#சிதம்பரத்தை நடராஜர் கோவில் என்று குறிப்பிட்டாலும் இங்குள்ள மூலவர் *ஆதிமூல நாதர்* என்னும் பெயரில் லிங்க வடிவில் அருள்புரிகிறார்.
கைலாய நாதரான சிவபெருமானின் நடனத்தை பூலோக மக்களும் தரிசிக்க விரும்பிய பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் தில்லைவனமான இத் தலத்தில் ஆதிமூல நாதரை நோக்கி தவமிருந்தனர்.
அம்முனிவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தைப்பூச நந்நாளில் உச்சிப்பொழுதில்
*திரிசக்ர முனிவர்கள்* என்னும் தில்லைவாழ் அந்தணர்களுடன் எழுந்தருளி நடன தரிசனம் அளித்தார். இதைவிட சிறப்பாக யாரும் நடனமாட முடியாது என்பதால் ஆடலரசன் என்னும் பொருளில் *நடராஜர்* எனப் பெயர் பெற்றார்.
இந் நடனத்தை பார்வதிதேவியும் நின்று ரசித்துப் பார்த்தாள். இதனால் இவள் *சிவகாமி* என்று போற்றப் பட்டாள்.
சிவபெருமான் அருவம் உருவம் அருவுருவம் என இந்த மூன்று வடிவங்களிலும் அருள்புரியும் தலம் சிதம்பரம். மூலவர் திருமூலநாதர் *அரு உருவம்* ஆக லிங்க வடிவிலும், நடராஜர் *உருவம்* வடிவிலும், சிதம்பர ரகசியம் என்ற வெட்ட வெளியில் *அருவம்* நிலையிலும் அருள்புரிகிறார்.
ஏனைய கோவில்களில் பூஜையின் போது மட்டுமே மணி அடிப்பது வழக்கம். ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேரத்தை அறிவிக்கும் விதமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை மணி அடிக்கின்றனர். இதனை *நாழிகை மணி* என்று அழைக்கிறார்கள்.
*திருச்சிற்றம்பலம்*
🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆண்டு முழுவதும், அம்மனின் அருள் வேண்டி இக்கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். 🙏🇮🇳1
குறிப்பாக, பவானி அம்மனைத் தரிசிக்க, வார இறுதி நாட்களில், பக்தர்கள் அதிக அளவில் ஆலயத்திற்கு வருகை புரிகின்றனர். பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்வதற்காக, கோயில் நிர்வாகம் அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர். மேலும், கோயிலை நன்றாகப் பராமரித்தும் வருகிறார்கள்.
🙏🇮🇳2
பக்தர்கள், பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, 🙏🇮🇳3
சபரிமலை ஏறிச்செல்ல பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு - எருமேலிப் பாதை, வண்டிப் பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை.
பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர்.
இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரி யாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.
திண்டல் முருகன் கோயில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில், திண்டல்...
ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை மீது 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படும் திருத்தலம்.
🙏🇮🇳1
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று.
மூலவர்:
வேலாயுத சுவாமி, முருகன்
கட்டடக்கலை வடிவமைப்பு:
தென் இந்தியா, கோயில்கள்
கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். 🙏🇮🇳2
திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதில் கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபஸ்தம்பத்தின் நான்கு புறத்திலும் சமய தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு சிறப்பாக நடைபெறும்.
🙏🇮🇳3
சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,
உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். 🙏🇮🇳1
ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.
3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.
*தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம்.
🙏🇮🇳2
மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.
தவறாமல் இத்திருக்கோவிக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்.