'விளையாடாத கண்ணா.. எனக்குக் குடும்பம் இருக்கு... பிள்ளைங்க இருக்காங்க.. திடீர்னு இப்படி என்னைக் கூப்பிட்டா... நான் இல்லாம அவங்க என்ன பண்ணுவாங்க?'
"இந்த உலகத்தையே பார்த்துக்கிறவன் நான்.. உன் குடும்பத்தைப் பார்த்துக்க மாட்டனா?"
'எனக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு.. நீதானே சொல்லிருக்க.. கடமையை ஒழுங்கா செய்னு.. அப்புறம் இப்படி சொன்னா எப்படி?!'
"அப்போ கடமையை செய்யாம, எதுக்கு சொர்க்கத்துக்குப் போகணும்னு இங்க வந்து என்னைக் கேட்ட?? சாகவேணாம்.. ஆனா சொர்க்கம் மட்டும் வேணும்னா அது எப்படி?
"நான் என்ன சொல்லணுமோ, அதையெல்லாம் கீதைல ஏற்கனவே சொல்லிட்டேன். நீங்க அதைப் படிக்காம, உங்க இஷ்டத்துக்கு எதையோ கற்பனை பண்ணிட்டு அந்த கற்பனை உலகத்தை நிஜம்னு நம்பி வாழறீங்க..."
"உங்களுக்கு எது வசதியோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மற்றதை விட்டுடறீங்க ..."
"இல்லை.. இதெல்லாம் தேவைதான்!! ஆனா, நீங்க எதையும் உண்மையான அர்த்தம் புரிஞ்சு பண்லைன்னு சொல்றேன்."
"இந்த உலகத்தில இருக்கிற நீங்க, பார்க்கிறது கேட்கிறது எல்லாமே நான்தான்.கடைசியில நீங்க வந்து சேரப்போறதும் என்கிட்டதான்."
"இடையில நீ வாழற இந்த வாழ்க்கையில உன்னுடைய கர்மாவுக்கேற்ற பலனை அனுபவிச்சு, பின் என்கிட்ட வந்து சேரப்போற.. "
"அப்படி என்கிட்ட உன்னை சேர்க்கக்கூடிய பாதையில் நடக்கும்போது நீ பார்ப்பவைதான், அனுபவிப்பவைதான்.. சொர்க்கமும் நரகமும்..."
"நீ எதை அனுபவிக்கணும், பார்க்கணும்னு நீதான் தீர்மானம் செய்ற.. உன் கர்மாக்கள் மூலமாக.."
"நீ இறந்தபிறகு எங்கு போகணும்னு யோசிக்கறதை விட்டுட்டு, வாழும்போது எப்படி இருக்கணும்னு யோசி.."
"சொர்க்கமும் நரகமும் நீ வாழற வாழ்க்கைலதான் இருக்கு.. எங்கோ ஆகாயத்துல இல்லை.."
"வாழும்போதே சொர்க்கத்தை அடையும் வழியைதான் நான் கீதையில சொல்லிருக்கேன்."
"அதைப் புரிந்து படி.. உன் எல்லா கேள்விகளுக்கும் அதில் விடையுண்டு."
"அதை ஞாபகப் படுத்ததான் இந்த விழாக்கள்."
"கீதையின்படி, தர்மத்தைப் போற்றி, கர்மத்தை நிறைவேற்றி வாழ்ந்தால். சொர்க்கம் போன்ற வாழ்வை வாழ்ந்து இறுதியில் என் பதத்தை அடைவாய்."
"உனக்கு நல்வழிகாட்ட பல அவதார ரூபங்களிலும் தோன்றினேன்."
"உனக்கு வழி காண்பித்து பரமபத வாசலை முதலில் கடந்து உன்னை வழிநடத்துகிறேன்.. இதுதான் தத்துவம்!"
"ஆனால் இது புரியாமல் வருடா வருடம் ஒரு சடங்காக மட்டுமே நீங்கள் இதை செய்கிறீர்கள்.."
"பரமபத வாசலைக் கடக்கும்போது இந்த உண்மையை உணர்ந்து.. தன் தவறுகளை சரி செய்ய முடிவெடுத்து.. நான் காண்பித்த வழி பின்பற்ற முடிவெடுத்தவர் எத்தனை பேர்??"
