* ஒருவருக்குப் பல குருமார்கள் இருக்கலாமா? *
*திருப்பூர் கிருஷ்ணன் *
......................................................
* மகாசுவாமிகளிடம் மிகுந்த பக்தி செலுத்தி வந்த ஒரு பெண்மணி மற்றொரு துறவியிடமும் பக்தி கொண்டிருந்தார்.
ஒரு குருவைச் சரணடைந்த ஒருவர் இன்னொரு குரு மேலும்
பக்தி செலுத்தலாமா என்று அந்தப் பெண்மணிக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அதனால் மனத்தில் சஞ்சலம் தோன்றியது.
கள்ளம் கபடமில்லாத அவர் மகாசுவாமிகளிடமே தன் சந்தேகத்தைக் கேட்டுவிட்டார். மகாசுவாமிகள் சிரித்துக் கொண்டே சொல்லத் தொடங்கினார்,
`பல உறவுக்காரர்கள் உண்டில்லையா உனக்கு? அது
மாதிரி பல குருக்கள் என்று நினைத்துக் கொள்ளேன். அவர்களிலே பதி மாதிரி முதல் ஸ்தானம் வகிக்கிறவராக ஒருத்தர் அவரொருவரிடந்தான் சரணாகதி,
கணவரைத் தவிர உள்ள மற்ற சொந்தக் காரர்களிடமும் பிரியம் மரியாதை எல்லாம் உண்டில்லையா? மாமனார் - மாமியார் எல்லோரையும் மதிக்கிறாயே? அது மாதிரி எல்லா
குருமார்களுக்கும் மதிப்புத் தர வேண்டும்,
கோவிலில் பல சன்னிதிகள், ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்வாமி. எல்லா ஸ்வாமிகளிடமும் பக்தி என்றாலும் இஷ்ட தெய்வத்திடம் விசேஷ பக்தி. அதுபோல் தான் குரு பக்தியும்.
இஷ்ட தெய்வம் இருக்கும்போது மற்ற தெய்வங்களை பூஜிக்கவே கூடாது என்று சொல்ல முடியுமா? பல
குருமார்களிடம் பக்தி செலுத்திக் கொண்டே முக்கிய குருவான ஒருவரிடம் ஆத்ம ஸமர்ப்பணம் செய்யலாமே?.
ஏன் பல குரு வருகிறார்கள் தெரியுமா? பலவித உபாசனைகள் இருக்கின்றன, ஒவ்வொரு குரு ஒவ்வொன்றில் ஸ்பெஷலைஸ் பண்ணியிருப்பார்.
நமக்கு அகத்து டாக்டர் என்று ஒருத்தர், அவர் சொல்லியே பல
ஸ்பெஷலிஸ்ட்களிடமும் போகிறோமே? அப்படி ஒரு முக்ய குரு, அநேக உபகுருமார்கள்.
க்ளாஸ் வாத்தியார் என்றே ஒருத்தர் இருக்கிறார். அவர் இங்க்லீஷோ, கணக்கோ எடுக்கிறார். ஹிஸ்டரி, ஜாகரஃபி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருத்தர் என்று வருகிறார்களோல்லியோ!
முக்கிய குரு - க்ளாஸ் வாத்யார், உபகுருமார்
வேறே ஸப்ஜெக்ட்கள் எடுக்கிற வாத்யார்கள்.
வேறே விதமாகவும் உண்டு, இங்கே வாய்ப்பாட்டு வித்வானும் பக்க வாத்தியங்களும் மாதிரி முக்கிய குருவும், உபகுருக்களும்.
முக்கிய குரு சொல்லிக் கொடுக்கிற ஸப்ஜெக்ட் முழுமையாகப் புரிகிறமாதிரி சொல்லித் தர உபகுருமார்.
பக்க வாத்யக்காரர்களில்
ஃபிடில்காரர் அதே ராகம், பாட்டு தாளத்துக்குத்தான் வாசிக்கிறார். அது வாய்ப்பாடகர் பாடுவதற்கு இன்னும் சோபை தந்து முழுமையாக்கி நமக்குள்ளே ஏற்றுகிறது.
அப்படி முக்கிய குருவின் ஸப்ஜெக்டைப் பூர்த்தி பண்ணித்தர உபகுருமார்.
உபகுருமார்களின் உபதேசத்தோடு கலந்து எடுத்துக் கொள்ளும்
படியாகவே முக்கிய குருவின் உபதேசங்கள் இருப்பதுண்டு. முக்கியமாக சாதத்தை வைத்துக் கொண்டு அதோடு அநேக வகை உணவுகளைச் சாப்பிடுவது போல.
ஒருத்தருக்கு முக்கிய குருவாக இருப்பவரே இன்னொருத்தருக்கு உபகுருவாக இருக்கலாம்.
நமக்கு ஜாகரஃபி வாத்தியாராக மாத்திரமே இருப்பவர் வேறே பசங்களுக்கு
க்ளாஸ் வாத்யாராக இருக்கலாமல்லவா?
அதனால் ஒருவர் முக்கிய குருவாக இருந்து, வேறே உபகுருமாரும் இருக்கலாம். இருந்தால் தப்பேயில்லை.`
மகாசுவாமிகளின் விளக்கத்தைக் கேட்டுத் தெளிவு பெற்ற அந்தப் பெண்மணியின் மனத்தில் நிம்மதி பிறந்தது.
