1. ஆவாரம் பூ 2. பீளைப்பூ 3. வேப்பிலை 4. தும்பை செடி 5. நாயுறுவி செடி 6. தலைப்புள்
என 5 வகையான செடிகள் காப்புகட்டிற்கு பயண்படுத்த வேண்டும்.
ஆனால் தற்காலங்களில் 3 வகை மட்டுமே பயண்படுத்துகிறார்கள்
தைமாதம் முதல் உத்ராயணத்தில் ஏற்ப்படும் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும்.
மார்கழிமாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுசானத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள்.
மார்கழிமாதம் வைகுண்டம் செல்ல வேண்டிய முன்னோர்கள் இங்கேயே தங்கிவிடாமல் இருக்க அவர்கள் வாசனையை நீக்க அவர்கள் பயன்படுத்திவந்த பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்.
மேலும் பருவ நிலை மாற்றத்தால் நோய் தொற்று வராமல் இருக்க வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி
பயன்படுத்தாத பழைய பொருட்களை எரிப்பார்கள்
காப்பு கட்டுவார்கள் இது போகி பண்டிகையாகும்.
1)தைமாதம் மகர மாதம் தட்சிணாயணம் முடிந்து உத்திராயணம் ஆரம்பமாகும் காலம் சூரியன் வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்றம் வரும்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும் .
சூரியனின் தீட்சன்யம் அதிகமாக பூமியில் விழும் இதற்கு கரிநாள் என பஞ்சாங்கத்தில் போடப்பட்டிருக்கும். இந்த வெப்பத்தின் தாக்கம் பல நோய்களை கொண்டுவரும்.
நமது கிராம்ப்புறங்கில் நடைபயணம் செய்பவர்கள் இந்த வெப்ப தாக்கம் வராமல் இருக்க ஆவாரம் பூவை தலை பாகைக்குள் வைத்து கட்டிக்கொண்டு செல்வார்கள் சில கிராமங்களில் சமையல் அறையில் அதிக உஷ்ணம் வராமல் இருக்க ஆவாரம் பூவை கொத்தாக் வைத்திருப்பார்கள்.
உஷ்ணதாக்கத்தால் உடல் சமநிலை இழக்காமல் இருக்க ஆவாரை பயன்படும்
( மேலும் மகர சங்கராந்தி நுழையும் காலம் இம்மாத சங்காரகனால் அதிகபாதிப்பு தைமாத்தில் வரும் இதனை தடுக்கவும் ஆவாரை பயன்படும்)
2) பீளைப்பூ
இது உடலில் உள்ள நீர்சத்துக்களையும் தாதுக்களையும் சமநிலையில் வைக்கும்
உஷ்ணத்தால் கிட்னி பாதிக்கப்படாமல் பாதுகாக்கும்.
3) உஷ்ணத்தால் சருமம் பாதிக்கப்பட்டு அம்மை தோல்நோய்கள் வராமல் இருக்க வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.
4) நாயுருவி
வெப்பத்தால் பக்கவாதம் ( sunstroke) வராமல் இருக்க நரம்புமண்டம் பாதிக்கப்படாமல் இருக்க புதனிற்குறிய நாயுருவி காப்புக்கட்டிற்கி பயன்படுத்தப்படுகறது.
5) தும்பை செடி
நல்ல எதிர்ப்புசக்தியையும் ரத்தத்தில் மற்றும் உடலில் உள்ள முக்கிய நீர் பகுதி இதயத்தை நுரையீரலை கபாலத்தை நாசியை சூழ்ந்துள்ள நீர்ப்பகுதிகளில் நோய்தொற்று வராமல் பாதுகாக்கவும் மயக்கம் வராமல் பாதுகாக்கவும் பிதுர்களின் தோஷம் வராமலும் தடுக்கிறது.
( மரபணு நோய்)
6) தலைப்புள் கணம்புள் என்றும் சொல்வார்கள்.
( கணம்புள் நாயனார் தன் இருப்பிடத்தை குளிர்விக்க இதனை பயன்படுத்தினார்)
இது வீட்டிற்குள் உஷ்ண பாதிப்பை தராமல் உள்வெப்பநிலையையாக ( AC போல்) வைக்க காப்புகட்டப்படுகிறது.
அனைவரும் காப்புக்கட்டுங்கள்.
நம்முன்னோர்கள் நமக்கு வழங்கிய ஆரோக்ய வாழ்வின் பாரம்பர்யத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
*அனைவரும் நல்ல ஆரோக்யத்துடன் இருங்கள்*🙏🇮🇳
பகிர்வு..பிரம்மஸ்ரீ சந்திர.ராம கிருஷ்ணன் ஆச்சாரியார்_
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
'கோதை பிறந்தவூர், கோவிந்தன் வாழுமூர்' என்று எல்லோராலும் போற்றிப் புகழப்படும் ஶ்ரீவில்லிபுத்தூர், பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள் இருவரும் அவதரித்து தமிழுக்கும் வைணவத்துக்கும் பெருமை சேர்த்த ஊர்.🙏1
ஶ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்குத் தங்கக் கோபுரம் வேயும் பணியில் முக்கிய பங்காற்றிய ஆண்டாள் பி.சொக்கலிங்கம் ஶ்ரீவில்லிபுத்தூரின் பெருமைகள் பற்றிக் கூறுகிறார்.
🇮🇳🙏2
*தமிழக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த மிகவும் பழைமைவாய்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்குள்ள வடபத்ரசாயி திருக்கோயில் 1,300 ஆண்டுகள் பழைமையானது. திருப்பாவை என்னும் தெய்விகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்தக் கோயில் நகரம்தான்.
*தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்.*
நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.
ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான் என்பது நம்பிக்கை. 🙏🇮🇳1
ஓ ராமா! உன் நாமாவையோ, இந்த அனுமன் நாமாவையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், என்று ராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவர்.🙏🇮🇳2
ராமாயண கதாநாயகன் ராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்ற பெயர்களும் உண்டு.🙏🇮🇳3
ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம்.
சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே !
"பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும்
மகிழ்ச்சி "! என்றார் .
அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .
பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் .
சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் .
பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .
கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.
எடுத்துக்காட்டாக..
அனைத்தும் ஆகி அன்பாகி அமைபவன் அவனே அவன்தாளில் உனதுளம் ஆன்மா உடல் எல்லாம் உடனே தருக என் நண்பா இவைகள் யாவும் உன்முன்னே இருக்கும் அவனின் வடிவங்கள் இவைகளை விடுத்து வேறெங்கே இறைவனைத் தேடுகின்றாய்