இன்றைய தேதியில் இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 ஒன்றியப் பகுதிகளும் இருக்கிறது அதில் கிட்டத்தட்ட 748 மாவட்டங்கள் இருக்கிறது அதில் இரண்டு மாவட்டங்கள் குற்றங்களின் தலைநகரம் என வர்ணிக்கப்படுவது உண்டு. அவை முறையே மும்பை மற்றும் பெங்களூரு.
அதற்கு காரணம் வட இந்தியாவின் பொருளாதார தலைநகரம் மும்பை தென் இந்தியாவின் பொருளாதார தலைநகரம் பெங்களூரு. இங்கு நடக்கும் குற்ற செயல்களை யாரும் அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ இயலாது.
மும்பை நிழல் உலகம் குறித்த கட்டுரைகள் ஆய்வுக்குரியது என்றாலும் பொதுவெளியில் கிடைக்கப்பெறும் தகவல்களை வைத்து இக்கட்டுரையை பதிவு செய்கிறேன். அவ்வகையில் 1960கள் முதல் 1980கள் வரை மும்பை நிழல் உலகை ஆண்டது ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் மற்றும் கரீம் லாலா.
1980களுக்கு பிறகு இன்று வரை மும்பை நிழல் உலகை ஆள்வது தாவூத் இப்ராஹிம். இரவுக்கு ஆயிரம் கண்கள் உடைய மும்பை மாநகரில் தலைவிரித்தாடும் நிழல் உலகம் பற்றி சிறிதளவு காண்போம், வாருங்கள்!
2.ஹாஜி மஸ்தான்
1926இல் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் பனைக்குளம் கிராமத்தில் இந்தியாவின் முதல் நிழல் உலக தாதா என்று அழைக்கப்படும் மஸ்தான் மிர்சா என்ற ஹாஜி மஸ்தான் பிறந்தார். ஹாஜி என்றால் மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட முஸ்லிம்களை குறிக்கும்.
தந்தையுடன் 8 வயதில் மும்பைக்கு குடிபெயர்ந்து வறுமையில் வாடிய ஹாஜி மஸ்தான் இளமையிலே கோடீஸ்வரனாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
1944இல் மும்பை துறைமுகத்திற்கு வரும் வெளிநாட்டு கப்பல்களில் இருந்து கொள்கலன்களை இறக்கும் கூலி வேலைக்கு சேர்ந்தார் ஹாஜி மஸ்தான்.
துறைமுகத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக இருந்த போது கடத்தல் நுணுக்கங்களைக் கற்று கொண்டார். அந்நேரத்தில் அரேபிய வம்சாவளியை சேர்ந்த ஷேக் முகமது அல் காலிப் என்பவர் கடத்தல் பொருட்கள் குறித்த தகவலை பகிரவும், கடத்தல் பொருட்களை கைமாற்றிவிட உதவவும் ஹாஜி மஸ்தானை கேட்டு கொண்டார்.
1956இல் குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுகுர் நாராயண் பாக்கியாவுடன் நட்பு கிட்டிய பிறகு ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை மாறியது. ஆரம்ப காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன், ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு வரும் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் மின்னணு கடத்தல் பொருட்களை
மஸ்தானும் பாக்கியாவும் கையாண்டனர். 1975இல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது சிறையில் அடைக்கப்பட்டு 18 மாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த ஹாஜி மஸ்தான் வியக்கத்தக்க வகையில் நிழல் உலக நாயகனாக உருவெடுத்தார். தூத்துக்குடியை சேர்ந்த பசுபதி பாண்டியன் ஹாஜி மஸ்தானுடன் நெருங்கி
பழகியதை ஒட்டி அவசர நிலை காலத்தில் ஹாஜி மஸ்தானின் கூட்டாளிகள் பலருக்கும் தமிழ்நாட்டில் அடைக்கலம் கொடுத்தார். 2012இல் பண்ணையார் கும்பலால் பழிக்கு பழியாக பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை சோபியா கல்லூரிக்கு எதிரே உள்ள ஆடம்பர பகுதியான பெடார் சாலையில் பைத்துல் சுரூர் (அரபியில் மகிழ்ச்சியின் வீடு என்று பொருள்) என்று அழைக்கப்படும் மாளிகையில் வசித்து வந்தார் ஹாஜி மஸ்தான். வெள்ளை நிற டிசைனர் ஆடையை உடுத்தி இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டை புகைத்தப்படி வெள்ளை நிற
மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பயணம் செய்வது ஹாஜி மஸ்தானின் ஸ்டைல் முத்திரை ஆகும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை, ஊடகத்துறை மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நெருங்கி பழகினர்.
பாலிவுட் நடிகை மதுபாலாவின் அழகை கண்டு வியந்து மதுபாலா தனக்கு மனைவியாக வேண்டும் என்று விரும்பி பல
முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியடைந்தார் ஹாஜி மஸ்தான். 1969இல் மதுபாலா இறந்து விட பின்னர் மதுபாலாவின் முகச்சாயலை கொண்ட நடிகை ஷாஜஹான் பேகத்தை திருமணம் புரிந்து கொண்டார்.
1983இல் அகில இந்திய தலித் முஸ்லிம் பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு வாழ்க்கையின்
பிற்பகுதியில் நிழல் உலக நடவடிக்கையில் நேரடியாக பங்கெடுக்காமல் தனது கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வரதராஜன் முதலியார் மற்றும் கரீம் லாலா உடன் கூட்டு வைத்த ஹாஜி மஸ்தான் 25-06-1994 அன்று மாரடைப்பால் காலமானார்.
3.வரதராஜன் முதலியார்
தமிழ்நாடு மாநிலத்தில் வட ஆற்காடு மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஒரு குடும்பம் கப்பல் வணிகத்தில் பணிபுரிய வட ஆற்காட்டிலிருந்து தூத்துக்குடிக்கு குடிபெயர்ந்தது. இக்குடும்பத்தில் 1926இல் தூத்துக்குடியில் வர்தாபாய் என்ற வரதராஜன் முனிசாமி முதலியார் பிறந்தார்.
