சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பள்ளி கல்லூரிகளில் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகத்தினை அரசாங்கம் கையகப்படுத்துமா அன்பில் மகேஷ்?!
திருநெல்வேலி மாவட்டம் சி.எஸ்.ஐ. கிருஸ்துவ நிர்வாகம் நடத்தி வரும் பள்ளியில் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்துள்ளதால் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ. கிருஸ்துவ பள்ளியின் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் தலைமறைவானார். மேலும் ஒரு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சிக்கலில் உள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தென்னிந்திய திருச்சபை டயோசீசன் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளியாகும்.
அதன் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் 51, பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிகளை சிறப்பு வகுப்புகளுக்கு வரச் செய்துள்ளார். அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து பிளஸ் 1 மாணவி புகாரில் திசையன்விளை போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவரை சி.எஸ்.ஐ., நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. தற்போது தலைமறைவாக உள்ளார்.தென்காசி மாவட்டம் பங்களா சுரண்டையில் செயல்படும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது இத்தகைய,
பாலியல் குற்றச்சாட்டுகளை சில மாதங்களுக்கு முன் மாணவிகள் கூறினர். பள்ளியின் விசாரணை குழுவினர் விசாரித்து உண்மை என சி.எஸ்.ஐ., நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்தனர். அவர் மீதான நடவடிக்கை குறித்து சி.எஸ்.ஐ., நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை.
தூய யோவான் பி.எட். கல்லூரியில் பேராசிரியையிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக பேராசிரியர்கள மற்றும் ஊழியர் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்திற்கு பிறகு சி.எஸ்.ஐ.,பள்ளி,
கல்லூரிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்தாலும் காவல்துறை அமைதி காத்து வருகிறது.மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணி தலைவருமான கனிமொழி அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை என அப்பகுதி மக்கள் குமுறிவருகிறார்கள்.
இதுவே அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் கனிமொழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருப்பார். ஆனால் இது கிறிஸ்த்துவ பள்ளி என்பதனாலும் சிறுபான்மையினர் ஓட்டு வங்கி இழக்க கூடாது என்பதற்காகவும் அமைதி காத்து வருகிறார் கனிமொழி.
கனிமொழி மட்டுமல்ல முக்கிய செய்தி, சிறப்பு செய்தி,விரைவு செய்தி,என 24 மணி நேரம் பேசும் தமிழக முன்களப்பணியாளர்களையும் காணவில்லை.இதுவே இந்து பள்ளிகளில் நடந்திருந்தால் அதை அரசு கையகப்படுத்தவேண்டும் என கூறி இருப்பார்கள்.பள்ளி கல்வித்துறை அமைச்சர்கள் உட்பட இது கிறிஸ்துவ பள்ளி என்பதால்,
நவதுரங்களை மூடி கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க வினர் டார்ச்சர்..எஸ்.ஐ. தற்கொலையா! எஸ்.ஐ வெளியிட்ட ஆடியோ வைரல்! அச்சத்தில் மக்கள்!
ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு சட்டம் ஒழுங்கு சரியில்லை என அனைவரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். தமிழகம் முழுதும் 200 நாட்களில் 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பெண் குழந்தைகள் சீரழிக்கப்பட்டு தற்கொலை,செய்தும் கொலையும்,
நடந்து வருகிறது.இது ஒருபுறம் என்றால் திமுகவினர் டார்ச்சர் தாங்கமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களை காக்கும் காவல்துறையினருகே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்கள் தமிழகத்தில் நிம்மத்தியாக வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மோடி அலை வீச போகிறது.. 400 எம்பிக்களுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும்: அண்ணாமலை உறுதி! @annamalai_k
2024 ஆம் ஆண்டு மோடி அலைதான் வீச போகிறது. 400 எம்பிக்களுடன் பிரதமராக 3ஆவது முறை அவரே அமர்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இந்த ஆண்டின் கடைசி மன்கீ பாத் நிகழ்ச்சி என்பதால் இதை திருவிழா போல் கொண்டாட அடையாற்றில் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் 2015- 16 ஆம் ஆண்டில் நீட் தொடர்பான பிரச்சினைகள் இருந்தது. அதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு வெற்றி பெற்றது.
PFI & SDPI போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு அவர்களுடைய நோக்கத்தை நிறைவு செய்வதற்காக போலி ஆம்புலன்ஸ் அதிர்ச்சி செய்தி !
அதிர்ச்சி செய்தி !
கேரளாவில் உள்ள காவல் துறையில் உளவாளியாக பல்வேறு மாநிலங்களில் தடைசெய்யபட்ட PFI & SDPI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளில் சார்பு நபர்கள் ஊடுருவி உள்ளனர் அவர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இருக்கும் இடத்தை பகிர்ந்துள்ளனர்.ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பற்றிய,
கேரள காவல்துறை தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பு காரணங்களுக்கு சேகரித்து வைத்துள்ளனர்.அதை பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட PFI ,SDPI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு கசிய விட்டதாக கேரள பத்திரிக்கையான ஜென்மபூமி 25/12/21 முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
பொய் சொல்லி பல்பு வாங்கிய கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன்! வச்சு செய்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ! @SuVe4Madurai
மக்களிடத்தில் உண்மையை மறைத்து பொய்களை அதிகம் சொல்லும் இயக்கமாக நாளுக்கு நாள் கம்யூனிஸ்டுகள் முன்னேறி வருகிறார்கள்.இதேபோல் கேரளாவுக்கு பினராயி, தமிழகத்துக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தான் என நிருபித்து வருகிறார்.
தற்போது மதுரை விமான நிலையம் தொடர்பாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார் கம்யூனிஸ்ட் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன். அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
இந்து மதத்திற்கு மாறிய ஷியா முஸ்லிம் தலைவர்… இந்து மதத்தை வளர்க்கப் போவதாக அறிவிப்பு…
உ.பி.யில் அதிகமுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக இருப்பவர் சையது வசீம் ரிஜ்வீ. ஷியா மத்திய வக்ஃபு வாரியத் முன்னாள் தலைவரான இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர்.
இவர் அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசினார். இதனால் முஸ்லிம் மவுலானாக்கள் இவரை காஃபீர்,
(முஸ்லிம் அல்லாதவர்) என மதத்திலிருந்து ஒதுக்கினர். முஸ்லிம்களின் மறைநூலான திருக்குர்ஆனின் 26 பக்கங்களில் கூறப்படும் கருத்துகள் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அவற்றை நீக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிஜ்வீ தொடர்ந்த வழக்கால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால்,
அமித்ஷாவின் அடுத்த அதிரடி ! கோவாவில் மீண்டும் பிஜேபி ஆட்சி உறுதி !
கோவாவில் பிஜேபி ஆட்சி உறுதி ஒரு வழியாக கோவாவில் கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வந்து விட்டது. பிஜேபிகூட்டணி ஆட்சியில் இருந்த கோவா பார்வர்டு பார்ட்டி காங்கிரஸ் கூட்டணிக்கும் மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி,திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்று இருக்கிறது.
பாஜகவினரால் அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸும் நியமித்து மீண்டும் கோவா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க அடுத்த அதிரடி காட்டியுள்ளார்.