மஹாபாரதப்போர் 18 நாள் யுத்தம் வெற்றி பாண்டவர்களுக்கு ஆனால், ஒரு விஷயம் கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்...
இவர்களின் வீழ்ச்சிக்காகக்
ஸ்ரீ கிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் வெற்றியை தந்தது. இதில் யாரை வீழ்த்த தீட்டிய திட்டம் சிறப்பு வாய்ந்தது தெரியுமா? அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய யுக்தி தான் சிறப்பு வாய்ந்தது என்று நினைப்பார்கள்.
பூஜா என்ற ஒரு அழகான இளம்பெண், ‘பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது குறித்து பூஜா கூறியதாவது, ‘என் வயது 25 நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்றார்.
இந்த பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது,
‘உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான்.
தஞ்சையில் இருந்து,
சென்னைக்கு பத்திரிகை
பணிக்கு வந்த போது
நல்ல சம்பளம்தான்.
ஆனாலும் ஊதாரி.
வீட்டுக்கு போன் போட்டு,
ஏதாவது பொய் சொல்லி,
“ ரெண்டாயிரம்
மணியார்டரில்
அனுப்புங்கப்பா” என்பேன்.
(அப்போது நெட் பேங்க்கிங்
கிடையாது)
அப்பாவும் உடனடியாக
அனுப்பி விடுவார்.
(சம்பளத்தைவிட
அதிகமாக அப்பாவிடம்
வாங்கியிருக்கிறேன்.)
மணியார்டரில் பணம்
அனுப்பும் போது, அந்த
ஃபாரத்தில் சில வரிகள்
ஆங்கிலத்தில் எழுதி
அனுப்புவார் அப்பா.
(ஆங்கிலத்திலும் மிகப்
புலமை பெற்றவர்)
அதைக் கையால்
எழுதாமல், யாரிடமாவது
தட்டச்சு செய்து அனுப்புவார்.
அது அவரது வழக்கம்.
ஒவ்வொரு முறையும்,
“மை டியர் சன்.. (my dear son)”
என்று ஆரம்பிக்கும் அந்த
குறுங் கடிதம்....
ஒரு முறை மணிஆர்டர்
வந்த போது , அதில்
தட்டச்சியிருந்த
வார்த்தையைப் பார்த்து
அதிர்ந்தேன்.
மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம் அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்!
*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமூகமாக தீர்த்துக் கொள்ளுங்கள்.
*D - Depression*
மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.
*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.
ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்.
விடியற்காலையில் சேவல் வழக்கம் போல் கூவினால் மண்ணில் ‘உயிர்’ இருக்கிறது என்று கூறிக்கொள்வார்களாம்.
கூவாவிட்டால் ‘மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்’ என்று தனக்கு உள்ளேயே சொல்லிக் கொள்வாராம்.
மொத்தத்தில் சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவார். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக் கிண்டும் போது அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக் கூவும்.
மண்ணை தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் அது தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது என்பது அனுபவசாலிகள் வாக்கு.
#தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு, அத்வைத சித்தாந்தத்தை இவ்வுலகுக்கு அளித்த ஆதி சங்கரர் #வாழ்ந்தது#வெறும் 32 #வருடங்கள் மட்டுமே.
எட்டு வயது பாலகனுக்கு என்ன தெரியும் ?
ஆனால், அவன் அந்த வயதில் துறவறம் மேற்கொள்ளவிருக்கும் செய்தியை அறிந்து அதிர்ந்துபோன அவனது தாய் ஆர்யாம்பாளுக்கு, தான் சந்நியாசம் மேற்கொள்ள கலங்கிய மனதோடு சம்மதித்த அந்த தாய்க்கு, ஆறுதலாய் ஒரு வாக்களிக்கிறான், சங்கரன்
“ அம்மா, நீ என்னை எப்போது அழைத்தாலும், நான் இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அக்கணமே உன் முன் இருப்பேன்”.
இன்புற்ற தாய், தன் பிள்ளையைப் பிரியச் சம்மதிக்கிறாள்.
தாயின் இறுதிக்காலம் நெருங்குகிறது. தன் பிள்ளை இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்று அறிந்துகொண்ட அந்தத் தாய்