ஆண்டு முழுவதும், அம்மனின் அருள் வேண்டி இக்கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். 🙏🇮🇳1
குறிப்பாக, பவானி அம்மனைத் தரிசிக்க, வார இறுதி நாட்களில், பக்தர்கள் அதிக அளவில் ஆலயத்திற்கு வருகை புரிகின்றனர். பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்வதற்காக, கோயில் நிர்வாகம் அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர். மேலும், கோயிலை நன்றாகப் பராமரித்தும் வருகிறார்கள்.
🙏🇮🇳2
பக்தர்கள், பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, 🙏🇮🇳3
அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில், இத்தலத்தில் குடியேற முடிவு செய்தார்.
🙏🇮🇳4
பெரியபாளையம் கோவில் உள்ள இடம் ஆதி காலத்தில் புற்று மேடாக இருந்த இடமாகும். பவானி அம்மன் வளையல் வியாபாரி ஒருவர் மூலம் திருவிளையாடல் நடத்தி, தான் அங்கு இருப்பதை இந்த உலகுக்கு உணர்த்தினாள். அதன் பிறகே புற்று இருந்த இடத்தில் பாளையத் தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது.
🙏🇮🇳5
இத் திருக்கோயில், சமீபத்தில் மறுசீரமைக்கப் பட்ட பிறகு, பவானி அம்மன் மிகவும் ஜொலிப்பதாக பக்தர்கள் பரவசப்படு கின்றனர்.
🙏🇮🇳6
நாம் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன், விநாயகர் தனிச்சன்னதியில் ஸ்ரீஅற்புத சக்தி விநாயகர் என்ற திருநாமம் கொண்டு அருள் புரிவதைக் காணலாம். இதை ஒட்டி, ஸ்ரீ சர்வ சக்தி மாதங்கி அம்மன் சன்னதி உள்ளது.
🙏🇮🇳7
அடுத்து, நாம், பவானி அம்மனைத் தரிசிப்பதற்கான வரிசையை சென்றடையலாம். கட்டணமில்லாத் தரிசனம் மற்றும் சிறப்புக் கட்டணத் தரிசனம் நடைமுறையில் உள்ளது. அம்மனை மிகவும் அருகாமையிலிருந்து தரிசிப்பதற்கு சிறப்புக் கட்டணத் தரிசனம் சிறந்தத் தேர்வாகும். 🙏🇮🇳8
மூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்தால், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து அருள் புரியும் உற்சவர் அம்மன் நம்மை வரவேற்பதைக் காணலாம். குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.
🙏🇮🇳10
அம்மன் தரிசனத்தை சிறப்பான முறையில் முடித்து விட்டு வரும் வழியில், வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமர் (விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று) மற்றும் நாகர் ஆகிய சன்னிதிகளைத் தரிசிக்க முடியும்.
🙏🇮🇳11
பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்து பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் பல வழிகளில் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.
🙏🇮🇳12
மங்களத் தாலி
பெரியபாளையத்தமன்னை குல தெய்வமாக கருதும் பக்தர்கள் தங்கள் திருமணத்தில் ஒரு புதிய சடங்கை வைத்திருக்கிறார்கள். அதன்படி திருமணநாள் அன்று கட்டிய தாலியை அம்பிகைக்கு காணிக்கையாக்குகின்றனர். 🙏🇮🇳13
பிரதியாக அன்னையின் அருள்மிகு மஞ்சளும், மஞ்சள் கயிறும் பெற்று அதை அம்பிகையின் வரப்பிரசாதமாக பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்கின்றனர். இன்றும் இதைக் காணலாம். 🙏🇮🇳14
இப்படிச் செய்தால் அந்தக் குடும்பம் செழித்து, தழைத்து, ஓங்குவதுடன் கட்டிய கணவனுக்கு நீண்ட ஆயுளையும் பவானி வழங்குவாள் என்பது நம்பிக்கை.
சபரிமலை ஏறிச்செல்ல பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு - எருமேலிப் பாதை, வண்டிப் பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை.
பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர்.
இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரி யாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.
திண்டல் முருகன் கோயில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில், திண்டல்...
ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை மீது 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படும் திருத்தலம்.
🙏🇮🇳1
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று.
மூலவர்:
வேலாயுத சுவாமி, முருகன்
கட்டடக்கலை வடிவமைப்பு:
தென் இந்தியா, கோயில்கள்
கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். 🙏🇮🇳2
திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதில் கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபஸ்தம்பத்தின் நான்கு புறத்திலும் சமய தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு சிறப்பாக நடைபெறும்.
🙏🇮🇳3
#சிதம்பரத்தை நடராஜர் கோவில் என்று குறிப்பிட்டாலும் இங்குள்ள மூலவர் *ஆதிமூல நாதர்* என்னும் பெயரில் லிங்க வடிவில் அருள்புரிகிறார்.
கைலாய நாதரான சிவபெருமானின் நடனத்தை பூலோக மக்களும் தரிசிக்க விரும்பிய பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் தில்லைவனமான இத் தலத்தில் ஆதிமூல நாதரை நோக்கி தவமிருந்தனர்.
அம்முனிவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தைப்பூச நந்நாளில் உச்சிப்பொழுதில்
*திரிசக்ர முனிவர்கள்* என்னும் தில்லைவாழ் அந்தணர்களுடன் எழுந்தருளி நடன தரிசனம் அளித்தார். இதைவிட சிறப்பாக யாரும் நடனமாட முடியாது என்பதால் ஆடலரசன் என்னும் பொருளில் *நடராஜர்* எனப் பெயர் பெற்றார்.
சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,
உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். 🙏🇮🇳1
ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.
3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.
*தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம்.
🙏🇮🇳2
மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.
தவறாமல் இத்திருக்கோவிக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்.