வர்தாபாய் குடும்பம் 1945இல் மும்பைக்கு குடிபெயர்ந்தது. சத்ரபதி சிவாஜி ரயில்வே நிலையத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக பணிபுரிந்த போது ரயில்வே சரக்குகளை திருடுவதன் மூலம் தனது குற்ற வாழ்க்கையைத் தொடங்கினார் வர்தாபாய்.
சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக வாழ்வை தொடங்கி சட்டவிரோத முறையில் மதுபானங்களை விற்கத் தொடங்கிய போது தான் வர்தாபாயின் வளர்ச்சி அபாரமானது. கள்ளக்கடத்தல், ஒப்பந்த கொலை, மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை அடித்தல், நில ஆக்கிரமிப்பு, சட்டவிரோத சூதாட்டம், சட்டவிரோத மதுபான கூடம்,
சட்டவிரோத மதுபானம் தயாரித்தல் மற்றும் மதுபானம் விநியோகம் உள்ளிட்டவற்றை வர்தாபாய் கவனித்து வந்தார்.
மும்பை வாழ் தமிழர்களுக்கு உதவி புரிய தமிழ் பேரவை என்னும் சமூக நல அமைப்பை நிறுவி மருத்துவ சேவை, இரத்த தான முகாம், ஆம்புலன்ஸ் சேவை, கல்வி சேவை, அன்னதான சேவை போன்ற சேவைகளை இலவசமாக
வழங்குதல், படித்து வேலையற்ற தோழர்களுக்கு பெருநிறுவனங்களில் வேலைக்கு பரிந்துரைத்தல் போன்ற நற்காரியங்களால் தமிழர்களின் அபரிதமான ஆதரவு கிட்டவும் மும்பை வாழ் தமிழ் சமூகத்தினுள் மிகுந்த மரியாதைக்குரியவராக உருவெடுத்தார் வர்தாபாய். 1983இல் வர்தாபாயின் மகளுக்கு சென்னையில் திருமணம் நடந்த
போது எம்.ஜி.ஆரும் அவரது மனைவி ஜானகியும் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டனர். அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எம்.ஜி.ஆருடன் திருமண ஜோடி நிற்கும் புகைப்படத்தை கட்டண விளம்பரமாக வெளியிட்டார் வர்தாபாய்.
குற்றவியல் நடவடிக்கைகளை பொறுத்தவரையில் வடக்கு மத்திய மும்பையை வர்தாபாய்
கும்பலும் தெற்கு மத்திய மும்பையை கரீம் லாலா கும்பலும் கவனித்து வர கடத்தல் மற்றும் சட்டவிரோத நிதியுதவிகளை மஸ்தான் கவனித்து வந்தார். தமிழர்கள் அதிகம் வாழும் மாட்டுங்கா மற்றும் தாராவி போன்ற பகுதிகளில் அரசுக்கு இணையான தனி ராஜாங்கத்தை நடத்தி வந்தார் வர்தாபாய். மாட்டுங்கா ரயில்வே
நிலையத்திற்கு அருகில் அரசியல் பிரபலங்களும் திரைப்பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வர்தாபாய் நடத்திய மாட்டுங்கா விக்னஹர்தா கணபதி மண்டல் மிகவும் பிரசித்தி பெற்றது.
இப்படியான சூழலில் 1980களில் மும்பை மாநகரில் குற்றவியல் செயல்களை தடுக்க திட்டமிட்டு IPS அதிகாரி
Y.C.பவார் கடும் நடவடிக்கைளை எடுத்தார். காவல்துறை உத்தரவின் பேரில் வர்தாபாயின் கணபதி மண்டலுக்கு வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. காவல்துறையின் தொடர் நடவடிக்கையால் வர்தாபாய் கும்பலின் பெரும்பாலான உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது மும்பையை விட்டு வெளியேறி தப்பித்தனர்.
இந்நிலையில் தனிப்பெரும் செல்வாக்கை இழந்த காலத்தில் காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதாக கூறி மும்பை குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு பெற்று சென்னைக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் வர்தாபாய்க்கு ஏற்பட்டது.02-01-1988 அன்று சென்னையில்
மாரடைப்பால் காலமானார். வர்தாபாய் விருப்பப்படி இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடலை தனி விமானத்தில் மும்பைக்கு கொண்டு வந்தார் ஹாஜி மஸ்தான்.
4.கரீம் லாலா
1911இல் ஆப்கானிஸ்தான் நாட்டில் குனார் மாகாணத்தில் ஷேகல் மாவட்டத்தில் அப்துல் கரீம் ஷெர்கான் என்ற கரீம் லாலா பிறந்தார். பதான்
பரம்பரையை சேர்ந்த கரீம் லாலா குடும்பம் 1920களில் ஆப்கானிஸ்தானில் இருந்து தெற்கு மும்பைக்கு இடம்பெயர்ந்தது. பதான் பரம்பரையினர் கிழக்கு - தெற்கு ஆப்கானிஸ்தான், வடமேற்கு பாகிஸ்தான், பலூச்சிஸ்தான் பழங்குடிப் பகுதியில் வசிக்கும் பஷ்தூ மொழி பேசும் கிழக்கு ஈரானிய மக்கள் இனப்பிரிவு ஆவர்.
1940களின் தொடக்கத்தில் மும்பை துறைமுகத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்வை தொடங்கி பின்னர் மார்வாரி மற்றும் குஜராத்தி வணிகர்களுக்கு சட்டவிரோதமாக பணத்தை மீட்கும் முகவர்களாக பணிபுரிந்த பதான் கும்பலில் சேர்ந்தார் கரீம் லாலா. மெல்ல மெல்ல குற்றவியல் நடவடிக்கையில் வளர்ந்தாலும் ஹாஜி
மஸ்தான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்த பிறகே முக்கியத்துவம் பெற்றார் கரீம் லாலா.
