சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில், புட்லூர் கிராமத்தில் பூங்காவனத்தம்மன் என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
🙏🇮🇳1
புற்றுருவாக பெண் உருவத்துடன் இயற்கையாக ஒரு நிறைமாத கர்ப்பிணி படுத்திருப்பது போல் இங்கு தோன்றியுள்ளார் அங்காள பரமேஸ்வரி.
🙏🇮🇳2
சக்தியும் சிவனும் ஒரே இடத்தில் சேர்ந்து இருப்பதால் அம்மன் எதிரே நந்தி பகவான் இருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு. மற்ற அம்மன் ஆலயங்களில் எதிரே சிம்ம வாகனம் இருக்கும். ஆனால் இங்கு சக்தியும் சிவனும் சேர்ந்து உள்ளபடியால் எதிரில் நந்தி பகவான் உள்ளது.🙏🇮🇳3
ஆகையால் சிவனுக்கு பிரதோஷ வழிபாடும் அம்மனுக்கு வழிபாடும் வழக்கத்தில் உள்ளது.
🙏🇮🇳4
நிறைமாத கர்ப்பிணி கோலத்துடன் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னையானவள், தன்னை நாடி வந்து வணங்கும் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுத்தும் பேற்றினையும், குழந்தை வரத்தினையும் வழங்குகின்றாள் என்பது நம்பிக்கை. 🙏🇮🇳5
எனவே, தான் இத்திருத்தலத்திற்கு வந்து வளைகாப்பு செய்து கர்ப்பிணிப் பெண்கள் வழிபாடு செய்கின்றனர்.
🙏🇮🇳6
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைகளிலும், மாதந்தோறும் அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களிலும் ஏராளமான பக்தர்கள், இத்திருத்தலத்திற்கு வந்து அன்னையினை வணங்கி அருள் பெற்றுச் செல்கிறார்கள்.
🙏🇮🇳7
மூலவர் மற்றும் உற்சவராக அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி உள்ளார். கோவிலில் தலவிருட்சம் வேம்பு மரம் உள்ளது. முருகர், வினாயகர், தட்சினமூர்த்தி, துர்கை உள்ளிட்ட பிரகார தெய்வங்கள் மற்றும் திருக்குளம் உள்ளது.
🙏🇮🇳8
அம்மனுக்கு கூழ்வார்த்தல் பொங்கல் வைத்தும் அங்கபிரதசனம் செய்தும் தொட்டில், தாலி காணிக்கை செய்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.
முக்கிய திருவிழாக்களாக மாசி அமாவாசை, மயான கொள்ளை
போன்ற திருவிழாக்கள் நடைபெறுகிறது.
🙏🇮🇳9
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் குழந்தை பாக்கியம் வேண்டி வருபவர்கள் அம்பாளின் அருளைப் பெற்ற பிறகு ஐந்தாம் மாதம் ஐந்து வகையான சாதம், புடவை, ஜடை, மாலை, வளையல் மற்றும் அம்பாளுக்கு தேவையான பூஜை செய்கின்றனர். 🙏🇮🇳10
மேலும், அவர்கள் அம்பாள் அருள் பெற்ற பிறகு மாங்கல்யம் சாற்றுவது ஐதீகம்.
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள்.
அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது.
சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி, சிவகங்கை
இங்கு கருவறை கோஷ்டத்தில் ஸ்ரீராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். 🙏🇮🇳1
இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி ராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை.
🙏🇮🇳2
பைரவர் சிறப்பு:
அம்பாள் சன்னதிக்கு முன் பைரவர் தனிச்சன்னதியில் வலப்புறம் திரும்பிய நாய்வாகனத்துடன் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். இவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளது. 🙏🇮🇳3
திருச்சிக்கு அருகே குளித்தலை, மணப்பாறை வழியில் ‘ரத்தினகிரி’ சிவாலயம் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த இறைவனை ‘இடி’ பூஜிப்பதாக ஐதீகம். இன்னொரு அதிசயம், இந்த சிவனுக்கு அபிஷேகிக்கப்படும் பால், உடனே தயிராக மாறி விடுகிறது.
இது போல அதிசயமான இடி பூஜை சென்னை திருப்போரூர் அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலிலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடப்பது சிறப்பு.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலை இடி தாக்கும். ஆனால் மூல விக்கிரகம் சேதம் அடையாது என்பது, இந்த இந்த கலியுகத்திலும் இந்த கோவில்களில் நடந்து வரும் அதிசய நிகழ்வுகளாகும்.
ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூன்றுமே சிறப்புடையது. மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு. 🙏🇮🇳1
அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன் என்றார்.
சீடன் ஒருவன் குருவிடம், சுவாமி நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். கடவுளுக்குத் தூக்கம் வருமா? வராதா? எனக் கேட்டான்.
குரு புன்னகைத்தவாறே, அறையில் இருந்த கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார். இந்தக் கண்ணாடியை நான் சொல்லும் வரை கையில் பிடித்தபடி நின்று கொண்டிரு.
கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என்றார் குரு. சீடனும் கண்ணாடியைப் பிடித்தபடியே நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் உறக்கம் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது. தூக்கத்தை விரட்ட அவன் பல முயற்சிகளை மேற்கொண்டும், அது பலன் அளிக்கவில்லை, தன்னையும் மறந்து ஒரு விநாடி அவன் கண்ணயர்ந்து விட்டான்.