அப்பனும் இல்லை, ஆத்தாளும் இல்லை சொந்தமுமில்லை, பந்தமுமில்லை
உடன்பிறப் பெதுவு மில்லை, சொத்துமில்லை வீடு வாசலுமில்லை, ஏன் இல்லை ? இருந்தால் என்ன பயன்? என் கூடவே வருமா?அதனால் தான் வேண்டாம். விழித்துக் கொள் . ஜாக்கிரதை.
வைப்பது என் ஆசைகள் விருப்பங்கள், என் சொல்லும் செயலும் தான். அது தரும் எண்ணற்ற கவலைகள். இதெல்லாம் தான் உனக்கு என்று இருக்கும் கொஞ்ச காலத்தை துன்பமயமாக்குகிறது. வாழ்நாளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வீணாக்குகிறது. விழித்துக் கொள் . ஜாக்கிரதை.
yàda haqa karanà karànà hai phaqata sàdhukà kàma |
khalaka ko rastà dikhànà hai phaqata sadhu kà kàma ||
இதெல்லாம் உனக்கு அடிக்கடி திருப்பி திருப்பி உனக்கு கோபம் வரும்படியாக ஏன் சொல்கிறார்கள் ஞானிகள்? அவர்களுக்கு தெரியும் உன் ஞாபக சக்தியை, வைராக்கியம், திட சித்தத்தைப்பற்றி
அதனால் தான். எது சரி, எது நீ செய்யவேண்டும் என்று வேறு யார் சொல்லப்போகிறார்கள்?
dina nãke bãte jàte hai |
ஒவொருநாளும் சீட்டு கிழிக்கிறாயே, நாள் எவ்வளவு சீக்கிரம்,வேகமாக ஓடுகிறது என்று உணர்ந்தாயா?
sumirana kara rã ràma nàma taja viùaya bhoga aura sarva kàma |
tere saïga cale nahi eka dàma jo hete hai so pàte hai ||
dina nãke bãte jàte hai ||
இதற்கு தான் ராம ராமா, சிவ சிவா என்று சொல்லிக்கொண்டே இருப்பது. உலக ஈர்ப்புகளிலிருந்து உன்னை மெதுவாக விடுவிக்கும். ஒரு தம்படி,
அப்புறம் நயாபைசா, இப்போ ஒரு ரூபா கூட உனக்கு பை பை BYE BYE சொல்லிவிடும். கொடுத்தவனுக்கு தான் திரும்ப கிடைக்கும். தான தர்மம் செய், பிற உள்ளங்கள் வாழ்த்தட்டும்.
bhàã bandhu aura kuñuma parivàrà saba jãte jã ke nate haiü |
kisake ho tuma kaina tumhàrà kisake bala harinàma visàrà ||
dina nãke bãte jàte hai ||
உறவுகள் எல்லாமே வாழ்க்கை ரயிலில் சக பிரயாணிகள். ஆங்காங்கே சேர்ந்து ஆங்காங்கே பிரிபவர்கள்.சிலகாலம் மட்டுமே உறவாக நாம்
இருக்கும் வரை, இறக்கும் வரை, கூட இருப்பவர்கள். என்றும் இருப்பவன் ராமனும், சிவனும், கிருஷ்ணனுமே,
lakha cauràsã bharama ke àye ba.De bhàga mànuùa tana pàte |
tisa para bhãrnàüha karã kamàã kira pàche pachatàte haiü ||
dina nãke bãte jàte hai ||
உனக்கு ஒரு
உண்மை தெரியுமா மனிதா? இந்த மனிதப்பிறவி உனக்கு 84 லக்ஷம் பிறவிகளுக்குப் பிறகு கிடைத்தது என்று அறிவாயா? விடலாமா இதை? அடுத்ததும் இதுவாகவே கிடைப்பதற்காகவாவது நல்லதைச் சொல், நினை , செய், பகவானின் நாமத்தை மறவாதே.
