'கோதை பிறந்தவூர், கோவிந்தன் வாழுமூர்' என்று எல்லோராலும் போற்றிப் புகழப்படும் ஶ்ரீவில்லிபுத்தூர், பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள் இருவரும் அவதரித்து தமிழுக்கும் வைணவத்துக்கும் பெருமை சேர்த்த ஊர்.🙏1
ஶ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்குத் தங்கக் கோபுரம் வேயும் பணியில் முக்கிய பங்காற்றிய ஆண்டாள் பி.சொக்கலிங்கம் ஶ்ரீவில்லிபுத்தூரின் பெருமைகள் பற்றிக் கூறுகிறார்.
🇮🇳🙏2
*தமிழக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த மிகவும் பழைமைவாய்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்குள்ள வடபத்ரசாயி திருக்கோயில் 1,300 ஆண்டுகள் பழைமையானது. திருப்பாவை என்னும் தெய்விகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்தக் கோயில் நகரம்தான்.
🇮🇳🙏3
* ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குவது, ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாள் கோயில்.
🇮🇳🙏4
* இந்தக் கோயில் கோபுரம் 196 அடி உயரமும் 11 நிலைகளையும் 11 கலசங்களையும் கொண்டது. இந்தக் கோபுரத்தில் சிலைகள் எதுவும் கிடையாது. தமிழக அரசின் சின்னமாக இந்தக் கோயிலின் கோபுரம் விளங்குகிறது.
🇮🇳🙏5
* தமிழகத்திலேயே பெரியாழ்வார், பெரிய கோயில், பெரிய குளம், பெரிய பெருமாள், பெரிய கோபுரம், பெரிய விமானம், ஆகியவற்றைக் கொண்ட ஸ்தலம். இங்குள்ள மாரியம்மன் கோயில்கூடப் பெரிய மாரியம்மன் கோயில் என்றுதான் அழைக்கப்படுகிறது. பெரிய கூரை வேயப்பட்ட கோயில் இது.
🇮🇳🙏6
* பெருமாள் கோயில்களில் வேறு எங்கும் காண முடியாத ஓர் அதிசயத்தை இங்கு காணலாம். பொதுவாக, தாயார் சந்நிதி தனியாகத்தான் இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும்தான் பெருமாளுடன் தாயாரும் ஒரே சந்நிதியில் இருப்பார்கள்.
🇮🇳🙏7
* எல்லா பெருமாள் கோயில்களிலும் கருடாழ்வார் பெருமாளுக்கு எதிர்ப்புறம் இருப்பார். இங்கு பெருமாள், தாயார், கருடாழ்வார், மூவருமாக இருக்கிறார்கள். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்ற தத்துவத்தின் அடிப்படையாக இது பார்க்கப்படுகிறது.
🇮🇳🙏8
* எல்லா கோயில்களிலும் ஒரு விமானம்தான் உண்டு. இந்தக் கோயிலில்தான் கருவறையில் இரண்டு விமானங்கள் இருக்கும்.
🇮🇳🙏9
* கள்ளழகரிடம் ஆண்டாள், திருவரங்கம் ரங்கநாதனை எனக்குத் திருமணம் செய்து வைத்தால் நூறு தடா வெண்ணெய்யும் நூறு தடா அக்கார அடிசிலும் உனக்குப் படையலிடுகிறேன் என்று சொல்லி வேண்டிக்கொள்வார்.
🇮🇳🙏10
* ஆண்டாள் அவதரித்து சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய ராமாநுஜர் அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி வைக்கிறார். 🇮🇳🙏11
அதனால்தான் ராமாநுஜரை 'வாங்கண்ணா கோயில் அண்ணா' எனச்சொல்லி ஆண்டாளே எழுந்து வந்து வரவேற்றதாக ஐதிகம். அதனால்தான் மூலவரிடமிருந்து ஏழாவது அடியில் ராமாநுஜருக்கு தங்கச்சிலை வைத்திருப்பார்கள்.
🇮🇳🙏12
* 108 திவ்யதேசங்களில் 56 வது திவ்ய தேசமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலின் தெய்வம் வடபத்ரசாயி ஆலமரத்தில் சாய்ந்து இருப்பார்.