மும்பை மாநகரில் சூதாட்டங்கள், நிலம் அபகரித்தல், தங்கநகை கடத்தல், மதுபானக் கூடங்கள், மிரட்டி பணம் பறித்தல், பணத்தை மீட்டுதல், ஒப்பந்த கொலை, மின்னணு பொருள் விநியோகம், கள்ளநோட்டு
விநியோகம், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்தார் கரீம் லாலா. இக்கும்பல் நடத்தி வந்த கேரம் கிளப்கள் சட்டவிரோத மோசடிகள் பற்றி பேசவும் திட்டமிடவும் முகப்பாக இருந்தன.
கரீம் லாலா கொடிகட்டி பறந்த காலத்தில் நடத்திய பார்ட்டிகள்
மற்றும் ஈத் கொண்டாட்டங்களுக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், திரைப்பிரபலங்கள் கலந்து சிறப்பித்ததுள்ளனர். மாஃபியா அந்தஸ்து இருந்தபோதிலும் ஏழைகளுக்கு உதவக் கூடியவராக அறியப்பட்ட கரீம் லாலா வாரந்தோறும் தர்பார் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். தர்பாரில் பங்கேற்ற மக்கள்
பல்வேறு குறைகளை விவரிக்க அதை கேட்டு தனது கும்பலின் சக்தியைப் பயன்படுத்தி அவர்களுக்கு நிதி அல்லது நீதியைப் பெற உதவினார்.
1970களின் இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக கரீம் லாலா படிப்படியாக பதான் கும்பலின் தலைமையை தனது மருமகன் சமத் கானுக்கு மாற்றினார். பதான் கும்பலுக்கும் தாவூத்
கும்பலுக்கும் இடையே நிலவி வந்த பகையில் 1981 இல் தாவூத் இப்ராஹிமின் சகோதரர் சபீர் இப்ராஹிம் சுட்டு கொல்லப்பட்டார். இதனால் பழிக்கு பழியாக “பலிக்கு பலியாக” 1984இல் தெற்கு மும்பையில் உள்ள விடுதியில் இருந்து வெளியே வந்த போது தாவூத் இப்ராஹிம் கும்பலால் சமத் கான் சுட்டு கொல்லப்பட்டார்.
சமத் கான் கொலைக்கு பிறகும் கரீம் லாலா முதுமைக்கு பிறகும் பதான் கும்பல் பலவீனமடைந்து. 90 வயதில் வயோதிகம் காரணமாக கரீம் லாலா 19-02-2002 அன்று மரணமடைந்தார்.
5.தாவூத் இப்ராஹிம்
26-12-1955 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் கேத் கிராமத்தில் பொருளாதார சிக்கல் நிறைந்த
குடும்பத்தில் 8 சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகள் உடன் பிறந்த தாவூத் இப்ராஹிம் மத்திய மும்பையின் டோங்ரியில் வளர்ந்தார். தந்தை இப்ராஹிம் கஸ்கர் மும்பை காவல்துறையில் தலைமைக் காவலராகவும் தாயார் அமினா இல்லத்தரசியாகவும் இருந்தார்.
அஹ்மது சைலோர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த தாவூத் இப்ராஹிமுக்கு தந்தையால் தொடர்ந்து பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தால் பள்ளிப்பபடிப்பை பாதியில் விட்டுவிட்டார். அதன் பிறகு நேர மிகுதியாலும் வேகமாக பணத்தை ஈட்டும் ஆசையாலும் டோங்கிரி சிறுவர்களை ஒருங்கிணைத்து சட்டவிரோத
கும்பல் ஒன்றை உருவாக்கி சிறு சிறு கடத்தல் மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வந்தார் தாவூத் இப்ராஹிம். டோங்கிரியில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது ஹாஜி மஸ்தான் கும்பலுடன் தகராறு பின்னர் நட்பு என்று தொடர்பு கொண்டார் தாவூத் இப்ராஹிம். 1980களில் முதலில் ஒரு கொள்ளை வழக்கில்
கைது செய்யப்பட்டு வெளிவந்த பின்னர் தாவூத் இப்ராஹிமின் குற்றவியல் நடவடிக்கைகள் அதிகரித்தன.
ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய கரீம் லாலாவின் பதான் கும்பலுக்கும் மும்பை தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் இடையிலான சண்டை மும்பை மாநகரின் மிகக் கொடிய கும்பல் போர்களில் ஒன்றாக
வர்ணிக்கப்படுகிறது. இக்கும்பல் போரில் தாவூத் இப்ராஹிம் சகோதரர் சபீர் இப்ராஹிம் 1981இல் கொல்லப்பட்டார் அதன் விளைவாக பதான் கும்பலை சேர்ந்த சமத் கான் 1984இல் கொலை செய்யப்பட்டார். இறுதியில் பதான் கும்பலை கட்டுப்படுத்தியதன் மூலம் நிழல் உலகில் தாவூத் இப்ராஹிம் மெல்ல வளர தொடங்கினார்.
ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார், கரீம் லாலா கும்பல்கள் தங்களுக்குள் கடைப்பிடித்து வந்த மரியாதையை பின்பற்றி நடக்காமல் தனி ஆவர்த்தனமாக நடைப்போட போட்டி, வன்முறை, பகையை வளர்க்க தொடங்கினார் தாவூத் இப்ராஹிம். இதனால் இடையூறுகளை ஏற்படுத்தி வந்த கும்பல்களை சமாளித்து கொண்டிருக்கையில்
ஹாஜி மஸ்தான் அரசியலில் குதித்த பிறகு ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார், கரீம் லாலா தலைமையில் மும்மூர்த்திகள் சாம்ராஜ்யமாக இருந்த மும்பை நிழல் உலகை தனி ஒருவன் சாம்ராஜ்யமாக நிலையை மாற்றி மும்பை நிழல் உலகின் முடிசூடா மன்னனாக உருவெடுத்தார் தாவூத் இப்ராஹிம்.
