மதம் தான் மனிதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதா? இல்லை! சிந்தனையாளர்கள் தான் மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள். சாக்ரடீஸ் முதல் பெரியார் வரை புரட்சியாளர்கள் தான் சமூகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.
இவர்களது சிந்தனைகளை மதம் கால ஓட்டத்தில் தனக்குள் இணைத்து கொண்டது. எகிப்திய அரசன் Akhenaten தான் உலகில் ஒரே கடவுள் தத்துவத்தை முதலில் கொண்டு வந்தது. சூரிய வழிபாடு மட்டுமே இருக்க வேண்டும்.
மந்திரம் தந்திரம் போன்றவை இருக்க கூடாது என்றெல்லாம் இவர் கொண்டு வந்த மாற்றங்களை சகிக்காத அந்நாட்டு மதவாதிகளால் இவர் கொல்லப்பட்ட இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. Akhenaten கொண்டு வந்த மாற்றங்கள் எல்லாம் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இவரது ஒரே கடவுள் தத்துவத்தை ஆபிரகாமிய மதம் தனக்குள் இழுத்துக்கொண்டது. அதே போல யாகங்களில் ஆடு மாடு முதலியவற்றைக் கொல்வது பெரும் பாவம் என்பது புத்தரின் சிந்தனை. புத்தரின் சிந்தனை மேலோங்கிய காரணத்தால், வைதீக பிராமண மதம் கொல்லாமையை தனது மத தத்துவமாக தனக்குள் இழுத்துக்கொண்டது
கம்யூனிச தத்துவங்கள் மேலெழும்பிய போது, விரதம்/நோன்பு இருப்பது எல்லாம் ஏழைகளுக்கு கொடுக்க தான் என்று மதங்கள் காரணங்களை மாற்றி கொண்டன.
இப்படி கால வெள்ளத்தில் மதங்கள் எல்லாம் அப்போதைய காலகட்டத்தில் கோலோச்சிய தத்துவங்களை தனக்குள் இழுத்து கொண்டு தன்னால் தான் மனித சமூகம் அடுத்த நிலைக்கு சென்றது என்று கூறிக் கொள்கிறது.
சமகாலத்தில் நம் கண் முன்னாடி திடீரென்று முளைக்கும் சாமியார்களை நாம் எப்படி பகடி செய்து விமர்சனம் செய்து கேள்விக்குள்ளாக்குகிறோமோ அதே போல தான் இன்று establish ஆகி இருக்கும் பல மதங்களின் தோற்றுவிப்பாளர்களை
அன்றைய காலத்தில் அவர்களது சமகால மக்கள் கேலி செய்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். இன்று எப்படி பிடிங்க சார் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் என்று பொங்குகிறோமோ அதே போல தான் அன்றும் மக்கள் பொங்கி இருப்பார்கள்.
2000 வருடங்களுக்கு முன் நடந்ததை புனிதப்போராக பார்க்கும் நாம் இன்று நடப்பதை கலக்கப்போவது யாரு என்பது போல பார்த்து சிரித்து மகிழ்கிறோம்.
எல்லா சாமியார்களும் தொடக்கத்தில் ஒரு cult தான். அது யேசுவாக இருந்தாலும், நபிகளாக இருந்தாலும், ஜக்கியாக இருந்தாலும்.
Tiresias கண் இல்லாதவராக இருந்தாலும் ஞான கண் இருக்கும் ஒரு தீர்க்கதரிசி. மக்களின் எதிர்காலத்தை சொல்லக்கூடியவர். இவரது பார்வை போனதற்கும் ஞான கண் வந்ததற்கும் இரண்டு விதமான கதைகள் இருக்கின்றன.
1. ஒருமுறை Athena நிர்வாணமாக குளித்து கொண்டு இருந்ததை தெரியாமல் பார்த்துவிட்ட Tiresias இன் கண் மேல் Athena கையை வைத்து அவரது பார்வையை பறித்து விடுகிறாள். ஆனால் தான் தெரியாமல் செய்துவிட்டதாக Tiresias வருந்தவும் பரிதாபப்பட்டு அவருக்கு ஞான கண்ணை தருகிறாள்.
