கொடுப்பவன் பகவானாக இருந்தாலும், அந்த பகவானே உபாயம் என்பதில் நமக்கு
உறுதியான எண்ணம் இருக்க வேண்டும் அல்லவா?
அந்த உறுதியான எண்ணத்தை, அதாவது உபாய நிஷ்டையை நமக்கு அருள்பவள் மஹாலக்ஷ்மி பிராட்டியார்தான் !
மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தால் பகவானிடம் உறுதியான பக்தி ஏற்பட்டு விட்டபிறகுநடப்பது
நடக்கட்டும் என்று
கவலை இல்லாமல் விச்ராந்தியாக இருந்துவிடலாம்.
இல்லையென்றால்,
கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
ஒருவர் காலையில் எழுந்ததில் இருந்தே எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார். அதேசமயத்தில்
பகவான் கிருஷ்ணர் அருளிய,
ஸர்வதர்மான் பரித்யஜ்ய
மாமேஹம் சரணம் வ்ரஜ
அஹம்த்வா ஸர்வபாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மாஸுச:
என்ற சுலோகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்.
’உன்னுடைய எல்லா பாவங்களில் இருந்தும்
உன்னை நான் விடுவிக்கிறேன். அப்படி இருக்க நீ ஏன் சோகப்படுகிறாய்?’
கிருஷ்ணர் அருளிய இந்த
சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே அவர் நாள்முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்......?
அவருக்கு பகவானிடத்தில் உறுதியான
நம்பிக்கை ஏற்படவில்லை என்று பொருள் !
காரணம் :
மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம்
அவருக்குக் கிடைக்கவில்லை.
நாம் எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நாம் தான்
நம் குடும்பத்தையே காப்பாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த நினைப்புதான் நம்மை எப்போதும்
கவலையில் ஆழ்த்திவிடுகிறது.
உண்மையில் நாமா எல்லோரையும் காப்பாற்றுகிறோம்?
கூரத்தாழ்வார் ஒரு சுலோகத்தில் :
‘நான் போன பிறகு, என் மனைவியை யார் காப்பாற்றுவார்கள் என்று
இத்தனைநாள் நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
சட்டென்று ஒருநாள் நான் புரிந்து கொண்டேன்.
எனக்குப் பிறகு அவர்கள் இன்னும் நன்றாக
இருப்பார்கள் என்று அப்போதுதான் நான் புரிந்துகொண்டேன்.
இத்தனை நாளாக நான்தான் அவளை ரக்ஷித்துக் கொண்டிருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால்,
பகவான்தான்
அவளை மட்டுமல்ல என்னையும்
சேர்த்தே ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன்.
இதுவரை என்னையும் என் மனைவியையும்
ரக்ஷித்து வந்த பகவான், என் மனைவியை
நான் போன பிறகும்கூட ரக்ஷிக்கத்தான்
போகிறான்’என்கிறார்.
இந்த ஜகம் முழுவதையும் பகவான் ஒருவன்தான் ரக்ஷிக்கிறானே
தவிர, கணவன் ரக்ஷிக்கிறான், மாதா பிதாக்கள் ரக்ஷிக்கிறார்கள், சொத்துக்கள் ரக்ஷிக்கும் என்றெல்லாம் நினைப்பது அபத்தம்.
பகவான் மட்டுமே ரக்ஷகர்.
ஆனால்,
அவர் அப்படி ரக்ஷிக்க வேண்டுமானால்,
அவர் திருமகளோடு சேர்ந்து இருக்க வேண்டும்.
அதனால்தான் ஆழ்வார் பாடுகிறார்:
’
ஞாலத்தோடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே
கோலத்திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப்பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ’
திருமகளோடு சேர்ந்திருந்து இந்த உலக உயிர்களை யுகங்கள்தோறும் காத்து ரக்ஷிக்கும் உன் திருவடிகளை அடையாமல் நான் இன்னும்
எத்தனை நாள்தான் துன்பப்படுவது என்று கேட்கிறார்.
ஆகவே, முதலில் மஹாலக்ஷ்மியையும்… பிறகு,
பெருமாளையும் சேவிக்க வேண்டும். ஒருவரை சேவித்து விட்டு மற்றவரை சேவிக்காமல் இருக்கக் கூடாது.
அதாவது, இருவருடைய திருவடிகளையும்
ஒருசேரப் பற்றிக் கொள்ள வேண்டும்.
இருவரிடமும் பற்றுகொள்ள வேண்டும்.
முக்திக்கு வழிகாட்டி
ராம நாமம் ஒன்றுக்கே தாரக மந்திரம் என்கிற சிறப்புப் பெயர் உண்டு.தாரக என்ற சொல்லுக்கு படகு அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று பொருள். ராம நாமத்தால் மட்டுமே இந்த சம்சார கடலிலிருந்து நம்மை கரை சேர்க்க முடியும் என்பதால், இது
தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது.
