித் ராஜ்குமார் மரணத்திற்கு தமிழர்கள் ஏன் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று சில நாம் தமிழர் தம்பிகளின் ட்விட்டை காண நேரிட்டது.
ஏன்டா! நீங்கெல்லாம் மனிதர்களா?
அவனவன் ஊருக்கு தானே அவனவன் நிப்பான்?
இப்போ தமிழ் நாடு தண்ணீருக்கு அண்டை மாநிலங்களை தான் பெருவாரியாக நம்பி இருக்கிறது அதனால் நாம் ஏதோ கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்ட நேர்மையாளர்கள் போல தண்ணீர் அணுகுமுறையில் பிற மாநிலங்களை நடக்க சொல்லி கேட்கிறோம்.
ஒரு வேளை பிற மாநிலங்கள் தமிழ் நாட்டு தண்ணீரை நம்பி இருந்தால் இங்கு தமிழ் நாட்டிலும பல்வேறு பிரிதிவிராஜ் சுகுமாறன் இருந்திருப்பார்களே?
ஆக நமக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாமா?
அதெல்லாம் இப்படி தான் பலரும் இருப்பார்கள் அதை லாபி செய்து சரி செய்ய வேண்டியது அரசு வேலை.
ஒரு கத்தியில் இருக்கூர்மை இருக்க முடியாது என்ற அடிப்படையில் அங்கே பிரச்சனை கிளம்பி அந்த ஒரு கத்தி துண்டாகி விட்டால் அது இரண்டு கத்தியாக மாறக்கூடும். இப்படி வாழ்வில் சில விஷயங்கள் Just Like That என்று அரங்கேறி இருக்கும் ஏனெனில் மனிதர்களுக்கு இடையில் மனக்கசப்பு எழுவது சகஜமானது.
இங்கு சில பிரபலங்களுக்கு இடையில் நிலவிய மனக்கசப்பு குறித்து காண இருக்கிறோம். இந்த செய்தி எல்லாம் உண்மையா? கிசு கிசுவா? என்று கேட்டால் நிச்சயம் கிசு கிசு அல்ல ஆனால் உண்மையா? என்றால் நிச்சயம் அது சம்பந்தப்பட்ட தரப்புக்கு மட்டுமே தெரியும். மற்றவை யூகமாக அமையும்.