#மந்திர_ஸித்தி
ஒரு முறை காஞ்சி மகா ஸ்வாமிகளை தரிசிக்க சங்கரன் என்கிற பிரம்மச்சாரி இளைஞன் வந்திருந்தான். மந்திர ஜபம் சம்பந்தமாக ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டு போகலாம் என்று வந்தேன் என்று மகா பெரியவாளிடம் விண்ணப்பித்தான். ஸ்வாமிகள், “அப்படியா! சொல்லு, அப்படி என்ன பெரிய
சந்தேகம் என்று கேட்டார்.
“ஒரு பண்டிதர் மூலமாக ஹனுமத் உபாசனா பரமான மூல மந்திரம் எனக்கு உபதேசம் ஆகியிருக்கு பெரியவா. இந்த மந்திரம் உபதேசமான இருவத்து மூணாம் வயசிலேருந்து கடுமையா விதிப்படி ஜபிச்சிண்டு வர்றேன். ஏழு வருஷமா ஜபிக்கிறேன் பெரியவா. ஆனா ஒண்ணுமே தெரியல்லே” என்றான்.
“ஒண்ணுமே
தெரியலேன்னா ?” என்று வியப்புடன் கேட்டார் ஸ்வாமிகள். உடனே சங்கரன், “இல்லே பெரியவா அந்த மந்திரம் எனக்கு சித்தி ஆயிடுத்தா இல்லியாங்கறது தெரியலியே பெரியவா” என்றான் குரலில் வருத்தத்துடன். உடனே ஸ்வாமிகள், “மந்திர சித்தி ஆயுட்டுத்தா இல்லியாங்கறதை ஜபம் பண்றவா அனுபவ சித்தாந்த்தமா தான்
தெருஞ்சுக்க முடியும்! ஒரு சந்தர்ப்பதுலே ஜபம் பண்ணி உபாசிக்கிறவாளுக்கு தான் இது தெரியும் சங்கரா” என்று வாத்சல்யத்துடன் சொன்னார். சங்கரன் சமாதானம் அடையவில்லை. “இல்லே பெரியவா எனக்கு அனுபவ சித்தாந்தமெல்லாம் இது வரை ஏற்படலை. ஒண்ணும் புரியவுமில்லை. ஜபத்தை மாத்திரம் குரு சொன்னபடி ஏழு
வருஷமா பண்ணிண்டு வர்றேன்! மனசு சில நேரம் ரொம்ப ஆயாசப்படறது பெரியவா. இதை நேரடியா தெரிஞ்சுக்க ஏதாவது வழி இருந்தா சொல்லணும் என்று இரு கை கூப்பி கிழே விழுந்து நமஸ்கரித்தான் சங்கரன். ஆச்சார்யாள் சற்று நேரம் மௌனமாக இருந்தார். சங்கரனின் குழப்பம் அவருக்கு புரிந்தது. அவனுக்கு இதை
எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டார். சங்கரனை கிழே உட்காரச் சொன்னார். ஆச்சார்யாள் பேச ஆரம்பித்தார். “பல வருஷங்களுக்கு முன்னால் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்திலே ந்ருசிம்ஹ பாரதி ஸ்வாமிகள் என்று ஒரு பெரிய மகான் பீடாதிபதியா இருந்தார். ஒரு நாள். அந்த
ப்ராந்தியந்தை சேர்ந்த மடத்து சிஷ்யன் ஒருவன் ஸ்வாமிகளை தரிசிக்க வந்தான். வந்தவன் வெறுமனே வரவில்லை. இப்போ என் கிட்டே கேட்ட இதே கேள்வியை சுமந்துண்டு வந்திருந்தான். ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணிவிட்டு, ‘ஸ்வாமி எனக்கு ஒரு மந்திரம் உபதேசம் ஆகி ஜபிச்சுண்டு வர்றேன். பல வருஷமா ஜபிக்கிறேன்.
