கீழத்தஞ்சையை 'கம்யூனிச' பேய் பிடித்திருக்கிறது என்று அன்றைய முதல்வர் இராஜாஜி எழுதினார்.ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் காவிரி டெல்டாவில் பண்ணையார்களுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியை தடுக்க முடியாமல் திக்குமுக்காடியது வரலாறு.
வேறு வழியே இல்லாமல் 'The Tanjore pannaiyal protection act,1952' என்கிற தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கியது அன்றைய தமிழக அரசு.
ஒரு த்ரேசிய அடிமை 'ஸ்பார்ட்டகஸ்' ரோமானிய எஜமானர்களை திருப்பி அடித்தான் என்பதை ரோமானிய ஆளும் வர்க்கத்தால் கடைசிவரை ஏற்றுக்கொள்ளவே முடியாது.அது அவர்கள் கனவிலும் நினையாத ஒன்று.அதேப்போல கீழத்தஞ்சையின் பண்ணையடிமைகள் திருப்பி அடித்தது பண்ணையார்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அடி.
ஒரு பண்ணையடிமை தங்களை எதிர்த்து நிற்பான் என்பதை அவர்கள் கனவிலும் கூட நினைத்து
பார்த்திருக்க மாட்டார்கள்.
வீரம் செறிந்த காவிரி டெல்டா வரலாற்றின் ஒரு புள்ளிதான் வெண்மணி.வெண்மணியில் உயிர்நீத்த தியாகிகள் சமத்துவம்,சமூகநீதிக்கான நீண்ட,நெடிய போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள்.அதுவெறும் இரண்டு படி நெல்லுக்கான போராட்டமில்லை.எங்களின் சுயமரியாதையை காப்பாற்ற நடந்த பெரும் போராட்டத்தின் சிறு பகுதி.
இடுப்பு துண்டை தோளில் ஏற்று,அடித்தால் திருப்பி அடி என்று எங்களுக்கு சுயமரியாதை பழக சொல்லிக்கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள்.
சில நாட்களுக்கு முன் கருவாடு விற்கும் ஒரு பாட்டியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் நியாபகம் இருக்கிறதல்லவா...
இதேப்போல கருவாடு விற்ற பாட்டி ஒருவரின் கதை எனக்கு தெரியும்.வேதாரண்யம் இந்தியன் வங்கிக்கு மிக அருகில்தான் அந்த பாட்டி கருவாடு கூடை ஒன்றை வைத்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருப்பார்.ஒவ்வொரு முறை அந்த வங்கியின் ஊழயர்கள் வெளியில் செல்லும்போதும் எழுந்து ஒரு வணக்கம் வைப்பார்…
…பாட்டி.அந்த வங்கிக்கும் பாட்டிக்குமான உறவு இதுதான்.
Zomato நிறுவன ஊழியர் இந்தி தேசிய மொழி என்று வாடிக்கையாளர் ஒருவரிடம் கூறி சமூக வலைதளங்களில் பேசுபொருளான சில நிமிடங்களில் அந்த ஊழியர் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தனது twitter handle இல் வெளியிடுகிறது.அதாவது எந்த முன்னறிவுப்புமின்றி அந்த ஊழியர் பணியிலிருந்து…
…வெளியேற்றப்படுகிறார்.
'Natural justice' என்றொரு பதம் இருக்கிறது.குற்றம்சாட்டப்பட்டவரும்தன் பக்கம் இருக்கிற நியாயத்தை முன் வைப்பதற்கான வாய்ப்பு அது.எப்பேர்ப்பட்ட வழக்குகளில் சிக்கியவருக்கும் தன் பக்கம் இருக்கிற நியாயத்தை முன்வைக்க முழு உரிமை உண்டு.
Zomato விவகாரத்தில் வெளியேற்றப்பட்ட ஊழியருக்கு தன் பக்க நியாயத்தை முன்வைக்கிற வாய்ப்பே கொடுக்கப்படாதது அவலம்.அவருடைய பிரச்சினையை பேசுவதற்கு அமைப்போ,சங்கமோ இல்லாமல் போனது அவலத்திலும் அவலம்.'What is our national language' என்று ஒட்டுமொத்த Zomato ஊழியர்கள் மீது cyber bullying…