1986இல் இந்திய நாட்டை விட்டு துபாய்க்கு வெளியேறினாலும் தனது D Company (D Company தாவூத் இப்ராஹிம் கும்பலை குறிக்கும்) கூட்டாளிகள் மூலம் மும்பை நிழல் உலகை தனது பிடியில் வைத்திருக்கிறார் தாவூத் இப்ராஹிம். வளைகுடா தொடர்புகள் அதிகரிக்க நாளடைவில் நிழல் உலகில் மிகவும்
சக்திவாய்ந்தவராகவும் ஆபத்தானவராகவும் மாறினார். அவ்வாறு நிழல் உலகில் கொடி கட்டிய பிறகு சில பாலிவுட் பிரபலங்கள் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பில் இருக்கத் தொடங்கினர். அனிதா அயூப், மந்தாகினி போன்ற நடிகைகளுடன் சில காலம் தொடர்பில் இருந்தார் தாவூத் இப்ராஹிம்.
போதைப்பொருள் கடத்தல், ஆயுத கடத்தல், தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்தல், ஹவாலா பரிவர்த்தனை செய்தல், விளையாட்டு போட்டிகளில் முடிவுகளை தீர்மானித்தல், பந்தயம் நடத்துதல், திரைப்பட துறையை கட்டுப்படுத்துதல் போன்ற தொழில்களை முதன்மையாக செய்து வருகிறார் தாவூத் இப்ராஹிம். இவரது
வலதுகரமான சோட்டா ஷகீல் (இவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது மர்மமாகவே உள்ளது) மேற்பார்வையில் நடத்தப்படும் சூதாட்டத்தில் கிரிக்கெட் பந்தயம் பிரதானமாக உள்ளது. மேலும் உலகெங்கிலும் நடைபெறும் பிரபல விளையாட்டு போட்டிகளின் பந்தயத்தில் மூன்றில் இரண்டு பங்கு முடிவை தீர்மானிக்கும்
இடத்தில் தாவூத் இப்ராஹிம் இருப்பதாக நம்பப்படுகிறது.
1985 முதல் கிரிக்கெட் பந்தயத்தில் ஈடுபட்டு வந்தாலும் 2008இல் ஐ.பி.எல் அறிமுகத்திற்கு பின்னர் தாவூத் இப்ராஹிம் நேரடி கவனம் செலுத்த தொடங்கிய பிறகு தான் அசுர வளர்ச்சி கண்டது. 2013இல் தாவூத் இப்ராஹிம் சகோதரர் அனீஸ் இப்ராஹிம்
மிகப்பெரிய அளவில் ஐ.பி.எல் பந்தயத்தை நடத்திட நட்சத்திர வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் சிலரை அச்சுறுத்தியதாகவும் இந்தியா டுடே பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐ.பி.எல் தொடர் மூலமும் பி.சி.சி.ஐ, அணி உரிமையாளர், அணி வீரர்கள், விளம்பரதாரர்கள் லாபம் ஈட்டுவதை காட்டிலும் பல
மடங்கு லாபத்தை தாவூத் இப்ராஹிம் கும்பல் பந்தயங்கள் மூலம் ஈட்டுகின்றனர். இப்படி கிரிக்கெட் பந்தயம் மட்டுமல்ல கிரிக்கெட் சம்பந்தமும் செய்துள்ளார் தாவூத் இப்ராஹிம். அதாவது 2006இல் தாவூத் இப்ராஹிமின் மகள் மஹ்ருக் இப்ராஹிம் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டத்தின்
மகன் ஜுனைத் மியான்டத்தை மணந்துள்ளார்.
16-11-1991 அன்று லோகந்த்வாலா வளாகத்தில் தாவூத் இப்ராஹிம் கும்பலை சேர்ந்த மாயா டோலாஸ் தலைமையிலான ஏழு குண்டர்களுக்கும் மும்பை காவல்துறை கூடுதல் போலீஸ் கமிஷனர் அஃப்தாப் அகமது கான் தலைமையிலான குழு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை தலைமையிலான
குழுவிற்கும் இடையே 4 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை
நடந்ததன் முடிவில் மாயா டோலாஸ் தலைமையிலான ஏழு பேரும் மரணமடைந்தனர். இந்தியாவின் முதல் பகல்நேர என்கவுண்டர் சம்பவமான லோகந்த்வாலா காம்ப்ளக்ஸ் துப்பாக்கிச் சூடு பொதுமக்களின் பார்வைக்கு மத்தியில் வீடியோ படம் எடுக்கப்பட்டு நடத்தப்பட்டது.
06-12-1992 அன்று இந்து கரசேவகர்களால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்வினையாக முஸ்லிம்களும் ராமர் கோவிலுக்கு ஆதரவாக இந்து கரசேவகர்களும் கலவரத்தில் ஈடுபட டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993இல் நாடு முழுவதும் (குறிப்பாக மும்பையில்)
பரவலான மத கலவரம் மூண்டது. 1997இல் வெளியான ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைப்படி இக்கலவரத்தால் தோராயமாக 900 நபர்கள் இறந்ததாகவும் 2000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் கண்டறியப்பட்டது. மேலும் பால் தாக்கரேயின் வேண்டுகோளுக்கு இணங்க சிவ சேனா கட்சியினர் பழிவாங்கும் நோக்கத்துடன்
முஸ்லிம்களின் உயிர் மற்றும் சொத்துக்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதலை அரங்கேற்றியதாக இக்கமிஷன் அறிக்கை குற்றம்சாட்டியது.
டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993 மத கலவரத்தைத் தொடர்ந்து 1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இதுவே இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக
மோசமான குண்டுவெடிப்பு சம்பவமாகும். 12-03-1993 அன்று மும்பையில் 12 இடங்களில் நடந்த தொடர் பயங்கரவாத குண்டுவெடிப்புக்கு ஒரே நாள் தாக்குதல்களில் 257 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1400 பேர் படுகாயம் அடைந்தனர். காவல்துறையின் தீவிர விசாரணையில் இந்த பயங்கரவாத தாக்குதலை கூட்டாளிகள்
டைகர் மேமன் மற்றும் யாகூப் மேமன் மூலம் ஒருங்கிணைத்தது தாவூத் இப்ராஹிம் என்று கண்டறியப்பட்டது.
