#அறிவோம்_தமிழர்_பண்டிகை
#தமிழர்களின்_தமிழ்_புத்தாண்டு
#GoldFishtThreads
#விவசாயம்_காப்போம் _2

✓உழவர் திருநாள்.

•பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது.
•உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து,
தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.

•உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் ,
வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

✓நான்கு நாள் திருவிழா.

•பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.

✓போகி.

•போகிப்பண்டிகை என்பது பொங்கலுக்கு முதல்நாள்,
அதாவது மார்கழி கடைசி நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

•போகிப்பண்டிகையன்று வீட்டை சுத்தம் செய்து, தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பது வழக்கம் "பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகியாகும்".
•அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது.
•அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.
✓தைப்பொங்கல்.

•தைப்பொங்கல் தைமாதம் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.

•"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்கிற பழமொழியும் தமிழர்களால் இன்றுவரை நம்பப்படுகிறது.
✓மாட்டுப் பொங்கல்.

•மாட்டுப்பொங்கல் தைமாதம் 2-ம் நாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
•மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் உள்ள மாடுகளை குளிக்கவைத்து அலங்காரம் செய்து வைக்கப்படும் பொங்கலே மாட்டுபொங்கலாகும்.
•உழவுத்தொழிலுக்கு உதவியாக இருக்கும்,
“ஆ“வினத்திற்கு (ஆ - பசு) நன்றி செலுத்தும் விதமாகவே மாட்டுப்பொங்கல் மாடு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது.

•பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு.
•'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

✓காணும் பொங்கல்.

•காணும் பொங்கல் தை மாதம் 3-ம் நாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
•காணும் பொங்கலன்று மக்கள் தங்கள் உறவினர்களின் வீட்டிற்குச்சென்று தங்களின் அன்பைப் பகிர்ந்து கொள்வர்.

இதன் தொடர்ச்சியை நாளை காணலாம் 🙏🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கோல்ட்ஃபிஷ்_official 🐠

கோல்ட்ஃபிஷ்_official 🐠 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @goldfish_officl

6 Jan
#அறிவோம்_தமிழர்_பண்டிகை
#தமிழர்களின்_தமிழ்_புத்தாண்டு
#GoldFishtThreads
#விவசாயம்_காப்போம் _3

✓பொங்கலை ஒத்த பிற
விழாக்கள்.

•வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு.
•இந்தியாவின் வட மாநிலங்களில், Image
இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.
•மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப்படுகிறது.
✓தமிழக அரசுகள் செய்த
மாற்றங்கள்.

•2006-2011 வரையிருந்த தமிழக அரசு, தை 1 தமிழாண்டின் முதல் நாளானபடியால், அதுவே தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு என சனவரி 29, 2008 அன்று அறிவித்தது. Image
Read 17 tweets
4 Jan
#அறிவோம்_தமிழர்_பண்டிகை
#தமிழர்களின்_தமிழ்_புத்தாண்டு
#GoldFishtThreads
#விவசாயம்_காப்போம்
•பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு அறுவடை இந்து பண்டிகை ஆகும்.
•இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா,
தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

•பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
•இந்த பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.

✓தைப்பொங்கல் வரலாறு.

•ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.
Read 10 tweets
18 Nov 21
#அண்ணா_இன்றும்_என்றும்
#திராவிட_அரக்கன்
#பேரறிஞர்_அண்ணா _6

• தமிழ்நாடு பெயர் மாற்றம்.

•1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது.
•அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த
அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது.
•ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார்.
•இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1967 ஏப்ரல் 16 இல்தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
•அமெரிக்கரல்லாத அண்ணாதுரை அவர்களுக்கு
Read 13 tweets
16 Nov 21
#அண்ணா_இன்றும்_என்றும்
#திராவிட_அரக்கன்
#பேரறிஞர்_அண்ணா _5

•1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்.

• இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர், Image
இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது.
•இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது.
•இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
•இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை இவ்வாறு கூறினார்:
“இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால்.
ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே.
Read 16 tweets
15 Nov 21
#அண்ணா_இன்றும்_என்றும்
#திராவிட_அரக்கன்
#பேரறிஞர்_அண்ணா _4

•1953 இல் கண்டனத்
தீர்மானங்கள்.

•1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி திமுக
மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது:
•இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது.
•மதராஸ் மாநில முதல்வர் சி.ராஜகோபாலச்சாரி (இராஜாஜி), அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டம் ,
எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது.
•கல்லக்குடியை டால்மியாபுரம் என்ற பெயர் மாற்றியதை எதிர்த்து, மீண்டும் கல்லக்குடி என்று மாற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில்,
Read 14 tweets
14 Nov 21
#அண்ணா_இன்றும்_என்றும்
#திராவிட_அரக்கன்
#பேரறிஞர்_அண்ணா _3

•திராவிட நாடு.

•திராவிடர் கழகத்தில் அண்ணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திராவிடநாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார்.
•திமுக வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும்
இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
•பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார்.
•ஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார்:
“நாம் அதிக தேர்தலை சந்திக்க சித்தமாயிருக்கவேண்டும், அதன்மூலம் அதிகத் தொகுதிகளை மக்களின் நம்பிக்கைகள் மூலம் வென்றிட,
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(