🇮🇳🙏13
* ராமாநுஜர், வேதாந்த தேசிகர், மணவாளமாமுனிகள் இவர்கள் மூவருடனும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தொடர்பு உண்டு. 🇮🇳🙏14
வேதாந்த தேசிகர், ஶ்ரீவில்லிபுத்தூர் குறித்து 29 பாசுரங்கள் பாடியுள்ளார். மணவாளமாமுனிகளுக்காக மார்கழி மாதம் முடிந்ததும் 'எண்ணெய்க்காப்பு உற்சவம்' என்று ஒரு உற்சவம் இங்கு சிறப்பாக நடைபெறும்.
🇮🇳🙏15
* இங்குள்ள ஆண்டாள் கிளி மிகவும் விசேஷமானது. ஆண்டாள் ரங்கனை மணப்பதற்காக மூன்று பேரைத் தனித்தனியாக தூது அனுப்புகிறார். முதலில் மழையைத் தூதாக அனுப்புகிறார். மழை பெருமாளின் பேரழகைப் பார்த்ததும் பொழிந்து சொல்ல வந்த விஷயத்தை மறந்துவிடுகிறது.
🇮🇳🙏16
அடுத்ததாக வண்டைத் தூது அனுப்புகிறார். வண்டு, பெருமாளின் மாலையில் இருக்கும் தேனை அருந்திவிட்டு, அங்கேயே மயங்கிக் கிடந்து விடுகிறது. அடுத்ததாகத்தான் கிளியைத் தூது அனுப்புகிறார்.
🇮🇳🙏17
'சொன்னதைச் சொல்லுமாம் கிளி.' கிளி தவறாமல் ஆண்டாள் சொன்னதைச் சொல்ல ரங்கமன்னர் ஆண்டாளின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கிறார். அதனால்தான் இங்குள்ள 'ஆண்டாள் கிளி' மிகவும் விசேஷம்.
🇮🇳🙏18
* ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். திருவரங்கம் பெருமாள் ரேவதி நட்சத்திரம். கருடாழ்வார், சுவாதி நட்சத்திரத்தில் தோன்றியவர். பூரம், ரேவதி, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் மிகவும் விசேஷமான க்ஷேத்திரம்
🇮🇳🙏19
* ஆண்டாள் பிறந்த நந்தவனம் இப்போதும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நந்தவனம் மிகவும் விசேஷமான ஒன்று.
🇮🇳🙏20
* 33 அடி உயரமுள்ள தங்க விமானம் ஏறக்குறைய 100 கிலோ அளவில் தங்கத்தால் வேயப்பட்டது. 🇮🇳🙏21
உலகிலேயே மிகப்பெரிய கோபுரம், பெரிய விமானம் என்று சொன்னால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலைத்தான் ஆண்டாள் திருக்கோயிலைத்தான் சொல்ல முடியும். 2016 -ம் ஆண்டில் இந்தப் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
*தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்.*
நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.
ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
1. ஆவாரம் பூ 2. பீளைப்பூ 3. வேப்பிலை 4. தும்பை செடி 5. நாயுறுவி செடி 6. தலைப்புள்
என 5 வகையான செடிகள் காப்புகட்டிற்கு பயண்படுத்த வேண்டும்.
ஆனால் தற்காலங்களில் 3 வகை மட்டுமே பயண்படுத்துகிறார்கள்
தைமாதம் முதல் உத்ராயணத்தில் ஏற்ப்படும் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும்.
மார்கழிமாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுசானத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள்.
மார்கழிமாதம் வைகுண்டம் செல்ல வேண்டிய முன்னோர்கள் இங்கேயே தங்கிவிடாமல் இருக்க அவர்கள் வாசனையை நீக்க அவர்கள் பயன்படுத்திவந்த பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்.
அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான் என்பது நம்பிக்கை. 🙏🇮🇳1
ஓ ராமா! உன் நாமாவையோ, இந்த அனுமன் நாமாவையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், என்று ராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவர்.🙏🇮🇳2
ராமாயண கதாநாயகன் ராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்ற பெயர்களும் உண்டு.🙏🇮🇳3
ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம்.
சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே !
"பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும்
மகிழ்ச்சி "! என்றார் .
அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .
பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் .
சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் .
பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .
கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.
எடுத்துக்காட்டாக..
அனைத்தும் ஆகி அன்பாகி அமைபவன் அவனே அவன்தாளில் உனதுளம் ஆன்மா உடல் எல்லாம் உடனே தருக என் நண்பா இவைகள் யாவும் உன்முன்னே இருக்கும் அவனின் வடிவங்கள் இவைகளை விடுத்து வேறெங்கே இறைவனைத் தேடுகின்றாய்