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 100 நபர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு 99 நபர்களுக்கு பல்வேறு கால அளவில் சிறைத்தண்டனையும்
யாகூப் மேனன் ஒருவருக்கு தூக்குத்தண்டனையும் விதிக்கப்பட்டது. 2015இல் யாகூப் மேனன் தூக்கிலிடப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு, கொலை வழக்கு, மோசடி வழக்கு, கடத்தல் வழக்கு என்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் இன்று வரை பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று உலகளவில் பல்வேறு சர்வதேச விசாரணை அமைப்புகளால் தேடப்படும் குற்றவாளிகள்
பட்டியலில் முதல் 10 இடத்தில் ஒருவராக இருக்கும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் நாட்டில் கராச்சி மாநிலத்தில் அமெரிக்க வடிவமைப்பை கொண்ட White House வீட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.
6.அபு சலேம்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆசம்கர் மாவட்டத்தில் சராய் மிர் கிராமத்தில் பிறந்த அபு சலேம்
ஆரம்பத்தில் தாவூத் இப்ராஹிம் கும்பலில் ஆயுத கடத்தல் பொருட்களை கொண்டு செல்லும் ஓட்டுநராக பணிபுரிந்தார். நாளடைவில் பாலிவுட் விவகாரங்களை கவனித்து வந்த அபு சலேம் பாலிவுட் நடிகை மோனிகா பேடியுடன் தொடர்பில் இருந்தார்.
பாலிவுட் திரைப்பட துறையை கட்டுப்படுத்தும் விதமாக திரைப்பட
தயாரிப்பாளர்களிடம் பணம் பறித்தல், வெளிநாட்டு விநியோக உரிமையை அபகரித்தல், பினாமி பெயரில் பாலிவுட் திரைப்படங்களைத் தயாரித்தல் போன்ற காரியங்களில் தாவூத் இப்ராஹிம் தலைமையில் அபு சலேம் கும்பல் ஈடுபட்டது. தங்கள் கோரிக்கைக்கு இணங்காத தயாரிப்பாளர் ஜாவேத் சித்திக், T-Series நிறுவனர்
குல்ஷன் குமார் போன்ற பிரபலங்களை கொலை செய்தனர். மேலும் சுபாஷ் காய், ராஜீவ் ராய் மற்றும் ராகேஷ் ரோஷன் ஆகியோரை கொல்லும் முயற்சியில் தோல்வியடைந்தனர்.
டிரைவர் பணி, பாலிவுட் பணி போக தாவூத் இப்ராஹிமின் கட்டளைக்கு இணங்க சொந்த ஊரான ஆசம்கரில் வேலையில்லாத இளைஞர்களிடம் பணத்தாசை காட்டி
அவர்களை மும்பைக்கு வரவழைத்து கொலை, கொள்ளை போன்ற சட்டவிரோத காரியங்களை கச்சிதமாக அரங்கேற்றி மறுநாள் ஆசம்கருக்கு அனுப்பி வைப்பதும் அபு சலேமின் முக்கிய வேலையாக இருந்துள்ளது.
2002இல் அபு சலேமும் நடிகை மோனிகா பேடியும் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்திய
குற்றச்சாட்டில் இன்டர்போலால் கைது செய்யப்பட்டு 2005இல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகள் போர்ச்சுகல் சிறையிலும் 2 ஆண்டுகள் இந்தியா சிறையிலும் அபு சலேமும் நடிகை மோனிகா பேடியும் இருந்தனர். சிறைத் தண்டனை நிறைவுற்ற பிறகு நடிகை
மோனிகா பேடி விடுவிக்கப்பட்டார்.
அபு சலேம் மீது குற்றச்சாட்டி 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு, T-Series நிறுவனர் குல்ஷன் குமார் கொலை வழக்கு, நடிகை மனிஷா கொய்ராலா செயலாளர் அஜித் திவானி கொலை வழக்கு, ரியல் எஸ்டேட் நிறுவனர் பிரதீப் ஜெயின் கொலை வழக்கு உட்பட பதிவான 50க்கும் மேற்பட்ட
வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு இறுதியில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் போது குஜராத்தில் இருந்து மும்பைக்கு ஆயுதங்களை கடத்தி சென்றதற்காக அபு சலேமுக்கு 2017இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று மும்பை சிறையில் ஆயுள்
தண்டனை கைதியாக உள்ளார் அபு சலேம்.
இதற்கிடையே வழக்கு விசாரணையின் போது பாலிவுட் நடிகர் சஞ்சய தத்திற்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் ஒப்புக்கொண்டார். ஜனவரி 1993இல் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளிகள் சமீர் ஹிங்கோரா மற்றும் ஹனிப் கடவாலா ஆகியோருடன் அபு சலேம் சஞ்சய் தத் வீட்டிற்கு
AK-56 ரக துப்பாக்கிகளை வெடிமருத்துடன் கொண்டு சென்றதாகவும் அதில் ஒன்றை சஞ்சய் தத் பெற்றதாகவும் வழக்கு விசாரணையின் போது அபு சலேம் கூறினார்.
06-12-1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற மும்பை கலவரத்தின் போது பல்வேறு அச்சுறுத்தல்களை பெற்று வந்த தனது
குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை பெற்றுள்ளார் சஞ்சய் தத். 1993 மும்பை தொடர் குண்டுகுண்டுவெடிப்புக்கு உடந்தையாக இருந்ததற்காக சமீர் ஹிங்கோரா மற்றும் ஹனிஃப் கடவாலா கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட பிறகு தனது துப்பாக்கியை அழிக்குமாறு
நண்பர் யூசுப் நுல்வல்லாவிடம் கேட்டுள்ளார் சஞ்சய் தத்.
