இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும், வேறெங்கும் காண இயலாத பல்வேறு சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் விளங்குகிறது.
தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றி
பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம்.
இந்தியாவில் மூன்று இடங்களில் தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது.
ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி எனும் சிறுகுன்றிலும் உள்ளது.
மூன்றாவதாகக் கீழப்பாவூரில் மட்டுமே
சமதளமான பகுதியில் 16 திருக்கரங்களுடன் அருள்பாலித்து வருகிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக ரிஷிகளுக்கு காட்சி கொடுத்தது மட்டுமின்றி, நிரந்தரமாகத் தங்கி இருப்பதும் இங்கு மட்டுமே.
இத்தலம் சுமார் 1,100 ஆண்டுகள் புராதனச் சிறப்புமிக்கதாகும்.
முதன் முதலில் நரசிம்மர் அவதாரம்
நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில். மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர் ஆகும்.
>> தல வரலாறு
கிருதயுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழித்தார்.
சில நாழிகைகளே நீடித்திருந்த நரசிம்ம அவதாரத்தை காண காசிய முனிவர், நாரதர், வருணன், சுகோசன்
முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டு மகா விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தனர்.
இவர்களுடைய தவத்தை மெச்சிய பகவான் விஷ்ணு, “பொதிகை மலைச்சாரலில் அகத்தியர் ஏற்படுத்திய மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடியபின் அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் எம்மை வேண்டித் தவம்
இயற்றுக” என்று கூறி மறைந்தார்.
அதன்படியே முனிவர்களும், தேவர்களும் சித்ரா நதிக்கரையில் பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டனர். அந்த தவத்தில் மகிழ்ந்த பகவான் மகாவிஷ்ணு தான் முன்பு எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன்
காட்சியளித்தார்.
கர்ஜனையுடன் காட்சியளித்த பகவானைக் கண்ட முனிவர்களும், தேவர்களும் மெய்மறந்து நரசிம்மரை தரிசித்தனர்.
பின்னர், இந்த அவதாரக் கோலத்திலேயே இவ்விடத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டார். அந்த இடம் சோழர்கள் காலத்தில் சத்திரிய சிகாமணி என்று அழைக்கப்பட்ட தற்போதைய கீழப்பாவூர்
ஆகும்.
வடிவச்சிறப்பு
அமைதியான சூழலில், வயல்வெளிகள் நிறைந்த பசுமையான பகுதியில் இந்த “#லட்சுமி_நரசிம்மர்” ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் காட்சி தருவது சிறப்பாகும்.
இரண்ய கசிபுவை சிங்கப்பெருமாள் வதம் செய்த காட்சியை இத்தலத்தில் அப்படியே காணலாம்.
இரண்யனை தன் மடி மீது கிடத்தி, இரண்டு கரங்களால் அவனைப் பிடித்து, நான்கு கரங்களால் அவன் வயிற்றைக் கிழித்து, இரண்டு கரங்களால் குடலை உருவி மாலையாகப் பிடித்து, மீதமுள்ள எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் உக்கிரமாகக் காட்சி தருகிறார்.
-அமைவிடம்
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில்,
கீழப்பாவூர் கிராமத்தில் இந்த லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.
தென்காசி – திருநெல்வேலி சாலையில், திருநெல்வேலியில் இருந்து மேற்கில் 32 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கிலோ மீட்டர் தொலைவிலும் பாவூர்சத்திரம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து
வடக்காக சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் கீழப்பாவூர் உள்ளது.
- தரிசன நேரம்
காலை 07.30 மணி முதல் பகல் 10.30 மணி வரை
மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மனபயம் அச்சம் தீர்க்க லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!!ருணம் எனும் கடன் ரோகம் எனப்படும் வியாதிகள்
தீராத பிரச்னைகள், செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் தீரும் !
கடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!!
🪔🌺🙌🙏 "லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே " 🪔🌺🙌🙏
கடன் தொல்லையால்
அவதிபடுபவர்கள் இந்த வழிபாட்டை செய்து வந்தால் பலன் அடையலாம்.
கடன்பட்டார் நெஞ்சத்தை உவமையாக கம்பர் ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன்தொல்லையில் இருந்து மீள ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.