அனைத்து நாமங்களையும் உள்ளடக்கியது
ராம நாமத்தை ஜெபிப்பதாலேயே கடவுளின் ஆயிரம் நாமங்களை ஜெபிப்பதின் புண்ணியம் கிடைக்கிறது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த உண்மையை விளக்கி இருக்கிறார்.
(“சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே“)
தவறான உச்சரிப்பினால் பலன் குறையாது
வழிப்பறியில் ஈடுபட்ட ரத்னாகரன், ரிஷி நாரதரின் உபதேசத்தின் மூலம் வால்மீகி முனிவராக மாறி ஆதிகாவியமான இராமாயணத்தை எழுதினார். தன பாபச்சுமையால் ராம நாமத்தை சொல்ல முடியாததால் நாரதர் அவருக்கு (‘மரா மரா’) என்று
ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN
நிர்வாண தசகம் -
ஆதி சங்கரர் அத்வைத சிந்தாந்த ஸ்தாபகர். ஷண்மத ஸ்தாபகர். அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களாக வேத சாரம், உபநிஷதுகளை வழங்கியவர். இந்த நிர்வாண தசகம் (நிர்வாணம் என்றால் ''ஆடையில்லாமல்'அல்ல. பிரம்மத்தை தவிர மற்றதில் பற்றற்ற )
தசகம் என்றால் 10. ஏழு வயதில் சந்நியாசியாகி, பிறகு மலையாள தேசத்தில் காலடி க்ஷேத்ரத்திலிருந்து காலடி வைத்து நடையாக கிளம்பிய சிறுவன் சங்கரன் காடும் மலையும் கொடிய வனவிலங்குகளையும் கள்வர்களும், கொன்று தின்னும் காபாலிகர்கள், அரக்கர்கள் வாழும்இடங்கள் எல்லாம் கடந்து வடமேற்கே
நர்மதா நதிக்கரை செல்கிறார். அங்கே ஒரு முதியவர் .ஒரு மலையாள தேச பாலகன், சர்வ தேஜஸுடன் தனது எதிரே வணங்கி நிற்பதைக்கண்ட முதியவர் சங்கரன் மீது ஆர்வம் கொண்டு
'' ஏ, சிறுவா, நீ யார்?'' என்று கேட்கிறார்.
'' நான் யார்?'' என்பதை தான் நானும் தேடி அலைகிறேன் குருநாதா'' என்கிறான் சிறுவன்
* ஒருவருக்குப் பல குருமார்கள் இருக்கலாமா? *
*திருப்பூர் கிருஷ்ணன் *
......................................................
* மகாசுவாமிகளிடம் மிகுந்த பக்தி செலுத்தி வந்த ஒரு பெண்மணி மற்றொரு துறவியிடமும் பக்தி கொண்டிருந்தார்.
ஒரு குருவைச் சரணடைந்த ஒருவர் இன்னொரு குரு மேலும்
பக்தி செலுத்தலாமா என்று அந்தப் பெண்மணிக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அதனால் மனத்தில் சஞ்சலம் தோன்றியது.
கள்ளம் கபடமில்லாத அவர் மகாசுவாமிகளிடமே தன் சந்தேகத்தைக் கேட்டுவிட்டார். மகாசுவாமிகள் சிரித்துக் கொண்டே சொல்லத் தொடங்கினார்,
`பல உறவுக்காரர்கள் உண்டில்லையா உனக்கு? அது
மாதிரி பல குருக்கள் என்று நினைத்துக் கொள்ளேன். அவர்களிலே பதி மாதிரி முதல் ஸ்தானம் வகிக்கிறவராக ஒருத்தர் அவரொருவரிடந்தான் சரணாகதி,
கணவரைத் தவிர உள்ள மற்ற சொந்தக் காரர்களிடமும் பிரியம் மரியாதை எல்லாம் உண்டில்லையா? மாமனார் - மாமியார் எல்லோரையும் மதிக்கிறாயே? அது மாதிரி எல்லா
ஒரு முறை கைலாயத்தில் பரமேஸ்வரனிடம் ஸ்வாமி கலியுகத்தில் ப்ரத்யஷ பலனை தரும்
ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் பாமர மக்களும் எப்படி பாராயணம் செய்ய முடியும் என்றாள் அந்த தயாபரி.
என்ற ஸ்லோகத்தை மூன்று முறை பாராயணம் செய்தாலே விஷ்ணு சஹஸ்ரநாமமும் பாராயணம் செய்த பலன் அடைவார்கள் என்றார்.
மகிழ்ந்தாள் அம்பிகை.
சரி இந்த விஷ்ணு சஹஸ்ர நாமத்தை
எங்கே பாராயணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம் !!
நம் வீடுகளில் பாராயணம் செய்தால் !! 100 விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலனும் .
வில்வமரம் மற்றும் அரசமரம் நெல்லி மரத்தடியில் பாராயணம் செய்தால் 1000 தடவை சொன்னபலனும்
ஆற்றங்கரையில் பாராயணம் செய்தால் லட்சம் தடவை சொன்னபலனும்