திருவெண்காடு திருத்தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதனை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு திருத்தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை
விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். புதன் திசை ஒவ்வொருவர் வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னதியில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி கிரகம்
என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், குழந்தைப்பேறு, செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான பலன்கள் கைகூடும். திருவெண்காடு
திருத்தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்
படுகின்றன. ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு வகையான ஆகமம் கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு திருத்தலத்தில் மூன்று வகையான ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன. திருவெண்காட்டில் உள்ள மூன்று குளங்களிலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.
சுவாமி,
அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தைப்பேறு நிச்சயம் உண்டு. திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.
அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மனகசப்பும், கருத்து
வேறுபாடுகளும் விலகும். இத்திருத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்டபத்தில் திருத்தல வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
திருவெண்காடு திருத்தலத்தில் ஹோமம் செய்தால் பில்லி சூனியம், திருஷ்டிகள் விலகும். கோர்ட்டு வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இத்திருத்தலத்துப் புராணப்படி
மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்துப் போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தியின் உடம்பில் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும்போது அதனை
பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. திருவெண்காடு திருத்தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளைப் பொறுமையாகப் பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியைப் பெறலாம். இத்திருத்தலத்தில் முறைப்படி பூஜைகள்
செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும். இத்திருத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரங்களை எல்லாம்
தவறாது தருபவள். காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும். நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. திருவெண்காடு திருத்தலத்தில் சுற்றுப்
பிரகாரங்கள் பெரியதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது. சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கிறது. எனவே
பூஜை நேரத்தை கணக்கிட்டு சுற்றுப்பயணத்தை அமைப்பது நல்லது.
ஓம் நமசிவாய🙏🏾
mahaperiyavaa.blog/2021/12/04/%e0…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

7 Dec
Many would have already heard about this incident. But just a reminder so that we don’t forget about faith. A British Collector named Rose Peter was the Collector of Madurai from 1812 to 1828. Though a Christian he respected all faiths including Hinduism and also honored local
practices. Collector Peter was the temple administrator and conducted all his duties with sincerity and honesty and respected the religious sentiments of all people.
This noble trait earned him the popular nickname ‘Peter Pandian'. Meenakshi Amman Temple was situated between
Collector Peter's residence and office. Everyday he used to go to the office by his horse and while crossing the temple, he got down from his horse, removed the hat and his shoes and crossed the whole path on his foot. Through this small gesture he expressed his reverence to the
Read 10 tweets
7 Dec
1962 ஆம் வருடம், இளையாத்தங்குடியில் வியாச பாரத ஆகம சில்ப சதஸ் நடந்து கொண்டு இருந்த சமயம். ஒரு நாள் சதஸிற்கு வந்திருந்த ஸ்தபதிகள், தொல் பொருள் இலாகா அதிகாரிகள் எல்லோரையும் பெரியவா கூப்பிட்டு அனுப்பினார். நடைபெறும் மகாநாட்டிற்கு உபயோகமான அறிவுரைகளை வழங்கினார். பின்னர், "தமிழ் Image
நாட்டில் எந்த ஊரில் உள்ள சிற்பங்கள் மிக சிறப்பானவை" என்று அந்த மகாநாட்டில் பங்கு பெற்ற வல்லுனர்களிடம் மிகவும் அடிப்படையான சாதாரண கேள்வியாக இதைக் கேட்டார். பதிலளிப்பது மிகவும் எளிதாக இருக்கவே எல்லோரும் ஒருமித்த குரலில், தமிழ் நாட்டில் பல்லவ ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்ட மாமல்ல
புரத்துச் சிற்பங்களே மிக சிறப்பானவை என்று உடனே பதில் சொல்லிவிட்டனர். "சரி அந்த சிற்பங்களுக்குள் எது மேன்மையானது” என்று ஸ்ரீ பெரியவா அவர்களிடம் கேட்டார்.
அர்ஜுனன் தபஸ் என்றனர். "அந்த சிற்பத்தின் போட்டோ ஏதாவது இருக்கா?" என்று ஸ்ரீ பெரியவா கேட்க, இவர்கள் போய் தேடி எடுத்து வந்தனர்.
Read 10 tweets
6 Dec
Very dangerous situation. When are we going to wake up?
