அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி, சிவகங்கை
இங்கு கருவறை கோஷ்டத்தில் ஸ்ரீராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். 🙏🇮🇳1
இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி ராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை.
🙏🇮🇳2
பைரவர் சிறப்பு:
அம்பாள் சன்னதிக்கு முன் பைரவர் தனிச்சன்னதியில் வலப்புறம் திரும்பிய நாய்வாகனத்துடன் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். இவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளது. 🙏🇮🇳3
இதில் நீராடி, சுவாமியை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பாவம் தீரும், நோய், எதிரி பயம் நீங்கும் என்பது நம்பிக்கை.
🙏🇮🇳4
தோஷம் நீக்கும் பல்லி:
அம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை வணங்கினால் அவை தீரும். இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக கட்டப்பட்டுள்ளது.
🙏🇮🇳5
தட்சிணாமூர்த்தி ஏழிசைத்தூண் மண்டபத்தில் அமைந்துள்ளதும், சண்டிகேஸ்வரர் சன்னதி, ஒரே பாறையில் செய்யப்பட்ட குடைவரைக்கோயில் போன்ற அமைப்பில் உள்ளதும், குதிரையில் போருக்கு செல்லும் வீரன் ஒருவனது நிலையை தத்ரூபமாக செதுக்கியிருப்பதும் சிறப்பு. நந்தி தனி மண்டபத்தில் அமைந்துள்ளது.
🙏🇮🇳6
சிறப்பம்சங்கள்:
இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத்தூணுடன் அமைந்துள்ளது.
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள்.
அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது.
சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
திருச்சிக்கு அருகே குளித்தலை, மணப்பாறை வழியில் ‘ரத்தினகிரி’ சிவாலயம் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த இறைவனை ‘இடி’ பூஜிப்பதாக ஐதீகம். இன்னொரு அதிசயம், இந்த சிவனுக்கு அபிஷேகிக்கப்படும் பால், உடனே தயிராக மாறி விடுகிறது.
இது போல அதிசயமான இடி பூஜை சென்னை திருப்போரூர் அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலிலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடப்பது சிறப்பு.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலை இடி தாக்கும். ஆனால் மூல விக்கிரகம் சேதம் அடையாது என்பது, இந்த இந்த கலியுகத்திலும் இந்த கோவில்களில் நடந்து வரும் அதிசய நிகழ்வுகளாகும்.
ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூன்றுமே சிறப்புடையது. மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு. 🙏🇮🇳1
அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன் என்றார்.
சீடன் ஒருவன் குருவிடம், சுவாமி நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். கடவுளுக்குத் தூக்கம் வருமா? வராதா? எனக் கேட்டான்.
குரு புன்னகைத்தவாறே, அறையில் இருந்த கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார். இந்தக் கண்ணாடியை நான் சொல்லும் வரை கையில் பிடித்தபடி நின்று கொண்டிரு.
கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என்றார் குரு. சீடனும் கண்ணாடியைப் பிடித்தபடியே நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் உறக்கம் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது. தூக்கத்தை விரட்ட அவன் பல முயற்சிகளை மேற்கொண்டும், அது பலன் அளிக்கவில்லை, தன்னையும் மறந்து ஒரு விநாடி அவன் கண்ணயர்ந்து விட்டான்.
சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில், புட்லூர் கிராமத்தில் பூங்காவனத்தம்மன் என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
🙏🇮🇳1
புற்றுருவாக பெண் உருவத்துடன் இயற்கையாக ஒரு நிறைமாத கர்ப்பிணி படுத்திருப்பது போல் இங்கு தோன்றியுள்ளார் அங்காள பரமேஸ்வரி.
🙏🇮🇳2
சக்தியும் சிவனும் ஒரே இடத்தில் சேர்ந்து இருப்பதால் அம்மன் எதிரே நந்தி பகவான் இருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு. மற்ற அம்மன் ஆலயங்களில் எதிரே சிம்ம வாகனம் இருக்கும். ஆனால் இங்கு சக்தியும் சிவனும் சேர்ந்து உள்ளபடியால் எதிரில் நந்தி பகவான் உள்ளது.🙏🇮🇳3