#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த சித்தூரில், மன்றோ என்ற ஆங்கிலேயர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருமலை திருப்பதி கோயிலிலிருந்து அரசுக்கு நிறைய வருமானம் வந்ததால், மாவட்ட ஆட்சியர் மன்ரோ அடிக்கடி
திருமலைக்கு வருவார். அதிகார ஆணவம் மிகுந்தவரான அவர் திருப்பதியில் மொட்டை அடித்துக் கொண்டு வரும் பக்தர்களைப் பார்த்து, ஏன் முடியை வெட்டுகிறீர்கள்? தலையையே வெட்டி இறைவனுக்குக் கொடுக்க வேண்டியது தானே என்று ஏளனம் செய்வார். லட்டு பிரசாதம் பெற்றுச் செல்லும் பக்தர்களைப் பார்த்து இப்படிச்
சுகாதாரம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் தான் எல்லா வியாதிகளும் உண்டாகின்றன என்று சொல்வார். கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷம் செய்பவர்களைப் பார்த்து, ஏன் இப்படி மது அருந்திய கரடி போலக் கத்துகிறீர்கள், அந்தச் சிலை என்றாவது உங்கள் கோஷங்களுக்குச் செவி சாய்த்திருக்கிறதா என்று கேட்பார்.
அந்த ஆட்சியருக்கு வேதாந்த தேசிகர் என்ற உதவியாளர் ஒருவர் இருந்தார். வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அவரை ஆட்சியர் அடிக்கடி ஏளனம் செய்வார். ஒருநாள் திருமலையில் பெருமாள் அமுது செய்த வெண் பொங்கலை பக்தர்கள் உண்டு கொண்டிருக்கையில் அங்கு வந்த ஆட்சியர் அதைப் பார்த்து அருவருப்பு அடைந்து
ஏளனம் செய்தார். சிறிது நேரத்துக்கெல்லாம் அவருக்குக் கடுமையான வாயிற்று வலி ஏற்பட்டு வலி தாங்காமல் கத்தத் துவங்கி விட்டார். ஆங்கிலேய மருத்துவர்கள் வந்து என்ன மருந்து கொடுத்தும் வலி நிற்கவில்லை. அப்போது அவர் உதவியாளர் பெருமாளோட வெண்பொங்கல் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். பெருமாளை
மனசுக்குள்ள தியானம் பண்ணிண்டு, இதை சாப்டுங்கோ. வந்த வலி தானா போயிடும் என்றார். பரிகாரத்தைக் கேட்டதும், மன்றோவின் முகம் பிரகாசமானது. மறுவார்த்தை பேசாமல், மாலவனின் பிரசாதமான வெண்பொங்கலை வாங்கி, கண்களை மூடி பெருமாளை தியானித்து, அதை உண்ணத் தொடங்கினார். தவறை ஒப்புக்கொண்டால், மன்னிப்பத
தானே தெய்வத்தின் குணம்! ஒவ்வொரு கவளமாக வெண் பொங்கலை சாப்பிடச் சாப்பிட அதுவரை இருந்த வயிற்று வலியும், குத்தல் வலியும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. பிரசாதம் முழுக்கத் தீர்வதற்கும், வயிற்று வலி முற்றிலுமாகத் தீர்வதற்கும் சரியாக இருந்தது. ஆச்சரியப்பட்டார் மன்றோ. எங்கள் தேசத்து
மருத்துவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் தீராத இந்த வயிற்று வலி, பொங்கல் பிரசாதத்தால் தீர்ந்தது என்றால், அது வேங்கடவனின் அருளாசிதான் என்று நெகிழ்ந்து போனார். இதோடு நிற்கவில்லை, தன்னைக் குணமாக்கிய இந்த வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத்துக்கும் பெருமாளுக்கு நடக்க வேண்டும் என்று,
வயல்பாடு தாலுகாவில் உள்ள ‘கோடபாயல்’ என்ற கிராமத்தின் வருமானம் முழுவதையும் திருப்பதி பெருமாளுக்கே எழுதி வைத்து உத்தரவு போட்டார். அத்துடன், ஒரு பக்தனாகத் திருப்பதிக்குப் போய் பிரம்மோத்ஸவம், சகஸ்ர கலசாபிஷேகம் போன்றவற்றை நடத்தி, பெருமாளை வணங்கிப் பேறு பெற்றார். கோடபாயல் கிராமத்தின்
வருவாயில் இருந்து எழுதி வைக்கப்பட்ட அந்த வெண் பொங்கல் பிரசாதம், இன்றைக்கும் திருப்பதி ஆலயத்தில் நண்பகல் வழிபாட்டுக்குப் பிறகு ‘மன்றோ பிரபு கங்காளம்’ என்று நடந்து வருகிறது.
இவ்வாறு இறை நம்பிக்கை இல்லாத மன்றோ போன்றவர்களுக்கும் தனது மேன்மைகளைக் காட்டி அவர்களையும் வசீகரிப்பதால்
திருமால் ‘ஸர்வதர்சனஹ’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 95-வது திருநாமம். “ஸர்வதர்சனாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு எம்பெருமான் தனது அனைத்து மேன்மைகளையும் நன்கு காட்டி அவர்கள் வாழ்வில் மேன்மை அடைய அருள்புரிவார்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

8 Dec
பஞ்சாயதன பூஜை - மஹா பெரியவா
எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும். ஈஶ்வரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் ImageImage
இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது சம்பிரதாயம். ஈஶ்வரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஶ்வர்ணமுகி ஶிலா என்ற கல் ஆந்திராவில் ஶ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஒடிய கல்.