..................................................
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கொடுப்பவன் பகவானாக இருந்தாலும், அந்த பகவானே உபாயம் என்பதில் நமக்கு
உறுதியான எண்ணம் இருக்க வேண்டும் அல்லவா?
அந்த உறுதியான எண்ணத்தை, அதாவது உபாய நிஷ்டையை நமக்கு அருள்பவள் மஹாலக்ஷ்மி பிராட்டியார்தான் !
மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தால் பகவானிடம் உறுதியான பக்தி ஏற்பட்டு விட்டபிறகுநடப்பது
நடக்கட்டும் என்று
கவலை இல்லாமல் விச்ராந்தியாக இருந்துவிடலாம்.
இல்லையென்றால்,
கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
ஒருவர் காலையில் எழுந்ததில் இருந்தே எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார். அதேசமயத்தில்
பகவான் கிருஷ்ணர் அருளிய,
ஸர்வதர்மான் பரித்யஜ்ய
மாமேஹம் சரணம் வ்ரஜ
அஹம்த்வா ஸர்வபாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மாஸுச:
என்ற சுலோகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்.
’உன்னுடைய எல்லா பாவங்களில் இருந்தும்
உன்னை நான் விடுவிக்கிறேன். அப்படி இருக்க நீ ஏன் சோகப்படுகிறாய்?’
கிருஷ்ணர் அருளிய இந்த
முக்திக்கு வழிகாட்டி
ராம நாமம் ஒன்றுக்கே தாரக மந்திரம் என்கிற சிறப்புப் பெயர் உண்டு.தாரக என்ற சொல்லுக்கு படகு அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று பொருள். ராம நாமத்தால் மட்டுமே இந்த சம்சார கடலிலிருந்து நம்மை கரை சேர்க்க முடியும் என்பதால், இது
தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது.
அனைத்து நாமங்களையும் உள்ளடக்கியது
ராம நாமத்தை ஜெபிப்பதாலேயே கடவுளின் ஆயிரம் நாமங்களை ஜெபிப்பதின் புண்ணியம் கிடைக்கிறது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த உண்மையை விளக்கி இருக்கிறார்.
(“சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே“)
தவறான உச்சரிப்பினால் பலன் குறையாது
வழிப்பறியில் ஈடுபட்ட ரத்னாகரன், ரிஷி நாரதரின் உபதேசத்தின் மூலம் வால்மீகி முனிவராக மாறி ஆதிகாவியமான இராமாயணத்தை எழுதினார். தன பாபச்சுமையால் ராம நாமத்தை சொல்ல முடியாததால் நாரதர் அவருக்கு (‘மரா மரா’) என்று
ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN
நிர்வாண தசகம் -
ஆதி சங்கரர் அத்வைத சிந்தாந்த ஸ்தாபகர். ஷண்மத ஸ்தாபகர். அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களாக வேத சாரம், உபநிஷதுகளை வழங்கியவர். இந்த நிர்வாண தசகம் (நிர்வாணம் என்றால் ''ஆடையில்லாமல்'அல்ல. பிரம்மத்தை தவிர மற்றதில் பற்றற்ற )
தசகம் என்றால் 10. ஏழு வயதில் சந்நியாசியாகி, பிறகு மலையாள தேசத்தில் காலடி க்ஷேத்ரத்திலிருந்து காலடி வைத்து நடையாக கிளம்பிய சிறுவன் சங்கரன் காடும் மலையும் கொடிய வனவிலங்குகளையும் கள்வர்களும், கொன்று தின்னும் காபாலிகர்கள், அரக்கர்கள் வாழும்இடங்கள் எல்லாம் கடந்து வடமேற்கே
நர்மதா நதிக்கரை செல்கிறார். அங்கே ஒரு முதியவர் .ஒரு மலையாள தேச பாலகன், சர்வ தேஜஸுடன் தனது எதிரே வணங்கி நிற்பதைக்கண்ட முதியவர் சங்கரன் மீது ஆர்வம் கொண்டு
'' ஏ, சிறுவா, நீ யார்?'' என்று கேட்கிறார்.
'' நான் யார்?'' என்பதை தான் நானும் தேடி அலைகிறேன் குருநாதா'' என்கிறான் சிறுவன்
ஒரு முறை கைலாயத்தில் பரமேஸ்வரனிடம் ஸ்வாமி கலியுகத்தில் ப்ரத்யஷ பலனை தரும்
ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் பாமர மக்களும் எப்படி பாராயணம் செய்ய முடியும் என்றாள் அந்த தயாபரி.
என்ற ஸ்லோகத்தை மூன்று முறை பாராயணம் செய்தாலே விஷ்ணு சஹஸ்ரநாமமும் பாராயணம் செய்த பலன் அடைவார்கள் என்றார்.
மகிழ்ந்தாள் அம்பிகை.
சரி இந்த விஷ்ணு சஹஸ்ர நாமத்தை
எங்கே பாராயணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம் !!
நம் வீடுகளில் பாராயணம் செய்தால் !! 100 விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலனும் .
வில்வமரம் மற்றும் அரசமரம் நெல்லி மரத்தடியில் பாராயணம் செய்தால் 1000 தடவை சொன்னபலனும்
ஆற்றங்கரையில் பாராயணம் செய்தால் லட்சம் தடவை சொன்னபலனும்