இதற்குள் AK-56 துப்பாக்கியை சஞ்சய் தத் வைத்திருப்பதாக பத்திரிகையாளர் பல்ஜீத் பர்மர் மூலம் செய்திகள் பத்திரிக்கைகளில் வந்ததால் இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து தந்தை சுனில் தத் மகன் சஞ்சய் தத்திடம் கேட்க அவரும் இல்லையென
மறுத்துள்ளார். குடும்பத்தில் துப்பாக்கி குறித்த கவலை தாங்க முடியாததாக மாறிய தருணத்தில் மொரிஷியஸ் படப்பிடிப்பில் இருந்து கிளம்பி இந்தியாவுக்கு திரும்பிய சஞ்சய் தத்தை தந்தை சுனில் தத் பகிர்ந்த விமான விவரங்களை கொண்டு மும்பையில் சஞ்சய் தத் இறங்கியவுடன் போலீசாரால் அழைத்து
செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இறுதியில் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வாங்கி வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் சஞ்சய் தத்.
2016இல் தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு திரைப்படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கினார் சஞ்சய் தத்.
7.அருண் கவ்லி
17-07-1955 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் போஹேகான் கிராமத்தில் யாதவ் குடும்பத்தில் அருண் கவ்லி பிறந்தார். 1970களில் மும்பை மையப்பகுதியில்
அமைந்துள்ள ஜவுளி ஆலைகளில் பணிபுரிந்தார். 1970களின் இறுதி முதல் 1980களின் தொடக்கம் வரை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜவுளி ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மும்பை ஜவுளி ஆலைகள் பூட்டப்பட்டது.
இதன் விளைவாக வேலை இழந்த அருண் கவ்லி குறுக்கு வழியில் விரைவாக பணத்தை ஈட்ட
ஆசைப்பட்டு ராமா நாயக் மற்றும் பாபு ரெஷிம் தலைமையிலான பைகுல்லா கும்பலில் சேர்ந்து மதுபானக் கூடம், மிரட்டி பணம் பறித்தல், மட்கா சூதாட்டம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். லாட்டரி பந்தயத்தின் ஒரு வடிவமான மட்கா சூதாட்டம் 1950களில் முதல் நியூயார்க் காட்டன்
எக்ஸ்சேஞ்சிலிருந்து பாம்பே காட்டன் எக்ஸ்சேஞ்சிற்கு அனுப்பப்படும் பருத்தியின் தொடக்க மற்றும் இறுதி விகிதங்களில் பந்தயம் கட்டுவதை உள்ளடக்கியது.
1980களில் அருண் கவ்லி போன்ற இந்து கும்பல்களுக்கு எதிராக மும்பை காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முனைந்த போது அவர்கள் நம்முடைய
பையன்கள் என்று சிவ சேனா கட்சி தலைவர் பால் தாக்கரே ஆதரவாக பேசியதன் மூலம் அரசியல் ஆதரவைப் பெற்றார் அருண் கவ்லி. இருப்பினும் 1990களின் தொடக்கத்தில் சிவ சேனா கட்சியுடனான உறவை முறித்து கொண்டு 1997இல் அகில பாரதிய சேனா கட்சியை தொடங்கி 2004இல் சின்ச்போக்லி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி
பெற்றார்.
2007இல் சிவ சேனா கட்சியை சேர்ந்த கமலாகர் ஜாம்சண்டேகரை அருண் கவ்லி கும்பல் படுகொலை செய்தது. கமலாகர் ஜாம்சண்டேகரை கொலை செய்ய அவரது எதிரிகளிடம் இருந்து அருண் கவ்லி 30 லட்சம் பெற்றதாக நீதிமன்றம் கண்டறிந்ததால் அருண் கவ்லிக்கு 2012இல் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
8.ராஜன் வகையறா
1970களின் இறுதியில் கேரளாவைச் சேர்ந்த ராஜன் மகாதேவன் நாயர் என்ற படா ராஜன் (மூத்த ராஜன்) மும்பை கிழக்கு புறநகர்ப் பகுதிகளான காட்கோபர், பந்த் நகர், செம்பூர் மற்றும் திலக் நகர் ஆகிய இடங்களில் சட்டவிரோத கும்பலை இயக்கி வந்தார். மும்பை நிழல் உலகில் தாவூத் இப்ராஹிம்
உடன் கூட்டணி வைத்துக் கொண்டு இணக்கமாக செயல்பட்டார் படா ராஜன். மேலும் அப்பகுதி திரையரங்கில் ப்ளாக்கில் டிக்கெட் விற்று வந்த ராஜேந்திர நிகல்ஜே கும்பலை படா ராஜன் தனது கும்பலில் விரும்பி சேர்த்து கொண்டார். நாளடைவில் படா ராஜனுக்கு வலதுகரமாக இயங்கினார் ராஜேந்திர நிகல்ஜே.
செம்பூரில் உள்ள ஷெல் காலனியில் ஒரு பெண் தட்டச்சரை ஏகடியம் செய்ததற்காக அப்துல் குஞ்ச் கும்பலை சேர்ந்த இளைஞர்களை படா ராஜன் கும்பலை சேர்ந்த இளைஞர்கள் தாக்கியதில் இருந்து படா ராஜனுடன் நீண்டகால விரோதம் கொண்டிருந்தார் அப்துல் குஞ்ச். இச்சம்பவம் கொடிய பகையாக மாறி ஒருவரையொருவர்
கொல்லத் துணியும் அளவுக்கு சென்றது.
தாவூத் இப்ராஹிமுக்கு உதவிடும் வகையில் 06-09-1982 அன்று செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே பதான் கும்பலை சேர்ந்த அமீர்சாதா நவாப் கான் படா ராஜனின் அறிவுறுத்தலுக்கு இணங்க டேவிட் பர்தேசியால் கொல்லப்பட்டார். இந்த சூழலை பயன்படுத்தி பதான் கும்பலை
சேர்ந்த மகேஷ் தோலாகியா மூலம் படா ராஜனை கொலை செய்ய திட்டமிட்டார் அப்துல் குஞ்ச். இதன் விளைவாக சகோதரியின் திருமணத்திற்கு பணம் தேடி அலைந்து கொண்டிருந்த ரிக்சா ஓட்டுநர் சந்திரசேகர் சஃபாலிகாவை வேலைக்கு அமர்த்தினர். மகேஷ் தோலாகியா மற்றும் அப்துல் குஞ்ச் வழிகாட்டுதல் படி 21-09-1982
அன்று எஸ்பிளனேட் நீதிமன்றத்திற்கு வெளியே படா ராஜனை வழிமறித்து சுட்டுக் கொன்றார் சந்திரசேகர் சஃபாலிகா. அமீர்சாதா நவாப் கான் கொல்லப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு படா ராஜன் கொலை செய்யப்பட்டார்.
