கதையின் முடிவில் இந்த கதாபாத்திரங்கள் யாரென்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்
குருவுக்கும் கேடிக்கும் என்ன உறவு என்று கண்டு பிடிப்பதைவிட, பால் பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லைக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பது சுலபம்
அப்படி என்னதான் உறவு என்று ஆராய்ச்சியில் இறங்க விரும்புகிறவர்கள், ஒரு புத்திசாலியை குரு-கேடி ரெண்டு பேரோடையும் பேசுவதற்கு அனுப்பினால்....
சத்தியமா இருவரும் உறவுதான் என்பதைக் கண்டுபிடித்த கையோடு அந்த புத்திசாலி கூவத்தில் குதித்தே செத்துவிடுவார்.
ஒரு நாள் காஞ்சீபுரம் எஸ்.எம். சில்க்ஸ் மஞ்சள்பையும், பஸ் ஸ்டாண்டில் வாங்கிய காய்ந்துபோன ரெண்டு சாத்துக்குடி பழங்களுடனும் வாசலில் வந்து நின்ன குருவைப் பார்த்துப் பூரித்த
கேடியின் வயிற்றில் புளி கரைந்து கரைந்து உடம்பே ஒரு புளியோதரைப் பார்சலாய் ஆனது போல உணர்ந்தான்.
"குருநாதா! (இப்போ இவர் யாரென்று கண்டுபிடிப்பவர் முடிந்தால் உங்கள் முதுகை நீங்களே தட்டி கொள்ளுங்கள்) சௌக்யமா?’ என்று பாய்ந்துவந்து குருவைக் கட்டிண்டு கேடி குலுக்கிய குலுக்கில்....
குருவின் வயிற்றிலிருந்த காப்பி.... பால் வேறு, டிகாஷன் வேறு ஆயிருக்கும்.
அந்த நேரம் பார்த்து கிச்சன்லேந்து வெளியே வந்த கோமு (எ) கோமளவல்லி, தன் ஆத்துக்காரரை, அவரைவிட அசிங்கமான இன்னொருத்தர் கட்டிப்பிடிச்சுண்டு இருப்பதை பார்த்து அதிர்ந்தாள்.
’இது யாருடா கேடி? உன் பார்யாளா?’ குருவின் வாய் வசந்தபவன் ஓட்டலின் வாஷ்பேசின் போலானது.
“பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது. அப்போ புஹாரி ஹோட்டல் டூத்-பிக் மாதிரி இருந்தா; இப்ப புதுசா வாங்கின டூத்-பேஸ்ட் மாதிரி ஆயிட்டாளேடா!”
"சும்மாயிரு குரு" கேடி முணுமுணுத்தான்.
"அப்புறம் உன் வாயிலேருந்து நுரை நுரையா வரும்."
பரஸ்பரம் குசலம் விசாரிச்சு முடிஞ்சதும் குரு, தீபாவளிக்குச் செய்த பலகாரம் மாதிரி விவகாரமாய் சில அயிட்டங்களை எடுத்து மேஜையில் வைத்தான்.
அதைப் பார்த்த.... அடுப்படியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பூனை.....
திடுக்கிட்டு எழுந்து அடுத்த ஊருக்கு அவசரமாய் குடிபெயர்ந்தது.
ஒரு வழியா, கோமு காப்பியைக் கலந்துகொண்டு வைத்த பிறகுதான் குருவின் பட்சணவாசனை மறைந்து வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது.
’டேய் கேடி நீ ஏண்டா இன்னும் என்னோட வாட்ஸ்-ஆப் க்ரூப்புல சேராம இருக்கே?’ என்று முகத்தில் எள்ளும், கொள்ளும், ஏகப்பட்ட பருப்பு வகைகளும் வெடிக்கக் கேட்டான் குரு
“எவ்வளவு நல்ல நல்ல மெஸேஜ் எல்லாம் ஃபார்வர்ட் பண்றேன் தெரியுமா?”