அந்த மந்திரம் சித்தி ஆகி விட்டதானு தெரிஞ்சுக்க முடியலே எப்படி தெரிஞ்சுக்கறது ஸ்வாமி என்று கேட்டான். உடனே ஸ்வாமிகள், ‘நீ பாட்டுக்கு விடாம ஆத்மார்த்தமா ஜபத்தை விடாம பண்ணிண்டு வா. சித்தி பலனை அந்த தேவதையே தானாக அனுக்ரகிக்கும்.’ என்று சமாதானம் கூறினார். ஸ்வாமிகளோட இந்த பதில்
சிஷ்யனுக்கு திருப்தி தரலே. எனவே அவன் ஸ்வாமிகளை விடவில்லை. ‘இல்லே ஸ்வாமி மந்திரம் சித்தி ஆயிடுதுன்கறதை நானே உணர்ந்து தெரிஞ்சுக்கணும். அதற்கு ஒரு வழி சொல்லணும். பிரார்த்திக்கிறேன்’ என்றான். அவனுடைய மனோ நிலையை புரிந்து கொண்டார் ஸ்வாமிகள். அவனை அருகில் அழைத்தார். ‘கவலைப்படாதே கொழந்தே
அதுக்கும் ஒரு வழி இருக்கு. தினமும் நீ ஜபம் பண்ண ஆரம்பிக்கறச்சே ஒரு மரப் பலகையை போட்டுண்டு அதுக்கு மேலே நிறைய நெல்லைப் பரப்பி விடு. அதுக்கும் மேல ஒரு வஸ்திரத்தைப் போட்டுண்டு உட்காந்து ஜபம் பண்ண ஆரம்பி. பிரதி தினமும் இப்படி பண்ணிண்டு வா. என்னிக்கி நீ ஜபம் பண்றச்சே பலகை மேலே பரப்பி
இருக்கிற நெல் மணிகள் தானாகவே பொரியறதோ அன்னிக்கு உனக்கு உன் மந்திரம் சித்தி ஆயிட்டதா அர்த்தம். என்ன புரியறதா என்றார். சிஷ்யனுக்குப் புரிந்தாலும், ‘இது சாத்தியமான காரியமா? ஸ்வாமிகள் நம்மை திருப்திப் படுத்த இப்படிச் சொல்கிறாரா என்று குழம்பியவன். யாருமே எதிர்பார்க்காத ஒரு கேள்வியை
ஸ்வாமிகளைப் பார்த்து கேட்டு விட்டான். குருநாதர் என்னை ரொம்ப மன்னிக்கணும். தெரிஞ்சுக்கணும்னு ஆசையோடு தான் இதைப் பிரார்த்திக்கிறேன். குரு ஸ்தானத்துலே இருக்கறவாளை பரீட்சைப் பண்ணறதா நெனசுக்கப்படாது. கண்ணாலே பார்க்கணும்னு ஒரு ஆசை தான். வேற ஒண்ணுமில்லை. ஸ்வாமிகள் இப்படி பலகை மேலே
வஸ்திரத்தைப் போட்டு ஒக்கார்ந்து ஜபம் பண்ணி நெல்..பொறி… என்று முடிப்பதற்குள் ‘நீங்க அப்படி உட்கார்ந்து ஜபம் பண்ணி இது வரைக்கும் எப்பவாவது நெல் பொரிஞ்சுருக்கானு தெரிஞ்சுக்க ஆசைபடறே அவ்வளவு தானே?’ என்று சிரித்த ஸ்வாமிகள், உடனே அங்கேயே ஒரு பலகையை கொண்டு வரச் சொல்லி கிழக்கு முகமாகப்
போடச் சொன்னார். அதன் மேலே நிறைய நிலைப் பரப்பச் சொன்னார். தனது வஸ்திரத்தை அதன் மேல் போட்டு பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடினார். அங்கு ஏகக் கூட்டம் கூடி விட்டது!
சில வினாடிகள் தான். திடீர் என்று பலகையின் மேல் பொர பொரவென்று நெல் பொறிகிற சப்தம். லேசாகப் புகையும் வெளிப்பட்டது!
ஸ்வாமிகள் எழுந்தார். நெல் மேல் போட்டிருந்த வஸ்திரத்தை எடுத்தார். பலகையின் மேல் வெள்ளை வெளேர் என்று நெற்பொறிகள்! கூட்டம் பிரமிப்புடன் வியந்தது! நரசிம்ஹ பாரதி ஸ்வாமிகள் கேள்வி கேட்ட சிஷ்யனைப் பார்த்தார். கேவிக் கேவி அழுதபடியே நின்றிருந்தான் அவன். ஒருவருக்கும் பேச நா எழவில்லை. மகா
ஸ்வாமிகள் இந்தச் சம்பவத்தை சொல்லி முடித்தார். சங்கரன் கண்களிலும் நீர். பிரமித்துப் போய் நின்றிருந்தான். சற்று பொருத்து சங்கரன், “பெரியவா…நீங்க..” என்று ஏதோ ஆரம்பிக்க, இடைமறித்த மகா ஸ்வாமிகள், ‘என்ன சங்கரா…பெரியவா…நீங்க அந்த மாதிரி பலகையிலே நெல்லைப் பரப்பி ஒக்காந்து ஜபம் பண்ணி
பொரிச்சுக் காட்டறேளானு கேக்கப்போறியா என்று சிரித்தார்.
சங்கரன் சாஷ்டாங்கமாக மஹா ஸ்வாமிகளின் பாதத்தில் விழுந்து வணங்கி, “போதும் பெரியவா…மந்திர சித்தியோட மகிமையை இந்த அளவுக்கு நீங்க விளக்கிச் சொல்லி நான் புரிஞ்சுண்டதே போதும். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ. நான் புறப்படறேன்” என்று
தெளிவடைந்தவனாக ஆச்சாரியாளிடம் விடைபெற்றான் !

மந்திரங்களின் பலன்கள் கிடைக்க அவற்றை விடாமல் கற்றுக்கொண்ட சரியான முறையில் பாராயணம் செய்ய வேண்டும். பலனை உடனே எதிர்பார்த்து எந்த விஷயத்தையும் செய்யத் துவங்கக் கூடாது. நம் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைத்து முடிந்த அளவு நியம
நிஷ்டைகளை செய்து வரவேண்டும். அப்பொழுதுதான் கரோனா சுனாமி போன்ற பேரிடர்கள் வராமல் நம் சமுதாயம் காப்பாற்றப்படும்.