தனது வழிகாட்டியான படா ராஜனை கொன்ற கொலையாளிகளை சமயம் பார்த்து பழிவாங்க திட்டம் தீட்டி
அதன்படியே சந்திரசேகர் சஃபாலிகா, அப்துல் குஞ்ச் மற்றும் அதன் கும்பலை அழித்தார் ராஜேந்திர நிகல்ஜே. பின்னர் படா ராஜனின் கும்பலை வழிநடத்தி வந்த ராஜேந்திர நிகல்ஜே நாளடைவில் சோட்டா ராஜன் (இளைய ராஜன்) என்று அழைக்கப்பட்டார். ஆரம்பத்தில் படா ராஜன் போல தாவூத் இப்ராஹிமுடன் இணக்கமான
முறையில் சட்டவிரோத வேலைகளை செய்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல ஒரு கட்டத்தில் தாவூத் இப்ராஹிமுக்கு பரம எதிரியாக மாறும் வகையில் சோட்டா ராஜன் தனித்து கலக வேலைகளை செய்து வரத் தொடங்கினர்.
27 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வந்த சோட்டா ராஜன் 25-10-2015 அன்று பாலியில்
இந்தோனேசிய காவல்துறையால் கைது செய்யப்பட்டு 06-11-2015 அன்று பாலியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது சிறை கண்காணிப்பில் இருந்து கொண்டு நீதிமன்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்.
2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பால்டன் தொகுதியில் சோட்டா ராஜனின் சகோதரர்
தீபக் நிகால்ஜே பா.ஜ.க சின்னத்தில் ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு பின்னர் போட்டியில் இருந்து விலகினார் பின்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவுரை
ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார், கரீம் லாலா, தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல், யாகூப் மேனன், டைகர் மேனன், அபு சலேம், அருண் கவ்லி, படா ராஜன், சோட்டா ராஜன் போல இன்னும் பலர் நிழல் உலகில் இருக்கின்றனர்.
நிழல் உலகம் குறித்து எழுதாமல் விட்டதே அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள. ஏனெனில் அனைத்தையும் விவரிக்க தொடங்கினால் நிழல் உலக கதை புராண கதை போல நீளும் என்பதால் விவரிக்கவில்லை.
10.விவரணைகள்
ஹாஜி மஸ்தான் கதை - பாகம் 1
ஹாஜி மஸ்தான் கதை - பாகம் 2
வரதராஜன் முதலியார் கதை
கரீம் லாலா கதை
தாவூத் இப்ராஹிம் கதை
1992 பாபர் மசூதி கதை
Naresh Fernandes Recollects Reporting the 1992-1993 Riots
உலகம் முழுவதும் நிழல் உலக நடவடிக்கையால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்கள் தான் அதிகம். உண்மை வரலாறு இப்படிருக்கும் சூழலில் நிழல் உலக சக்திகளின் நடவடிக்கைகளை அடக்க ஒரு நாள் இல்லை ஒரு நாள் சட்டம் தன் கடமையை செய்யும் என்று நம்புவோம்.
// பின்குறிப்பு //
# ஹாஜி மஸ்தான் பிறந்தது கடலூர் மாவட்டம் அல்ல ராமநாதபுரம் மாவட்டம் ஆகும்.
# மும்பை நிழல் உலகம் குறித்து அறிய "Dongri to Dubai" போன்று பல புத்தகங்கள், "Nayagan" போன்று பல திரைப்படங்கள் இருக்கிறது.
# Francis Ford Coppola, Martin Scorsese, Ram Gopal Varma போன்ற இயக்குனர்கள் Mafia படங்கள் எடுப்பதில் பெயர் பெற்றவர்கள்.
# இக்கட்டுரையில் ஜெனாபாய் தருவாலி, பாப்பாமணி, ஷோபா ஐயர், ரேஷ்மா மேமன், ஷபானா மேமன், அர்ச்சனா சர்மா போன்ற பெண் தாதாக்களை பற்றி பதிவு செய்யவில்லை.
# நிழல் உலகை பொறுத்தவரையில் "தலைவர்கள்" மட்டுமே நிரந்திரம் ஆனால் "தலைவர்கள்" கோரிக்கைக்கு இணங்க வேலை செய்யும் "குண்டர்கள்" திடீர் திடீரென இடம் மாறும் போக்குகள் உண்டு.
# இக்கட்டுரையில் அவ்வாறு சில முக்கியமான "குண்டர்கள்" ஏன் இடம் மாறினர் என்று பதிவு செய்யவில்லை.
# மொத்தத்தில் நான் அனைத்தையும் இங்கு விவரிக்கவில்லை ஏனெனில் கட்டுரை இன்னும் நீண்டால் அது வாசிப்பவர்களுக்கு அலுப்பை தரக்கூடும் என தவிர்த்து விட்டேன்.
# உங்களுக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் மேற்கொண்டு வேண்டியதை தேடி அறியுங்கள் .
# பொறுமையாக வாசித்த அன்பர்களுக்கு நன்றி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஊருக்குள் ஒருத்தர் தலப்பா கட்டுனா உடனே எல்லாரும் தலப்பா கட்டனும்னு நினைச்சா அந்த ஊரு விளங்க வாய்ப்பில்ல.
ஒரே ஒரு சூரியன் மாதிரி ஒரே ஒரு ராஜா தான்.
அனைத்து தரப்பையும் சமமாக பாவித்து சமூக நீதியை கொண்டு சேர்க்க முயலும் தி.மு.கவுக்கு கூட சில தேர்தலில் மக்கள் ஆட்சியை ஒப்படைக்கல்ல.
சூழல் அப்படியிருக்க ஜெய் பீம் பட சர்ச்சைக்கு பின் சீமான் போன்று ஆட்டம் காட்டும் சில்வண்டு போல மீ்ண்டு(ம்) "ஆண்ட பரம்பரை" என்று மார்தட்டி பேச கிளம்பியுள்ள பா.ம.க என்ன அடிப்படையில் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது?
