திண்டல் முருகன் கோயில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில், திண்டல்...

ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை மீது 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படும் திருத்தலம்.

🙏🇮🇳1
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று.

மூலவர்:
வேலாயுத சுவாமி, முருகன்

கட்டடக்கலை வடிவமைப்பு:
தென் இந்தியா, கோயில்கள்
கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். 🙏🇮🇳2
திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதில் கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபஸ்தம்பத்தின் நான்கு புறத்திலும் சமய தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு சிறப்பாக நடைபெறும்.
🙏🇮🇳3
மூலவர்..

இக்கோயிலின் மூலவர், குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். 🙏🇮🇳4
இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு ஒரு சிறப்பு உள்ளது. பூந்துறை நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட போது வேளாளர்கள் ஒன்று கூடி இடும்பக் குமரனை வேண்டி அவர் மூலம் நாட்டில் மழை பெய்ய வேண்டிக் கொண்டனர். வேண்டுதலுக்கு பின் மழை பெய்து வளம் ஏற்பட்டது என்ற வரலாறு உண்டு. 🙏🇮🇳5
இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெற்று வருவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

🙏🇮🇳6
திருவிழா ..

மாதம்தோறும் கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். 🙏🇮🇳7
சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம்,

🙏🇮🇳8
கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது

🙏🇮🇳9
சிறப்பு ..

கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. 🙏🇮🇳10
முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

🙏🇮🇳11
திறக்கும் நேரம்...

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

🙏🇮🇳12
பிரார்த்தனை...

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசாமி கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால் எண்ணிய எண்ணங்களை எண்ணியபடியே வேலாயுதசாமி நிறைவேற்றுகிறார். 🙏🇮🇳13
புதிய வாகனங்கள் வாங்குவோர் திண்டல் மலைக்கு சென்று வேலாயுதசாமி கோயிலில் சிறப்பு பூசை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன் ..

வேண்டுதல் நிறைவேறியதும் முருகனுக்கு திருமுழுக்கு செய்தும், புது ஆடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

🙏🇮🇳14
தல சிறப்பு...

நெடுஞ்சாலையின் தொடக்கத்தில் அழகிய நுழைவாயிலும், ஓங்கி உயர்ந்த வளைவின் முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, மயில்வாகனம், சிவன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் பக்தர்களை வரவேற்கின்றனர்.

🙏🇮🇳15
முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். மெய்யறிவிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபட்டு செல்லும் பக்தர்களின் குறைகள் தீர்கிறது.

🙏🇮🇳16
அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்மண்டப முகப்பில் வேலாயுதசாமி சிலை அமையப்பெற்றுள்ளது. 🙏🇮🇳17
அங்கிருந்து தொடங்கும் படிகளை கடந்தால் இடும்பன் கோயிலை அடையலாம். காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வேலாயுதசாமி கருவறையில் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை போக்குகிறார்.

🙏🇮🇳18
மலைமகள் மகனாக, மாற்றார் கூற்றாக வேல் தாங்கி வேலாயுதசாமி உள்ளார். தீராவினை தீர்க்கும் வேலுடன் காட்சி தரும் திண்டல்மலை முருகனை வழிபடுவோர் எல்லாம் தெளிவடைகின்றனர்.🙏🇮🇳19
கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்று தாழ்வான பகுதியில் தன்னாசி குகை உள்ளது. இதில் சமய பெரியார்களான சன்னியாசிகள் வாழ்ந்த சிறப்பு பெற்றது. இந்த தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 🙏🇮🇳19
மலையின் வடகிழக்கு பகுதியில் உள்ள அழகிய இயற்கைச்சுனையில் வற்றா நீரூற்று ஆண்டவனின் அபிஷேகத்திற்கும், பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது.

🙏🇮🇳20
பூசை ..

ஒரு நாளைக்கு மூன்றுகாலப் பூசை நடக்கிறது. காலை 7 மணிக்கு காலை சந்தி பூசையும், 12 மணிக்கு உச்சிக்கால பூசையும், மாலை 6 மணிக்கு சாயரட்சை பூசையும் நடக்கிறது. காலை 6 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணியளவில் அபிடேக ஆராதனை நடக்கிறது.

#வாழ்க_பாரதம் 🙏🇮🇳
#வளர்க_பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

22 Dec
#பவானி அம்மன் திருக்கோவில்

பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம்.

ஆண்டு முழுவதும், அம்மனின் அருள் வேண்டி இக்கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். 🙏🇮🇳1 Image
குறிப்பாக, பவானி அம்மனைத் தரிசிக்க, வார இறுதி நாட்களில், பக்தர்கள் அதிக அளவில் ஆலயத்திற்கு வருகை புரிகின்றனர். பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்வதற்காக, கோயில் நிர்வாகம் அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர். மேலும், கோயிலை நன்றாகப் பராமரித்தும் வருகிறார்கள்.

🙏🇮🇳2
பக்தர்கள், பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, 🙏🇮🇳3
Read 15 tweets
21 Dec
#சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம்!*

சபரிமலை ஏறிச்செல்ல பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு - எருமேலிப் பாதை, வண்டிப் பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை. Image
பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர்.
இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரி யாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.
Read 52 tweets
20 Dec
#கல்லை வணங்குகிறார்கள் என்று கேலியும் கிண்டலும் செய்யும் அனைவருக்கும் இது சமர்ப்பணம்!!!!

பிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி? -
ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்

கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல.

கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.
சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது.

அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.
Read 25 tweets
20 Dec
*#ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?_*

பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் - புனர்பூசம்;
கிருஷ்ணனுக்கு - ரோகிணி;
முருகனுக்கு - விசாகம்.

இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.

ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?
Read 11 tweets
20 Dec
#சிதம்பரத்தை நடராஜர் கோவில் என்று குறிப்பிட்டாலும் இங்குள்ள மூலவர் *ஆதிமூல நாதர்* என்னும் பெயரில் லிங்க வடிவில் அருள்புரிகிறார்.
கைலாய நாதரான சிவபெருமானின் நடனத்தை பூலோக மக்களும் தரிசிக்க விரும்பிய பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் தில்லைவனமான இத் தலத்தில் ஆதிமூல நாதரை நோக்கி தவமிருந்தனர்.
அம்முனிவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தைப்பூச நந்நாளில் உச்சிப்பொழுதில்
*திரிசக்ர முனிவர்கள்* என்னும் தில்லைவாழ் அந்தணர்களுடன் எழுந்தருளி நடன தரிசனம் அளித்தார். இதைவிட சிறப்பாக யாரும் நடனமாட முடியாது என்பதால் ஆடலரசன் என்னும் பொருளில் *நடராஜர்* எனப் பெயர் பெற்றார்.
Read 6 tweets
20 Dec
சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,

உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். 🙏🇮🇳1
ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.

3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.

*தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம்.

🙏🇮🇳2
மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.

தவறாமல் இத்திருக்கோவிக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்.

🙏🇮🇳3
Read 41 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(