விஷ்ணுவின் வடிவமான ஶாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது.
சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான ஸோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற ஸோணா (ஸோன் என்பார்கள்) நதியில் கிடைக்கிறது. இந்த ஐந்தையும் ஒரிடத்தில் வைத்தால்
Read 15 tweets
8 Dec
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சுதா என்ற பெண் ஒரு மகானிடம் சென்று அய்யா என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்து கொள்வதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது. என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள் என்றாள். Image
ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொன்னார், "ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30 நாள் உணவு கொடு. 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!"என்றார். குழப்பத்தில் இருந்த சுதா தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான
வாழ்க்கை கிடைத்தால் போது என்ற எண்ணத்தில் தைரியத்துடன் மகான்
சொல்லியது போல அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டாள் சுதா. மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு
Read 9 tweets
7 Dec
Many would have already heard about this incident. But just a reminder so that we don’t forget about faith. A British Collector named Rose Peter was the Collector of Madurai from 1812 to 1828. Though a Christian he respected all faiths including Hinduism and also honored local
practices. Collector Peter was the temple administrator and conducted all his duties with sincerity and honesty and respected the religious sentiments of all people.
This noble trait earned him the popular nickname ‘Peter Pandian'. Meenakshi Amman Temple was situated between
Collector Peter's residence and office. Everyday he used to go to the office by his horse and while crossing the temple, he got down from his horse, removed the hat and his shoes and crossed the whole path on his foot. Through this small gesture he expressed his reverence to the
Read 10 tweets
7 Dec
1962 ஆம் வருடம், இளையாத்தங்குடியில் வியாச பாரத ஆகம சில்ப சதஸ் நடந்து கொண்டு இருந்த சமயம். ஒரு நாள் சதஸிற்கு வந்திருந்த ஸ்தபதிகள், தொல் பொருள் இலாகா அதிகாரிகள் எல்லோரையும் பெரியவா கூப்பிட்டு அனுப்பினார். நடைபெறும் மகாநாட்டிற்கு உபயோகமான அறிவுரைகளை வழங்கினார். பின்னர், "தமிழ்
நாட்டில் எந்த ஊரில் உள்ள சிற்பங்கள் மிக சிறப்பானவை" என்று அந்த மகாநாட்டில் பங்கு பெற்ற வல்லுனர்களிடம் மிகவும் அடிப்படையான சாதாரண கேள்வியாக இதைக் கேட்டார். பதிலளிப்பது மிகவும் எளிதாக இருக்கவே எல்லோரும் ஒருமித்த குரலில், தமிழ் நாட்டில் பல்லவ ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்ட மாமல்ல
புரத்துச் சிற்பங்களே மிக சிறப்பானவை என்று உடனே பதில் சொல்லிவிட்டனர். "சரி அந்த சிற்பங்களுக்குள் எது மேன்மையானது” என்று ஸ்ரீ பெரியவா அவர்களிடம் கேட்டார்.
அர்ஜுனன் தபஸ் என்றனர். "அந்த சிற்பத்தின் போட்டோ ஏதாவது இருக்கா?" என்று ஸ்ரீ பெரியவா கேட்க, இவர்கள் போய் தேடி எடுத்து வந்தனர்.
Read 10 tweets
6 Dec
Very dangerous situation. When are we going to wake up?
நாம் கார், பஸ், ட்ரெயின்களில் பயணம் செய்யும் போது ஆங்காங்கே மலைகளில் சிலுவைகளை நட்டு வைத்திருப்பதையும் பாறைகளில் பைபிள் வசனங்கள் எழுதி இருப்பதையும் பார்த்திருப்போம். ஆள் நடமாட்டம் இல்லாத மலை உச்சிகளில் போய் சிலுவையை வைக்க
வேண்டிய அவசியம் தான் என்ன? Law of adverse possession என்று ஒரு சட்டம் உள்ளது. ஒரு சொத்து இன்னொருவருக்கு சொந்தமானதாக இருந்தாலும் ஒருவர் உபயோக பாத்தியதை இருப்பதாக நிரூபித்தால் அந்த சொத்து அவருக்கே சொந்தமாகும். அந்த சொத்து தனி நபருடையது என்றால் 12 வருட அனுபவ பாத்தியதை போதும். அரசு
சொத்து என்றால் முப்பது வருட அனுபவ பாத்தியதை வேண்டும். இந்த சிலுவைகளின் காரணம் இப்போது புரிகிறதா? பொறம்போக்கு, நத்தம் இடங்களை கையகப்படுத்த செய்யும் தந்திரம் தான் இது. ஒரு மலையில் சிலுவை நட்டு பாறைகளில் சிலுவைகளையும் பைபிள் வசனங்களையும் எழுதி வைப்பார்கள். வருடம் ஒரு தடவை பெயருக்கு
Read 9 tweets
6 Dec
#கார்த்திகைஸ்பெஷல்
கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்பனுக்கு மாலைப் போடும் பக்தர்களின் எண்ணிக்கை தான் அதிகம். தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் முருகனுக்கு இருப்பது போல் அறுபடை வீடுகள் உள்ளன.
1. ஆரியங்காவு
2. அச்சன்கோவில்
3. குளத்துப்புழா
4. எரிமேலி
5. பந்தளம்
6. சபரிமலை
1. ஆரியங்காவு: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக ஐயப்பன் காட்சித் தருகிறார்.
2. அச்சன்கோவில்:
செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(