தமிழகத்தில் நடக்கும்சதி திட்டம் அம்பலம்! கியா தொழிற்சாலை போல் ஆப்பிள்தொழிற்சாலையும் கை நழுவுகிறதா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, ஒப்பந்த அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து அளிக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் பணிபுரிகின்றனர். டிசம்பர் 15 அன்று மதிய உணவு உட்கொண்ட சுமார் 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு,
அருகே உள்ள மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் தான் ஸ்டெர்லைட் பிரச்சனையும் ஆரம்பித்தது., ஐஃபோன் தயாரிப்பை மீண்டும் சீனாவுக்கு கொண்டு போக சீனா தன் விசுவாசிகளை கொண்டு செய்யும் சதி நாடகமா?
என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சீனா தான் காரணம் என்ற செய்தி வெளிவந்துள்ளது இதுகுறித்து தி வீக் செய்தி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.
“ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் சீனாவின் கை” – தி வீக் செய்தி.
மாநில உளவுத்துறை அறிக்கையின் படி, ஃபாக்ஸ்கானில் பிரச்சினையை உருவாக்கியது சீனர்கள்.
தமிழகத்தில் அவர்களுக்கு இருக்கும் விசுவாசிகளை இடதுசாரிகளை கொண்டு காய் நகர்த்தி உள்ளது. தெரியானவந்துள்ளது. சென்னை சிப்கடில் ஐ போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் கலவரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் சீன விசுவாசிகள். ஃபாக்ஸ்கானில் மட்டுமில்லாமல், சென்னையில் இருக்கும்,
விஸ்ட்ரானிலும் பிரச்சினையை உருவாக்கி மூட வைத்தது சீனாவின் விசுவாசிகள் தான் ஃபாக்ஸ்கான் – விஸ்ட்ரான் இரண்டுமே ஆப்பிள் நிறுவனத்துக்காக இந்தியாவில் உற்பத்தி செய்பவை.இந்த இரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், Sanmina, Ford, PPG Asian paints, Enfield India Limited உள்ளிட்ட பல
வெளிநாட்டு நிறுவனங்களிலும் இதே போல பிரச்சினையை கிளப்பியிருக்கிறது இந்த கூட்டம். இந்தியாவிலிருந்து தொழில்களை சீனாவுக்கு கொண்டு போக இம்மாதிரி வேலைகள் செய்கிறார்கள் என
லக்ஷ்மி சுப்ரமணியன் கட்டுரை எழுதியிருப்பது வியப்பாக உள்ளது.“செய்தியை” எழுதியிருப்பது,
“கவர்னர் பன்வாரிலால் என் கன்னத்தை கிள்ளிட்டார்” என்று குற்றம்சாட்டியவர் தான். லக்ஷ்மி சுப்ரமணியன். தமிழ் மாநில உளவுத்துறை அறிக்கையை ‘பிரத்தியேகமாக’ பார்த்து எழுதிய கட்டுரை என்று குறிப்பிடுகிறார்.மேலும் தென்கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் மகிழுந்து நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா,
கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில்ஈடுபட்டிருந்தது . தமிழ்நாடு, மாராட்டியம் குஜராத், ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் தொழில் தொடங்குவது குறித்து கியா நிறுவனம் ஆய்வு செய்து வந்தாலும் கூட, தாய் நிறுவனமான ஹுண்டாய் திருப்பெரும்புதூரில் அமைந்திருப்பதால்,
அதையொட்டி தொழில் தொடங்க வேண்டும் என்பது தான் அதன் விருப்பமாக இருந்தது. இதுதொடர்பாக அரசுக்கும், கியா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டு, கியா தொழிற்சாலை அமைக்க 390 ஏக்கர் நிலம் வழங்குவதற்கும் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இதுகுறித்து,
11.08.2016 அன்று சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டது.ஆனால் தமிழகத்தில் நடந்த தொடர் போராட்டங்கள் ஸ்டெர்லைட் மூடல் எப்போது பார்த்தலும் எங்கு பார்த்தாலும் போராட்டம் கார்ப்பரேட் என்றாலே கெட்டவார்த்தை என்ற அளவிற்கு அவதூறு பரப்புதல் எதிராக ஊடகங்கள் என பல்வேறு சிக்கல்கள் காரணமாக,
10,000கோடி தொழிற்சாலை ஆந்திராவுக்கு மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Bharath Bio Tech என்ற இந்திய நிறுவனம் தான் உலகிலேயே முதன் முதலாக Corona Virus இதற்கு தடுப்பூசி(Covaxin) கண்டு பிடித்தது இது எல்லோரும் அறிந்ததே.
