அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான் என்பது நம்பிக்கை. 🙏🇮🇳1
ஓ ராமா! உன் நாமாவையோ, இந்த அனுமன் நாமாவையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், என்று ராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவர்.🙏🇮🇳2
ராமாயண கதாநாயகன் ராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்ற பெயர்களும் உண்டு.🙏🇮🇳3
ராமநாமத்தை தவிர வேறு எதையும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்தார். அவர் மிகச்சிறந்த ராம பக்தன். ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே வாழ்ந்தவர். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தவர். எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. 🙏🇮🇳4
பிறரால் செய்யமுடியாத செயல்களை இவர் ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே செய்து முடித்தவர். சாதாரண செயல்களை செய்து விட்டு தங்களை தாங்களே தற்பெருமையாக புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் கூறியது கிடையாது. 🙏🇮🇳5
அத்துடன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொன்னதும் கிடையாது.
நான் ராமனின் சாதாரண தூதன், அவரது பணியை செய்வதற்காகவே வந்துள்ளேன். எனக்கு ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. 🙏🇮🇳6
ராமனுக்கு தொண்டு செய்யும் போது நான் மரணமடைய நேரிட்டால் அதை வரவேற்கிறேன் என்று சொன்னவர்.வணங்குபவர்களுக்கு வணக்கம் சொல்லும் ஆண்டவனான ஆஞ்சநேயர் தமிழகத்தில் ஐந்து இடங்களில் அஞ்சலி ஹஸ்த நிலையில் விஸ்வரூபத்தில் அருள்பாலிக்கிறார். அஞ்சலி ஹஸ்தம் என்றால் வணங்கிய நிலை என்பதாகும். 🙏🇮🇳7
இதில் மிகவும் பழமையானது சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர். நாமக்கல்லில் ஒரு ஆஞ்சநேயரும், சென்னை நங்கநல்லூரில் ஒரு ஆஞ்சநேயரும், தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் 77 அடி உயரத்தில் தமிழகத்தின் மிக உயரமான ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். 🙏🇮🇳8
ஆனால் சின்னாளபட்டி ஆஞ்சநேயர் நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் ஆனவர் என் பது குறிப்பிடத்தக்கது.
அழகான ஆஞ்சநேயர், சுந்தர புருஷன் என்று பக்தர்களால் அன்பாக அழைக்கப்படும் அளவுக்கு இந்த 16 அடி உயர ஆஞ்சநேயரின் புகழ் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கிறது. 🙏🇮🇳9
ஆஞ்சநேயர்களில் கதாயுதத்துடன் இருப்பவர் இவர் ஒருவர் மட்டுமே. சமீப காலத்தில் உருவான இந்தக் கோயில், அவரது விஸ்வரூபம் போல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரைவிலேயே பிரபலமாகி விட்டது.
🙏🇮🇳10
இங்கு ஆஞ்சநேயர் அஞ்சலிஹஸ்த நிலையில் கதாயுதத்துடன் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.இவரது வலது கண் சூரியன். இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போல வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.🙏🇮🇳11
சிவனைப்போல் ஜடாமுடி என அருள்பாலிக்கும் இவரைப் பார்த்தால் அவரும் நாமும் பேசிக் கொண்டிருப்பதுபோல் தோன்றும்.
🙏🇮🇳12
சிறப்பம்சங்கள் :
இவரை வணங்கினால் ஆயுள் விருத்தி, சகல செல்வம், கல்வி ஞானம் சிறக்கும். இவரது வால் பாதத்தை நோக்கி இருக்கிறது. 🙏🇮🇳13
இப்படிப்பட்ட தரிசனம் காண்பவர்கள் திருமணபாக்கியம், உத்தியோகஉயர்வு, புத்திர பாக்கியம், கிரக தோஷங்களின் நிவர்த்தி, கோர்ட் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்
'கோதை பிறந்தவூர், கோவிந்தன் வாழுமூர்' என்று எல்லோராலும் போற்றிப் புகழப்படும் ஶ்ரீவில்லிபுத்தூர், பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள் இருவரும் அவதரித்து தமிழுக்கும் வைணவத்துக்கும் பெருமை சேர்த்த ஊர்.🙏1
ஶ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்குத் தங்கக் கோபுரம் வேயும் பணியில் முக்கிய பங்காற்றிய ஆண்டாள் பி.சொக்கலிங்கம் ஶ்ரீவில்லிபுத்தூரின் பெருமைகள் பற்றிக் கூறுகிறார்.
🇮🇳🙏2
*தமிழக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த மிகவும் பழைமைவாய்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்குள்ள வடபத்ரசாயி திருக்கோயில் 1,300 ஆண்டுகள் பழைமையானது. திருப்பாவை என்னும் தெய்விகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்தக் கோயில் நகரம்தான்.
*தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்.*
நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.
ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
1. ஆவாரம் பூ 2. பீளைப்பூ 3. வேப்பிலை 4. தும்பை செடி 5. நாயுறுவி செடி 6. தலைப்புள்
என 5 வகையான செடிகள் காப்புகட்டிற்கு பயண்படுத்த வேண்டும்.
ஆனால் தற்காலங்களில் 3 வகை மட்டுமே பயண்படுத்துகிறார்கள்
தைமாதம் முதல் உத்ராயணத்தில் ஏற்ப்படும் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும்.
மார்கழிமாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுசானத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள்.
மார்கழிமாதம் வைகுண்டம் செல்ல வேண்டிய முன்னோர்கள் இங்கேயே தங்கிவிடாமல் இருக்க அவர்கள் வாசனையை நீக்க அவர்கள் பயன்படுத்திவந்த பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்.
ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம்.
சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே !
"பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும்
மகிழ்ச்சி "! என்றார் .
அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .
பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் .
சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் .
பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .
கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.
எடுத்துக்காட்டாக..
அனைத்தும் ஆகி அன்பாகி அமைபவன் அவனே அவன்தாளில் உனதுளம் ஆன்மா உடல் எல்லாம் உடனே தருக என் நண்பா இவைகள் யாவும் உன்முன்னே இருக்கும் அவனின் வடிவங்கள் இவைகளை விடுத்து வேறெங்கே இறைவனைத் தேடுகின்றாய்