“எனக்குப் பிடிக்கலேடா குரு” கேடி சுரத்தே இல்லாமல் கூறினார். “Forward வசதி மாதிரியே automatic delete-ம் இருந்தாச் சேர்ந்துக்கறேன்.”
கோமு அன்னிக்கு ஸ்பெஷலாகச் செஞ்ச #கபூர்தலா_கத்திரிக்காய்_கொத்சு சாப்பிட்டால், குரு காஞ்சீபுரத்துக்குப் பதிலாக காசிக்கே ஓடிடுவான் என்று மனதுக்குள் குதூகலித்தான்.
ஆனால், குருவோ பொங்கலில் புழல் ஏரியளவுக்குக் குளம்வெட்டி, அதில் மொத்தக் கொத்சையும் கொட்டிக் கொண்டான்.
இன்னும் கொஞ்சம் கொத்சு மட்டும் மீதம் இருந்திருந்தால் கத்திரிக்காயை எடுக்கக் கட்டுமரத்திலே தான் போகவேண்டி வந்திருக்கும்.
உண்ட களைப்பில் குரு கூடத்தில் படுத்துக் குறட்டை விட ஆரம்பிக்கவே, கோமு கேடியை இழுத்துண்டு போனாள்.
”இத பாருங்கோ, இதுவரைக்கும் நான் எனக்குன்னு ஒரு BMWவோ HUMMERரோ கேட்டதில்லை. உண்மையைச் சொல்லுங்கோ.
ஒரு சட்டி பொங்கலையும் ஒரு பானை கொத்சையும் காலி பண்ணிட்டுக் குறட்டை விடற்தே கூடத்துல ஒரு ஜென்மம். இது யாரு? இவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு?”
இப்படி திடீர்னு கேட்டா எப்படி? அமலாக்கத்துறையிடம் அகப்பட்ட அரசியல்வாதிபோலக் கேட்டான் கேடி
அதை விலாவரியா ஒரு நாப்பது பக்க நோட்டுல எழுதி வச்சிருந்தேன். தேடிக் கண்டுபிடிச்சுச் சொல்லட்டுமா?”
ஒண்ணும் வேணாம் முதல்ல அந்த ஜந்துவைக் கெளப்புங்கோ இல்லேன்னா நான் எங்கப்பா ஆத்துக்குப் போறேன்
”உங்கப்பா ஆமா? அது இடிஞ்சு போயி இப்ப ஊர்க்காரங்க எருமை மாட்டைக் கட்டி இருக்கிறதா போன வாரம் தானே சொன்னே?”
“அது கிராமத்து வீடு,” கோமு கூவினாள். “நான் பெங்களூரு ஆத்துக்குப் போறேன். அங்கே எருமையே கிடையாது.”
“அதான் நீ போறியா?”
இத பாருங்கோ, ஓண்ணு இந்த வீட்டுல நானிருக்கணும்; இல்லே அந்தக் காண்டாமிருகம் இருக்கணும்
கரெக்ட் ஒரு வீட்டுல ரெண்டு காண்டாமிருகம் இருந்தா கஷ்டம்தான்
நான் அப்பா ஆத்துக்குப் போறேன்னு கொஞ்சம்கூட வருத்தமேயில்லையா?
அதுக்கு உங்கப்பாதானே வருத்தப்படணும்? பிருந்தாவன்ல போறியா இல்லை மெயிலா?
முன்குறிப்பு: எனது மகளாக பாவிக்கும் இப்போது ஆஸ்ட்ரேலியாவில் இருக்கும் #க்ளாரா (இவள் திருமணம் நிகழ்வு பற்றியவைகளை ஓராண்டு முன்பு பதிந்தது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.
I don't know how to extract that again) மூன்று ஆண்டுகளுக்கு அவள் அமெரிக்கா (அட்லாண்ட்டாவில் இருந்தபோது) முன்பு அவளுடைய நண்பர் ஒருவரின் அனுபவத்தை எனக்கு அனுப்பிய தகவல் தான்.... 👇👇👇👇👇