தடுப்பூசி சரியாக வேலை செய்கிறது என்று கண்டறிய மனித உடம்பில் செலுத்தித்தான் சோதனை செய்து அறிய வேண்டும்.இந்த கொடிய ஆள்கொல்லி,
நோய்க்குண்டான தடுப்பூசி சோதனை க்கு தன்னை அற்பணித்துக்கொண்ட முதல் மனித உடம்பு எது?
நாட்டு மக்களின் உயிரை காக்க தன்னையே அற்பணித்துக்கொண்ட நமது முதல் சோதனை எலி அவர் இதற்காக விளம்பரமும் தேடிக்கவில்லை
கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த காலம் அது சிகிச்சைக்கான மருந்தும் இல்லை.
சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பள்ளி கல்லூரிகளில் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகத்தினை அரசாங்கம் கையகப்படுத்துமா அன்பில் மகேஷ்?!
திருநெல்வேலி மாவட்டம் சி.எஸ்.ஐ. கிருஸ்துவ நிர்வாகம் நடத்தி வரும் பள்ளியில் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்துள்ளதால் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ. கிருஸ்துவ பள்ளியின் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் தலைமறைவானார். மேலும் ஒரு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சிக்கலில் உள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தென்னிந்திய திருச்சபை டயோசீசன் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளியாகும்.
தி.மு.க வினர் டார்ச்சர்..எஸ்.ஐ. தற்கொலையா! எஸ்.ஐ வெளியிட்ட ஆடியோ வைரல்! அச்சத்தில் மக்கள்!
ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு சட்டம் ஒழுங்கு சரியில்லை என அனைவரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். தமிழகம் முழுதும் 200 நாட்களில் 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பெண் குழந்தைகள் சீரழிக்கப்பட்டு தற்கொலை,செய்தும் கொலையும்,
நடந்து வருகிறது.இது ஒருபுறம் என்றால் திமுகவினர் டார்ச்சர் தாங்கமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களை காக்கும் காவல்துறையினருகே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்கள் தமிழகத்தில் நிம்மத்தியாக வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மோடி அலை வீச போகிறது.. 400 எம்பிக்களுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும்: அண்ணாமலை உறுதி! @annamalai_k
2024 ஆம் ஆண்டு மோடி அலைதான் வீச போகிறது. 400 எம்பிக்களுடன் பிரதமராக 3ஆவது முறை அவரே அமர்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இந்த ஆண்டின் கடைசி மன்கீ பாத் நிகழ்ச்சி என்பதால் இதை திருவிழா போல் கொண்டாட அடையாற்றில் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் 2015- 16 ஆம் ஆண்டில் நீட் தொடர்பான பிரச்சினைகள் இருந்தது. அதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு வெற்றி பெற்றது.
PFI & SDPI போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு அவர்களுடைய நோக்கத்தை நிறைவு செய்வதற்காக போலி ஆம்புலன்ஸ் அதிர்ச்சி செய்தி !
அதிர்ச்சி செய்தி !
கேரளாவில் உள்ள காவல் துறையில் உளவாளியாக பல்வேறு மாநிலங்களில் தடைசெய்யபட்ட PFI & SDPI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளில் சார்பு நபர்கள் ஊடுருவி உள்ளனர் அவர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இருக்கும் இடத்தை பகிர்ந்துள்ளனர்.ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பற்றிய,
கேரள காவல்துறை தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பு காரணங்களுக்கு சேகரித்து வைத்துள்ளனர்.அதை பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட PFI ,SDPI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு கசிய விட்டதாக கேரள பத்திரிக்கையான ஜென்மபூமி 25/12/21 முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
பொய் சொல்லி பல்பு வாங்கிய கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன்! வச்சு செய்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ! @SuVe4Madurai
மக்களிடத்தில் உண்மையை மறைத்து பொய்களை அதிகம் சொல்லும் இயக்கமாக நாளுக்கு நாள் கம்யூனிஸ்டுகள் முன்னேறி வருகிறார்கள்.இதேபோல் கேரளாவுக்கு பினராயி, தமிழகத்துக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தான் என நிருபித்து வருகிறார்.
தற்போது மதுரை விமான நிலையம் தொடர்பாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார் கம்யூனிஸ்ட் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன். அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.