இது தான் மாற்றம் முன்னேற்றம் அன்புமணியா?
ராமதாஸின் ஆண்ட பரம்பரை பேச்சை அவரது குடும்பத்தினர் பேரன் பேர்த்திகள் ஏற்கிறார்களா?
நீங்கள் ஆண்ட பரம்பரை என்று பேசி ஆட்சிக்கு வர எண்ணினால், நீங்கள் உங்களுக்கு கீழ் அடிபணிந்து நடக்க ஒரு அடிமை பரம்பரையை உயிரூட்டி வளர்த்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று தானே பொருள் வரும்!
# மீண்டும் மீண்டும் சிரிப்பு (வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஜோக்ஸ்)
# டாப் 10 மூவீஸ் (சுருக்கமாக கதையை சொல்லிட்டு மொத்தத்தில் என்று முடிப்பது)
# சப்த ஸ்வரங்கள் (இனிமையான குரல் தேடல்கள்)
# அரட்டை அரங்கம் (இளம் பேச்சாளர்கள்)
# மதியம் கறி சாப்பாடு முடிச்சிட்டு திரும்ப சாயங்காலம் "இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக" திரைப்படத்தை கண்டுகளித்தல்.
# அப்புறம் அடுத்த ஞாயிறுக்கு காத்திருப்பது. 😅
இவை தவிர்த்தும் நிறைய பிரபல ஷோக்கள் உண்டு.
எடுத்துக்காட்டாக காமெடி டைம், இளமை புதுமை, திரை விமர்சனம், லிம்கா நம்ம நேரம், பெப்சி உங்கள் சாய்ஸ், நீங்கள் கேட்ட பாடல், பாட்டுக்கு பாட்டு, சுரேஷ் சக்கரவர்த்தியின் கேம் ஷோ (பெயர் தெரியல 🤔).
1.முகவுரை
2.இறந்தது யார்?
3.சிக்கிய தடயங்கள்
4.மர்மத்தை விலக்கிய மருத்துவ அறிக்கை
5.இறந்தது சுகுமார குருப்பா?
6.குற்றம் நடந்தது என்ன?
7.கோபாலகிருஷ்ண குருப்
8.ஏன் போலி இறப்பு சான்றிதழ்?
9.வளைகுடா வாழ்க்கை
10.வளைகுடா இளவரசர்
11.என்ன சதித்திட்டம்?
12.அன்றிரவு காரில் ஏறிய நபர்
13.கொல்லப்பட்டது யார்?
14.விசாரணை படலம்
15.வழக்கின் முடிவு
16.தேடும் படலம்
17.உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?
18.முடிவுரை
19.குறிப்பு
20.விவரணைகள்
1.முகவுரை
இக்கட்டுரையை சுகுமார குருப் கூட வாசிக்கக்கூடும்? என்னப்பா! தொடக்கமே விவகாரமாக இருக்கிறதே என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. பின்னர்? 37 வருடங்களாக தேடப்படும் குற்றவாளி எங்கு எப்படி உருமாறி இருக்கிறார் என்பதை யாரறிவார்? அத்தோடு உயிரோடு இருக்கிறாரா? என்பதும் உறுதியாக
படம் பார்ப்பதும் அரசியல் அறிவதும் நம் நாடி நரம்பில் முறுக்கேறிய விஷயம்.
இத்துறையில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு கள யதார்த்தம் இருப்பது சகஜமானது.
இன்று அந்தந்த காலகட்டத்தில் வெற்றி பெற்ற பழைய சினிமா படங்களை அரசியல் நிகழ்வுகளை சிலர் Cringe என்று சொல்வதை ஜீரணிப்பது கடினமாக உள்ளது.
நாம் பார்த்து கேட்டு அறிந்து வளர்ந்த ஒன்றை நேற்று வந்த யாரோ சொன்னான் எவனோ சொன்னான் என்று போகிற போக்கில் Cringe என்று கேலி பேசி நகர்வது நாகரீகமான செயலாகுமா?
அவரவர் ரசனை அவரவருக்கு உரியது. அட இவனுங்க ரசனை கெட்டவனுங்க என்று எதை வைத்தும் எடை போட முடியாது.
உங்கப்பா 1960 காலகட்ட பாடல்களை விரும்பி கேட்பதால் 2020 பாடல்களை கேட்க விரும்பாததால் அவர் ரசனையே செத்துவிட்டது என்று விமர்சிக்க முடியுமா? அது தகுமா?
Cringe என்று பழைய நிலையை கேலி செய்தால் அதை ரசித்த நம்மையும் சேர்த்து கேலி செய்வதாகும்.
நகைச்சுவை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமானது என்பதற்கு சார்லி சாப்ளின் முதல் வடிவேலு வரை யாரும் விதிவிலக்கல்ல. இதில் நாகேஷ் பற்றி ஒரு சில குறிப்புகளை பகிர்கிறேன். பிராமண குடும்பத்தில் பிறந்த நாகேஷ் கிறிஸ்தவ பெண் ரெஜீனாவை திருமணம் புரிந்தார்.
இத்தம்பதியினருக்கு ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு, ஆனந்த் பாபு என்று 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. இவர்களின் குடும்ப வாழ்க்கை நெடுநாள் இன்பமாக இருக்கவில்லை ஏனெனில் நாகேஷ் மைத்துனர் செல்வராஜ் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற விசாரணைக்காக ரெஜீனா மற்றும் குடும்பத்தினரை காவல்துறை கைது செய்தனர்.
உரிய விசாரணைக்கு பிறகு ரெஜீனா மற்றும் குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டனர். இம்மரண வழக்கு விசாரணை தொடர்பாக நாகேஷ் மற்றும் மனோரமா உறவில் விரிசல் ஏற்பட பிறகு 1968க்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. 1970 நவக்கிரகம் படம் மூலம் நாகேஷையும் மனோரமாவையும் நடிக்க வைக்க முயன்றார் K.B