பொதுவாகவே கிரேக்கத்தில் தீர்க்கதரிசிகள், அறிவாளிகள், கவிஞர்கள் எல்லாம் பார்வை இல்லாதவர்களாகவே சித்தரிப்பது கிரேக்க வழக்கம்.
2. இன்னொரு கதையில் Hera விற்கும் Zeus க்கும் நடுவில் சண்டை நடந்தபோது Tiresias, Zeusக்கு ஆதரவாக இருந்ததால் Hera அவரது பார்வையை பறித்துவிட்டதாக கூறப்படுகிறத
Doctrine of signatures அப்படின்னு ஒரு விஷயம் இந்த folk medicine அதாவது நாட்டு மருத்துவங்களில் உபயோகிக்க கூடிய ஒன்று. இது என்ன அப்படின்னா, ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு மூலிகை உண்டு.
அந்த மூலிகை ஒவ்வொன்றும் நாம் கண்டுபிடிக்க ஏதுவாக அந்த வியாதி அல்லது உடல் உறுப்புடன் தொடர்புடைய ஒரு குணாதிசயத்தோடு இருக்கும். உதாரணத்திற்கு மஞ்சள் காமாலை க்கு உரிய மூலிகை செடியின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதய நோய்களுக்கு ஏற்ற மூலிகைகளின் இலைகள் இதய வடிவில் இருக்கும்.
செடிகள் மற்றும் அல்லாமல் மிருங்கங்களின் ரத்தம், உடல் உறுப்புகள், தாதுக்கள் போன்றவைகளும் நாட்டு மருத்துவத்தில் பயன்படுகிறது. பாதரசம் அடங்கிய மோதிரம் அணிவது தலைவலிக்கு நல்லது செப்பு வளையல் அணிவது மூட்டு வலிக்கு நல்லது என்றெல்லாம் இருக்கின்றன.
BOOK AND BED TOKYO is a hostel with the concept of “a bookstore where you can stay”.
You could immerse in 4000 books stored in the large book room, fall asleep on the bed and meet with other book lovers.
Set on the eighth floor of the Kabukicho Apm Building, it provides a birds-eye view of the city. owned by R-Store, a Japanese real estate agent who specialize in residential and commercial property. The project is a concept by Suppose Design, a Japanese architectural firm.
Suppose Design received the JCD Design Award Grand Prize for Book and Bed Tokyo in 2016. In every direction, books and their components greet you. There are Japanese and English language books for its visitors to digest. Subjects span travel guides to fiction and manga comics.
இன்றைய digital உலகில் நூலகம் அவசியமா?
மின் புத்தகங்கள் அல்லது ஆடியோ புத்தகங்கள் எனப்படும் புத்தகங்களின் ஆன்லைன் பதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்த டிஜிட்டல் யுகத்தில் இன்னும் நூலகங்கள் தேவையா என்ற கேள்வியை எதிர்கொள்கிறோம். அதற்கான பதில் ஆமாம்!!
உலகத்தில் உள்ள எல்லா புத்தகங்களும் digital ஆக்கப்பட்டுவிட்டதா? இலவசமாக எல்லா புத்தகத்தையும் டிஜிட்டலில் பார்க்க எல்லாரிடமும் வசதி இருக்கிறதா? அதற்கு net, data எல்லாம் எல்லோருக்கும் இருக்கிறதா? எல்லா ஊரிலும் இணைய சேவை இருக்கிறதா? கணினி அல்லது கைபேசி எல்லாரிடமும் இருக்கிறதா?
அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று எல்லோரும் அறிந்து இருக்கிறார்களா? இப்படி பல கேள்விகளுக்கு பதில் இல்லாத சூழலில் நூலகம் அவசியம்தான்.
நூலகம் இன்றைய காலத்திற்கேற்ப மாறிக்கொண்டு வருகிறது digital புத்தகங்களும் இலவச இணையசேவையுடன் (free wifi) நூலகங்களில் வழங்கப்படுகிறது.