jo tå làge viùaya vilàsà mårakha ka.Nse mçtyu kã pà÷à |
kyà dekhe ÷vàsa kã àsà gaye kera nahãü àte haiü ||
dina nãke bãte jàte hai || 4 ||
நிழலைத் துரத்திப் பிடிக்கும் விளையாட்டு போதும். இனி நிஜத்தை நாடு. தேடு. தனியாக வந்தபோதும் அழுதாய், இருக்கும்போதும் எதற்கெல்லாமோ அழுகிறாய்,
உன் மீது யார் பரிதாபம் பட்டார்கள்? அவனவன் அழுகை அவனுக்கு சமாளிக்க முடியவில்லையே. உன்னை யார் லக்ஷியம் பண்ணுவார்கள். பகவானைப் பாடு, முடியாவிட்டால் பிறர் பாடுவதைக் கேளேன். நேரம் போவதே தெரியாத அளவு ஆனந்தமாக இருப்பதை அனுபவம் சொல்லும் .
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கொடுப்பவன் பகவானாக இருந்தாலும், அந்த பகவானே உபாயம் என்பதில் நமக்கு
உறுதியான எண்ணம் இருக்க வேண்டும் அல்லவா?
அந்த உறுதியான எண்ணத்தை, அதாவது உபாய நிஷ்டையை நமக்கு அருள்பவள் மஹாலக்ஷ்மி பிராட்டியார்தான் !
மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தால் பகவானிடம் உறுதியான பக்தி ஏற்பட்டு விட்டபிறகுநடப்பது
நடக்கட்டும் என்று
கவலை இல்லாமல் விச்ராந்தியாக இருந்துவிடலாம்.
இல்லையென்றால்,
கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
ஒருவர் காலையில் எழுந்ததில் இருந்தே எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார். அதேசமயத்தில்
பகவான் கிருஷ்ணர் அருளிய,
ஸர்வதர்மான் பரித்யஜ்ய
மாமேஹம் சரணம் வ்ரஜ
அஹம்த்வா ஸர்வபாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மாஸுச:
என்ற சுலோகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்.
’உன்னுடைய எல்லா பாவங்களில் இருந்தும்
உன்னை நான் விடுவிக்கிறேன். அப்படி இருக்க நீ ஏன் சோகப்படுகிறாய்?’
கிருஷ்ணர் அருளிய இந்த
முக்திக்கு வழிகாட்டி
ராம நாமம் ஒன்றுக்கே தாரக மந்திரம் என்கிற சிறப்புப் பெயர் உண்டு.தாரக என்ற சொல்லுக்கு படகு அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று பொருள். ராம நாமத்தால் மட்டுமே இந்த சம்சார கடலிலிருந்து நம்மை கரை சேர்க்க முடியும் என்பதால், இது
தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது.
அனைத்து நாமங்களையும் உள்ளடக்கியது
ராம நாமத்தை ஜெபிப்பதாலேயே கடவுளின் ஆயிரம் நாமங்களை ஜெபிப்பதின் புண்ணியம் கிடைக்கிறது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த உண்மையை விளக்கி இருக்கிறார்.
