சமகாலத்தில் நம் கண் முன்னாடி திடீரென்று முளைக்கும் சாமியார்களை நாம் எப்படி பகடி செய்து விமர்சனம் செய்து கேள்விக்குள்ளாக்குகிறோமோ அதே போல தான் இன்று establish ஆகி இருக்கும் பல மதங்களின் தோற்றுவிப்பாளர்களை
அன்றைய காலத்தில் அவர்களது சமகால மக்கள் கேலி செய்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். இன்று எப்படி பிடிங்க சார் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் என்று பொங்குகிறோமோ அதே போல தான் அன்றும் மக்கள் பொங்கி இருப்பார்கள்.
2000 வருடங்களுக்கு முன் நடந்ததை புனிதப்போராக பார்க்கும் நாம் இன்று நடப்பதை கலக்கப்போவது யாரு என்பது போல பார்த்து சிரித்து மகிழ்கிறோம்.
எல்லா சாமியார்களும் தொடக்கத்தில் ஒரு cult தான். அது யேசுவாக இருந்தாலும், நபிகளாக இருந்தாலும், ஜக்கியாக இருந்தாலும்.
பின்னாளில் அவர்களுக்கு கிடைக்கும் ஆட்பலம், அரசியல் பலத்தை பொறுத்தே அது பெரிதாக வளர்வதும் அல்லது சிறையில் சமாதியாவதும். நபிகளுக்கு முன்பு இயேசு, யேசுவிற்கு முன்பு புத்தர், அவருக்கும் முன்பு Zoroaster.
முதல் மிகப்பெரிய monotheistic மதம் Zoroastrianism (Persian Empire). 1000 வருடங்கள் மிகப்பெரிய மதமாக இருந்தது Persia சாம்ராஜ்யம் வீழ்ந்ததும் கூடவே அழிந்துவிட்டது. இன்று வெகு சிலரால் மட்டுமே பின்பற்றப்படும் மதமாக இருக்கிறது.
ஒரு cult ஐ அரசியல் பின்புலம் ஆதரிக்கும்போது அது மதமாக மாறுகிறது. மதமாக மாறியவுடன் அதன் கோட்பாடுகள் எல்லாம் புனிதமாக ஆகிறது. அதே மதம் வீழும் போது அதன் கோட்பாடுகள் எல்லாம் வெறும் நம்பிக்கைகளாக கதைகளாக ஆகிறது. கிரேக்க புராணங்கள் இன்று வெறும் கதையாக படித்து ரசிக்கப்படுகிறது.
இயேசு இறந்து, கிறிஸ்தவம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக மாற அதற்கு 3 நூற்றாண்டுகள் ஆனது (ரோம பேரரசு அதை அங்கீகரிக்கும் வரை). 10 நூற்றாண்டு கழித்து கிறிஸ்தவ மதம் பல பிரிவுகளாக பிரிந்தது. இன்றளவும் பல சிறிய பிரிவுகளாக பிரிந்து கொண்டே இருக்கிறது.
இதற்கு காரணமும் அரசியல் தான். இந்த சபை வேதத்தை ஒழுங்காக பின்பற்றுவதில்லை. பைபிளை தவறாக போதிக்கிறார்கள், அதனால் நான் பிரிந்து சென்று தனி சபை ஆரம்பித்து சரியாக போதிக்கப்போகிறேன் என்பார்கள்.
ஆனால் உண்மையில் அவர்களுக்கு அந்த சபையில் முக்கியத்துவம் அல்லது அதிகாரம் வழங்கப்பட்டு இருக்காது. அதனால் தனி சபை, நானே தலைவர் என்கிற அரசியல். நான் முன்பே சொன்னது போல கால ஓட்டத்தில் அன்றைய மதங்கள் பல மாற்றங்களுடன் தங்களை தக்கவைத்து கொள்ள முயலுகின்றன.
Zoroastrianism க்கு வந்த நிலை கிறிஸ்தவ/இஸ்லாமிய/இந்து மதங்களுக்கு வரலாம். இன்றைய நித்தியானந்தா/அன்னபூரணி 2000 வருடங்கள் கழித்து இறைத்தூதராக அல்லது கடவுளாகவே கூட பார்க்கப்படலாம்.
"எத்தை தின்றால் பித்தம் தெளியும்" என்று எளிய மக்கள் நினைக்கும் வரை புது புது சாமியார்கள் வருகை இருந்து கொண்டே தான் இருக்கும். மக்களுக்கு ஏதாவது ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது. மக்களை ஆளுபவர்களுக்கோ மக்கள் ஒரு நிரந்தர போதையில் இருப்பது தேவையாக இருக்கிறது.
எது அதிக போதை தருகிறதோ அதை வளர்த்தெடுப்பார்கள்.
எளிய மக்களை கவரும் மதம் வரலாற்றில் நீடிக்கும். கிறிஸ்தவம் இஸ்லாம் எல்லாம் எளிய மக்களை கவரும் மதங்கள்.
கண்ணுக்கு தெரியும் தூதர்களை விட கண்ணுக்கு தெரியாத கடவுளிடம் தான் ஈர்ப்பு அதிகம் இருக்கும். இந்த நித்தியானந்தா/அன்னபூரணி வகையறாக்கள் தாங்கள் தான் கடவுள் என்று சொல்லாமல் கடவுளின் தூதர் என்றால் reach நன்றாக இருக்கும் ஜக்கி போல.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Tiresias கண் இல்லாதவராக இருந்தாலும் ஞான கண் இருக்கும் ஒரு தீர்க்கதரிசி. மக்களின் எதிர்காலத்தை சொல்லக்கூடியவர். இவரது பார்வை போனதற்கும் ஞான கண் வந்ததற்கும் இரண்டு விதமான கதைகள் இருக்கின்றன.