இந்த துதி சமஸ்கிருதத்தில் இருப்பதால், படிக்க இயலாதவர்களுக்கு எளிமையான பரிகாரம் இருக்கிறது.
"லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே "
என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை பாராயணம் செய்யவேண்டும்.
அப்போது லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் (எலுமிச்சை சாறு,
காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா. அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு
அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.
அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு ' *தேவதாரு மரம்* '.
அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான *"தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம்*", போன்ற அனைத்தும் '
*திருத்தோடகன்* ' என்னும் பொற்கொல்லரால் பிரத்தியேகமாக அகத்தியருக்காக செய்து கொடுக்கப்பட்டது.
அகத்தியர் அணிந்திருக்கும் பூணூலானது, விபூதி கலந்த ஒரு நிறத்தில் இருக்கும். இதன் பெயர் ' *திரிபூரணம்* ' என்பதாகும். இது *கௌதம முனிவரால்* கொடுக்கப்பட்டது.
ஸ்ரீகூரத்தாழ்வான் 1013ஆவது திருநட்சித்திரம்,தை ஹஸ்தம் இன்று
(23/01/2022)-பதிவு -3/3
🙏🌻🌼🌷🌺🙏
அண்ணலும் இளவலும்!!!
🎖👍☝️🖕👏👌🏅
இன்று (23/01/2022) தை ஹஸ்தம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமியின் 1013 ஆவது திருநட்சித்திரம்.ராமானுஜரை விட 8 ஆண்டுகள் மூத்தவரான கூரத்தாழ்வான்
ஸ்ரீராமபிரானின் அம்சமாக அவதரித்தார் என்பர்.
ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்த ராமானுஜர் திரேதாயுகத்தில்,
இளையபெருமாள் லட்சுமணராக
அவதரித்தார்.அப்போது ராம கைங்கர் யமே பிரதானம் என்று வாழ்ந்தார்.
அவர் செய்த கைங்கர்யங்களுக்கு
(சேவை) எதைக் கொடுத்தாலும்
ஈடாகாது என்று உணர்ந்த ராமர்,தாமே
மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து, லட்சமணராகத் தோன்றும், அவதார
புருஷருக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று சங்கல்பித்துக்
கொண்டார்.அந்த வகையில் கலியுகத்தில் 1017ஆம் ஆண்டில் அவதரிக்கப்போகும் ராமானுஜருக்குச் சேவை புரிவதற்காக,1009 ஆம் ஆண்டிலேயே,கூரேசர் ஆக,
காஞ்சிபுரத்துக்கு
(எத்தனையோ மஹான்கள். அனைவருக்கும்
என் வணக்கங்கள் இது தான் அர்த்தம்)
பக்தி செய்வதில் பலவகை இருக்கிறது. இசையால் பக்தி
செய்வது அதில் ஒரு வகை.
ராமபக்திக்கு தியாகய்யர்
மிகச்சிறந்த உதாரணம். அதனால்
தான் இறைவன்
அவருக்கு தரிசனம்
தந்ததாக சொல்வார்கள்.
தியாகராஜரின் கீர்த்தனைகள் அனைத்தும் தெலுங்கில் இருந்தாலும் அவை தமிழர்கள் உட்பட அனைவராலும் ரசித்துக் கொண்டாடப்படுவதற்கான காரணம் அதிலுள்ள உணர்வுபூர்வமான பக்திரசம்தான். அப்பாடல்களில் இருக்கும் உயிரோட்டம், கேட்பவர்களின் ஆன்மாவுடன் கலந்து
வாழும் விருப்பத்தை அதிகரிக்கிறது.
இக்கீர்த்தனைகள் இறைவன் புகழைப் பாடுவதால் அனைவருக்கும் உரிமை உடையதாக நினைக்கிறார்கள். தனக்கு உரிமையானது என்பதால் நினைவில் நிரந்தர இடம் அளிக்கிறார்கள். அதிலும் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் உள்ள ‘எந்தரோ மகானுபாவுலு’ வாழ்வில் ஒரு முறை கேட்டுவிட்டால்,
நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.
தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா
பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.
சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக்
கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து