(“சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே“)
தவறான உச்சரிப்பினால் பலன் குறையாது
வழிப்பறியில் ஈடுபட்ட ரத்னாகரன், ரிஷி நாரதரின் உபதேசத்தின் மூலம் வால்மீகி முனிவராக மாறி ஆதிகாவியமான இராமாயணத்தை எழுதினார். தன பாபச்சுமையால் ராம நாமத்தை சொல்ல முடியாததால் நாரதர் அவருக்கு (‘மரா மரா’) என்று
ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN
நிர்வாண தசகம் -
ஆதி சங்கரர் அத்வைத சிந்தாந்த ஸ்தாபகர். ஷண்மத ஸ்தாபகர். அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களாக வேத சாரம், உபநிஷதுகளை வழங்கியவர். இந்த நிர்வாண தசகம் (நிர்வாணம் என்றால் ''ஆடையில்லாமல்'அல்ல. பிரம்மத்தை தவிர மற்றதில் பற்றற்ற )
தசகம் என்றால் 10. ஏழு வயதில் சந்நியாசியாகி, பிறகு மலையாள தேசத்தில் காலடி க்ஷேத்ரத்திலிருந்து காலடி வைத்து நடையாக கிளம்பிய சிறுவன் சங்கரன் காடும் மலையும் கொடிய வனவிலங்குகளையும் கள்வர்களும், கொன்று தின்னும் காபாலிகர்கள், அரக்கர்கள் வாழும்இடங்கள் எல்லாம் கடந்து வடமேற்கே
நர்மதா நதிக்கரை செல்கிறார். அங்கே ஒரு முதியவர் .ஒரு மலையாள தேச பாலகன், சர்வ தேஜஸுடன் தனது எதிரே வணங்கி நிற்பதைக்கண்ட முதியவர் சங்கரன் மீது ஆர்வம் கொண்டு
'' ஏ, சிறுவா, நீ யார்?'' என்று கேட்கிறார்.
'' நான் யார்?'' என்பதை தான் நானும் தேடி அலைகிறேன் குருநாதா'' என்கிறான் சிறுவன்
* ஒருவருக்குப் பல குருமார்கள் இருக்கலாமா? *
*திருப்பூர் கிருஷ்ணன் *
......................................................
* மகாசுவாமிகளிடம் மிகுந்த பக்தி செலுத்தி வந்த ஒரு பெண்மணி மற்றொரு துறவியிடமும் பக்தி கொண்டிருந்தார்.
ஒரு குருவைச் சரணடைந்த ஒருவர் இன்னொரு குரு மேலும்
பக்தி செலுத்தலாமா என்று அந்தப் பெண்மணிக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அதனால் மனத்தில் சஞ்சலம் தோன்றியது.
கள்ளம் கபடமில்லாத அவர் மகாசுவாமிகளிடமே தன் சந்தேகத்தைக் கேட்டுவிட்டார். மகாசுவாமிகள் சிரித்துக் கொண்டே சொல்லத் தொடங்கினார்,
`பல உறவுக்காரர்கள் உண்டில்லையா உனக்கு? அது
மாதிரி பல குருக்கள் என்று நினைத்துக் கொள்ளேன். அவர்களிலே பதி மாதிரி முதல் ஸ்தானம் வகிக்கிறவராக ஒருத்தர் அவரொருவரிடந்தான் சரணாகதி,
கணவரைத் தவிர உள்ள மற்ற சொந்தக் காரர்களிடமும் பிரியம் மரியாதை எல்லாம் உண்டில்லையா? மாமனார் - மாமியார் எல்லோரையும் மதிக்கிறாயே? அது மாதிரி எல்லா
ஒரு முறை கைலாயத்தில் பரமேஸ்வரனிடம் ஸ்வாமி கலியுகத்தில் ப்ரத்யஷ பலனை தரும்
ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் பாமர மக்களும் எப்படி பாராயணம் செய்ய முடியும் என்றாள் அந்த தயாபரி.
என்ற ஸ்லோகத்தை மூன்று முறை பாராயணம் செய்தாலே விஷ்ணு சஹஸ்ரநாமமும் பாராயணம் செய்த பலன் அடைவார்கள் என்றார்.
மகிழ்ந்தாள் அம்பிகை.
சரி இந்த விஷ்ணு சஹஸ்ர நாமத்தை
எங்கே பாராயணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம் !!
நம் வீடுகளில் பாராயணம் செய்தால் !! 100 விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலனும் .
வில்வமரம் மற்றும் அரசமரம் நெல்லி மரத்தடியில் பாராயணம் செய்தால் 1000 தடவை சொன்னபலனும்
ஆற்றங்கரையில் பாராயணம் செய்தால் லட்சம் தடவை சொன்னபலனும்