நாம் கார், பஸ், ட்ரெயின்களில் பயணம் செய்யும் போது ஆங்காங்கே மலைகளில் சிலுவைகளை நட்டு வைத்திருப்பதையும் பாறைகளில் பைபிள் வசனங்கள் எழுதி இருப்பதையும் பார்த்திருப்போம். ஆள் நடமாட்டம் இல்லாத மலை உச்சிகளில் போய் சிலுவையை வைக்க
வேண்டிய அவசியம் தான் என்ன? Law of adverse possession என்று ஒரு சட்டம் உள்ளது. ஒரு சொத்து இன்னொருவருக்கு சொந்தமானதாக இருந்தாலும் ஒருவர் உபயோக பாத்தியதை இருப்பதாக நிரூபித்தால் அந்த சொத்து அவருக்கே சொந்தமாகும். அந்த சொத்து தனி நபருடையது என்றால் 12 வருட அனுபவ பாத்தியதை போதும். அரசு
சொத்து என்றால் முப்பது வருட அனுபவ பாத்தியதை வேண்டும். இந்த சிலுவைகளின் காரணம் இப்போது புரிகிறதா? பொறம்போக்கு, நத்தம் இடங்களை கையகப்படுத்த செய்யும் தந்திரம் தான் இது. ஒரு மலையில் சிலுவை நட்டு பாறைகளில் சிலுவைகளையும் பைபிள் வசனங்களையும் எழுதி வைப்பார்கள். வருடம் ஒரு தடவை பெயருக்கு
Read 9 tweets
6 Dec
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த சித்தூரில், மன்றோ என்ற ஆங்கிலேயர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருமலை திருப்பதி கோயிலிலிருந்து அரசுக்கு நிறைய வருமானம் வந்ததால், மாவட்ட ஆட்சியர் மன்ரோ அடிக்கடி
திருமலைக்கு வருவார். அதிகார ஆணவம் மிகுந்தவரான அவர் திருப்பதியில் மொட்டை அடித்துக் கொண்டு வரும் பக்தர்களைப் பார்த்து, ஏன் முடியை வெட்டுகிறீர்கள்? தலையையே வெட்டி இறைவனுக்குக் கொடுக்க வேண்டியது தானே என்று ஏளனம் செய்வார். லட்டு பிரசாதம் பெற்றுச் செல்லும் பக்தர்களைப் பார்த்து இப்படிச்
சுகாதாரம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் தான் எல்லா வியாதிகளும் உண்டாகின்றன என்று சொல்வார். கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷம் செய்பவர்களைப் பார்த்து, ஏன் இப்படி மது அருந்திய கரடி போலக் கத்துகிறீர்கள், அந்தச் சிலை என்றாவது உங்கள் கோஷங்களுக்குச் செவி சாய்த்திருக்கிறதா என்று கேட்பார்.
Read 11 tweets
6 Dec
#கார்த்திகைஸ்பெஷல்
கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்பனுக்கு மாலைப் போடும் பக்தர்களின் எண்ணிக்கை தான் அதிகம். தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் முருகனுக்கு இருப்பது போல் அறுபடை வீடுகள் உள்ளன.
1. ஆரியங்காவு
2. அச்சன்கோவில்
3. குளத்துப்புழா
4. எரிமேலி
5. பந்தளம்
6. சபரிமலை
1. ஆரியங்காவு: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக ஐயப்பன் காட்சித் தருகிறார்.
2. அச்சன்கோவில்:
செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும்
Read 9 tweets
6 Dec
#ஶ்ரீசம்மோஹனகிருஷ்ணன் இவரை பற்றி இன்று தான் எனக்கு தெரிய வந்தது. எப்படி அர்தநாரீஸ்வரர் பாதி சிவன் பாதி பார்வதியாக உள்ளாரோ அதே போல பாதி கிருஷ்ணன் பாதி ருக்மிணியாக சம்மோஹன கிருஷ்ணன் தரிசனம் தருகிறார். இவரை வழிபட்டால் குடும்ப வாழ்வில் கணவன் மனைவியிடையே இருக்கும் மனஸ்தாபங்கள் மறைந்து
குடும்பங்களில் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மரீசி முனிவர் இவர் மேல் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இயற்றி நமக்கு அருளியுள்ளார். காலையில் நீராடிய பின் மூன்று முறையும் இரவில் உறங்கப் போகுமுன் ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மைகளை தரும்.
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
இஷீசாபம் வேணுவாத்தியம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(