1. ஒருமுறை Athena நிர்வாணமாக குளித்து கொண்டு இருந்ததை தெரியாமல் பார்த்துவிட்ட Tiresias இன் கண் மேல் Athena கையை வைத்து அவரது பார்வையை பறித்து விடுகிறாள். ஆனால் தான் தெரியாமல் செய்துவிட்டதாக Tiresias வருந்தவும் பரிதாபப்பட்டு அவருக்கு ஞான கண்ணை தருகிறாள்.
பொதுவாகவே கிரேக்கத்தில் தீர்க்கதரிசிகள், அறிவாளிகள், கவிஞர்கள் எல்லாம் பார்வை இல்லாதவர்களாகவே சித்தரிப்பது கிரேக்க வழக்கம்.
2. இன்னொரு கதையில் Hera விற்கும் Zeus க்கும் நடுவில் சண்டை நடந்தபோது Tiresias, Zeusக்கு ஆதரவாக இருந்ததால் Hera அவரது பார்வையை பறித்துவிட்டதாக கூறப்படுகிறத
மதம் தான் மனிதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதா? இல்லை! சிந்தனையாளர்கள் தான் மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள். சாக்ரடீஸ் முதல் பெரியார் வரை புரட்சியாளர்கள் தான் சமூகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.
இவர்களது சிந்தனைகளை மதம் கால ஓட்டத்தில் தனக்குள் இணைத்து கொண்டது. எகிப்திய அரசன் Akhenaten தான் உலகில் ஒரே கடவுள் தத்துவத்தை முதலில் கொண்டு வந்தது. சூரிய வழிபாடு மட்டுமே இருக்க வேண்டும்.
மந்திரம் தந்திரம் போன்றவை இருக்க கூடாது என்றெல்லாம் இவர் கொண்டு வந்த மாற்றங்களை சகிக்காத அந்நாட்டு மதவாதிகளால் இவர் கொல்லப்பட்ட இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. Akhenaten கொண்டு வந்த மாற்றங்கள் எல்லாம் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
Doctrine of signatures அப்படின்னு ஒரு விஷயம் இந்த folk medicine அதாவது நாட்டு மருத்துவங்களில் உபயோகிக்க கூடிய ஒன்று. இது என்ன அப்படின்னா, ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு மூலிகை உண்டு.
அந்த மூலிகை ஒவ்வொன்றும் நாம் கண்டுபிடிக்க ஏதுவாக அந்த வியாதி அல்லது உடல் உறுப்புடன் தொடர்புடைய ஒரு குணாதிசயத்தோடு இருக்கும். உதாரணத்திற்கு மஞ்சள் காமாலை க்கு உரிய மூலிகை செடியின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதய நோய்களுக்கு ஏற்ற மூலிகைகளின் இலைகள் இதய வடிவில் இருக்கும்.
செடிகள் மற்றும் அல்லாமல் மிருங்கங்களின் ரத்தம், உடல் உறுப்புகள், தாதுக்கள் போன்றவைகளும் நாட்டு மருத்துவத்தில் பயன்படுகிறது. பாதரசம் அடங்கிய மோதிரம் அணிவது தலைவலிக்கு நல்லது செப்பு வளையல் அணிவது மூட்டு வலிக்கு நல்லது என்றெல்லாம் இருக்கின்றன.
BOOK AND BED TOKYO is a hostel with the concept of “a bookstore where you can stay”.
You could immerse in 4000 books stored in the large book room, fall asleep on the bed and meet with other book lovers.
Set on the eighth floor of the Kabukicho Apm Building, it provides a birds-eye view of the city. owned by R-Store, a Japanese real estate agent who specialize in residential and commercial property. The project is a concept by Suppose Design, a Japanese architectural firm.
Suppose Design received the JCD Design Award Grand Prize for Book and Bed Tokyo in 2016. In every direction, books and their components greet you. There are Japanese and English language books for its visitors to digest. Subjects span travel guides to fiction and manga comics.
இன்றைய digital உலகில் நூலகம் அவசியமா?
மின் புத்தகங்கள் அல்லது ஆடியோ புத்தகங்கள் எனப்படும் புத்தகங்களின் ஆன்லைன் பதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்த டிஜிட்டல் யுகத்தில் இன்னும் நூலகங்கள் தேவையா என்ற கேள்வியை எதிர்கொள்கிறோம். அதற்கான பதில் ஆமாம்!!
உலகத்தில் உள்ள எல்லா புத்தகங்களும் digital ஆக்கப்பட்டுவிட்டதா? இலவசமாக எல்லா புத்தகத்தையும் டிஜிட்டலில் பார்க்க எல்லாரிடமும் வசதி இருக்கிறதா? அதற்கு net, data எல்லாம் எல்லோருக்கும் இருக்கிறதா? எல்லா ஊரிலும் இணைய சேவை இருக்கிறதா? கணினி அல்லது கைபேசி எல்லாரிடமும் இருக்கிறதா?
அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று எல்லோரும் அறிந்து இருக்கிறார்களா? இப்படி பல கேள்விகளுக்கு பதில் இல்லாத சூழலில் நூலகம் அவசியம்தான்.
நூலகம் இன்றைய காலத்திற்கேற்ப மாறிக்கொண்டு வருகிறது digital புத்தகங்களும் இலவச இணையசேவையுடன் (free wifi) நூலகங்களில் வழங்கப்படுகிறது.