ஸ்ரீ மகா பெரியவா சரணம்🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 20
#ஜல்லிக்கட்டு #சாமி_மாடு.
மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விவரம் அறிந்தவர்களுக்கு ImageImage
தெரியும் அந்த மாடு மாவீரன்
அழகாத்தேவன் நினைவாகவே
அவிழ்த்து விடப்படுகிறது என்பது. அழகாத்தேவன் என்பவர் யார்? மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன் பட்டியை (இன்றைக்கு சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்ந்த செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் பொறுப்பில்லாமல்
தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. அழகாத்தேவனுக்கு கால்கட்டு போட்டு விட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட
கருத்தமாயன் பெண் பார்க்கும்
படலத்தைத் தொடங்கினார். நாகமலைக்கு அருகேயுள்ள
கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும்
கருத்தமலையின்
Read 13 tweets
Jan 19
சுந்தர தெலுங்கில் என்ன அருமையான ஆன்மீக கதை! தமிழில் சப்டைடில் உள்ளது. கதை சொல்பவர் பஜனை பாடலும் பாடி கதை சொல்கிறார். Don’t miss it :) a lazy person too can be transformed into a pure Bhakta! தேவை வெகுளித்தனமான இறை நம்பிக்கை.
தொடர்ச்சி…
ஏகாதசி விரதத்தின் மகிமை!
Read 6 tweets
Jan 19
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய மன்னன் வைகை பாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தனக்கு கண் பார்வை வேண்டி பல கோயில்களுக்குச் சென்றான். ஒரு நாள் அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் வீரபாண்டியில் தவமிருக்கும் கௌமாரியம்மனை வணங்கி அதன் Image
பிறகு கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார். அதன் படி அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு
கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான். தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும்
ஊரில் இந்த கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. வைகை நதியின் கரையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அசுரன் ஒருவனை வெல்வதற்காக சக்திதேவியின் அம்சமான கௌமாரி ஒரு
Read 5 tweets
Jan 19
John D Rockfeller was once the richest man in the world. The first billionaire in the world. By age 25, he controlled one of the largest oil refineries in the US. By age 31, he had become the world’s largest oil refiner. By age 38, he commanded 90% of the oil refined in the U.S. Image
By 50, he was the richest man in the country. By the time he died, he had become the richest man in the world. As a young man, every decision, attitude, and relationship was tailored to create his personal power and wealth. But at the age of 53, he became ill. His entire body
became racked with pain and he lost all of his hair. In complete agony, the world’s only billionaire could buy anything he wanted, but he could only digest soup and crackers. An associate wrote, He could not sleep, would not smile and nothing in life meant anything to him. His
Read 9 tweets
Jan 18
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒருமுறை திருக்கச்சி நம்பிகள், வரதராஜப் பெருமாளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தார். அப்போது தலைமேல் ஒரு பாத்திரத்தோடு அங்கே வந்த அர்ச்சகர் திருக்கச்சி நம்பிகளிடம், பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். இதைப் பார்த்துக் ImageImage
கொள்ளுங்கள். மடப்பள்ளிக்குச் சென்று புளியோதரையையும் எடுத்து வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு மடப்பள்ளியை நோக்கிச் சென்றார். அப்போது பெருமாள் திருக்கச்சி நம்பிகளிடம், “நம்பி! கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை எடுத்து எனக்கு ஊட்டி விடுங்கள்” என்றார். பெருமாளின் கட்டளையைச் சிரமேற்கொண்ட
நம்பி, பாத்திரத்தில் இருந்து சர்க்கரைப் பொங்கலை எடுத்துப் பெருமாளுக்கு ஊட்டினார்.
பெருமாளும் அமுது செய்தார். “ஆஹா! நன்றாக இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் தாருங்கள்” என்று கேட்டார் பெருமாள். நம்பியும் எடுத்து ஊட்டினார்.
அதற்குள் புளியோதரையுடன் அங்கே வந்த அர்ச்சகர், பாத்திரத்தில் பாதி
Read 15 tweets
Jan 18
Experiences with Maha Periyava: A Gurkha came for darshan, his face reflecting the heaviness of his heart.
"Ask him what the matter is", said Maha Periyava to the attendant.
The Gurkha said, "I have known only difficulties since I was born. But by some good fortune, I have come
to Periyava who is the embodiment of divinity. I must be blessed that I am never born again". Periyava did not say, "Aha! May it so happen! You shall never be born again!" Very softly he spoke to the man. "I do not have the power to grant that kind of a boon. But I shall pray to
Chandramouleeswara and Tripurasundari who I worship every day that your prayers be granted". The Gurkha felt that this was a fair enough reply. He was thrilled. He received the prasada and said as he left, "I have no more births. This is the declaration of the Lord". With his
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(