திருமலையில் சுப்ரபாத சேவைன்னே ஒரு தரிசனம் உண்டு! விடியற்காலை சுமார் 02:30 மணிக்கு துவங்கும் சுப்ரபாதம்.
அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் நடை சாத்திக் கோவிலை மூடி இருப்பாங்க.
சடக்குன்னு அடுத்த நாளுக்காக, மீண்டும் திறந்திடுவாங்க! கோவிலில் முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?
வேதம் ஓதுபவர்களுக்கா? - இல்லை!
தமிழ் ஓதும் விற்பன்னருக்கா - இல்லை!
அரசனுக்கா? மந்திரிக்கா? - இல்லை! இல்லை!!
படித்த மேதைக்கா - இல்லை!
நேத்து உண்டியலில் எல்லாரையும் விட அதிகமாப் பணம் கொட்டினவருக்கா? - இல்லவே இல்லை!
இவர்கள் எல்லாரும் கைகட்டிக் காத்திருக்க, எங்கிருந்தோ "மாஆஆ" என்று ஒரு சத்தம்!
கூட்டம் அதிகம் இல்லை! குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்;
இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம். இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலில்! அருகே நந்தா விளக்கு!
எதிர்ப் பக்கம் கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாம் எல்லாரும் நிற்கிறோம்.
வாயிலைக் காக்கும் துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.
அர்ச்சகர்கள் குடங்களில் நீருடன் நிற்கின்றனர். பூக்குடலைகள் தாங்கிக் கொண்டு இன்னும் சில பேர் காத்துள்ளனர் - யாருக்கு?
திருமலையில் ஜீயர் என்னும் வைணவத் தலைவருக்கு "பெரிய கேள்வி அப்பன்" என்ற தூய தமிழ்ப் பெயர்! ஆலய நிர்வாகத்தில் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்; ஆதலால், கேள்வியப்பன் என்ற தமிழ்ப்பெயரைச் சூட்டி, அந்தப் பதவியை உருவாக்கினார் இராமானுசர்.
அந்தக் கேள்வியப்பர் பூட்டின் சாவியைத், துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றார்; பின்னர் அவரும் காத்துள்ளார் - யாருக்கு?
அடச்சே!....வெள்ளைத் திரை ஒன்று போடப்பட்டுள்ளதே! நாம் காண முடியாதா? - முடியாது...முதல் தரிசனம் வேறு யாரோ ஒருவருக்கு! - யாரப்பா அது?
ஜீயர், அர்ச்சகர்கள் எல்லாரும் உடனே ஒதுங்கிக் கொள்கிறார்கள்!
படிக்காத, பகட்டு இல்லாத ஒருவர் உள்ளே வர,
எல்லாரும் வழிவிட்டு ஓரமாக நின்று கொள்கிறார்கள்!
யாருக்கு இப்படி ஒரு மரியாதைன்னு பாக்குறீங்களா? -
பசுவும், கன்றுமாய் ஓட்டி வரும் இடையருக்கு, பொற்கதவின் முன் வந்து நிற்க...
மெல்லத் திரையை விலக்கி....அவர் மட்டும் இறைவனை ஹா...வென்று பார்க்கிறான்! அவருடன் பசுவும் கன்றும் இறைவனைக் காண்கின்றன!
பசுவும் கன்றுமாய், வரும் இடையரின் முகத்தில் தான் திருமலை அப்பன் முதலில் விழிக்கின்றான்!
இந்தப் பழக்கம் பல நூற்றாண்டுகளாய் இருந்து வரும் ஒன்று! சாதி வித்தியாசங்கள் பார்க்கப்பட்ட காலத்தில் கூட, இந்த வழக்கம் நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது.
கோ+விந்தன் = பசு+காப்போன் அல்லவா அவன்!
உயிர்கள் என்னும் பசுக்களைக் காத்து மேய்க்கும் "நல்ல மேய்ப்பன்"! அதனால் தான் பசுவைக் காட்டி, அன்றைய பணியை, இறைவனுக்கே அறிவுறுத்திச் செல்கிறான் இந்த இடையன்!
அதற்கு அப்புறம் தான் ஜீயரும், அர்ச்சகர்களும், இன்ன பிற அடியவர்களும் ஒவ்வொருவராய் உள்ளே செல்கிறார்கள்! அனைவர் கையிலும் மங்கலப் பொருட்கள் - கண்ணாடி, விளக்கு, மலர்மாலை என்று...
திண்டல் முருகன் கோயில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில், திண்டல்...
ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை மீது 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படும் திருத்தலம்.
🙏🇮🇳1
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று.
மூலவர்:
வேலாயுத சுவாமி, முருகன்
கட்டடக்கலை வடிவமைப்பு:
தென் இந்தியா, கோயில்கள்
கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். 🙏🇮🇳2
திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதில் கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபஸ்தம்பத்தின் நான்கு புறத்திலும் சமய தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு சிறப்பாக நடைபெறும்.
🙏🇮🇳3
#சிதம்பரத்தை நடராஜர் கோவில் என்று குறிப்பிட்டாலும் இங்குள்ள மூலவர் *ஆதிமூல நாதர்* என்னும் பெயரில் லிங்க வடிவில் அருள்புரிகிறார்.
கைலாய நாதரான சிவபெருமானின் நடனத்தை பூலோக மக்களும் தரிசிக்க விரும்பிய பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் தில்லைவனமான இத் தலத்தில் ஆதிமூல நாதரை நோக்கி தவமிருந்தனர்.
அம்முனிவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தைப்பூச நந்நாளில் உச்சிப்பொழுதில்
*திரிசக்ர முனிவர்கள்* என்னும் தில்லைவாழ் அந்தணர்களுடன் எழுந்தருளி நடன தரிசனம் அளித்தார். இதைவிட சிறப்பாக யாரும் நடனமாட முடியாது என்பதால் ஆடலரசன் என்னும் பொருளில் *நடராஜர்* எனப் பெயர் பெற்றார்.
சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,
உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். 🙏🇮🇳1
ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.
3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.
*தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம்.
🙏🇮🇳2
மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.
தவறாமல் இத்திருக்கோவிக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்.
#திருவாதிரை விரதம் - ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :
சிவபெருமானை வழிபடக்கூடிய பல்வேறு வகையான விரதங்களில் ஒன்று தான் திருவாதிரை. சிவபெருமானுக்கு மார்கழி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான விரத நாள் தான் திருவாதிரை விரதம்.
சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவாதிரை. ஆகவே சிவாலயங்களில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெறும்.
தமிழ்நாட்டில் பழமையான சிவன் கோயில்கள் நிறைய உள்ளன. அவற்றில் சமயக்குறவர்கள் என்று கூறப்படும் நால்வரால் பாடப்பட்ட 276 சிவன் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.